கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

9 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் முழு ஆளுமை திறன் வளர்த்தல்-திறனறி போட்டிகள் நடத்துதல் - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்...

 


2020-2021 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் முழு ஆளுமை திறன் வளர்த்தல்-திறனறி போட்டிகள் நடத்துதல்-நிதி விடுவித்தல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 608/ C2/ SS/ 2020, நாள்: 12-02-2021...

>>> ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 608/ C2/ SS/ 2020, நாள்: 12-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... 


2020-2021 ஆம் கல்வி ஆண்டு - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியத்தொகை விடுவிப்பு செய்து மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள்...

 


2020-2021 ஆம் கல்வி ஆண்டு - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு பள்ளி மானியத்தொகை விடுவிப்பு செய்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 1618/ ஆ5/ ஒபக/ 2020, நாள்: 07-11-2020...


2018-19 ஆம் ஆண்டு UDISE தரவின் அடிப்படையில் திட்ட ஒப்புதல் குழு அறிக்கையில் சில தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்படவில்லை . ஆனால் அப்பள்ளிகளுக்கும் பள்ளி மானியம் வழங்குவது அவசியமாகிறது . ஏனவே மாவட்டங்களுக்கேற்ப மாணவர்களின் எண்ணிக்கை வரம்பு விளிம்பில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கை மாற்றி அமைக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தொகைக்கு மிகாமல் மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..

 

  அனுமதிக்கப்படும் தொகையினை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு / நகராட்சி / மாநகராட்சி / நலத்துறை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கு வழங்கிடும் வகையில் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலக வங்கி கணக்கில் செலுத்தப்படும் . இத்தொகையினை சம்மந்தப்பட்ட பள்ளி மேலாண்மை குழு வங்கி கணக்கிற்கு 5 நாள்களுக்குள் அனுப்பிட வேண்டும் . 

 

அதன் விவரத்தினை படிவம் 1 - ல் பூர்த்தி செய்து மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பள்ளி மானியத்தினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வழிகாட்டுதல் ( Frame work for implementation of Samagra Shiksha ) வழிமுறைகளின்படி ( Norms ) கீழ்க்கண்டவாறு செலவினம் மேற்கொள்ள வேண்டும். தற்பொழுது காணப்படும் கோவிட் -19 சூழ்நிலைகளை சமாளிக்க திட்ட ஏற்பளிப்பு குழுவின் கூட்ட அறிக்கை பக்கம் 13 - ல் பள்ளி மானிய தொகையில் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்பட வேண்டியவைகள் பின்வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது . 

 

மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக கை கழுவும் வசதி ( Hand washing facility ) மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கிட வேண்டும் . பள்ளி வளாகத்தில் சோப்பு மற்றும் Hand Sanitizer , கிருமி நாசினி , துப்புரவு செய்ய பயன்படும் பொருள்கள் போன்ற அத்தியாவசிய பொருள்கள் தேவையான அளவில் இருப்பில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும் , 


* பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்திகரிப்பு பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் . 

 

* பள்ளிகளுக்கு தேவையான வெப்ப அளவீட்டுக் கருவியினை ( Thermal screening ) வாங்குவதற்கு பள்ளி மானியத்திலிருந்து செலவினம் மேற்கொள்ளலாம் . மேலும் 2018-19 - ஆம் கல்வியாண்டிலிருந்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் பள்ளி மானியத்தில் குறைந்த பட்சம் 10 % சதவிதம் முழுச் சுகாதார திட்டத்திற்குப் ( Swachhta Action Plan ) பயன்படுத்தப்பட்டு வருகிறது .


மாணவர்கள் கை கழுவும் வசதிக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளி வளர்ச்சி மேலாண்மைக் குழு தேவையின் அடிப்படையில் முடிவு செய்து அதற்கான தொகையினை முழு சுகாதார திட்டத்திலிருந்து பயன்படுத்த வேண்டும் .

 

பள்ளிகள் திறப்பின் போது மாணவர்கள் கல்வி கற்க உகந்த சூழலை வழங்கும் விதமாக அரசு பள்ளிக் கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகளான கை கழுவும் மேடை , சுத்தமான குடிநீர் , மின்சார வசதி , கழிவறை ஆகியவற்றினை சமுதாய பங்களிப்புடன் பராமரிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி இந்நிதியை பயன்படுத்த வேண்டும் .  

