>>> Click here to Download TN Gazette No.36_Ex_III_1b - Dated 30-01-2020
🌹நம்மை மதிக்காதவர்களை நாமும் மதிக்கக்கூடாது.
அதற்கு மற்றவர்கள் வைக்கும் பெயர் தலைக்கனம் என்றால் நாம் வைக்கும் பெயர் தன்மானம்.!
🌹🌹எவ்வளவு வயதானாலும் வாழ்வில் ஒரு கஷ்டம் என்று வரும்போது
மனது உடனே தாயைத்தான் தேடுகிறது.
இவ்வுலகில் எதிர்பார்ப்பில்லா ஒரே அன்பு தாயின் அன்பு தான்.!!
🌹🌹🌹உள்ளே தள்ளும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நாக்கு,
வெளியே தள்ளும் வார்த்தையில் மட்டும் எதையும் நினைப்பதில்லை.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📕📘அரியர் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம் - ஏ ஐ சி டி இ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது - உயர் நீதிமன்றம் திட்டவட்டம்📕📘தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவர் படிப்பில் மாணவர் சேர்க்கை தொடக்கம்.
📕📘இந்த ஆண்டுக்குள் கரோனா தடுப்பூசி கிடைத்துவிடும் - உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை.
📕📘நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடமாறுதல் விதிகளில் மனமொத்த மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல் நிர்வாக மாறுதல் ஆகியவற்றை செய்வதற்கு துறை அதிகாரிகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
📕📘12.10.2020 முதல் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளித் தலைமையாசிரியர்களிடம் +1 மற்றும் +2 அசல் மதிப்பெண் சான்றிதழ் (மார்ச் -2020) வழங்கப்படும் - அரசுத் தேர்வுகள் இயக்குநர்
📕📘கடந்த 2 வாரங்களில் மட்டும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டுள்ளனர் . - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம்
📕📘09.10.2020 அன்று நடைபெறவிருந்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான காணொலி காட்சி கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு குறித்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் வெளியீடு.
📕📘வேளாண் சட்டத்துக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கு திங்கள்கிழமை விசாரணைக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
👉உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வில் திமுக மனு விசாரிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
📕📘'மகிழ்ச்சியாக இருங்கள்'.. சிபிஐ முன்னாள் இயக்குநர் அஸ்வனி குமாரின் கடிதம்
👉சிம்லா/புது தில்லி: சிபிஐ முன்னாள் இயக்குநா் அஸ்வனி குமாா், ஹிமாசல பிரதேச தலைநகா் சிம்லாவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டாா்.
அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிம்லா காவல் கண்காணிப்பாளா் மோகித் சாவ்லா தெரிவித்தாா். இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவர் எழுதியதாகக் கருதப்படும் கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில், நோய் மற்றும் இயலாமை காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில், நோய் மற்றும் இயலாமை காரணமாகவே தான் தற்கொலை செய்து கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். புதிய பாதையை நோக்கி எனது ஆன்மா தனது பயணத்தைத் தொடங்க உள்ளது. எனவே, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே அவசியம். அதேவேளையில், இறுதிச் சடங்குகளோ, வழிபாடுகளோ எதுவும் தேவையில்லை என்றும் கடிதத்தில் அஸ்வனி குமார் எழுதியிருந்ததாக சஞ்சய் கண்டு ஏஎன்ஐ-யிடம் கூறியுள்ளார்
📕📘தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்புவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2-ம் கட்ட பரிசோதனைக்காக 6-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
📕📘அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி விட்ட நிலையில், அமெரிக்கர்களின் ஓட்டுகளைப் பெறுவதற்காக எச்1பி விசாக்களுக்கு அதிபர் டிரம்ப் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
📕📘அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்த துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், இரண்டு வருட பட்டயப் படிப்பு மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு இலவசமாக அளிக்கப்படும் என்று அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
📕📘அமெரிக்காவில் ஹெச்-1பி விசாவுக்கான கெடுபிடிகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திறன்மிகு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி விசாவில் பணி புரியும் ஊழியர்களுக்கான சம்பள விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
📕📘திண்டுக்கல் சிறுமி வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி விடுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று சலூன் கடைகள் அடைக்கப்படும் என முடி திருத்தும் தொழிலாளர் சங்கம் அறிவிப்பு.
