கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 26.11.2020(வியாழன்)...

 

🌹இன்று உண்மையான அன்பை அலட்சியம் செய்பவர்கள் நிச்சயம் ஓர் நாள் அதே அன்பு கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.!

🌹🌹தன்னுடைய தவறுகளை உணர்ந்தவர்கள் திருந்தி விடுவார்கள்

தன்னுடைய தவறுகளை நியாயப்படுத்தப்படுத்துபவர்கள் திருந்தவே மாட்டார்கள்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈கரையை கடந்தது:

வங்கக்கடலில் உருவான "நிவர்" புயல் தீவிர புயலாக வலுவிழந்து, புதுச்சேரி அருகே முழுமையாக கரையைக் கடந்தது.

25-11-2020 இரவு 10.58 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ‘நிவர்’ புயல், 26-11-2020 அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது

- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

🌈🌈நிவர் புயல் காரணமாக இன்று 16 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

 சென்னை

காஞ்சிபுரம்

செங்கல்பட்டு

திருவள்ளூர்

விழுப்புரம்

கடலூர்

திருவண்ணாமலை

அரியலூர்

பெரம்பலூர்

தஞ்சாவூர்

நாகை (மயிலாடுதுறை சேர்த்து)

திருவாரூர்

வேலூர்

கள்ளக்குறிச்சி

திருப்பத்தூர்

ராணிப்பேட்டை

🌈🌈புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக் விருது 2018- 2019, 2019-2020 ஆம் ஆண்டுகளுக்கான மாநில அளவிலான கண்காட்சிப் போட்டிகள் இணைய மென்பொருள் மூலமாக நடத்துவது - தொடர்பாக  - பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈தேசிய திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 2020 - பள்ளி மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கக செய்தி வெளியீடு - நாள் : 23.11.2020

🌈🌈TNPSC குரூப் -4 தட்டச்சு பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஒத்திவைப்பு

🌈🌈தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வரதட்சணை பெறவோ அல்லது வழங்கவோ கூடாது என்று உறுமொழி படிவம் பெறும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

🌈🌈அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜனநாயக கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன், தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்கள் பெயர் பட்டியலை அறிவித்துள்ளார்.

🌈🌈செவ்வாய் கிரகத்தில் உள்ள கேல் பள்ளத்தாக்கு வழியாக 400 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளம் வழிந்தோடியதாக ஓர் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. தண்ணீர் இருந்ததன் அடிப்படையில் அக்கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் எனவும் தெரியவருகிறது.

🌈🌈ஜோ பிடனை அடுத்த அமெரிக்க அதிபராக அங்கீகரிக்க தான் இன்னும் தயாராக இல்லை-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்.         

🌈🌈நேற்றுடன் (நவ.25-ஆம் தேதியுடன்) CPS நீக்க வல்லுந‌ர்குழு அறிக்கை சமர்ப்பித்து 2 ஆண்டுகள் நிறைவு!   CPS பாதிப்பாளர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை  மாண்புமிகு தமிழக முதலமைச்சர்   அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டி மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர் தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல் 

🌈🌈இமாசல பிரதேசத்தில் வருகிற டிசம்பர் 31ம் தேதி வரையில் அனைத்து அரசு கல்வி நிலையங்களையும் மூடுவது என அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

🌈🌈NTSE - பள்ளி மாணவர்களின் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு? என்பது குறித்து அரசு தேர்வுத்துறை  இயக்குநரின் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

🌈🌈தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட முதுநிலை மற்றும் உயர்சிறப்பு மருத்துவத்திலும் வெளியிட்ட அரசாணையை நடைமுறைப்படுத்தி இந்த ஆண்டே கலந்தாய்வு நடத்திட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

🌈🌈கரோனா தொற்று காரணமாக பொறியியல் நுழைவுத் தேர்வான தேர்வுகளை 3  மாதத்துக்குத் தள்ளிவைக்க என்டிஏ திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது 

🌈🌈தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மாணவர் சேர்கைக்கான தரவரிசை வரம்பு குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது 

🌈🌈நிவர் புயல் காரணமாக கணினி ஆப்பரேட்டர், தட்டச்சர் பணிகளுக்கான திறனறி தேர்வு ஒத்திவைப்பு.

