கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 05.11.2020 (வியாழன்)...
🌹வார்த்தை என்பது ஏணிபோல
பயன்படுத்துவதை பொறுத்து,
ஏற்றியும் விடும்
இறக்கியும் விடும்.!
🌹🌹வாழ்க்கையில் அடிபட்ட பின்பு தான் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உண்மையான முகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎀🎀பள்ளிகளே மூடியுள்ள நிலையில் வயது வந்தோர்க்கு கல்வி உடனடி தேவையா? கற்போம் எழுதுவோம் திட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை.
🎀🎀பள்ளி திறப்பு பற்றி வரும் 9 ஆம் தேதியன்று கருத்துக்கேட்புக்கூட்டம் நடத்தப்படும். நேரில் வர இயலாய பெற்றோர்கள் கடிதம் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு.
👉பெற்றோர்கள் கருத்து கேட்பு கூட்டத்தின் முடிவில் அடிப்படையிலேயே பள்ளிகள் திறக்கப்படும் -பள்ளிக் கல்வித்துறை
👉9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர்கள் அந்தந்த பள்ளிகளில் கருத்தை கூறலாம்.
🎀🎀ஆந்திராவில் நவ.2 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சித்தூரில் 150 ஆசிரியர்கள், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று. அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ள சித்தூர் ஆட்சியர் பரத் குப்தா உத்தரவு.
🎀🎀பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறைகள் பராமரிப்பு மற்றும் பழுது பார்த்தல் சார்பான அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் - இணைப்பு: அரசாணைகள்: 151 & 166.
🎀🎀அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் நேற்று வழங்கினார்.
🎀🎀பள்ளிக் கல்வி - குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் கடிதம் வெளியீடு
🎀🎀பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு நிர்வாக ஆணை மூலம் விடுதலை செய்ய வேண்டும்.
விடுதலை தாமதிக்கப்படுமானால் மறுக்கப்பட்ட நீதியாகவே வரலாற்றில் பதிவாகும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தல்.
🎀🎀உலக நாடுகளைப் போலவே, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை தமிழகத்தில் உள்ள ஒரு குக்கிராமம் ஒன்றும் ஆர்வத்துடன் உற்று நோக்கி வருகிறது. அதற்குக் காரணம் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் தான். கமலா ஹாரிசின் மூதாதையர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே, துளசேந்திரபுரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.
இதனால் இந்த கிராம மக்கள் கமலா ஹாரிசின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். கமலா ஹாரிசின் வெற்றிக்காக சொந்த கிராமத்திலுள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்ட கிராம மக்கள், அவரின் வெற்றி குறித்த செய்தியை அறிவதற்காக தொடர்ந்து தொலைகாட்சியை ஆர்வமுடன் கவனித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலையில் உள்ளதையறிந்து, கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
🎀🎀சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சராக கே.பி.அன்பழகன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு மறைவையடுத்து கே.பி.அன்பழகனுக்கு வேளாண்துறை ஒதுக்கப்பட்ட நிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.
🎀🎀VPF கட்டணம் செலுத்தப்போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தயாரிப்பாளர், இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். திரையரங்கு உரிமையாளர்களிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடரும் எனவும் கூறினார்.
🎀🎀தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநராக பாஸ்கர பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
🎀🎀என்னை விமர்சிப்பதை பற்றி நான் கவலைப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
👉தில்லுமுல்லுப் பேர்வழிகளால் சில சுவரொட்டிகள் தமிழ்நாட்டின் தெருக்களில் ஒட்டப்படுகின்றன. மேலும் பெயரோ, முகவரியோ வெளியிட தெம்பும் திராணியுமற்ற நபர்கள் என்னை இகழ்ந்து போஸ்டர்களை ஒட்டுகின்றனர் என அவர் கூறியுள்ளார். 🎀🎀டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று காலை 10.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையிலும், கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையிலும் மத்திய அசை்சரவை கூட்டம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.
