கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்...

 பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைப்படி 40 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபியை அடுத்த சாவக்கட்டுபாளையத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு காப்பீடு அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:


மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்குவது குறித்து முதல்வர் நடவடிக்கை மேற்கொள்வார். ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு குறித்து 2 வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தன. இதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருதீர்ப்பும், மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் ஒரு தீர்ப்பும் வழங்கப்பட்டன. இந்த இரண்டையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.


கணினி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சிறப்பாசிரியர்களுக்கும் வழக்குகள் முடிந்தவுடன் கலந்தாய்வு மேற்கொள்ளப்படும். பள்ளி பாடத்திட்டங்கள் குறைப்பு தொடர்பாகஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. 14 பேர் கொண்ட அந்த குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், 40 சதவீதம் பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 60 சதவீதம் பாடங்களில் இருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படும் என்றார்.

🍁🍁🍁 பழைய புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடமிருந்து பெறவும், பதிவேடு பராமரிக்கவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கடிதம்...

 தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் திரு.ஸ்ரீகாந்த் கடே என்பாரால் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கவும், அதனை பராமரிக்கவும் பார்வை 3 ல் காண் 16.03.2019 நாளிட்ட செயல்முறைகளின் வாயிலாக தலைமை ஆசிரியர்களுக்கும் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. தற்போது 2019-2020 ஆம் கல்வியாண்டு முடிவுற்ற நிலையில் , மாணவர்கள் புதிய புத்தகம் பெறுவதற்காக பள்ளி வளாகம் வருகை தருகையில் பழைய புத்தகங்கள் அனைத்தையும் மாணவர்களிடமிருந்து பெற்று , வகுப்பு மற்றும் பாடவாரியாகத் தொகுத்து பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கிடவும் , பயன்படுத்த முடியாத புத்தங்களை பெற்று இருப்பு வைத்திடுமாறு அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். 

மேலும் இது சார்ந்த பதிவேட்டினை பராமரிக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



🍁🍁🍁 ஆளுநர் ஒப்புதல் கிடைக்கும் வரை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...

 







🍁🍁🍁 அரசு ஊழியர்களுக்கு ஆன்லைன் தேர்வு - TNPSC முடிவு...

தமிழக அரசு பணியாளர்களுக்கான துறை தேர்வுகள் அனைத்தையும், 'ஆன்லைன்' முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. 

தமிழக அரசு துறைகளில் பணியாற்றும், பல்வேறு நிலை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, பல்வேறு தகுதிகள் அடிப்படையில், பதவி உயர்வு, சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படும்.பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கு, துறை ரீதியான தேர்வுகளில், ஊழியர்கள் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, டி.என்.பி.எஸ்.சி.,யால் எழுத்து தேர்வு முறையில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளதால், வரும் காலங்களில் நடக்க உள்ள துறை தேர்வுகளை, ஆன்லைன் முறையில் நடத்த, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்துள்ளது. இதற்கான ஆன்லைன் தேர்வு நடத்தும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

இதற்கிடையில், டி.என்.பி.எஸ்.சி., நடத்திய மூன்று தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் பணியில், 59 காலியிடங்கள்; பொதுப்பணி துறை உதவி இயக்குனர் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பணியில், 102 காலியிடங்களுக்கு, ஜூன் மற்றும் நவம்பரில் தேர்வுகள் நடந்தன. இந்த தேர்வுகளின் முடிவுகள், நேற்று அறிவிக்கப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்களின் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

🍁🍁🍁 அரசுப் பள்ளி கட்டடத்துக்கு வா்ணம் பூச கூலித் தொழிலாளி ரூ. 25ஆயிரம் நிதியுதவி...

 


குஜிலியம்பாறை அருகே அரசுத் தொடக்கப் பள்ளி கட்டடத்துக்கு வர்ணம் பூசும் பணிக்கு கூலித் தொழிலாளி ஒருவர் ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள இரா.கொல்லப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் 32 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இரா.கொல்லப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வெ.முருகன், பள்ளிக் கட்டடத்திற்கு வர்ணம் பூசும் பணிக்கு ரூ. 25 ஆயிரம் நன்கொடை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அப்பள்ளியின் தலைமையாசிரியை இரா. கமலா கூறியதாவது: தள ஓடு (டைல்ஸ்)பதிக்கும் கூலித் தொழிலாளியாக இருந்தபோதிலும், இந்த பள்ளிக்கு பல்வேறு வகையிலும் வெ.முருகன் தனது பங்களிப்பை அளித்து வருகிறார். சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது மாணவர்களுக்கு பரிசு வழங்கும் பொறுப்பினை முருகன் ஏற்றுக் கொள்வார். தற்போது பள்ளிக் கட்டடத்திற்கு வர்ணம் பூசும் பணிக்கு ரூ. 25ஆயிரம் வழங்கியுள்ளார் என்றார். இதுகுறித்து முருகன் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக, நாள்தோறும் கிடைக்கும் கூலியில் ரூ.100 முதல் 200 வரை பள்ளிக் கூட பங்களிப்பாக ஒதுக்கி வைத்துவிடுவேன் அந்தப் பணத்தில் தான் நிகழ்ச்சிகளின் போது மாணவர்களுக்கு பரிசுப் பொருள்கள் வாங்கிக் கொடுப்பேன். கடந்த 6 மாதங்களாக பள்ளிக் கூடம் நடைபெறாத நிலையில், 10 ஆண்டு கால கட்டடத்திற்கு வர்ணம் பூசும் பணிக்காக சேமிப்புத் தொகையை செலவிட்டுள்ளேன் என்றார். அரசுப் பள்ளிக் கட்டடத்துக்கு ரூ. 25ஆயிரம் நிதி உதவி அளித்த முருகனுக்கு, வட்டாரக் கல்வி அலுவலர் வீ.சந்தியா உள்ளிட்ட அதிகாரிகளும் பொதுமக்களும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

🍁🍁🍁 TNPSC தேர்வு முடிவுகள் வெளியீடு...

 பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், மருத்துவ ஆய்வாளர் உள்ளிட்டவற்றுக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு ஜுன் 23-ல் நடந்த மருத்துவ ஆய்வாளர் மற்றும் இளநிலை பகுப்பாய்வாளர் தேர்வு, நவ.16, 17-ல் நடந்த பொதுப்பணித் துறை உதவி இயக்குநர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தேர்வு ஆகியதேர்வுகளின் முடிவுகள் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

சான்றிதழ்களை அரசு இ-சேவை மையம்மூலம் அக்.28 முதல் நவ.6 வரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்...

🍁🍁🍁 கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண் கலங்கினார் நீதிபதி...

 * கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிடற்கரியது எனக்கூறி கண் கலங்கினார் நீதிபதி...

* மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் வேதனை

"அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு  வழங்கும் முறை தொடர்பான சட்ட மசோதா இன்னமும் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது"

* தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தகவல்

* நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட இயலாது. காலக்கெடுவையும் விதிக்க இயலாது- தலைமை வழக்கறிஞர்

MaduraiBench

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...