கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மன்னிப்பு கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உயர் கல்வி செயலர் நேரில் ஆஜர்...

 நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா, அண்ணா பல்கலை பதிவாளர் நேரில் ஆஜராகினர்.

கோவையில், அண்ணா பல்கலை மண்டல மையத்தின், உதவி பேராசிரியர் எம்.சரவணகுமார் தாக்கல் செய்த மனு: கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி நகரங்களில் இயங்கி வந்த, அண்ணா பல்கலை தொழில்நுட்ப மையங்கள், 2012ல் அண்ணா பல்கலையுடன் இணைக்கப் பட்டன.

அண்ணா பல்கலை தொழில்நுட்ப மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்கள் நியமனங்கள் குறித்து ஆய்வு செய்ய, வி.பி.முத்துசாமி தலைமையில், ஏழு பேர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து, அறிக்கை அளித்தது.ஏற்கனவே, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஷீலா பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவும், முத்துசாமி தலைமையிலான குழுவும் அறிக்கை அளித்த நிலையில், மீண்டும் ஒரு குழுவை அமைப்பதற்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. இந்த உத்தரவுக்கு, உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், அண்ணா பல்கலை சிண்டிகேட் கூடி, முத்துசாமி குழு அளித்த அறிக்கை மற்றும் பரிந்துரைகளை ஏற்பதாக, தீர்மானம் நிறைவேற்றியது. 62 ஆசிரியர்கள் மற்றும், 13 ஊழியர்களை பணிக்கு எடுப்பது என்றும், அதில் கூறப்பட்டது.ஆனால், சிண்டி கேட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமல்படுத்தவில்லை.இந்நிலையில், தீர்மானத்தின் படி தகுதியானவர்களை பணிக்கு எடுக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை அமல்படுத்தாமல், நீதிமன்ற உத்தரவை மீறுகின்றனர்.

எனவே, உயர் கல்வித்துறை செயலர் மற்றும் அண்ணா பல்கலை பதிவாளருக்கு எதிராக, நீதிமன்றஅவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி தண்டபாணி முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஜி.சங்கரன், அரசு சார்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், அண்ணா பல்கலை சார்பில், வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராயினர்.

நீதிமன்ற உத்தரவுப்படி, உயர் கல்வித்துறை முதன்மை செயலர் அபூர்வா, அண்ணா பல்கலை பதிவாளர் கருணாமூர்த்தி ஆகியோர், நேரில் ஆஜராகினர்.உயர் கல்வித்துறை செயலர் தரப்பில் தாக்கல் செய்த மனுவில், 'சிண்டிகேட் கூட்டத்தில், இந்த விஷயத்தை முன்வைக்கும் போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முயற்சிகள் எடுப்பேன். நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக முடிவுக்கு வந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன்' என, கூறப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை முடித்து வைத்து, நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.

கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் இன்று திறப்பு... மருத்துவ படிப்பில் அனைத்து வகுப்பும் உண்டு...

கொரோனா தொற்று பரவலால், பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லுாரிகள், பல்கலைகள் அனைத்தும், இன்று முதல் திறக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லுாரிகளில் மட்டும், இளநிலை, முதுநிலை என, அனைத்து வகுப்புகளும் இன்று துவங்கப்படுகின்றன.

கொரோனா தொற்றுநோய் பரவலால், மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, புதிய கல்வி ஆண்டு துவங்கிய பிறகும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், கல்லுாரிகள், பல்கலைகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

இதன்படி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில், இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, டிச., 2 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. இதையடுத்து, அனைத்து வகை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளன.

எந்தெந்த கல்லுாரிகள்?

கலை, அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், வேளாண்மை, மீன் வளம், கால்நடை மருத்துவ அறிவியல் கல்லுாரிகளில், இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்கப்படுகின்றன. ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இவை தவிர, மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லுாரிகளில், இளநிலை மற்றும் முதுநிலை வகுப்புகள், இன்று முதல் துவங்கப்படுகின்றன. மருத்துவத்தில் மட்டும், அனைத்து வகுப்பு மாணவர்களும், இன்று முதல் கல்லுாரிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப் பட்டுஉள்ளது. நடப்பு கல்வியாண்டில் புதிதாக சேரும் மருத்துவ மாணவர்களுக்கு மட்டும், பிப்., 1 முதல் வகுப்புகள் துவங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான விடுதி களையும், இன்று முதல் திறக்கலாம் என, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு பின், கல்லுாரி, பல்கலைகள் திறக்கப்படுவதால், மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.