📕📘கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை திறக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பாவிற்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
- முதல்வர் பழனிசாமி
📕📘அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்திவைப்பு- தமிழக அரசு அறிவிப்பு
மிக அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறப்படுவதால் நேர்காணல் பணிகளில் ஏராளமானோர் பங்கேற்க வாய்ப்புள்ளதால் நடவடிக்கை
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் நிறுத்திவைப்பதாக அரசு அறிவிப்பு.
📕📘மத்திய தொல்லியல் துறையின் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா நிறுவனத்தின் 2ஆண்டு முதுகலை பட்டயப் படிப்பில் செம்மொழியான தமிழ் மொழியையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
📕📘மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் காலமானார்.
அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பஸ்வான் டிவிட்டரில் தகவல்
டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.
📕📘உணவு பதனிடுதல், இயற்கை வேளாண்மைப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை: மனோன்மணியம் பல்கலை அறிவிப்பு.
📕📘2020-21-ம் கல்வியாண்டிற்கான 1 முதல் மேற்படிப்புகள் வரை பயிலும் சிறுபான்மையின மாணவ மாணவியருக்கான கல்வி உதவித்தொகைக்கு www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் 31.10.2020-ற்குள் விண்ணப்பிக்கலாம்.
📕📘வெளி மாநிலங்களில் இருந்து வந்த மாணவர்களின் விவரங்களை EMIS தளத்தில் Student Admission-ல் நேரடியாக உரிய வகுப்பில் பதிவு செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் போலிப் பதிவுகளைத் தடுக்க, மாணவரது விபரங்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட பின், சார்ந்த பள்ளியின் Student List-ல் வெளியாகுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
📕📘அண்ணாமலைப் பல்கலை.யில் தொலைதூரக் கல்வி வாயிலான இரண்டாண்டு B.Ed., சேர்க்கை தொடங்கியுள்ளது.
📕📘அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், போலியாக மாணவர் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில், அவற்றின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது
📕📘அரசு தேர்வு இயக்ககத்தால் எந்த ஆண்டு முதல் கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்னை சான்று வழங்கப்படுகிறது என RTI -இல் கேட்கப்பட்ட கேள்விக்கு 1994-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுவதாக பதில் அளிக்கப்பட்டுள்ளது.
📕📘M.Phil , Ph.D - 18.01.2013க்கு முன்னர் ஊக்க ஊதிய உயர்வு பெற்றிருப்பின் ஊதிய நிர்ணயத்தை திருத்தி அமைத்து பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய ஈரோடு CEO உத்தரவு.
📕📘ஸ்ரீ அரவிந்தோ சொஸைட்டி மற்றும் தமிழ்நாடு சமக்ர சிக்ஷா இணைந்து புதுக்கோட்டை மாவட்ட அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு இனையவழி மூலம் இன்னோவேட்டிவ் பாதசாலா என்ற தலைப்பின் கீழ் புத்தாக்க பயிற்சியினை வழங்கி வருகிறது.
📕📘அரசின் இலவச கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி வழங்க கடைசி நேரத்தில் மறுக்கப்படுவதாக தனியார் பள்ளி மீது பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர்.
📕📘புதுச்சேரியில் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குச் சந்தேகம் தீர்க்கும் வகுப்புகள் தொடங்கியுள்ளன. குறைந்த அளவிலான மாணவர்கள் வருகை புரிந்தாலும் ஆர்வமுடன் பங்கேற்றனர்
📕📘ஐபிஎல் 2020: டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
IFHRMS- Implementation Of IFHRMS Project Sanction Authority Level In IFHRMS Deatils Called For - Director Proceedings
1.1.96 முதல் (நிதிப்பயன்01.09.1998) ஒரு ஊதிய வீதத்தில் அதிக பட்சம் பெற்றுவிட்ட ஒருவருக்கு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறைதான் ஊதிய உயர்வு கிடைக்கும்
(GO.Ms No. 483, Finance (Pay commission) Dated 08.09.1998)
👆🏻👆🏻👆🏻 Click here to Download...
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...