கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பு - தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்...

 பள்ளிகளில் புத்தக வங்கி பராமரிப்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின்படி பள்ளிகளில் புத்தக வங்கி தொடங்கவும், அதை பராமரிக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப் பட்டது. தற்போது 2019-2020-ஆம் கல்வியாண்டு முடிந்தநிலையில் மாணவர்கள் புதிய புத்தகங்கள் பெற பள்ளிக்கு வரும் போது பழைய பாடநூல்களை அவர்களிடம் இருந்து பெறவேண்டும். அவற்றில் பயன்படுத்தக்கூடிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்குவதுடன், மீதமுள்ள புத்தகங்களை இருப்பு வைக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு மீண்டும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Is it 80th Independence Day or 79th

  இன்று கொண்டாடப்படுவது 79வது சுதந்திர தினமா? 80வது சுதந்திர தினமா? Is the 79th Independence Day being celebrated today, or the 80th? இன்று ...