🎀🎀மதுரை : ஹெரிட்டேஜ் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் 5, சென்னையில் 4 இடங்களில் ஹெரிட்டேஜ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு நடைபெற்று வருகிறது.
🎀🎀M.Ed சுயநிதி கல்லூரியில் படிக்க 15/11/2020 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது - TNTEU
🎀🎀தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும்?; குரூப்-1 தேர்வில் 20% ஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி.
🎀🎀தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2021-ல் நடைபெறுவதால் உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
🎀🎀தமிழக ஆளுநர் டெல்லிக்கு திடீர் பயணம்
3 நாள் பயணமாக டெல்லி செல்லும் அவர் பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக தகவல்
🎀🎀ஜனவரி 31ல் CTET தேர்வு
🎀🎀தொலைக்காட்சி களுக்கான டி ஆர் பி ரேட்டிங் மதிப்பிடும் நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய, மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், பிரசார் பாரதி தலைமை செயல் இயக்குனர் திரு சசி சேகர் வேம்பட்டி தலைமையில், நான்கு பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது.
🎀🎀லடாக் எல்லைப் பிரச்சனையில் சுமுக தீர்வு காண்பதற்காக, இந்தியா சீனா ராணுவ உயரதிகாரிகள் இடையே எட்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது.
🎀🎀தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடைசெய்யக்கோரி வழக்கு; விளம்பரங்களில் நடித்த பிரபலங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ்.
🎀🎀சென்னையில் கட்டட தொழிலாளர்களின் பணியிடங்களுக்கே சென்று உணவு வழங்கும் நடமாடும் அம்மா உணவகத்தின் சேவையை முதலமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார்.
🎀🎀CPS -அலுவலகம் இடமாற்றம்:-
👉பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு,CPS வழியே ஓய்வுகால பங்களிப்பு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
👉CPS அலுவலகம் கிண்டி கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் செயல்பட்டு வந்தது.
👉இன்று நவம்பர் 5- ஆம் தேதி முதல் CPS அலுவலகம் சென்னை சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை (வெட்னரி ஹாஸ்பிடல்) பஸ் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த நிதி வளாகம் அலுவலகத்தில் செயல்பட உள்ளது.
சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த நிதி புது கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் சிபிஎஸ் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
🎀🎀தமிழகத்தில் பல்வேறு DEO அலுவலகங்களில், IGNOU மூலம் B.ed பயின்றவர்களுக்கு , அயல் மாநில University என்று கூறி evaluation Certificate கேட்பது ஏற்புடையதல்ல. ஏனென்றால் அரசாணை (நிலை) எண் 160 நாள் 2.12.2004-ல் Evaluation தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
🎀🎀சென்னை அரசு மருத்துவமனைக்கு உலக தரச்சான்றிதழ்
🎀🎀மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்: ஆன்லைன் குளறுபடியால் தவிப்பு
🎀🎀நாளை மறுநாள் முடிகிறது துணை இன்ஜினியரிங் கவுன்சிலிங் பதிவு
🎀🎀தமிழக ஆராய்ச்சியாளருக்கு சீனா ரூ.75 லட்சம் நிதி ஒதுக்கீடு
🎀🎀ராணுவ கல்லூரியில் பயிற்சி பெறுவதற்கான'சீட்' எண்ணிக்கை அதிகரிப்பு
🎀🎀கருத்துக் கேட்பதற்குப் பதிலாக மருத்துவ ஆலோசனைப்படி பள்ளிகளைத் திறக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்
🎀🎀தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கு சலுகை தவறாக பயன்படுத்தப்படுகிறது : நீதிமன்றம் வேதனை
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926
🍁🍁🍁 நாமினி (Nominee) மற்றும் வாரிசு (Legal Heir) – இருவருக்கும் உள்ள தனித்தனி சட்ட உரிமை(Rights)களும் கடமை(Duties)களும்...