🌈🌈அதி தீவிர புயலாக இருந்த நிவர், தற்போது தீவிர புயலாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

🌈🌈நிவர் புயல் நேற்று 25/11/2020 இரவு 11.30 முதல் இன்று 26/11/2020 அதிகாலை 2.30 க்குள் கரையை கடந்தது இந்திய வானிலை மையம் அறிவிப்பு

சென்னையில் இன்று பிற்பகலுக்குள் மின் விநியோகம் வழங்கப்படும்

மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தகவல்

🌈🌈சென்னை விமான நிலையம் காலை 9 மணி முதல் செயல்படத் தொடங்கும் என தகவல் 

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் இன்று செயல்படும்.

🌈🌈யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.

வரும் 27 முதல் டிச., 2 வரை சென்னையில் நடைபெறவிருந்த கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

- சுகாதாரத்துறை அறிவிப்பு.

🌈🌈லட்சுமி விலாஸ் வங்கியை DBS வங்கியுடன் இணைக்க அமைச்சரவை ஒப்புதல்

🌈🌈மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மருத்துவக் கல்லூரிகளை திறக்க டிசம்பர் 1-ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! 

-மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை சுற்றறிக்கை. 

🌈🌈உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் மரடோனா மரணம்

🌈🌈ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை - தகவல் தெரிவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு : போராட்டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும். 

🌈🌈நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு (26.11.20 -  28.11.20) அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

🌈🌈நிவர் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த TNPSC குரூப் 2 மூன்றாம் கட்ட நேர்முகத் தேர்வு ஒத்திவைப்பு : தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

🌈🌈மருத்துவ கல்லூரிகளை டிசம்பர் 1-ம் தேதிக்குள் திறக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை உத்தரவு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

🌈🌈நிவர் புயல் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறுவதாக இருந்த UGC - NET தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. 

🌈🌈கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற காலதாமதமான அறிவிப்பால் தன் மருத்துவராகும் கனவு பறிபோயுள்ளதாக நாமக்கல்  மாணவி திவ்யா வேதனை தெரிவித்துள்ளார் 

🌈🌈நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக நவம்பர் 25  அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருந்துகொண்டே ஆசிரியர்கள் இணைய வழியில் வகுப்பு மற்றும் தேர்வுகளை நடத்தியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

🌈🌈அரசு ஊழியர் சங்கங்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். - ராமதாஸ்

🌈🌈அதிக நேரம் ‘இயர்போன்’ பயன்படுத்துவதால் காதுகளில் பாதிப்பு ஏற்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

🌹🌹பள்ளிக் கல்வித்துறைக்கு வேண்டுகோள்!தேவையற்ற சுற்றறிக்கையை திரும்பப்பெற வேண்டும்!           ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் முனைவர் -மன்றம் நா.சண்முகநாதன் வலியுறுத்தல்


👉கொரோனா கொடுந்தொற்று முற்றிலுமாய் நீங்காத சூழலில், பெருமழையும் கடும்புயலும் கரம்கோர்க்கும் காலத்தில் மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தை காரணம் காட்டி 26.11.2020அன்று  கட்டாயம் பணிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்துள்ளது.

👉13 மாவட்டங்களுக்கு 26.11.2020அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.,தற்போது மேலும் 3 மாவட்டங்களை சேர்த்து 16 மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மாநிலத்தின் சரி பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படி எனில் மீதமுள்ள மாவட்டங்களில் மட்டும் போராட்டம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுமா?அவ்வாறு நடத்துவது சரியான கணக்கெடுப்பு ஆகுமா?என்று தமிழகரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தனைக்கும் மேலாக கொரோனா கொடுந்தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் முற்றிலும் இயங்கவில்லை. நாள்தோறும்சுழற்சிமுறையில் 50சதவிகித ஆசிரியர்களுடன் பள்ளிகள் மாணாக்கர் சேர்க்கைக்காக இயக்கப்பட்டு வருகிறது.

கள நிலைமை இவ்வாறிருக்க பள்ளிக் கல்வித்துறையின் சில மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்கள் பணிக்கு வந்த மற்றும் வராத ஆசிரியர்களின் பட்டியலைத் தயாரிக்க சுற்றறிக்கை அனுப்புவது எதற்கு? ஆசிரியர்களை மிரட்டவா? அவர்களுக்கு மனஅழுத்தத்தை கொடுக்கவா?

