கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பொறியியல் மாணவர்களுக்கு கணினி வழி கற்றல் : பி.எஸ்.என்.எல்., அறிமுகம்

 
"கணினி வழி கற்றல் முறை (elearning), கிராமப்புற பொறியியல் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்,'' என, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசினார்.
"போதி அக்சஸ் சொலுயூசன்ஸ்' (Bothi Access Solutions) நிறுவனம், பி.எஸ்.என்.எல்., உடன் இணைந்து, பொறியியல் மாணவர்கள், தங்கள் பாடங்களை, கணினி வழி கற்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இவ்வசதியை துவக்கி வைத்து, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியதாவது:
பொறியியல் கல்லூரிகளில், நல்ல ஆசிரியர்கள், நூலகங்கள் மற்றும் புத்தகங்கள் பற்றாக்குறையால், பொறியியல் கல்வியின் தரம் குறைந்து வருகிறது. இந்நிலையில், பொறியியல் பாடங்களை, மாணவர்கள், கணினி வழி கற்றல் முறையில், எளிதாக பயிலும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது."இ-லேர்னிங்' எனப்படும் இந்த கற்றல் முறை, நகர்ப்புற மாணவர்களுக்கு மட்டுமின்றி, கிராமப்புற பொறியியல் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.இவ்வாறு பாலகுருசாமி பேசினார்.
"போதி அக்சஸ் சொலுயூசன்ஸ்' நிறுவன தலைவர் ரமேஷ் கூறியதாவது:
கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட ஏழு பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான, 231 பாடங்களை, "இ-லேர்னிங்' முறையில் கொண்டு வந்துள்ளோம்.
"செமஸ்டர்' வாரியாக, மாணவர்கள், தங்களுக்கு தேவைப்படும் பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கலாம். இம்முறையில் உள்ள சிறப்பம்சங்கள், கட்டண விவரம் உள்ளிட்ட விவரங்களை, www.bodhiaccess.com என்ற இணையதளத்தில் பெறலாம்.
இவ்வாறு ரமேஷ் கூறினார்.நிகழ்ச்சியில், மின்வாரிய விஜிலென்ஸ் ஐ.ஜி., சீமா அகர்வால், பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

>>>பிளஸ் 2 தேர்வு: மார்ச் 1ம் தேதி துவங்க வாய்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு துவங்கி மூன்றாம் வாரம் வரை நடைபெறும். 2013ம் ஆண்டில் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு, இப்போதே தேர்வுத்துறை அதிகாரிகள், இயக்குனர் வசுந்தராதேவி தலைமையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் இதுகுறித்து ஆலோசனை நடத்தி, அரசின் கருத்தை கேட்டுள்ளனர். மார்ச் 1 அல்லது 4ம் தேதி துவங்கும் வகையில் அட்டவணை தயாரித்துள்ளனர். அரசின் ஒப்புதல் கிடைத்ததும், அட்டவணை குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் கருத்து கேட்கப்படும்.
தேர்வு காலத்தில் விழாக்களோ அல்லது விடுமுறை நாட்களோ அல்லது மாணவருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஏதாவது உள்ளதா என கண்டறிந்து கருத்துக்களை தெரிவிப்பர். அதனடிப்படையில் மாற்றங்கள் இருந்தால் செய்யப்பட்டு பொதுத் தேர்வு கால அட்டவணை முடிவு செய்யப்படும். பெரும்பாலும் மார்ச் 1ம் தேதி அடிப்படையில் உள்ள கால அட்டவணை இறுதி செய்யப்படலாம் என கருதப்படுகிறது.

>>>டிசம்பர் 13 [December 13]....