பலருக்கு நாமினிக்கும் வாரிசுக்கும் என்ன வித்தியாசம் என்பது கூட தெரியாமல்
உள்ளனர். அவர்களுக்காகவே இந்த விழிப்புணர்வு பதிவு. படித்து பயன்பெறவும்.
நாமினிக்கு உள்ள சட்ட உரிமைகளும் என்ன, கடமைகள்ளும் என்ன,-
வாரிசு் ஒருவர் பெருந்தொகை ஒன்றை வங்கியில் ‘டெபாசிட் (Deposit)’ செய்திருந்தார். அந்த டெபாசிட்டிற்கு தனது இரண்டாவது மனைவியை நாமினியாக நியமித்திரு ந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்து போய் விட, அந்த பணம் யாருக்கு போ ய்ச்சேர வேண்டும் என்பதில் பிரச்னை வந்துவிட்டது. நாமினியாக நியமிக்கப்பட்ட இரண்டாவது மனைவிக்கு சேரவேண்டுமா, அல்லது முதல் மனைவிக்கும் அவர் மூலம் பிறந்த வாரிசுக்கும் போய்ச்சேர வேண்டுமா என்பதில் பயங்கர பிரச்னை! ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளாத குறை!
இந்த பிரச்னை இப்படி என்றால் இன்னொரு நண்பரின் குடும்பத்துக்கு நிகழ்ந்தது வேறுமாதிரியானது. தனது குழந்தைகள் வயதில் மிகச் சிறியவர்களாக இருக்கிறா ர்களே என நினைத்து, தனது தூரத்து உறவினர் ஒருவரை நாமினியாக எல்லாவ ற்றுக்கும் நியமித்திருந்தார் அவர். தனக்கு ஏதாவது நேர்ந்தால் உறவினர் மூலமாக தனது முதலீடுகள் குழந்தைகளுக்கு கரெக்ட்டாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு.
ஆனால் நடந்தது வேறு!
நண்பரின் மறைவுக்குப் பிறகு குழந்தைகளுக்கு கொடுக்காமல் தானே சொந்தம் கொண்டாடப் பார்த்தார் அந்த உறவினர்.
இப்படி பிரச்னைகள் எழுவதற்கு காரணம் நாமினி (Nominee) குறித்த தெளிவான பார்வைகள் இல்லாததுதான். ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை நாமினி யாக நியமித்தாலோ, அல்லது யாரையுமே நாமினியாக நியமிக்காவிட்டாலோ, சம்பந்தப்பட்டவரின் வாரிசுகள் (Legal Heirs) அந்த சொத்துக்களைப் பெறுவதில் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. நாமினிக்கு உள்ள சட்டப்பூர்வமான உரிமைகள் என்ன, கடமைகள் (Duties) என்ன, வாரிசுகளுக்கு உள்ள உரிமைகள் (Rights) என்ன என்பது பற்றி வழக்கறிஞர் என். ரமேஷிடம் கேட்டோம்…
”ஒருவர் ரத்த சம்பந்தம் இல்லாத மூன்றாம் நபரை நாமினியாக நியமித்துவிட்டு இயற்கை எய்திவிட்டார் என்றால், அவரது முதலீடுகள் (Investments), சேமிப்புகள் (Savings), பணிநலன்கள் போன்றவற்றை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யாரிடம் ஒப்படைக்க வேண்டும்? வாரிசுகளிடமா அல்லது நாமினியிடமா என்பது முக்கிய மான கேள்வி.
வாரிசுகளிடமிருந்து எவ்வித ஆட்சேபனையும் இல்லாதபோது பலன்/முதலீடு நாமி னியிடம் ஒப்படைக்கப் படும். ஒருவேளை வாரிசுகள் ஆட்சேபனை செய்யும்பட்சத்தி ல், நீதிமன்றத்தை அணுகி உரிய உத்தரவுபெற்று வருபவரிடமே ஒப்படைக்கப்படும்.
