கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 கொரோனா அப்டேட் - இந்தியாவில் தடுப்பூசிகளின் நிலையில் தற்போதைய முன்னேற்றம் - Dr.A.B.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர், சிவகங்கை...
கொரோனா தொற்றின் முதல் அலை சற்று மட்டப்படுத்தப்பட்டு நாடு இரண்டாம் அலைக்கு தயாராகி வரும் நிலையில்
கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி எப்ப கிடைக்கும்?
என்ற கேள்விகள் அதிகமாயிருக்கின்றன. .
அந்த வகையில் இந்தியாவில் தற்போது ஐந்து தடுப்பூசிகள் ஆராய்ச்சியில் இருக்கின்றன அவற்றைப்பற்றி சுருக்கமாகக் காண்போம்
1.கோவிஷீல்டு (COVISHIELD)
ஆக்ஸ்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா செனிகா ஆகிய இரண்டு பெருந்தலைகளின் கூட்டுத்தயாரிப்பான AZD1222 எனும் இந்த தடுப்பூசியானது
தற்போது இந்தியாவில் மூன்றாம் நிலை பரிசோதனையில் இருக்கிறது.
இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட ஆய்வு முடிவில் சிறப்பான அளவில் எதிர்ப்பு சக்தியை தருவதாகவும் பாதுகாப்பனதாக இருப்பதாகவும் இருப்பதாக முடிவுகள் வந்தன.
இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையின் போது
பிரிட்டனில் ஒருவருக்கு விரும்பத்தகாத ஒவ்வாமை ஏற்பட்டு சில காலம் இந்த ஆராய்ச்சி தடை பட்டிருந்தது. பிறகு அந்த தடுப்பூசி உற்பத்தியில் பங்குபெறாத நடுநிலையான வல்லுனர்கள் குழுவின் ஆய்வுக்குப் பிறகு அந்த விரும்பத்தகாத ஒவ்வாமைக்கும் தடுப்பூசிக்கும் சம்பந்தமில்லை என்றும் அந்த நபருக்கு multiple sclerosis எனும் நோய் கண்டறியப்படாமல் இருந்ததே அந்த நிகழ்வுக்கு காரணம் என்று சான்றளிக்க பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ப்ரேசில் , இந்தியா ஆகிய நாடுகளில் மீண்டும் ஆராய்ச்சிகள் தொடங்கி இருக்கின்றன
இந்தியாவில் 1600 பேர் இந்த தடுப்பூசியின் ஆராய்ச்சியில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்து பங்கேற்று வருகின்றனர்
தமிழ்நாட்டில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகத்தில் இதற்கான ஆராய்ச்சி நடந்து வருகிறது.
விரைவில் கிடைக்கும் என்று நம்பிக்கை அளிக்கும் இந்த தடுப்பூசிக்கான இந்திய பார்ட்னராக இணைந்திருப்பது serum institute,pune நிறுவனமாகும்
ஒரு தடுப்பூசியின் விலையை ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக கொண்டு வந்து அனைவரும் பயன் பெறும் வகையில் அதிக லாபமின்றி விற்க உள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது
2. கோவேக்சின் (COVAXIN)
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் மற்றும் பாரத் பயோடெக் எனும் தனியார் மருந்து ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசி இது.
முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பு.
ஆகஸ்ட் 15,2020 புழக்கத்துக்கு வரும் என்று தவறாக நம்பப்பட்டு வந்த தடுப்பூசி இது தான்.
இந்த தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை தற்போது நடந்து வருகிறது.
இதற்காக 1,125 பேர் பதிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சி நிகழ்ந்து வருகின்றது.
இரண்டாம் கட்ட பரிசோதனைகள் திருப்திகரமாக நிறைவேறினால் மூன்றாம் கட்ட பரிசோதனை ஆரம்பமாகும்.
இந்த தடுப்பூசி இந்திய தயாரிப்பாதலால் நமக்கு இன்னும் விலை மலிவாகக் கிடைக்கக்கூடும்.
3. ZyCov-D
கொரோனா வைரஸின் ப்ளாஸ்மிட் டிஎன்ஏ கொண்டு உருவாக்கப்பட்டுள்ள
சைடஸ் கேடில்லா நிறுவன நவீன தடுப்பூசியாகும்.
1048 பேர் பதிவு செய்துள்ள இந்த மருந்துக்கான இரண்டாம் கட்ட ஆராய்ச்சிகள்
மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான், குஜராத், கர்நாடகா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வருகிறது.
4. RBD vaccine
பயாலஜிகேல் நிறுவனமும் பேய்லர் காலேஜ் ஆஃப் மெடிசின் இணைந்து உருவாக்கியுள்ள இந்த தடுப்பூசி , கொரோனா வைரஸை ஒத்த புரத மாதிரியாக இருந்து எதிர்ப்பு திறனை உருவாக்கும் செயல்திறன் கொண்டது.
