கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ரூசோ

 


உலகம் இதுவரை கண்டிருக்கும் புரட்சிகளையெல்லாம் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலப்படும். அந்த புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள் ஒன்று வீரத்தை முதலீடாக கொண்ட மாவீரர்களாக இருப்பார்கள். அல்லது எழுத்தை முதலீடாக கொண்ட மாமேதைகளாக இருப்பார்கள். மாவீரர்கள் நம்பியிருப்பது போர்வாள் முனையை. மாமேதைகள் நம்பியிருப்பது பேனா முனையை. பெரும்பாலான நேரங்களில் போர்வாள் முனையை விட பேனா முனையே கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.

வரலாற்றில் வலிமையான பேனா முனையால் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வாழ்ந்திருக்கின்றன. எத்தனையோ சாம்ராஜ்யங்கள் வீழ்ந்திருக்கின்றன. அப்படி வீழ்ந்த ஒரு சாம்ராஜ்யம்தான் பதினேழாம் நூற்றாண்டில் பிரான்சில் மன்னன் லூயியின் ஆட்சி. வரலாற்றில் முதல் புரட்சி என்று வருணிக்கப்படும் ‘பிரெஞ்சு புரட்சி’யின் மூலம் அவரது ஆட்சி கவிழ்ந்தது. அந்த புரட்சிக்கு வித்திட்ட இருவரில் ஒருவரைத்தான் சந்திக்கவிருக்கிறோம். இந்த வரலாற்று நாயகருக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

>>>அமெரிக்காவின் வாட்டர் கேட் ஊழல் !! ஒரு சுவாரசியமான தகவல் !!

 


அமெரிக்காவையே ஆட்டிப் படைத்த விஷயம், வாட்டர் கேட் ஊழல். 1968 முதல் 1974 வரை ஜனாதிபதியாகஇருந்தவர் நிக்சன். குடியரசு கட்சியைச் சேர்ந்த அவர் 1968ல் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1972ல்நடந்த ஜனாதிபதி தேர்தலில் நிக்சன் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது அவர் மீது ஊழல் புகார் ஒன்றை எதிர்க்கட்சியினர் கூறினர். ஜனநாயக கட்சி (எதிர்க்கட்சி)தலைமையகம் இயங்கும் 'வாட்டர் கேட்' மாளிகையில் ரகசியமாக ஒலிப்பதிவு கருவிகளைப் பொருத்தி, அந்தகட்சியினரின் உரையாடல்களைப் பதிவு செய்து, அவர்களுடைய தேர்தல் வியூகம் பற்றி தெரிந்து கொண்டார்என்பதே நிக்சன் மீதான குற்றச்சாட்டு ஆகும்.

>>>பள்ளி விளையாட்டு போட்டி: அரசாணைக்கு தடை நீக்கம்

"சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும், விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொள்ள, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை அனுமதித்தால், பள்ளி கல்வித்துறை நடத்தும் போட்டிகளில், சி.பி.எஸ்.இ., மாணவர்களும் பங்கு கொள்ள வாய்ப்பு தரப்படும்" என்கிற அரசாணைக்கு விதிக்கப்பட்ட தடையை, சென்னை ஐகோர்ட் நீக்கியது.
கடந்த, பிப்ரவரி மாதம், பள்ளி கல்வித்துறை, ஒரு அரசாணையை பிறப்பித்தது. அதில், "தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும் விளையாட்டில் பங்கு கொள்ள அனுமதிக்கும் பட்சத்தில், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு அரசு பள்ளிக் கல்வித் துறை நடத்தும் போட்டிகளில், பங்கு கொள்ள வாய்ப்பு தரப்படும்" என, கூறப்பட்டு உள்ளது.
இந்த அரசாணையை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் சிலர், மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்களை விசாரித்த ஐகோர்ட், அரசாணைக்கு இடைக்காலத் தடைவிதித்தது. தடையை நீக்கக்கோரி, பள்ளி கல்வித்துறை சார்பில், ஐகோர்ட்டில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி அரிபரந்தாமன் விசாரித்தார். பள்ளி கல்வித்துறை சார்பில், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் அரவிந்த் பாண்டியன் வாதாடினார்.

நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சி.பி.எஸ்.இ., பள்ளிகள் நடத்தும் போட்டிகளில், ஜிம்னாஸ்டிக்ஸ் இடம் பெறவில்லை; எனவே, மாநில அரசு நடத்தும் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்றார். இந்த வாதத்தை, ஏற்க முடியவில்லை.
ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி இடம் பெறவில்லை என்றால், அதை சேர்க்கும்படி, சி.பி.எஸ்.இ., அமைப்பில், மனுதாரர்கள் முறையிடலாம். எனவே, தடை நீக்கப்படுகிறது. தடை கோரிய மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது. இருதரப்பினர் ஒப்புதலுடன், இறுதி விசாரணைக்கு, இவ்வழக்கை பட்டியலிடலாம். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.