ஒருவர் நாமினியை நியமிக்காமலே மறைந்துவிட்டால் பிரச்னைகள் எதுவும் இன்றி வாரிசுகளுக்கு அதாவது மனைவி, குழந்தைகள் அல்லது குடும்ப உறுப்பின ர்கள் இவர்களில் யார் பொருத்த மானவர்களோ அவர்களுக்குப் போய்விடும். பொ துவாக, நாமினி என யாரையும் நியமிக்காதபோது வாரிசுச் சான்றிதழ் (legal heir certificate) அடிப்படையில் சொத்துக்களை/முதலீட்டைத் திருப்பி கொடுப்பார்கள். ஆனால், சில சூழ்நிலைகளில் நீதிமன்றத்தின் மூலம் வாரிசுச் சான்றிதழ் (succession certification) பெற்று அதன் மூலம்தான் பலனைப் பெற முடியும்.
வாரிசு இருக்கும்போது மூன்றாவது நபரை நாமினியாக நியமிக்கலாமா? என்கிற கேள்வியும் பலருக்கு எழக்கூடும். வாரிசுகள் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் இந்த கேள்வி எழுவது நியாயமே. யாரை நாமினியாக நியமிக்க வேண்டும், யாரை நாமினியாக நியமிக்கக் கூடாது என எந்த விதிமுறையும் இல்லை. ஆனால், ரத்த உறவு முறை, பெற்றோர் அல்லது தாரத்தை (spouse) நாமினியாக நியமிப்பதுதான் நடைமுறை.
மூன்றாம் நபரை நாமினியாக நியமிக்கும்போது, சட்டரீதியான கேள்வியையும் ச ந்தேகங்களையும் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களே எழுப்பும். உதாரணமாக, ஒருவர் ஒரு கோடி ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்து உறவினரல்லாத மூன்றாம் நபர் ஒருவரை நாமினியாக நியமிக்கும்போது, இந்த சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு கள் அதிகம். பாலிசி எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டால் நாமினி மீது நிச்சயமாக சந்தேகம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சட்டரீதியாக இப்படி ஒரு சந்தேகம் எழும்பட்சத்தில் நாமினியிடம் பணத்தைக் கொடுக்காமல், வாரி சுகளிடமே ஒப்படைக்கப்படும்.
சரி, ஏதோ ஒரு காரணத்திற்காக ரத்த சம்பந்தமில்லாத ஒருவரை நாமினியாக நியமித்து விட்டு மறைந்துவிடுகிறார் ஒருவர். அவர் விட்டுச் சென்ற சொத்துக்களை நாமினியாக இருப்பவர் அபகரிக்க நினைத்தால், அதை வாரிசுதாரர்கள் எப்படி தடுப்பது? இந்த பிரச்னையில் வாரிசுதாரர்களின் உரிமை என்ன? என்று நீங்கள் கேட்கலாம்.
சொத்துக்களைப் பெற்றுக் கொண்ட நாமினி, அதை வாரிசுகளிடம் கொடுக்க மறுத்தாலோ அல்லது அபகரித்தாலோ, நீதிமன்றத்தை நாடலாம். இறந்தவரின் வாரிசு என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதன் மூலம் இறந்தவரின் சொத்துக்களை, பலனை அல்லது பணத்தை வாரிசுகளிடம் ஒப்படைக்க நாமினிக்கு நீதிமன்றம் உத்தரவிடும்.
ரத்த சம்பந்தமில்லாத ஒருவர் என்னதான் நாமினியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், இறந்தவரின் சொத்தில் அவருக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சொத்துக்களையோ, பணத்தையோ அல்லது பலனையோ வாரிசுகளிடம் ஒப்படைக்கும் உரிமையும் கடமையும் மட்டுமே அவருக்கு உண்டு!