 

பள்ளிகளில் இயங்கா நிலையில் உள்ள கற்றல் உபகரணங்களை மாற்றவும் , பள்ளியில் ஏற்படும் சிறு தொடர் செலவினங்களான விளையாட்டு உபகரணங்கள் , நாளிதழ்கள் , மின்கட்டணம் , இணையதள வசதி , குடிநீர் , கற்றல் கற்பித்தல் பொருள்கள் , போன்றவற்றிற்கு இந்நிதியை பயன்படுத்த வேண்டும் . பள்ளி மேலாண்மை குழு வழியாக ( SMC ) செலவிடுவதற்கான நெறிமுறைகள் :

 

* பள்ளி மானியம் பெறப்பட்டவுடன் ஒருங்கிணைந்த பள்ளி மானியப் பதிவேட்டில் ( வ.எண் . பெற்ற தொகை , வங்கி பெயர் மற்றும் நாள் ) ஆகியவற்றை தலைமையாசிரியர் பதிவு செய்தல் வேண்டும் . 

 

* மேற்கூறிய இனங்களில் தேவையான பொருட்களை வாங்குவதற்கு அவசியமான பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அப்பொருட்களை பட்டியலிட வேண்டும் . பட்டியலிடப்பட்ட பொருட்கள் பள்ளி மேலாண்மைக் குழுவின் தீர்மானத்தின்படி தரமான பொருட்களாக மட்டுமே வாங்கப்பட வேண்டும் . 

 

* ஒரு செலவினம் ரூ .25,000 / -க்கு மேல் மிகுந்தால் சமக்ர சிக்ஷா நிதி மேலாண்மை மற்றும் கொள்முதல் கையேடு 2018 ( Financial Management and Procurement Manual ) அறிவுரையின்படி கொள்முதல் விதிகளைப் பின்பற்றி பள்ளி மேலாண்மைக் குழு அளவிலேயே கொள்முதல் செய்யப்பட வேண்டும் . General Financial Rules ( GFR ) 145,146 படி உரிய சான்றிதழில் தலைமையாசிரியர் / கொள்முதல் குழுவினர் கையொப்பமிட்டு Procurement file- ல் இணைக்க வேண்டும் . 

 

* கோவிட் 19 சூழ்நிலைகளை சமாளிக்க தேவையான கிருமிநாசினியை நுகர்பொருள் ( Consumable ) பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் . 31.12.2020 ( டிசம்பர் 2020 ) க்குள் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும் . 

 

• பள்ளி திறந்தவுடன் 15 நாள்களுக்கு மிகாமல் கட்டிட பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும் . 

 

* நிதி ஆண்டு இறுதியில் ரொக்கக் கணக்குப் புத்தகம் இறுதி இருப்பு ஆகியவை கணக்காளரால் சரிபார்க்கப்பட்டு தலைமையாசிரியர் கையொப்பமிட வேண்டும்


* பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை EMIS ல் பதிவு செய்ய வேண்டும் . 

 

* ஒவ்வொரு மாதமும் பள்ளி மேலாண்மைக்குழு கணக்கர் பள்ளி பார்வையின் போது அப்பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ரொக்கப் பதிவேட்டில் பதிவு செய்வதற்கு எதுவாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வங்கி கணக்கு புத்தகம் , ரொக்க பதிவேடு மற்றும் செலவு மேற்கொண்டதற்கான பற்று சீட்டுகளை பள்ளி மேலாண்மைக்குழு களாக்கரிடம் ஒத்திசைவு செய்ய வேண்டும் . 

 

* பள்ளி மானியத் தொகை ( School Grant ) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate - படிவம் -4 ) மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 31.03.2021 - க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும் மாவட்ட அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் : 

 

* முதன்மைக் கல்வி அலுவலர் , உதவி திட்ட அலுவலர் , மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பள்ளி பார்வையின் போது மானியம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டதையும் , பொருள்கள் வாங்கப்பட்டுள்ளதையும் , அதற்கான பற்றுச் சீட்டுகள் , ரொக்கப் பதிவேடு மற்றும் இருப்புப் பதிவேடு ஆகியவற்றை கண்காணிக்க வேண்டும் . 

 

* பள்ளி திறந்தவுடன் பள்ளிகளுக்கு தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் . 

 

* பள்ளி திறந்தவுடன் சிறு சிறு பழுதுப்பார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் . 

 

* முதன்மைக் கல்வி அலுவலர் ஒவ்வொரு வாரமும் மீளாய்வு கூட்டத்தில் ( Review meeting ) பள்ளி மானிய செயல்பாட்டு அறிக்கையை ஆய்வு செய்திடல் ( படிவம்- 2 மற்றும் 3 ) வேண்டும் , 

 

* ஒவ்வொரு பள்ளியும் பள்ளி மானியத்தில் வாங்கப்பட்ட பொருள்களின் செலவு விவரத்தினை EMIS ல் பதிவு செய்ததை உறுதி செய்ய வேண்டும் . 

 

* உதவி மாவட்டத் கிட்ட ஒருங்கிணைப்பாளர் , கல்வி மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் , பள்ளி மானியத் தொகை ( School Grant ) முறையாக செலவிடப்பட்டுள்ளதை உறுதி செய்து பள்ளி வாரியாக பயன்பாட்டுச் சான்றிதழ் ( Utilization Certificate ) பெற்று மாவட்டத்திற்கான பயன்பாட்டுச் சான்றிதழ்களை 31.03.2021 - க்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும் கள ஆய்வு செய்யும் போது இதனை ஆய்வு செய்ய வேண்டும் . 

