கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>"கல்வி ஆளுமைத்திறனை மேம்படுத்த வேண்டும்' : கவர்னர் ரோசய்யா அறிவுரை

"கல்வி என்பது வகுப்பறைகளில், புத்தகங்களை பயில்வது மட்டுமல்ல; ஆளுமைத்திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்,'' என தமிழக கவர்னர் ரோசய்யா பேசினார். திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில், 51ம் ஆண்டு விழா நேற்று நடந்தது. பள்ளி முதல்வர் கேப்டன் சந்தீப் சக்கரவர்த்தி வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் கஜலட்சுமி முன்னிலை வகித்தார்

இவ்விழாவில், தமிழக கவர்னர் ரோசய்யா பேசியதாவது: ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் சேர்ந்து பணியாற்றுவதற்குரிய அடித்தளத்தை உருவாக்குவதுடன்; நாட்டை காப்பாற்ற, வெளிநாட்டவர்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் திறனை மாணவர்களிடம் வளர்க்கும் வகையில் சைனிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. ராணுவம் நம்நாட்டின் பெருமைக்குரிய அடையாளம். இதை உங்களிடம் பார்க்கிறேன். அணிவகுப்பு மரியாதை மாணவர்களின் திறமைகளையும் வெளிப்படுத்துகிறது. கல்வி என்பது வகுப்பறைகளில், புத்தகங்களை பயில்வது மட்டுமல்ல; ஆளுமைத்திறனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். நல்ல பள்ளி என்பது என்பது மாணவர்களை நல்ல வழியில், சரியான திசையில் வழிகாட்டி செல்வதேயாகும். தேசிய பாதுகாப்பு கழகத்திற்கு 10க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுப்பியதில், 24 சைனிக் பள்ளிகளில், நான்கு பள்ளிகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. அதில், அமராவதி நகர் சைனிக் பள்ளியும் ஒன்று. கடந்த 50 ஆண்டுகளில், 500 மாணவர்களை ராணுவத்தில் சேர்த்துள்ளது. மாணவர்கள் லட்சியத்தை வகுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். இவ்வாறு கவர்னர் ரோசய்யா பேசினார். முன்னதாக "விஜயந்தா டேங்க்' கை பள்ளிக்கு கவர்னர் அர்ப்பணித்தார். தொடர்ந்து மாணவர்களது அணிவகுப்பு மரியாதை மற்றும் சிலம்பம், களரி, கராத்தே உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.

>>>கீரைகளின் பயன்கள் !

அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும்.

இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும்.

அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம் அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். இந்த கீரையின் சாறில் 2 சொட்டு எடுத்து நமது மூக்கில் விட்டால் ஜுரம் போய்விடும். வாய்ப்புண், குடல்புண், தொண்டைப்புண் ஆகிறவற்றை இது நீக்கும்.


பொன்னாங்கண்ணி கீரை: இக்கீரையின் சாறு எடுத்து நல்லெண்ணையுடன் சேர்ந்து தைலம் காய்ச்சி தலைக்குத் தேய்த்துக் குளித்து வர கண் எரிச்சல், உடல் உஷ்ணம் போன்றவைகள் நீங்கி உடல் குளிர்ச்சிப் பெறும்.

பொன்னாங்கண்ணி கீரையுடன் பாசிப்பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், பூண்டு மிளகுத்தூள் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அசுத்த இரத்தம் சுத்தமாகும். உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கும் கண்களில் எரிச்சல் மற்றும் கண் சிவப்பாக காட்சிதரும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மூல நோயிக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை.பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும். அப்போது புளி, காரத்தை தவிர்ப்பது நல்லது.

கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தயாரிக்கும் முறை பொன்னாங்கண்ணி இலையை நிழலில் உலர்த்தி காயவைத்தது - 20 கிராம், அருகம்புல் காய்ந்தது 10 கிராம், செம்பருத்தி பூ காய்ந்தது 10 கிராம் எடுத்து 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெயில் நன்கு காய்ச்சி பாட்டிலில் அடைத்து தினமும் உபயோகிக்கலாம்.