அசாதாரணமான சூழல் மாநிலத்தில் நிலவும் இவ்வேளையில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களைத் தாண்டி புயலின் தாக்கம் நீடித்தால் எவ்வாறு ஆசிரியர்கள் பணிக்கு செல்லமுடியும்? அவ்வாறு செல்லும் வழியில் ஏதாவது விபரீதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? அரசு பொறுப்பேற்குமா நிவர் புயலின் கோரத்தாண்டவத்தில் மாநிலத்தின் மக்கள் சிக்கித்தவிக்கையில் இக்கணக்கெடுப்பு அர்த்தமுடையது தானா?* 

👉ஆசிரியர்களைஅலைக்கழிக்கும்நோக்கம்கொண்டதா? என்று ஆசிரியர்களிடையே பேசப்படு வருகிறது

பள்ளிகள் இயங்காத சூழலில் பள்ளிக் கல்வித்துறையில் இந்தச் சுற்றறிக்கை தேவையற்றதாகவே ஆசிரியர்களால்  பார்க்கப்படுகிறது. அகில இந்திய வேலை நிறுத்தத்தைக் காரணமாக காட்டி தமிழகத்து ஆசிரியர்களிடம் பீதியை உருவாக்கும் மனநிலையில் கல்வித்துறை அலுவலர்கள் செயல்படுவது தடுத்துநிறுத்தப்படவேண்டும்.                     பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை வெளியிட்ட மாவட்டங்களில் அவ்வறிக்கையை திரும்பப்பெற பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டு ஆசிரியர்களின் நலன்காக்குமாறும், ஆசிரியர்களை மன அழுத்தத்தில் இருந்து பாதுகாத்திடுமாறும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின்  சார்பில்  கேட்டுக் கொள்கிறேன்.

முனைவர் மன்றம்.நா.சண்முகநாதன்

மாநிலத் தலைவர்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இன்னும் ஒரு மணி நேரத்தில் நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது...

 



பள்ளிகள் தற்போது திறக்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற விபரத்தினை எழுத்து மூலமாகவோ, குறுஞ்செய்தி மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ பெற்று அதன் அடிப்படையில் விபரங்கள் அனுப்ப தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...

 பள்ளிகள் தற்போது திறக்கப்படாத நிலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற விபரத்தினை எழுத்து மூலமாகவோ,  குறுஞ்செய்தி மூலமாகவோ, வாட்ஸ்அப் மூலமாகவோ, மெயில் மூலமாகவோ பெற்று அதன் அடிப்படையில் விபரங்கள் அனுப்ப தூத்துக்குடி முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு...



நிவர் புயல் எதிரொலி - 16 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு... அரசாணை எண் 597, நாள்:-25-11-2020 வெளியீடு...

 


அரசாணை எண் 597, நாள்:-25-11-2020





தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு நாளை (26-11-2020) பொது விடுமுறை - முதல்வர் அறிவிப்பு...

 நாளை 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை

நாளை தமிழகத்தில் 13 மாவட்டங்களில் பொதுவிடுமுறை- முதலமைச்சர்...

நிவர் புயலை எதிர்கொள்ள உள்ள கீழ்கண்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவித்தார் முதலமைச்சர்...

சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் நாளை பொதுவிடுமுறை...

செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பொதுவிடுமுறை

இன்று தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை 13 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது


NTSE, 2015-16 MAT, SAT Question Papers & Solutions...

 தேசிய திறனாய்வு தேர்வு  2015-16, மனத்திறன் தேர்வு, பாடப்பொருள் தேர்வு வினாத்தாள், விடைக் குறிப்புகள், தீர்வுகள்...

NTSE, 2015-16 MAT, SAT Question Papers & Solutions...

>>> Click here to Download NTSE_MAT_2015-16 Question Paper...


>>> Click here to Download NTSE_SAT_2015-16 Question Paper...


>>> Click here to Download Answer Key_NTSE_SAT_MAT_2015-16...


NTSE, 2016-17 MAT, SAT Question Papers & Solutions...

 தேசிய திறனாய்வு தேர்வு  2016-17, மனத்திறன் தேர்வு, பாடப்பொருள் தேர்வு வினாத்தாள், விடைக் குறிப்புகள், தீர்வுகள்...

NTSE, 2016-17 MAT, SAT Question Papers & Solutions...

>>> Click here to Download NTSE_MAT_2016-17_ Question Paper...


>>> Click here to Download NTSE_SAT_2016-17_ Question Paper...


>>> Click here to Download NTSE_MAT_2016-17_ Answer Key...


>>> Click here to Download NTSE_SAT_2016-17_ Answer Key...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Don't trust DEEP FAKE videos circulating like RBI Governor speaking in support of some investment schemes - RBI appeals to public

 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...