நிகழ்வுகள்

  • 1577 - சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.
  • 1642 - ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார்.
  • 1888 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
  • 1937 - சீனாவின் நான்ஜிங் நகரம் ஜப்பானியரிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன.
  • 1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் ஜெர்மனியின் "கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.
  • 1949 - இஸ்ரேலின் சட்டசபை நாட்டின் தலைநகரை ஜெருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.
  • 1959 - மக்காரியோஸ் சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதியானார்.
  • 1972 - அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20ம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
  • 1974 - மோல்ட்டா குடியரசானது.
  • 1981 - போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
  • 1996 - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.
  • 2001 - இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2003 - முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
  • 2004 - முன்னாள் சிலி சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினோச்சே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
  • 2006 - பாய்ஜீ என்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.

இறப்புகள்

  • 1557 - டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1499)
  • 1944 - வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (பி. 1866)
  • 1987 - நா. பார்த்தசாரதி, எழுத்தாளர் (பி. 1932)
  • 2010 - திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1938)
  • 2010 - ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்கத் தூதுவர்

சிறப்பு நாள்

  • மோல்ட்டா - குடியரசு நாள் (1974)

>>>வரமா, சாபமா? - ஓ பக்கங்கள் - ஞாநி

செல்போன் இன்று ஏழை எளிய மக்கள் வரை பரவிவிட்டது. மிகக் குறைவான எழுத்தறிவு உடையவர்கள் கூட இன்று சகஜமாக அதைப் பயன்படுத்துகிறார்கள். அடுத்த கட்டமாக செல்போன் மூலமே இண்ட்டர்நெட்டை பயன்படுத்தும் வசதி வேகமாகப் பரவி வருகிறது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதன் அனுபவித்திராத தகவல் தொடர்பு வசதிகள் உலகில் இந்த ஐம்பது வருடங்களாக பிரும்மாண்டமாக வளர்ந்திருக்கின்றன. இந்த தொழில்நுட்பப் புரட்சி மனிதனுக்கு கிடைத்த வரமா, சாபமா என்பது அவ்வப்போது சர்ச்சையாகிக் கொண்டிருக்கிறது. ஒரு கல்யாணப் பத்திரிகை வைக்க வண்டி கட்டிக் கொண்டு ஒரு நாள் பயணம் செய்த மனிதர்கள் இன்று ஒரு நொடியில் ஒரு தகவலை இன்னொருவருக்கு செல்போனில் அனுப்பமுடிவது வசதிதான். அதே சமயம் செல்போன் பேசிக் கொண்டே ரயில் பாதையைக் கடப்பதால் மாதம்தோறும் நூற்றுக் கணக்கில் ரயிலில் அடிபட்டு இறக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை பயமுறுத்துகிறது.
ஒரு புதிய தொழில்நுட்பம் வந்தால் போதாது. அதை தனக்கு எதிராக தானே மாற்றிக் கொள்ளாமல் பயன்படுத்தும் பக்குவமும் மனிதர்களுக்கு தேவைப்படுகிறது. அந்தப் பக்குவம், மன முதிர்ச்சி இல்லாத சமூகத்தில் அந்த தொழில்நுட்பம் நிச்சயம் சாபமாகத்தான் மாறும்.

>>>மின்வெட்டுக்குத் தீர்வு தருமா பாசி விளக்குகள் - அதிசய அறிவியல் கண்டுபிடிப்பு

 
அறிவியல் என்பது நமக்குப் பல நற்பயன்களைக் கொடுத்துள்ளது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதே சமயம் மனிதர்களின் நுகரும் வேகம் மற்றும் கணக்கிலடங்கா மோகத்தினால் பல ஊறுகளை ஏற்படுத்தியே வருகின்றோம். அவற்றில் நாம் சந்திக்கும் முக்கியப் பிரச்சனைகள் மின் ஆற்றல் தட்டு பாடு மற்றும் கரியமில வாயுக்களின் அதிகரித்தல். இவ்விரண்டையும் ஒரே கண்டுப்பிடிப்பு தீர்க்க முடியுமா என்ன ? முடியும் எனக் கூறுகின்றார் அறிவியல் ஆய்வாளர் பியரி கலேஜா (Pierre Calleja).