ஒருவருக்கு ஒரேஒரு மகன் என்றால் வாரிசு யார் என்கிற பிரச்னை வராது. ஆனா ல், நான்கைந்து மகன்கள் இருந்தால், இதில் யாரை நாமினியாக நியமிப்பது என்கிற கேள்வியையும் பலர் கேட்கிறார்கள். ஒரே நபர் வாரிசாகவும், நாமினியாகவும், இருக்கும்போது பிரச்னை ஏதும் இல்லை.
ஆனால், ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் வாரிசுகளாக இருந்து, அதில் ஒருவர் மட்டும் நாமினியாக நியமிக்கப்படும்போது, குடும்பத்தின் மற்ற வாரிசுகள் ஆட்சேபனை செய்யவில்லை என்றால், நாமினியாக உள்ள வாரிசே சொத்துக்களை பெற்றுக் கொள்ள முடியும். மற்ற வாரிசுகள் ஆட்சேபனை செய்தால் (அதாவது, தங்களுக்கு பங்கு கிடைக்காது என்கிற நிலைமையில்) நீதிமன்றத்தை நாடலாம்.
ஒருவேளை நாமினியாக நியமிக்கப்பட்டவர் இறந்து விட்டாலோ அல்லது பித்துப் பிடித்திருந்தாலோ அது நாமினியாக யாரையும் நியமிக்கப்படாததற்கு சமம். நாமி னி நியமிக்கப்படாத போது நேரடியாக வாரிசுகளிடம் சொத்துக்கள், பணம் அல்லது பலன்கள் கொடுக்கப்படும். அதேபோல திருமணத்துக்கு முன் செய்திருந்த டெபாசி ட்டுகள் மற்றும் பாலிசிகளில் திருமணத்துக்கு பின் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரை நாமினியாகச் சேர்ப்பதும் குழப்பங்கள் வராமலிருக்க உதவும்.”
கஷ்டப்பட்டு சம்பாதிப்பது வாரிசுகள் அனுபவிக்கத்தான். அதற்கு சிக்கலில்லாத வகையில், நடந்து கொள்ளும் நேர்மையானவர்களையே நாமினியாக நியமனம் செய்யுங்கள்.
குறிப்பு: இங்கே சொத்து என குறிப்பிடப்படுவது அசையும் சொத்து மட்டுமே; அசையா சொத்து அல்ல.
🍁🍁🍁 வீட்டுக் கடன் - 15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு...
மாதம் 10 ஆயிரம் சம்பாதித்தாலும் சரி, மாதம் 5 லட்சம் ரூபாய் சம்பாதிப்பவராக இருந்தாலும் சரி, உங்களது ஆசை என்ன என்று கேட்டால், அந்த லிஸ்டில் சொந்த வீடு என்பது நிச்சயம் இல்லாமல் இருக்காது.
எப்படியேனும் கடன் வாங்கியாவது அவரவருக்கு ஏற்ப வீடுகட்டிவிட வேண்டும் என்பது பலரின் பெரும் கனவாகவே இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் வீடு கட்டுவது என்பது நிச்சயம் கையில் பணத்தினை வைத்துக் கொண்டு செய்யும் காரியம் அல்ல. ஏனெனில் விற்கிற விலைவாசி அதுபோல. ஆனால் அப்படியானவர்களுக்கு வரனாக உள்ளது தான் வீட்டுக்கடன்.
15 ஆண்டுகளில் இல்லாத அளவு வட்டி குறைவு
அதிலும் தற்போது 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வட்டி குறைந்துள்ளது. ஆக இதன் மூலம் உங்களது கனவு வீட்டை நிஜத்திலும் உங்களால் சற்று குறைந்த வட்டியில் கட்ட முடிக்க முடியும். ஏற்கனவே நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை குறைத்த நிலையில், இதனால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தினையும் குறைத்துள்ளன. அதோடு வங்கிகளும் விழாக்கால சலுகையாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு வட்டி சலுகை, செயல்பாட்டுக் கட்டணம் ரத்து என பல அதிரடியான சலுகைகளை அறிவித்துள்ளன.