>>>டி.இ.டி.,யில் வெற்றி பெற்றும் சோதனை: மாணவிகள் கண்ணீர்

மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி வழங்கிய பட்டப்படிப்பு சான்றிதழ் ஏற்கப்படாததால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும், வேலை கிடைக்காமல் 20 மாணவியர் போராடுகின்றனர்.
இங்கு பி.ஏ., ஆங்கில இலக்கியம், 1999ல் "தொடர்பியல் ஆங்கிலம்" என பெயர் மாற்றப்பட்டது. இதில் பட்டம் பெற்ற மாணவிகள், 2012ல், டி.ஆர்.பி., நடத்திய போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று, சான்றிதழ் சரிபார்ப்புக்கு சென்றனர். அப்போது, "தொடர்பியல் ஆங்கிலத்துக்கு" அரசு அங்கீகாரம் பெறாமல் இருந்தது. இந்த பட்டப்படிப்பை டி.ஆர்.பி., நிராகரித்தது.
மாணவியர் பல போராட்டங்களுக்கு பின், நவம்பர் 27ல், அரசு அங்கீகாரம் வழங்கப்பட்டது. ஆனாலும்,பட்டப்படிப்பு சான்றிதழ்களை டி.ஆர்.பி., ஏற்காததால், 20 மாணவிகள் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட திவ்யபிரியா, புனிதா (மதுரை), லட்சுமி (தேனி), திவ்யா (ராமேஸ்வரம்), முத்துப்பிரியா (சிவகாசி) கூறுகையில், "பி.ஏ., சேரும் போது "ஆங்கில இலக்கியம்" என கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. பட்டம் பெற்ற போது தான் "தொடர்பியல் ஆங்கிலம்" என தெரிந்தது. கல்லூரி நிர்வாகத்திடம் கேட்ட போது "பட்டபடிப்பு பெயர் தான் மாறியுள்ளதால் ஒன்றுமில்லை," என கூறிவிட்டது. கருணை அடிப்படையில் எங்களுக்கு அரசு பணி வழங்கவேண்டும்," என்றனர்.

"அரசு கல்லூரியில் "பட்டப்படிப்பின்" பெயர் மாற்றப்பட்டு, 11 ஆண்டுகள் அங்கீகாரம் பெறவில்லை. அங்கு படித்தவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. "இணையான சான்றிதழ் பெற்றால் பரிசீலிக்கப்படும்" என்று, தெரிவித்த டி.ஆர்.பி.,யும், அந்த படிப்புக்கு அங்கீகாரம் கிடைத்த பிறகும், "பட்டப்படிப்பு" சான்றிதழை நிராகரித்தது யார் குற்றம்," என பெற்றோர் குமுறினர்.

>>>தட்டச்சர் பணி இடங்களுக்கு கலந்தாய்வு துவங்கியது

தமிழக அரசின், பல்வேறு துறைகளில், 3,405 தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான, சான்றிதழ் சரிபார்ப்பு கலந்தாய்வு,டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், நேற்று துவங்கியது. சமீபத்தில் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வு மூலம், 10 ஆயிரம் பேர், பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், ஒவ்வொரு பிரிவாக, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. சுருக்கெழுத்தர் தட்டச்சர்களுக்கு, துறை ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டதை அடுத்து, 3,405 தட்டச்சர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில், நேற்று துவங்கியது. தினமும், 500 பேர் வீதம் அழைக்கப்பட்டு, கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இந்தப் பணிகள் முடிந்ததும், 5,657 இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம், 17ம் தேதி முதல் நடக்கிறது.

>>>ஆசிரியர் பற்றாக்குறை: அரசு பள்ளியை பூட்டிய மக்கள்

ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து திண்டுக்கல், காசம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை கிராம மக்கள் பூட்டினர்.
இப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் 450 மாணவர்கள்,ஆறு ஆசிரியர்கள் இருந்தனர். தற்போது, 150 மாணவர்களுக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களில் தலைமை ஆசிரியை அமுதாதேவி மருத்துவ விடுப்பில் உள்ளார். 4 மாதமாக, ஒரு ஆசிரியை மட்டும் பணிக்கு வருவதால், கற்பித்தல் பணி முடங்கியது. இதனால் அதிருப்தியடைந்த மக்கள் நேற்று பள்ளியை பூட்டினர்.
இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் கூறுகையில், "இப்பள்ளிக்கு அயல் பணியாக 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். பள்ளி இன்று திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

>>>மீன்வள பல்கலைக்கு முதல் துணைவேந்தர் நியமனம்

நாகப்பட்டினத்தில் புதிதாக துவக்கப்படும், மீன்வள பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக, எம்.சி. நதீஷா, நியமிக்கப்பட்டுள்ளார். இவர், மூன்றாண்டுகளாக, இப்பதவியில் இருப்பார்.
மீன் வளத்தை மேம்படுத்த, அத்துறையில் நவீன தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. புதிய தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டுமெனில், மீன் வளக்கல்வியை மேம்படுத்த வேண்டியுள்ளது.
இதை கருத்தில் கொண்டு, நாகப்பட்டினத்தில், பனங்குடி மற்றும் நாகூர்முட்டம் கிராமங்களில், 85 ஏக்கர் நிலப்பரப்பில், மீன்வளப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தின் முதல் துணை வேந்தராக, அப்பல்கலைக்கழகத்தின் சிறப்பு அதிகாரியான, எம்.சி. நதீஷா, நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Jallikattu - Guidelines Released

ஜல்லிக்கட்டு போட்டி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Jallikattu Competition - Guidelines Released  ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வழிகாட்...