கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பொது அறிவுத் தகவல்கள்

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும் நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

>>>பாசம்...!

பள்ளி ஒன்றில், அசிரியர் நன்னெறிக் கல்வி பாடத்தை போதித்துக் கொண்டிருந்தார். அன்பு சம்மந்தப்பட்ட தலைப்பை பற்றி விவாதித்த சமயத்தில், வகுப்பிலிருந்த மாணவனொருவன் சந்தேகத்துடன் ஒரு கேள்வியை எழுப்பினான்.

மாணவன்: ”’ஐயா, நம் மீது அதிக பாசம் கொண்டவரை நாம் எப்படி அடையாளம் கண்டு கொள்வது? அதே சமயம் எவ்வாறு அவர்களின் பாசம் நீடிக்கும் படி செய்வது ?””

ஆசிரியர்: ”” உண்மையான பாசத்தை நீ அறிந்துக் கொள்ள விரும்புகிறாயா ?

சரி முதலில் நான் சொல்வதைச் செய். பிறகு அதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்வாய்.””

மாணவன்: சொல்லுங்கள் ஐயா செய்கிறேன்.

ஆசிரியர்: ””நம் பள்ளி திடலுக்குச் செல். அங்கு இருக்கும் புற்களை கீழ்
நோக்கி பார்த்தவாரே நட. அதில் மிக அழகாக காட்சியிலிக்கும் ஒரு புல்லை தேர்வு செய்து கொண்டுவா. ஆனால் நீ நடந்து முடித்த பாதையை திரும்பி பார்க்காதே. உன் முன்னால் இருக்கும் புல்லை மட்டுமே தேர்வு செய்து என்னிடம் கொண்டு வர வேண்டும்.””

மீண்டும் வகுப்பறைக்குள் நுழைந்த அம்மாணவனின் கையில் எந்த ஒரு புல்லும் காணவில்லை.

ஆசிரியர்: ””நான் கொண்டு வரச் சொன்ன புல் எங்கே?””

மாணவன்: ”’நான் புற்களை பார்த்தவாறு நடந்துக் கொண்டிருந்தேன். என் கண்களில் நிறைய அழகான புற்கள் தென்பட்டன. ஆனால் நீங்கள் கேட்டதோ மிக அழகான புல். ஆகையால் நான் தொடர்ந்து நடந்தேன். பின் இருந்த புற்கள் சில அழகாக இருந்தது ஆனால் நிபந்தனை படி நான் பின் நோக்கிப் பார்க்கக் கூடாது.  இறுதியில் என்னால் எந்தப் புல்லையும் தேர்வு செய்ய முடியாமற் போனது.””

ஆசிரியர்: ””அதுதான் நீ கேட்ட கேள்விக்கான பதில். நம் மீது அன்பு காட்டும் ஒருவர் நம் அருகில் இருக்கும் சமயத்தில் நாம் அவரை விட சிறந்த ஒருவரை தேடக் கூடாது.

அவர்களின் பாசத்தை மரியாதை செய்ய வேண்டும். வாழ்க்கையை பின் நோக்கிப் பார்த்து பாசத்தை எடை போட கூடாது. இறந்த காலத்தை நாம் சரி செய்ய இயலாது. நம்மோடு நிகழ்காலத்தில் இருப்பவரோடு கருத்து வேருபாடுகள் ஏற்பட்டால் சரி செய்து கொள்ள முடியும். அவர்களது பாசத்தை நிலைக்கச் செய்ய முடியும். நம் மீது அன்பு செலுத்த பலர் இருந்தாலும், நிகழ்காலத்தில் இருப்பவரே சிறந்தவர். நம் வாழ்க்கையின் சுகதுக்கங்களை பகிர்ந்து கொண்டு நம் மீது பாசம் காட்டுபவரிடம், நேர்மையாக நடந்துக் கொள்வதே சிறந்த குணமாகும்.””