அவர் அல்கேக்கள் (ALGAES) என அறியப்படும் பாசிகள் மூலமாக ஒரு மின் விளக்கை உருவாக்கியுள்ளார். நமக்கே தெரியும் கார்பன் டை ஆக்சைட்கள் (CO2) என்பவை தொழிற்சாலைகளின் பெருக்கத்தினால் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களால் அதிகரித்து வருகின்றது. அத்தோடு CO2 -க்களை உறியக் கூடிய மரங்களையும் மனித இனம் தம் சுயநலத்துக்காக அழித்து வருகின்றது. இதனால் CO2-க்களின் அளவு சுற்றுச்சூழலில் மிகுந்து வருகின்றது. பசுமை வாயுக்களிலேயே முதன்மையானது கார்ப்பன் டைஆக்சைட்கள் ஆகும். இவற்றாலேயே நமது புவியில் வெப்பம் அதிகரித்து வருகின்றன.

ஆனால் CO2-க்களை உறிஞ்சும் அளவுக்குப் போதிய மரங்கள் புவியில் இல்லாமல் உள்ளது. இந்த நிலையிலேயே பிரஞ்சு அறிவியல் ஆய்வாளர் பியரி கலேஜா ஒரு விளக்கை உருவாக்கியுள்ளார்.

பியரி கலேஜா கடந்த இருபது ஆண்டுகளாக நுண்ணுயிர் வகையான மைக்ரோ ஆல்கேக்களைக் (MICROALGAES) குறித்து ஆராய்ந்து வந்தவர் ஆவார். சொல்லப் போனால் இந்த ஆல்கேக்கள் நமது புவியில் கிட்டத்தட்ட 300 கோடி ஆண்டுகளாக இருந்து வருவதைப் படிமங்கள் நிரூபிக்கின்றன. அது மட்டுமில்லாமல் இந்த ஆல்கேக்கள் தான் அதிகளவு ஆகிசிஜன்களையும் உற்பத்தி செய்யக் கூடியவையாக உள்ளது.

இதர தாவரங்களைப் போல இந்தப் பாசிகளும் கதிரவன் ஒளியினைப் பெற்று தாமே உணவை உற்பத்தி செய்யக் கூடியவை. அதனால் அதிகளவு CO2-க்களை உறிஞ்சவும் வல்லது.

இந்த மைக்ரோ ஆல்கேக்கள் எனப்படும் பாசிகளை வளர்ப்பதும் மிகவும் எளிது, இவற்றில் இருந்து உயிர்-எரியாற்றல்களை (BIOFUEL) பெறவும் முடியும்.

இவ்வாறு எண்ணற்ற பயன்களைத் தரவல்ல மைக்ரோ ஆல்கேக்களைக் கொண்டு பாசி விளக்கு ஒன்றினை உருவாக்கி உள்ளார் பியரி காலேஜா. இந்த மின் விளக்குகள் ஒளியை மட்டும் தராதாம், அத்தோடு கூடக் காற்றில் உள்ள CO2-க்களையும் உறிஞ்சிவிடுமாம்.

தண்ணீரில் வைக்கப்படும் ஆல்கேக்கள், காற்றில் இருக்கும் CO2-க்களை உறிஞ்சியும், சூரியனின் ஒளியைப் பெற்றும் ஒளிச்சேர்க்கை (PHOTOSYNTHESIS) மூலமாக மின் ஆற்றல்களை உற்பத்தி செய்யும். இந்த மின் ஆற்றல்களைப் பேட்டரிகளில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பிறகு இரவுகளில் அந்த ஆற்றலைக் கொண்டு இவ் விளக்கை ஒளியூட்டலாம். தேவைப்படும் போது மட்டும் அந்த மின் ஆற்றல்களைப் பயன்படுத்த ஏதுவாகவும் இவ் விளக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருந்து வெளியேற்றப்படுவது என்ன தெரியுமா, வெறும் ஆகிசிஜன் (OXYGEN) மட்டுமே. இந்த ஒரே ஒரு பாசி விளக்கு மட்டும் ஓராண்டுக்கு ஒரு டன் CO2-க்களை உறிஞ்சக் கூடியது. அப்படி என்றால் பல லட்சம் பாசி விளக்குகள் பல ஆண்டுகள் பயன்படுத்தும் போது கோடிக் கணக்கான டன் CO2-க்களை உறிஞ்சிவிடும் அல்லவா.