பள்ளிக் தலைமையாசிரியர்களுக்கு இப்பொருள் குறித்து உரிய விவரங்களைத் தெரிவித்து ஒப்புதல் பெறவேண்டும் . இச்செயல்முறை ஆணையினை பெறப்பட்டமைக்கு ஒப்புதலை மறு அஞ்சலில் தவறாது மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் / முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்...

>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்குனர் செயல்முறைகள் ந.க.எண்: 1618/ ஆ5/ ஒபக/ 2020, நாள்: 07-11-2020 தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


11-12-2020 அன்று சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதள வழியாக (Online Training) வரைபடத் திறன் (Mapping Skill) பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்...

 11-12-2020 அன்று அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதள வழியாக (Online Training) வரைபடத் திறன் (Mapping Skill) பயிற்சி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 593/ C4/ SS/ பயிற்சி/ 2020, நாள்: 10-12-2020...






ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - Specific Concept Oriented Programme - ( SCOPE ) மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல் சார்பு - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்...

 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - Specific Concept Oriented Programme - ( SCOPE ) மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடத்துதல் சார்பு - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்...

>>> மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


மாநில அளவிலான கலா உத்சவ் நிகழ்ச்சி - கோவை பள்ளி மாணவர்கள் 18 பேர் தேர்வு...

 மாநில அளவிலான கலா உத்சவ் நிகழ்ச்சிக்குக் கோவை பள்ளி மாணவர்கள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில், பள்ளி மாணவர்களின் கலைத் திறனை ஊக்குவித்து பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளை மீட்டெடுத்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் வகையில், கலா உத்சவ் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான போட்டிகள் கோவை கல்வி மாவட்டம், மாவட்ட அளவில் முடிந்து, மாநில அளவில் நடைபெற உள்ளன. மாநில அளவிலான போட்டிக்கு முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னிலையில், நடுவர் குழுவினர் தேர்ந்தெடுத்த மாணவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 18 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித் திட்ட அலுவலர் கண்ணன் கூறியதாவது:

''குரலிசைப் போட்டி கிளாசிக் பிரிவில் சிஎஸ் அகாடமி பள்ளி மாணவர் சங்கல்ப், அல்வேர்னியா கான்வென்ட் மாணவி ஹிருத்திகா, நாட்டுப்புறப் பாடல் பிரிவில் ஆர்.கே.ரங்கம்மாள் பள்ளி மாணவர் யஷ்வந்த், கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி அபிநயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இசைக் கருவிகள் இசைத்தல் கிளாசிக் பிரிவில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீரஞ்சனி, பாரதிய வித்யாபவன் பள்ளி மாணவர் அகிலேஷ், நாட்டுப்புறக் கருவிகள் இசைத்தல் பிரிவில் ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மதன்குமார், ஒண்டிபுதூர் ஆர்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி தனுஷ்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

கிளாசிக் நடனப் பிரிவில் பெ.நா.பாளையம் சிவானந்தா பள்ளி மாணவி புவனேஷ் ராஜமாணிக்கம், வித்ய விகாஷினி பள்ளி மாணவி மானசா, நாட்டுப்புற நடனப் பிரிவில் சரவணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ராகவா, மாணவி பூமாதேவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மணற்சிற்பங்கள் உருவாக்கும் பிரிவில் அசோகபுரம் அரசுப் பள்ளி மாணவர் கைலாஷ், பிரசென்டேஷன் கான்வென்ட் மாணவி விஷ்ணு தீபா, கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சந்துரு, கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கிருத்திகா, பொம்மலாட்டம் பிரிவில் விளாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் லோகநாதன், மாணவி பூவிழி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்''.

இவ்வாறு கண்ணன் கூறினார்.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - 2020 -21 ஆம் கல்வி ஆண்டு- Quality Components Teacher Exchange Programme - மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல் -மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்...

 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - 2020 -21 ஆம் கல்வி ஆண்டு- Quality Components Teacher Exchange Programme - மாவட்டங்களிலிருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான வழிகாட்டுதல் - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 606/ C2/ TEP/ 2020, நாள்: 28-11-2020...

>>> மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஒருங்கிணைந்த கல்வி - 5 நாட்கள் ICT பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்...

ஒருங்கிணைந்த கல்வி - 03-12-2020, 04-12-2020,  05-12-2020,  07-12-2020, 08-12-2020 ஆகிய 5நாட்கள் ICT பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்...

 ICT Training Schedule - 5 Days - SPD Proceedings...

>>> Click here to Download ICT Training Schedule - SPD Proceedings...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...