>>>அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையால், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 2011 நவ., 15ம் தேதி, புதிய அரசாணை வெளியிடப்பட்டது.நியமனம்அதில், "தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,), ஆசிரியர் நியமனத்துக்கு உரிய கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெறவேண்டும் என்பதும், குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், 2010 ஆக., 23க்கு பின், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளுக்கு, தகுதியுடைய பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கும்போது, இதர பிற நிபந்தனைகளோடு, "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவரே நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம்' என, கூறப்பட்டு உள்ளது. இது, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஒப்புதல்
அரசாணையின் நகல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும், அனைத்து அரசு உதவிபெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு அரசாணை நகலை அனுப்பி, ஒப்புதல் பெற்று, கோப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த அரசாணை மூலம், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாணையினால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.கேள்விக்குறிஇதனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையினால், தமிழகத்தில் உள்ள, "சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பணி நியமனம் பெறுபவர்கள், ஐந்தாண்டுகளுக்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்' என்ற தமிழக அரசின் முந்தைய அரசாணையின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.அரசாணை தெரிவித்துள்ளபடி, 2010 ஆக., 23க்கு பின் என, குறிப்பிடப்பட்டு உள்ளதால், ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்டதே, தற்போதைய, அ.தி.மு.க., அரசில் தான். தேர்வு நடத்தப்பட்டதோ, 2012 அக்., 14ம் தேதி தான். இதற்கிடையே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று, தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி
நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.சம்பளம்ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, மாதந்தோறும் அரசு சம்பளம் வழங்கி வரும் நிலையில், புது அரசாணையால், இனிமேல் அவர்களுக்கு சம்பளம் வழங்கபடுமா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது.பெரும்பாலான அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், நகரப்பகுதிகள்
என்றால், 15 லட்ச ரூபாய் வரையிலும், கிராமப்புறங்கள் என்றால், எட்டு லட்ச ரூபாய் வரையிலும், "நன்கொடை' என்ற பெயரில் பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கிய பின் தான் பணியில் சேர்ந்துள்ளனர்.அவர்கள், "இனி சம்பளம் கிடைக்குமா?' என்ற பீதியில் உறைந்துள்ளனர்.

>>>கணினி வழி கற்றலில் மாணவர்கள் அசத்தல்: தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகள்

மாநகராட்சி அரசு பள்ளி குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிக்கு நிகராக, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், கணினி மூலம் கல்வி கற்று தரப்படுகிறது.

தேர்வு:மாணவர்களின், கற்றல் திறனை வலுப்படுத்துதல், படைப்பாற்றலை வளர்த்தல், கடினப்பகுதியை எளிதாக கற்றல், இடைநிற்றலை தடுக்க, கணினி வழிக்கல்வி முறை திட்டம் கொண்டு வரப்பட்டது.இக்கல்வியின் மூலம், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே நிலவும், தொழில்நுட்ப இடைவெளியை நீக்கி, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற குழந்தைகளுக்கு, தரமான கல்வியை அளிக்க இத்திட்டம் ஒரு வாய்ப்பாகும்.கணினி வழிக்கல்வி அளிக்க, "அசிம் பிரேம்ஜி நிறுவனம் (ஏ.பி.எஃப்.,), ஒத்துழைப்பு அளித்து, எஸ்.எஸ்.ஏ., மூலம், அனைத்து யூனியனில் செயல்படும் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தேர்வு செய்கிறது.
சி.டி.,:
அதை, வட்டார வள மையத்துடன் இணைந்து, கணினி வழிக்கல்வி மையங்களை உருவாக்கி, பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், ஆசிரியர்களின் துணையுடன் செயல்பட்டு வருகிறது.மாணவர்கள் தாங்களாகவே ஆசிரியர்கள் உதவியின்றி, கணினி மூலம் பாடத்தில் உள்ள கடினப்பகுதிகளை எளிதாக கற்க ஏதுவாக, அசிம் பிரேம்ஜி நிறுவனம், 62 சி.டி.,க்களை வெளியிட்டு உள்ளது. இந்த சி.டி.,க்களை மாணவர்கள், கணினியில் தாங்களே பயன்படுத்தும்போது, கவனச் சிதறலின்றி கல்வி கற்ற ஏதுவாக அமைந்துள்ளது.அதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், ஈரோடு மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, கல்வி பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் மொத்தம், 378 கணினி வழிக்கற்றல் மையங்கள் செயல்படுகிறது. ஈரோடு யூனியனில் மட்டும், 26 கணினி வழிக்கற்றல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

முன்னேற்றம்:
ஈரோடு யூனியன் கட்டுப்பாட்டில் வரும், ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி துவக்கப் பள்ளி மையத்தில், இக்கல்வி கற்று கொடுக்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரையுள்ள இப்பள்ளியில் மொத்தம், 172 குழந்தைகள் கல்வி பயில்கின்றனர். கணினி வழிக்கற்றல் வழியாக இப்பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு தலைப்புகளில், வகுப்பு வாரியாக கல்வி கற்பிக்கப்படுகிறது.இதன் மூலம், மாணவர்களிடம் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

>>>இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்

உலக மக்கள்தொகையில் 15 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகள். உடலளவில் பலவீனமாக இருந்தாலும் , மனதளவில் தைரியமாக உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. உடல் குறையை வைத்து, சம உரிமை வழங்க சமூகம் மறுக்கிறது.

அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் 1992 முதல், டிச., 3ம் தேதி, சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

15 சதவீதம் பேர் :

இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாக உள்ளனர். மேலை நாடுகளில், ஊனம் வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட மாற்றுத்திறனாளிகளாக கருதுகின்றனர். இன்னும் சில நாடுகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும், மாற்றுத்திறனாளிகளாக கருதி சலுகைகள் அளிக்கின்றன. இந்தியாவில், வெளியில் தெரியும் ஊனத்தை தான் அரசு ஏற்கிறது. அப்படியும் சிறப்பு சலுகைகள் கிடைப்பதில்லை.

தனி வசதிகள்:
பொது இடங்களில் சக்கர நாற்காலியுடன் ஏறுவதற்கு வசதி தேவை என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும், சில இடங்களை தவிர மற்றவற்றில் நிறைவேற்றப்படவில்லை. மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் விதமாக, தனி பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும். இவர்களை வேலைக்கு எடுக்க தயங்குவதை தவிர்க்க வேண்டும்.

பொருளாதர வளர்ச்சி:
மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை ஏற்காமல், நாடு வளர முடியாது. சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு, மாற்றத்திறனாளிகள் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், மாற்றுத்திறனாளிகள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையை பறித்து விடக்கூடாது.

>>>டிசம்பர் 03 [December 03]....

நிகழ்வுகள்

  • 1592 - "எட்வேர்ட் பொனவென்ச்சர்" என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.
  • 1800 - மியூனிக் அருகில் ஹோஹென்லிண்டென் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவைத் தோற்கடித்தனர்.
  • 1818 - இலினோய் ஐக்கிய அமெரிக்காவின் 21வது மாநிலமானது.
  • 1854 - அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1903 - சேர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.
  • 1904 - வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன் சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1912 - பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியா, கிரேக்க நாடு, மொண்டெனேகிரோ, மற்றும் சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன.
  • 1917 - 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது.
  • 1944 - கிறீசில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
  • 1967 - தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
  • 1971 - இந்திய-பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது.
  • 1973 - வியாழனின் முதலாவது மிகக்கிட்டவான படங்களை பயனியர் 10 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.
  • 1976 - ரெகே பாடகர் பொப் மார்லி இரு தடவைகள் சுடப்பட்டுக் காயமடைந்தார். ஆனாலும் இவர் இரு நாட்களின் பின்னர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
  • 1978 - வேர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
  • 1984 - இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொது மக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
  • 1989 - மால்ட்டாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் எச். டபிள்யூ. புஷ், சோவியத் அதிபர் மிக்கைல் கொர்பச்சோவ் ஆகியோர் பனிப்போர் முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக அறிவித்தனர்.
  • 1997 - நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
  • 1999 - செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lander இன் தொடர்புகளை நாசா இழந்தது.
  • 2007 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.

பிறப்புகள்

  • 1795 - ரோலண்ட் ஹில், நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்தவர், இங்கிலாந்தைச் சேர்ந்தவர் (இ. 1879)
  • 1884 - ராஜேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது ஜனாதிபதி (இ. 1963)

இறப்புகள்

  • 1552 - புனித பிரான்சிஸ் சவேரியார், மதப் போதகர் (பி. 1506)

சிறப்பு நாள்

  • அனைத்துலக மாற்றுத் திறனாளிகள் (ஊனமுற்றோர்) நாள்

>>>ஓ பக்கங்கள் - மறுபடியும் ஒபாமா... ஞாநி


அமெரிக்க அதிபராக பாரக் ஹுசேன் ஒபாமா மறுபடியும் தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பது இங்கே இந்தியாவில் (நான் உட்பட) பலருக்கும் மகிழ்ச்சி தருவதைப் பார்க்கிறேன். ஒபாமாவால் இந்தியாவுக்கோ எனக்கு தனிப்பட்ட முறையிலோ ஏதோ பெரிய லாபம் கிடைத்துவிடும் என்பதாலா இந்த மகிழ்ச்சி? இல்லவே இல்லை.

ஒபாமாவை சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட மனிதர்களிலிருந்து எழுந்து வந்து எல்லாருக்கும் சமமான நிலையை அடைந்த சாதனையின் பிரதிநிதியாக நாம் பார்ப்பதே இந்த மகிழ்ச்சிக்குக் காரணம். ஒரு காலத்தில் நிறவெறியும் அடிமைத்தனமும் நிரம்பி வழிந்த அமெரிக்காவில் ஒரு கறுப்பினத்தவர் குடியரசுத் தலைவராக முடியும் என்பதை மட்டுமல்ல, அடுத்தடுத்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட முடியும் என்று ஒபாமா காட்டியிருப்பதே நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் ஒரு தலித் முதலமைச்சர் ஆனாலோ, இந்தியாவில் ஒரு இஸ்லாமியர் பிரதமரானாலோ ஏற்படக்கூடிய மகிழ்ச்சிக்கு இது நிகரானது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...