கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
🍁🍁🍁 கல்லூரி பருவத் தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்க திட்டம்...
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு கல்லூரி பருவ தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் நடத்தி முடிக்க உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களுக்கும் இணைய வழியில் தற்போது பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கல்லூரிகள் திறக்க நவம்பர் 16ஆம் தேதி முதல் அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் கொரானா இரண்டாவது அலை மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கல்லூரிகள் திறப்பை ஒத்திவைக்க பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக துறை அமைச்சர் மற்றும் நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார். அதன் பின்பு பள்ளி கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதையடுத்து கல்லூரி மாணவர்களுக்கான பருவத்தேர்வு ஜூலை விரைந்து மார்ச் மாதத்திற்குள் முடிக்க உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது...
🍁🍁🍁 பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பார் - அமைச்சர்...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வியாழக்கிழமை (நவம்பர் 12) தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையம் அருகே அமைச்சர் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் 16 ஆயிரத்து 300 மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு.
பள்ளிகளில் சீருடைகள், ஷூ,சாக்ஸ் விரைவில் வழங்கப்படும்.
முதல்வர் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து வியாழக்கிழமை (நவம்பர் 12) அறிவிப்பார் என்றார்.
🍁🍁🍁 851 மாணவ-மாணவிகள் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று மருத்துவ படிப்புக்கு விண்ணப்பம்...
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரையில் 32 ஆயிரம் மாணவர்களுக்கு மேலாக விண்ணப்பித்து உள்ளனர்.
இந்த வருடம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் சேருவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மட்டும் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்.
இடையில் சேர்ந்து படித்தாலோ, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தாலோ கிடைக்காது. இந்த வருடம் அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் 747 பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இது தவிர கடந்த வருடம் படித்த மாணவர்கள் 113 பேர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 851 பேர் அரசு பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் பெற்று விண்ணப்பித்துள்ளனர்.
🍁🍁🍁 தனியார் பள்ளியில் RTI சேர்க்கை தேர்வு பெற்ற மாணவர்கள் பட்டியல் பள்ளிகளில் இன்று வெளியீடு...
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இரண்டாம் சுற்றில் தேர்வான மாணவர்கள் பட்டியல் அந்தந்தப் பள்ளிகளில் புதன்கிழமை வெளியிடப்படவுள்ளது. கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவர். அதன்படி மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.15 லட்சம் இடங்கள் உள்ளன.
இதற்கான முதல்கட்ட மாணவர் சேர்க்கை கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டது. அதில் 60 ஆயிரம் பேருக்கு இடங்கள் நிரப்பப்பட்டன. இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த அக்.12இல் தொடங்கி நவ.7-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. 16,500 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து தேர்வான மாணவர்களின் பட்டியல் புதன்கிழமை அந்தந்த பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்படவுள்ளன. ஒருபள்ளியில் அதிகளவிலான விண்ணப்பங்கள் வந்திருந்தால் வியாழக்கிழமை குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...