அனைத்து வகை கல்லுாரிகளும் திறக்கப்படும் நிலையில், மாணவர்கள், ஆசிரியர்கள், கொரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்கும்படி, அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான பாதுகாப்பு வழிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வழிமுறைகள் என்ன?

* வகுப்புகளில் நெருக்கமாக மாணவர்கள் அமரவோ, நிற்கவோ கூடாது. சமூக இடைவெளிக்கு வாய்ப்பில்லாத நிலையில், பாட திட்டம் சாராத இணை கல்வி நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்

* வெளியாட்கள், செயல்முறை வகுப்பு எடுக்கவும், வேறு பணிகளுக்கு வருவதையும் அனுமதிக்க வேண்டாம்

* மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சானிடைசர் மற்றும் சோப்பால், கைகளை சுத்தம் செய்ய, ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்

* கல்லுாரிக்கு வர இயலாத மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும். வெளிநாட்டு மாணவர்களுக்கும், ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும் 

சுழற்சி வகுப்புகள்

* இட பற்றாக்குறை இருந்தால், 50 சதவீத மாணவர்களை வைத்து, சுழற்சி முறையில் பாடம் நடத்தலாம். வாரம் ஆறு நாட்களும் கல்லுாரிகள், பல்கலைகள் இயங்க வேண்டும்

* பேராசிரியர்கள், பணியாளர்களும், கொரோனா தடுப்பு முறைகளில் அக்கறை காட்ட வேண்டும்

* விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், உணவை பார்சலாக பெற்று செல்ல அனுமதிக்க வேண்டும். உணவறையில் கூட்டம் கூடக் கூடாது. உணவு வழங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்

* நுழைவு வாயிலில், மாணவர்களின் உடல் வெப்பநிலை சோதித்த பின் அனுமதிக்க வேண்டும். கொரோனா பாதித்து, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடம், பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது

* தொற்று அறிகுறி உள்ளவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு, பல்வேறு வழிகாட்டு முறைகள் கூறப்பட்டுள்ளன.

புதிய பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

 குடியிருப்பு பகுதிகளில் புதிதாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் தொடங்க மாவட்ட வாரியாக பட்டியல் தயாரித்து அறிக்கை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு இலவச கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011ல், ஒவ்வொரு குடியிருப்பு பகுதியிலும் 1 கி.மீ. தொலைவிற்குள் தொடக்கப்பள்ளி வசதியும், 3 கி.மீ. தொலைவிற்குள் நடுநிலைப் பள்ளி வசதியும் இருத்தல் வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகள் விவரம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கட்டமைப்பில் கூறியுள்ளவாறு புவியியல் தகவல் முறை மற்றும் கள ஆய்வு மூலம் கடந்த 2018-19ம் ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் 2021-2022ல் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்ல மேற்கொள்ள வேண்டிய உத்திகள் குறித்த விவரங்கள் மற்றும் பள்ளி வரைபட பயிற்சி மூலம் பெறப்பட உள்ளது. அதன்படி குடியிருப்பிற்கு அருகில் 5 கி.மீ தொலைவில் உயர்நிலைப்பள்ளி இல்லையென்றால், நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகவும், 8 கி.மீ தொலைவில் மேல்நிலைப்பள்ளி இல்லாத நிலையில், உயர் நிலைப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தலாம். 8ம் வகுப்பில் 70 மாணவர்களுக்குக் குறையாமல் சேர வாய்ப்பு உள்ள நடுநிலைப்பள்ளிகள் உயர் நிலைப்பள்ளியாகவும், 10ம் வகுப்பில் குறைந்தபட்சம் 100 மாணவர்கள் உள்ள உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தலாம்.

எஸ்சி மக்கள் அதிகமாக உள்ள இடங்கள், பெண்கள் பள்ளிகளை தரம் உயர்த்தலாம். போக்குவரத்து வசதி இல்லாத மற்றும் பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள் பயில உண்டு உறைவிட பள்ளிகள், விடுதிகள் வழங்கவும் கூறப்பட்டுள்ளது.இவ்விவரங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வட்டார வள மையங்கள் சார்ந்த பள்ளிகளில் பராமரிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பொதுமக்களின் பங்களிப்பு

நடுநிலைப்பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த பொதுமக்கள் பங்குத் தொகை ₹1 லட்சமும், உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த ரூ2 லட்சமும் அரசு கணக்கில் செல்லுத்தப்பட வேண்டும். மாநகராட்சிக்கு 8 கிரவுண்டு, மாவட்ட தலைமையகம் 8 கிரவுண்டு, நகராட்சிக்கு 10 கிரவுண்டு, பேரூராட்சியில் ஒரு ஏக்கர், ஊராட்சியில் 3 ஏக்கர் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

397 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறும் 'கிரேட் கஞ்சங்ஷன்' - வானியல் நிகழ்வு...


