கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 அரசு பள்ளி மாணவருக்கு முழுநேரம் 'நீட்' பயிற்சி - மாவட்ட வாரியாக மையம் அமைக்க வலியுறுத்தல்...

 


அரசு பள்ளி மாணவருக்கு, முழு நேரம், 'நீட்' பயிற்சி அளிக்க, விடுதியுடன் கூடிய மையங்கள் அமைக்க, ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்டவைக்கு, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், சேர்க்கை நடத்தப்படுகிறது.

 இதனால், தனியார் மையங்களில், பல லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தி, தனியார் பள்ளி மாணவ, மாணவியர், ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்டுக்கு, முழு நேர பயிற்சியில் ஈடுபடுகின்றனர். அவர்களோடு போட்டியிட முடியாமல், அரசு பள்ளி மாணவ, மாணவியர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தை கைவிட வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

இதை தவிர்க்க, அரசு சார்பில், ஒன்றியம் வாரியாக, மையங்கள் அமைத்து, விடுமுறை நாள், மாலை நேரங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, பல கோடி ரூபாய் செலவழிக்கப்படுகின்றன. ஆனாலும், இதில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை.

 3,500க்கும் மேற்பட்ட மருத்துவ சீட்களில், ஒற்றை இலக்கத்தை எட்டி பிடிக்கவே போராடும் நிலை உள்ளது. நடப்பு கல்வியாண்டில், 'நீட்' தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் ஜீவித்குமாரும், பள்ளிப்படிப்பை முடித்து, முழு நேரம், ஓராண்டு 'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெற்ற பின்பே சாதிக்க முடிந்தது.

இதன்மூலம் உரிய பயிற்சி அளிக்கப்பட்டால், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மற்ற மாநிலங்களை விட, சாதித்து காட்ட முடியும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

🍁🍁🍁 NEET மருத்துவக் கலந்தாய்வு - NRI இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து அறிவிப்பு...

 மருத்துவக் கலந்தாய்வில் என்ஆர்ஐ  மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் அக்.16-ம் தேதி வெளியாகின. இதில் நாடு முழுவதும் 56.44% மாணவர்கள் மருத்துவம் படிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான கலந்தாய்வு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெளிநாடு வாழ் இந்திய (என்ஆர்ஐ) மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சேர்க்கை குறித்து மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய மாணவர்கள் அல்லது பிற ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்கள் என்ஆர்ஐ பிரிவுக்கு மாற்றிக்கொள்ள விரும்பினால், நாளை (அக்.23) வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்குப் போதிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக நீட்  2020 மதிப்பெண் சீட்டு, படிக்க வைப்பவரின் கடவுச்சீட்டு, விசா ஆகிய ஆவணங்கள், அவருக்கும் மாணவருக்குமான உறவு, படிக்க வைப்பவர் குறித்த தூதரகச் சான்றிதழ், முழு மருத்துவப் படிப்பையும் படிக்கவைப்பதாக அவர் உறுதியளிக்கும் நோட்டரி சான்றிதழ் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.

இந்த விவரங்களை nri.adgmemcc1@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு அக்.23-ம் தேதி வரை அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

🍁🍁🍁 இனி மாநில மொழிகளிலும் JEE தேர்வுகள்: - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்...

 


ஜேஇஇ மெயின் தேர்வுகள் இனி மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கூட்டு சேர்க்கை வாரியம் (JAB) பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி அடைவதன் மூலம் நாடு முழுவதும் உள்ள ஐஐடி எனப்படும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவர்கள் படிக்க முடியும். இத்தேர்வு தற்போது ஆங்கிலம், இந்தி, குஜராத்தி ஆகிய மொழிகளில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. அந்த வகையில், ஜேஇஇ தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஜேஇஇ  மெயின் தேர்வுகள் இனிக் கூடுதலாக மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''ஜேஇஇ மெயின் தேர்வுகள் வருங்காலத்தில் மாநில மொழிகளில் நடத்தப்படும். மாநிலப் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேரப் பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் தேர்வுகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை அனுமதிக்கும் மாநிலக் கல்லூரிகளும் இதன்கீழ் இணைத்துக் கொள்ளப்படும்.

தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில், கூட்டு சேர்க்கை வாரியம் (JAB) ஜேஇஇ தேர்வுகளைக் கூடுதலாக மாநில மொழிகளில் நடத்த முடிவு செய்துள்ளது'' என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

🍁🍁🍁 MRF-Limited வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் நாள்: 24.10.2020...

 


🍁🍁🍁 SSA , RMSA - தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 3 ஆண்டுகளாக வழங்கப்படாத ஊதிய உயர்வினை வழங்க கோரிக்கை...

 


🍁🍁🍁 03.03.2007 அன்று பணிநியமன ஆணை பெற்ற கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் - நாள்: 16.04.2018...

03.03.2007 அன்று பணிநியமன ஆணை பெற்ற கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிவரன்முறை ஆணை - பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்: 060201/சி3/இ2/2018 - நாள்: 16.04.2018.

>>> Click here to Download Maths B.T. Regularisation Order...


🍁🍁🍁 2020 -21 ஆம் ஆண்டிற்கு சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை இணையதளம் மூலம் செயல்படுத்துதல் & விண்ணப்பிக்கும் முறை...

 >>> Click here to Download Minorities Scholarship Apply Procedure...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ ந...