>>>பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று அரையாண்டு தேர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரையாண்டு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. பிற வகுப்பு மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள், மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வந்தன. இதனால், அவர்கள், ஆண்டு பொதுத் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக, அரசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளையும், ஆண்டு பொதுத் தேர்வை போல் நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி, செப்டம்பரில், காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இன்று முதல், அரையாண்டு பொது தேர்வுகள் துவங்குகின்றன. மாநில அளவிலான இத்தேர்வில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஒரே கேள்வித்தாள் மற்றும் தேர்வு அட்டவணை வழங்கப்படும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, வழக்கம் போல், மாவட்ட அளவில் தேர்வு நடைபெறும் என, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>டிசம்பர் 19 [December 19]....

நிகழ்வுகள்

  • 324 - லிசீனியஸ் ரோமப் பேரரசன் பதவியைத் துறந்தான்.
  • 1154- இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி முடிசூடினான்.
  • 1606 - ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
  • 1871 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.
  • 1877 - யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.
  • 1907 - பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
  • 1941 - அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத் தலைவர் ஆனார்.
  • 1961 - போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
  • 1963 - சன்சிபார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தான் ஹமூட் பின் முகமது தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.
  • 1967 - இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆஸ்திரேலியப் பிரதமர் ஹரல்ட் ஹோல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
  • 1972 - சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.
  • 1983 - உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
  • 1984 - ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
  • 1986 - சோவியத் எதிர்ப்பாளி அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
  • 1997 - இந்தோனீசியாவில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 104 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1997 - டைட்டானிக் திரைப்படம் வெளியானது.
  • 2000 - யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

பிறப்புக்கள்

  • 1901 - ருடால்ப் ஹெல், ஜெர்மானிய கண்டுபிடிப்பாளர் (இ. 2002)
  • 1906 - லியோனிட் பிரெஷ்னேவ், சோவியத் ஒன்றியத் தலைவர் (இ. 1982)
  • 1922 - க. அன்பழகன், தமிழக அரசியல்வாதி
  • 1934 - பிரதிபா பாட்டீல், இந்தியாவின் 12வது குடியரசுத் தலைவர்
  • 1974 - ரிக்கி பான்டிங், அஸ்திரேலியத் துடுப்பாட்டக்காரர்

சிறப்பு நாள்

  • கோவா - விடுதலை நாள்

>>>வி.ஏ.ஓ., நியமன கலந்தாய்வு விரைவில் துவங்கும்: நடராஜ்

"வி.ஏ.ஓ., பணி நியமன கலந்தாய்வு, இம்மாத இறுதிக்குள் நடக்கும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர், நடராஜ் தெரிவித்தார். குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை வாரியாக பணி ஒதுக்கீடு பணி, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நடந்து வருகிறது. ஏற்கனவே, தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன கலந்தாய்வு, தேர்வாணைய அலுவலகத்தில், நேற்று துவங்கியது.

அப்போது, தேர்வாணைய தலைவர் நடராஜ், நிருபர்களிடம் கூறியதாவது: இளநிலை உதவியாளர்கள் பணி நியமன கலந்தாய்வு, 10 நாட்கள் வரை நடக்கும். தினமும், 300 பேர் வீதம் அழைக்கப்படுவர். "ரேங்க்' அடிப்படையில், அனைவருக்கும், பணி ஒதுக்கீடு வழங்கப்படும். வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள், நவ.,30ல் வெளியானது. இதையடுத்து, இம்மாத இறுதியில் இருந்து, கலந்தாய்வு நடக்கும். அதன்பின், குரூப்-1, குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை, ஜனவரியில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