கட்டணங்களில் சலுகை
ஏற்கனவே வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைத்துள்ள நிலையில், வீடு கட்ட நினைப்போருக்கு நிச்சயம் இது வரபிரசாதம் தான். தற்போது எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடா, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பல வங்கிகள், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தினை குறைத்துள்ளன. பண்டிகை காலங்களில் தேவை அதிகரிக்கும் என்பதால், சில வங்கிகள் மற்ற கட்டணங்களிலும் சலுகைகளை அறிவித்துள்ளன. குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பல சலுகைகள் உள்ளன.
டெவலப்பர்களும் சலுகை
இது தவிர கடந்த சில மாதங்களாக முடங்கிபோன டெவலப்பர்களின் வணிகத்தினை ஊக்குவிக்க, அவர்களும் இந்த நேரத்தில் பற்பல சலுகைகளை வாரி வழங்கி வருகின்றனர். ஆக இதெல்லாம் சேர்த்து உங்களது வீட்டுக்கனவை நிறைவேற்ற சரியான வாய்ப்பாக அமையும். சரி வாருங்கள் பார்க்கலாம் எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மற்ற கட்டணங்கள் எவ்வளவு, என்னென்ன சலுகைகள், விவரங்கள் என்ன?
எஸ்பிஐ-யில் எவ்வளவு வட்டி?
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில் தற்போது விழாக்கால பருவத்திற்காக பற்பல சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. தற்போது 30 லட்சம் வரையிலான கடனுக்கு 6.90% வட்டி விகிதமும், இதே 30 லட்சம் ரூபாய்க்கு மேலான கடனுக்கு 7% வட்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது. அதோடு வாடிக்கையாளர்கள் இந்த வீட்டுக்கடன்களுக்கு கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலும் வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகளை வரை சலுகை பெற முடியும்.
விழாக்கால சலுகை காரணமாக வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 0.25% வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த சலுகைகாக எஸ்பிஐ வங்கியின் டிஜிட்டல் செயலியான யோனோ மூலம் வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கும் போது தான், இந்த தள்ளுபடி சலுகை கிடைக்கும் எனவும் அறிவித்துள்ளது.
இதற்கு முன்பு மூன்று கோடி வரையிலாக வீட்டுக்கடனுக்கு 8 மெட்ரோ நகரங்களில், 10 அடிப்படை புள்ளிகள் தள்ளுபடி வழங்கப்பட்டும் வந்தது. இதில் கூடுதலாக யோனோ ஆப் மூலம் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 அடிப்படை புள்ளிகள் அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
கோடக் மகேந்திரா வங்கியில் என்ன சலுகை?
கோடக் மகேந்திரா வங்கியினை பொறுத்த வரையில், வீட்டுக்கடன் வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு 6.9% முதல் வட்டியினை பெறலாம். மற்ற வங்கியில் இருந்து கடன் தொகையை கோடக் வங்கிக்கு மாற்றினால், அவர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கூட தொகையை சேமிக்க முடியும் என்கிறது இவ்வங்கி. குறிப்பாக பெண் வாடிக்கையாளர்களுக்கு, கடனுக்கு சிறப்பு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
பேங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம்?
இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட வீட்டுக்கடன் விகிதத்தில் 15 அடிப்படை புள்ளிகள் குறைத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அறிவித்து இருந்தது. இது ஒவர்நைட் MCLR விகிதம் 6.65% ஆகவும், 1 மாதம் எம்சிஎல்ஆர் விகிதம், 7.10% ஆகவும், 3 மாதங்களுக்கு 7.25% ஆகவும், இதே 6 மாதங்களுக்கு 7.35% ஆகவும், 1 வருடத்திற்கு 7.50% ஆகவும் வழங்கப்படுகிறது.
யூனியன் வங்கியில் எவ்வளவு வட்டி?