இந்தப் பாசி விளக்குக்களை வெவ்வேறு வடிவங்களில், மக்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தாற் போல மாற்றவும் செய்யலாம் என்பது இதன் தனிச் சிறப்பு. ஆனால் நமது மக்களும், கொள்கை வகுப்பாளர்களும் இப்படியான கண்டுப்பிடிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பொதுப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவார்களா என்பது தான் கேள்வியே.

அறிவியல் என்பது இருமுனைக் கத்தி போல, அவற்றை நல்ல முறையில் கையாள்வதும், தீய முறையில் கையாள்வதும் அவரவர் கைகளில் தான் உள்ளது. அறிவியலைத் தூற்றுவோர் அறிந்து கொள்ள வேண்டியது, அறிவியல் ஒரு போதும் தீதல்ல, அறிவியலை கையாளும் மனித மனமே கோணலாக உள்ளது.

>>>கை மேல காசு...! - ஓ பக்கங்கள் - ஞாநி

மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டியதுதான். அல்லது வருகிற பொங்கல் சமயத்தில் போகியன்று தீக்கிரையாக்கி குளிர் காயலாம்.
அரசு மான்ய விலையில் மக்களுக்கு அளித்து வரும் எல்லா பொருட்களையும் இனி மக்கள் தனியாரிடம்தான் வாங்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தும் விதத்தில், விலை குறைத்தோ விலை இல்லாமலோ தரப்பட்ட பொருட்களுக்கான அரசு மான்யம் இனிமேல் ரொக்கப் பணமாகவே மக்களுக்குத் தரப்படும் என்றும் மன்மோகன் அரசு அறிவித்திருக்கிறது.
இதை உடனடியாக இந்தியாவில் 51  மாவட்டங்களில் செயல்படுத்த்ப் போகிறது. பின்னர் படிப்படியாக செய்வதே திட்டம். இதில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், புதிய ‘கை மேல காசு’ திட்டத்தின் கீழ் யார் யாருக்கு மான்யம் தரப்படவேண்டும் என்பதை தீர்மானிக்கப்போவது ஆதார் அடையாள அட்டைதான்.
ஏன் இந்த திட்டம் ? இதுவரை அரசு மக்களுக்கு மான்ய விலையில் தரும் பல பொருட்கள் தகுதியானவர்களுக்கு மட்டும் போகாமல், வசதியானவர்களுக்கும் போவதை தடுப்பது ஒரு நோக்கம். இந்த நோக்கம் என்னவோ நல்ல நோக்கம்தான். வெள்ள நிவாரண உதவியையும் ம் இலவச டி.வி.பெட்டியையும் கூச்சமே இல்லாமல் காரில் போய் வாங்கிக் கொண்டு வரக்கூடிய  ‘ஏழைகள்’இருக்கும் தேசம்தானே இது. ரேஷன் அட்டைகளிலும் பல போலிகள் உலவுவதும் நிஜம்தான்.

>>>காளான் - மருத்துவ பயன்கள்

  
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Part-time teachers transfer counselling - Date of joining service on revised transfer priority norms - SPD's letter, Dated : 24-12-2024

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேரப் பயிற்றுநர்கள் நிர்ணயிக்கப்பட்ட மாணாக்கர்கள் விகிதாசாரப்படி த...