>>> Click here to Download Bhavani Sagar Training Principal Proceedings...
இணையவழி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் அக்.25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ), தொலைதூரக் கல்வித் திட்டத்தில் பல்வேறு பாடங்களில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ, முதுநிலை டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. ஜூலை பருவ இணையவழி மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி அக்.25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்விப் படிப்புகளில் சேருவதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனினும் இந்த நீட்டிப்பு சான்றிதழ் மற்றும் செமஸ்டர் சார்ந்த படிப்புகளுக்குப் பொருந்தாது என்றும் இக்னோ தெரிவித்துள்ளது. மாணவர்கள் www.onlineadmission.ignou.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். பாடப்பிரிவுகள், சேர்க்கை விவரங்களைத் தெரிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் பல்கலைக்கழகத்தின் www.ignou.ac.in என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கவும், அதை பராமரிக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டது. தற்போது 2019-2020-ஆம் கல்வியாண்டு முடிந்தநிலையில் மாணவர்கள் புதிய புத்தகங்கள் பெற பள்ளிக்கு வரும் போது பழைய பாடநூல்களை அவர்களிடம் இருந்து பெறவேண்டும். அவற்றில் பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதுடன், மீதமுள்ள புத்தகங்களை இருப்பு வைக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு மீண்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
(வெள்ளக்கோவில் மாணவர் முதலிடம்)
நாமக்கல், அக்.16: நீட் தேர்வில் தமிழகத்தில் 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும். நிகழாண்டில், திருப்பூர் மாவட்டம்,வெள்ளக்கோவிலைச் சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
மாணவர் ஸ்ரீஜன் கூறியதாவது: வெள்ளக்கோவில் எனது சொந்த ஊர். ஈரோட்டில் பள்ளிப் படிப்பை முடித்தேன். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 385 மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. மீண்டும் எழுதுவதற்கு முயற்சித்து நாமக்கல்லில் பயிற்சி பெற்றேன். அதனால் இந்த ஆண்டு 720-க்கு 710 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன் என்றார்.
முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம் Joint Director Mr. Pon K...