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் 30 லட்சம் மேலான வீட்டுக்கடனுக்கு 10 அடிப்படை புள்ளிகளை இவ்வங்கி குறைந்துள்ளது. இதில் பெண் வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக, கூடுதலாக 5 அடிப்படை புள்ளிகள் வட்டி குறைப்பு செய்யப்படும் எனவும் இவ்வங்கி அறிவித்துள்ளது. வீட்டுக் கடன்களுக்கு யூனியன் வங்கியில் வட்டி விகிதம் 7%ல் இருந்து ஆரம்பிக்கிறது. அதோடு செயலாக்க கட்டணம் என்பது டிசம்பர் 31 வரையில் கிடையாது எனவும் அறிவித்துள்ளது.
தனியார் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு?
ஆக்ஸிஸ் வங்கியினை பொறுத்த வரையில் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் வருடத்திற்கு 6.9%இல் இருந்து ஆரம்பிக்கிறது. இதே போல ஹெச்டிஎஃப்சியிலும் வாடிக்கையாளார்களுக்கு வருடத்திற்கு 6.9% வட்டி விகிதத்தில் இருந்து கிடைக்கும். இவ்வங்கி கடன் தொகையில் 0.5% செயலாக்க கட்டணமாக வசூலிக்கிறது. இந்த கட்டணம் ரூ.3,000 வரை இருக்கலாம். இதே போல ஐசிஐசிஐ வங்கியிலும் வீட்டுக்கடன் வட்டி விகிதம் 6.95% முதல் ஆரம்பிக்கிறது.
🍁🍁🍁 C P S - அலுவலகம் (Government Data Centre) இடம் மாற்றம்...
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பணியில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு, CPS வழியே ஓய்வுகால பங்களிப்பு பணப்பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
CPS அலுவலகம் கிண்டி கோட்டூர்புரத்தில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகில் செயல்பட்டு வந்தது.
வருகின்ற நவம்பர் 5 - ஆம் தேதி முதல் CPS அலுவலகம் சென்னை சைதாப்பேட்டை கால்நடை மருத்துவமனை (வெட்னரி ஹாஸ்பிடல்) பஸ் நிலையம் அருகில் ஒருங்கிணைந்த நிதி வளாகம் அலுவலகத்தில் செயல்பட உள்ளது.
சைதாப்பேட்டை ஒருங்கிணைந்த நிதி புது கட்டடத்தில் ஐந்தாவது மாடியில் சிபிஎஸ் அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
🍁🍁🍁 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) நடைபெறும் தேதி அறிவிப்பு...
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) அடுத்தாண்டு ஜனவரி 31ம் தேதி நடைபெறும்...
Education Minister @DrRPNishank: Central Teacher Eligibility Test (#CTET) exam will now be conducted on 31.01.2021
🍁🍁🍁 வீடு கட்டும் அரசு ஊழியர்களுக்கு SBI Privilege Home Loan என்ற புதிய திட்டம் அறிமுகம்...
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான எஸ்பிஐ வீடு கட்டும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்பிஐ வங்கி இப்போது மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களும் SBI Privilege Home Loan என்றும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி அதை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
யாரெல்லாம் பெறலாம்...
இந்த திட்டம் மூலம் எஸ்பிஐ வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியிருக்கும் மத்திய மற்றும் அரசு ஊழியர்கள் பெண்களுக்கு வழங்கப்படும் குறைந்த வட்டி விகித கடன் நன்மையைப் பெற முடியும் என்பது கூடுதல் தகவல்.
எஸ்.பி.ஐ கஸ்டமர்ஸ்க்கு வங்கியின் மிக முக்கியமான அறிவிப்பு...
எஸ்பிஐ வங்கியில் மாத சம்பளதார்கள் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டுக்கடன் பெறும் போது பெண்களுக்கு 8.75% முதல் 8.85% வட்டி விகிதத்திலும், பிறருக்கு 8.80% முதல் 8.90% வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.
தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம் வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.
வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...