வரும் டிசம்பர் 24ம் தேதி 397 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழனும் சனியும் மிக அருகில் சந்திக்க உள்ளன.

கடந்த 1623 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த இரு கிரகங்களும் இவ்வளவு அருகில் சந்தித்ததில்லை என்று புகழ்பெற்ற பிர்லா கோளரங்கத்தின் தலைவர் தேவி பிரசாத் துரை தகவல் அளித்துள்ளார்.

டிச.,21 அன்று இந்த இரு கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் ஒரு பெரிய நட்சத்திரம்போலக் காட்சியளிக்கும் என அவர் கூறியுள்ளார். இதற்குப் பெயர் கஞ்சங்ஷன். வியாழனும் சனியும் இணையும் இந்த நிகழ்வின் பெயர் கிரேட் கஞ்சங்ஷன் ஆகும். இதற்குப் பின்னர் வரும் 2080ஆம் ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி அன்று இந்த இரு கிரகங்களும் மிக அருகில் சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தமை - புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் பட்டியல் தயாரித்துள்ளமை - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம்... 💥 இணைப்பு புதிதாக தயாரிக்கப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதனை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகங்களின் பட்டியல்...

 அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு ஆகிய புதிய வருவாய் மாவட்டங்களில் புதிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தமை - புதிய மாவட்டங்களை உள்ளடக்கிய முதன்மைக் கல்வி அலுவலகங்கள் பட்டியல் தயாரித்துள்ளமை - கல்வி மாவட்டம் மாறியுள்ள பள்ளிகளின் விபரங்களை அனுப்பி வைக்கக் கோரி அரசுத்  தேர்வுகள் இயக்குநர் கடிதம்...

💥 இணைப்பு புதிதாக தயாரிக்கப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதனை சார்ந்த மாவட்ட கல்வி அலுவலகங்களின் பட்டியல்...

>>> அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21ஆம் ஆண்டிற்கான பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு (Shaala Siddhi)உட்கூறு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2020-21ஆம் ஆண்டிற்கான பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு (Shaala Siddhi) உட்கூறு சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...

>>> Click here to Download SPD Letter...


தமிழ்நாடு மருத்துவ சேவைகளில் வேலைவாய்ப்பு - காலிப்பணியிடங்கள்: 76, விண்ணப்பிக்க கடைசி நாள்: 24-12-2020...

 


(எம்ஆர்பி) இந்த ஆண்டு 76 சிகிச்சை உதவி வேலைகளை 2020 இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்தவர்கள் அறிவிப்பைப் படித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (எம்ஆர்பி) ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ வலைத்தளம்

www.mrb.tn.gov.in

வேலை காலியிட விவரங்கள்

மொத்த காலியிடம் - 76 பதிவுகள்

இடுகையின் பெயர்: சிகிச்சை உதவியாளர்

வயது எல்லை :

குறைந்தபட்ச வயது 18 வயது

அதிகபட்ச வயது 58 வயது

சம்பளம்:

ரூ .18000 - 56900 /

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட  டிப்ளோமா தேர்ச்சி பெற வேண்டும்.

விரிவான விண்ணப்ப கட்டண தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயவுசெய்து சரிபார்க்கவும்.

தேர்வு செயல்முறை

எழுத்துத் தேர்வு

தனிப்பட்ட நேர்காணல்

ஆவண சரிபார்ப்பு

எப்படி விண்ணப்பிப்பது :

Download MRB official Notification 2020 and Online Apply

http://www.mrb.tn.gov.in/pdf/2020/Therapeutic_Assistant_Male_Female_Notification_03122020.pdf

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers suffer as online training links are not available - Daily News

 இணையதள பயிற்சி இணைப்பு கிடைக்காதால் ஆசிரியர்கள் தவிப்பு - நாளிதழ் செய்தி  Teachers suffer as online training links are not available - Dail...