கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று அரையாண்டு தேர்வு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரையாண்டு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது. பிற வகுப்பு மாணவர்களைப் போல, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும், காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள், மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வந்தன. இதனால், அவர்கள், ஆண்டு பொதுத் தேர்வை எதிர்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாக, அரசுக்கு தெரிய வந்தது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு தேர்வுகளையும், ஆண்டு பொதுத் தேர்வை போல் நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி, செப்டம்பரில், காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. இன்று முதல், அரையாண்டு பொது தேர்வுகள் துவங்குகின்றன. மாநில அளவிலான இத்தேர்வில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஒரே கேள்வித்தாள் மற்றும் தேர்வு அட்டவணை வழங்கப்படும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு, வழக்கம் போல், மாவட்ட அளவில் தேர்வு நடைபெறும் என, பள்ளிக்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-07-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   திருக்...