>>>பிரணாப் முயற்சியால் ஜனாதிபதி மாளிகை நூலகத்திற்கு புத்துயிர்

டில்லி, ஜனாதிபதி மாளிகையின் நூலகத்தில் கண்டு கொள்ளப்படாமல் கிடந்த, பழமையான புத்தகங்களுக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டு, படிக்க வசதியாக, அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலையில், ஜனாதிபதியாக, பிரணாப் முகர்ஜி பொறுப்பேற்ற பிறகு, ஜனாதிபதி மாளிகையில் பல புதுமைகளை செய்து வருகிறார். 340 அறைகளுடன் பிரமாண்டமாக காட்சியளிக்கும், வரலாற்று சிறப்பு மிக்க மாளிகையின், பாரம்பரிய அறைகளை புதுப்பித்து வருகிறார்.
பொலிவிழந்து காணப்பட்ட, "தர்பார் ஹால்", பிரணாப்பின் முயற்சியை அடுத்து, புனரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கண்டு கொள்ளப்படாமல் இருந்த நூலகமும், சமீபத்தில் புத்துயிர் பெற்றுள்ளது.
புறக்கணிக்கப்பட்டு, மூலையில் குவிக்கப்பட்டிருந்த, பழமையான புத்தகங்கள், தூசி தட்டி எடுக்கப்பட்டு, அலமாரிகளில் அடுக்கப்பட்டு, பார்வையாளர்கள் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில், 1800ம் ஆண்டுகளில் வெளியான, திப்பு சுல்தான் பற்றிய புத்தகம், 1840களில் வெளிவந்த, கார்ட்டூன் புத்தகங்கள், 1888ல் வெளிவந்த, ஆங்கில அகராதி போன்ற, 2,000க்கும் மேற்பட்ட, பழமையான புத்தகங்கள் அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
பழமையான புத்தகங்களை, ஸ்கேன் செய்து, எலக்ட்ரானிக் வடிவில் மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது.

>>>மாயமாகி போன மாணவர்களுக்கான "சிறப்பு' பஸ்கள் : மீண்டும் இயக்க தடை என்ன?

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக இயக்கப்பட்ட, சிறப்பு பஸ்களை குறைத்ததே, மாணவர்களின் படிக்கட்டு பயணத்துக்கும்,அதனால் ஏற்படும் இறப்புகளுக்கும் காரணம் என்ற , குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை, பெருங்குடி கந்தன்சாவடியில், இம்மாதம், 10ம் தேதி, பஸ் மீது லாரி மோதியதில், படிக்கட்டில் பயணம் செய்த, மாணவர்கள் நான்கு பேர் பலியாகினர். நகரின் பல பகுதிகளுக்கு, போதிய பஸ் சேவைகள் இல்லாததே, இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என, கூறப்படுகிறது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும், கூட்ட நெரிசலில், பள்ளி மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். படிக்கட்டு பயணமும் அதிகரிக்கிறது. இதை தவிர்க்க, நெரிசல் நேரங்களில், மாணவ, மாணவியர் பள்ளிகளுக்கு எளிதாக சென்று வர, முதல் கட்டமாக, 12 வழித்தடங்களில், காலையில் இரண்டு நடை, மாலையில் இரண்டு நடை செல்லும் சிறப்பு பஸ்கள், 2010ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.

அயனாவரம், பெசன்ட்நகர், பெரம்பூர், பிராட்வே, கே.கே.நகர் மேற்கு, வள்ளலார் நகர், திரு.வி.க.நகர், விவேகானந்தர் இல்லம், பட்டினப்பாக்கம், வடபழனி, வேளச்சேரி, வில்லிவாக்கம், தி.நகர், மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்து, இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.தொடர்ந்து, சிறப்பு பஸ்களின் நடைகள், 12லிருந்து 48ஆக அதிகரிக்கப்பட்டது. தற்போது, இந்த சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை, 12 நடைகளுக்கு குறைவாக இயக்கப்படுகிறது.

இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் நெரிசலில், பள்ளி மாணவர்கள் எளிதாக சென்று வர, சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் சேவை துவக்கப்பட்ட சில மாதங்களிலேயே, அதன் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் வசதிக்காக தான், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன; சிறப்பு பஸ்களால் வருவாய் இழப்பு மட்டுமில்லாமல், பஸ்சும் சேதமடைகிறது. இதன் காரணமாக, பஸ்சின், எண்ணிக்கையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில், மாநகர போக்குவரத்து கழகம் தள்ளப்பட்டது.மாநகரில் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தயாராக இருக்கிறோம். ஆனால், ஊழியர்கள் பற்றாக்குறை உட்பட பல பிரச்னைகள் உள்ளன. இதை அரசு சரிசெய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Deduction / Exemption on Income Tax Allowed in New Tax Regime

வருமான வரியில் புதிய வரி முறையை தேர்ந்தெடுத்தவர்களுக்கான அனுமதிக்கப்படும் வரி விலக்குகள் Deduction / Exemption on Income Tax Allowed in New ...