இருப்பினும் இந்த நிறுவனம் தற்போது முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மருத்துவ பரிசோதனையை ஆரம்பிக்க வல்லுனர் குழுவிடம் அனுமதி கோரியிருக்கிறது. வல்லுனர் குழு இந்த பரிசோதனை திட்ட முன்வரைவில் சில மாற்றங்கள் செய்ய அறிவுறுத்தியிருக்கிறது
5. ஸ்புட்னிக் ஐந்து (SPUTNIK - V)
ரஷ்ய நாட்டின் கமாலியா மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மருந்திற்கு
இரண்டாம் கட்ட ஆராய்ச்சி மட்டுமே முடிந்திருந்த நிலையில் இரண்டாம் கட்ட ஆராய்ச்சியில் பாதுகாப்பு குறித்த பிரச்சனைகள் எழாத காரணத்தால் அந்த நாட்டு அரசு முன்கூட்டிய ஒப்புதல் வழங்கிவிட்டது.
இதனால் அங்கு பொதுமக்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் இந்திய அரசு மூன்றாம் கட்ட பரிசோதனை இன்றி மக்களிடம் இந்த தடுப்பூசியை வழங்க இயலாது என்று அறிவித்துள்ளது.
மருந்து கம்பெனி வழங்கிய மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான முன்திட்ட வடிவமைப்பை உற்று நோக்கிய வல்லுனர் குழு - தனது பரிந்துரையில்
மருந்து கம்பெனி தனது முன்திட்ட வரைவில் மாற்றம் கொண்டு வந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையும் செய்யுமாறு வரைவு தயாரிக்குமாறு கூறியுள்ளது
இதிலிருந்து ரஷ்ய கண்டுபிடிப்பை இந்திய வல்லுனர் குழு எடுத்த எடுப்பில் நம்ப வில்லை என்பது தெரிகிறது.
இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட ஆராய்ச்சிகளை முறையாக முடித்தபின் ஸ்புட்னிக்கின் உண்மை நிலை புலப்படும்.
------------
பல கோடி மக்களுக்கு செல்ல இருக்கும் இந்த தடுப்பூசிகள் பல்வேறு பாதுகாப்பு பரிசோதனைகளையும் படிநிலைகளையும் தாண்டிதான் பாதுகாப்பானவை என்றும்
வீரியமிக்கவை என்றும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்தால் மட்டுமே நம்மை அடையும்
Safety and efficacy of vaccine must be proved beyond doubt
இப்படியான மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு கட்டாயம் காலமெடுக்கும்
இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டின் மத்தி வரை ஒவ்வொரு தடுப்பூசியாக புழக்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்
நவீன மருத்துவ அறிவியலின் துணை கொண்டு இந்த போரில் நாம் வெல்லும் நாள் நெருங்கி வருகின்றது
தொடர்ந்திருப்போம்
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
🍁🍁🍁 ஆந்திராவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு கொரானா : கர்நாடகாவில் வகுப்புகள் நிறுத்தம்...
பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெலகெவி மாவட்டத்திலுள்ள திம்மாபூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கர்நாடகா மாநிலம் பெலகெவி மாவட்டம் திம்மாபூர் கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கு கொரோனா காலத்தில் கல்வி சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வித்தியகாமா என்ற திட்டம் அரசு சார்பாக தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் படி பெலகெவி மாவட்டத்தில் 195 மாணவர்கள் பல குழுக்களாக பிரிக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 15 மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பாடம் கற்றனர். அதில் 34 மாணவர்களுக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் 6 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. மாணவர்கள் அனைவரும் 3 அல்லது 4ம் வகுப்பு படிக்கும் மாணவர்களாக உள்ளனர்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே கொரோனா பரவியதையடுத்து வித்யகாமா திட்டத்தை மறு உத்தரவு வரும் வரை மாநில கல்வித்துறை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
🍁🍁🍁 CPS / TPF சந்தா பிடித்தம் தொடர்பான தகவல்கள்...
சம்பளம் பட்டியல் சார்ந்து.
👉CPS சந்தா PAY+DA இல் 10% மட்டுமே.
👉TPF சந்தா PAY+DAல் minimum 12%.
Maximum individual option...
👉TPF சந்தா பிடித்தம் செய்யும் சில ஆசிரியர்கள் 12%க்கு குறைவாக பிடிக்கின்றனர். ஆனால் IFHRMSல் தானாகவே 12% பிடித்து விடும். அதுவும் 12%தொகையை அடுத்த 100ரூபாய்க்கு Round செய்து பிடிக்கும். Incrementல் ஊதியம் கூடினால் 12%ம் கூடும். எனவே TPF பிடிப்பவர்கள் 12%ஐ விட கூடுதலாக பிடித்தம் செய்தால் மேற்கண்ட பிரச்சனை ஏற்படாது.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Term 3 - Ennum Ezhuthum Training - SCERT Director's Proceedings
மூன்றாம் பருவ எண்ணும் எழுத்தும் பயிற்சி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411...