கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பெண் குழந்தைகள் கல்விக்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ.10 கோடி நன்கொடை...

 


பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம் என்ற முன்முயற்சிக்கு, தனது கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நோக்கத்தை நிறைவேற்ற எஸ்பிஐ வங்கி முயற்சித்துள்ளது. அதன்படி, ஒரு வருட கல்வியை உள்ளடக்கும் விதமாக போர் வீரர்கள், முன்னாள் படைவீரர்கள், போர் விதவைகளின் பெண் குழந்தைகள் 8,333 பேருக்கு வங்கி சார்பில் ஒவ்வொரு மாதமும் ₹1000 மானியம்  வழங்கப்படுகிறது.

இதற்காக, எஸ்பிஐ வங்கி ₹10 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.  ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ம் தேதி கொண்டாடப்படும் ஆயுதப்படைகளின் கொடி தின நிகழ்வில், பெண் குழந்தைகளுக்கு   கல்வி வழங்குவதற்காக இந்த நிதியை பயன்படுத்தும் வகையில், கேந்திரிய சைனிக் வாரியத்துடன் (கே.எஸ்.பி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இதுகுறித்து, எஸ்பிஐ தலைவர் தினேஷ் காரா கூறுகையில், “பெண் குழந்தைகளுக்கு சமமான வாய்ப்பை வழங்குவதற்காக, அரசின் முன்முயற்சியை  ஊக்குவிப்பதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்.  கே.எஸ்.பியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு, பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், கற்பிப்போம் முன்முயற்சிக்கு ஆதரவு தருவதன் மூலம் நாங்கள் எங்களது பங்களிப்பைச் செய்கிறோம்.  போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வை மாற்றுவதில், எங்களது இந்த முயற்சி உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் 8,848.86 மீட்டர் - நேபாளம், சீனா கூட்டாக அறிவிப்பு...

 


நேபாளம் – சீனா எல்லையில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. இதன் புதிய உயரம் தொடர்பான அறிவிப்பை காத்மாண்டுவில் இருந்து நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலியும் பெய்ஜிங் நகரில் இருந்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யும் நேற்று ஒரே நேரத்தில் வெளியிட்டனர்.

பிரதீப் குமார் கியாவாலி கூறும்போது, “எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர்கள் ஆகும். இது முந்தைய கணக்கீட்டை விட 86 செ.மீ. (கிட்டத்தட்ட 3 அடி) அதிகம்’’ என்றார்.

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை கணக்கிடும் பணியில், நேபாளம் கடந்த 2011 முதல் ஈடுபட்டு வருகிறது. 1954-ல் சர்வே ஆப் இந்தியா கணக்கிட்ட 8,848 மீட்டர்கள் (29,028 அடி) உயரமே இதுவரை அதிகாரப்பூர்வ உயரமாக இருந்தது. கடந்த 1847-ல் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,778 மீட்டர்கள் என்று இந்தியாவின் பிரிட்டிஷ் சர்வேயர்கள் அறிவித்தனர்.



கடந்த 1849 மற்றும் 1855-க்குஇடையிலான காலத்தில் டேராடூனில் இருந்து நேபாளத்தில் உள்ள இமயமலைச் சிகரங்களை சர்வே ஆப் இந்தியா உற்று நோக்கியது. அப்போது 15வது சிகரத்தின் உயரம் 8,839.80 மீட்டர்கள் என கணக்கிடப்பட்டது. பிறகு இந்த சிகரம், இந்தியாவின் முன்னாள் சர்வேயர் ஜெனரல் சர் ஜார்ஜ் எவரெஸ்ட் பெயரில் அழைக்கப்பட்டது.

கடந்த 1954-ல் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர்கள் என சர்வே ஆப் இந்தியாவால் பிஹாரில் இருந்து முக்கோணவியல் முறைப்படி தீர்மானிக்கப்பட்டது. இது பெரும்பாலானவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது

இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் சத்தியமங்கலம் பெண்...

 


இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் சத்தியமங்கலம் பெண் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என இருந்த நிலை மாறி இன்று அனைவரும் படித்து ராணுவம், விமானம், கடற்படை, மருத்துவம், பொறியியல், அரசியல் ஆகிய பிரிவுகளில் தொடங்கி பெண்களே இல்லாத பிரிவே இல்லை எனும் அளவுக்கு பெண்கள் இன்று முன்னேறி வருகிறார்கள்.

அன்று கல்லூரிக்கு அனுப்புவதற்கே தயக்கம் காட்டிய பெற்றோர் இன்று தங்கள் பெண் பிள்ளைகளை வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பும் நிலை உள்ளது.

அதிலும் பெண்கள் தொழில் முனைவோர்களாக இருந்தாலும் பெண்களின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் 100 பணக்கார பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பெண்ணின் சொத்து மதிப்பு 

அந்த பெண்ணின் சொத்து மதிப்பு 2,870 கோடி ரூபாய் ஆகும். அவரது பெயர் டாக்டர் வித்யா வினோத். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தின் முன்னாள் மாணவியாவார். இந்த தகவல் கோட்டக் வெல்த் மற்றும் ஹூரான் இந்தியா என்ற அமைப்பு தயாரித்த பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.

தலைமை செயல் அதிகாரி

டாக்டர் வித்யா வினோத் துபாயை தலைமை இடமாக கொண்ட ஸ்டடி வேர்ல்டு எஜுகேஷன் ஹோல்டின் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார். இவருடைய கணவர் வினோத் நீலகண்டம் அதன் தாளாளராகவும், மூத்த சகோதரர் கார்த்திகேயன் நிர்வாக அறங்காவலராகவும் இளைய சகோதரர் ஜெயகிருஷ்ணன் செயலாளராகவும் உள்ளனர்.

வித்யா வினோத் 



டாக்டர் வித்யா வினோத் இந்தியாவின் 8-ஆவது இடம் பிடித்த சுய தொழில்முனைவோர் ஆவார். கோட்டக் அமைப்பு தயாரித்த பட்டியலில் உள்ள 100 பணக்கார பெண்களில் 36 பேர் சுயமாக வளர்ந்த பணக்காரர்கள் என்றால் அது மிகையாகாது. இந்த பட்டியலில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா முதலிடத்தில் உள்ளார்.

இவருடைய சொத்து மதிப்பு ரூ 54 ஆயிரத்து 850 கோடி, 36 ஆயிரத்து 600 கோடி சொத்துகளுடன் பயோகான் நிறுவனத்தின் கிரண் மசும்தார் ஷா 2ஆவது இடத்தையும் மும்பையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான லீனா காந்தி திவாரி ரூ 21 ஆயிரத்து 340 கோடி சொத்துகளுடன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது -மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டது...



  •  இரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடம் தரக் கூடாது - மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டது.  
  • கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய பரிந்துரையில், 2-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு, வீட்டுப்பாடம் தரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகள், அவர்களுக்கான வீட்டுப்பாடம் குறித்து, மத்திய கல்வி அமைச்சகம் புதிய பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
  • அதன்படி, 1 முதல் 10-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் கொண்டு செல்லும் புத்தகப் பைகளின் எடை, அவர்களின் உடல் எடையில் 10 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது.
  • பள்ளிகளில் டிஜிட்டல் எடை இயந்திரங்கள் வைக்கப்பட வேண்டும் - அதைப் பயன்படுத்தி, புத்தகப் பைகளின் எடையை தொடர்ந்து மதிப்பிட வேண்டும்.
  • மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது உள்ளிட்ட சேவைகள் தரமானதாக இருக்க வேண்டும் - அனைத்து மாணவர்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்குவதை, பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்.
  • 2-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தரக்கூடாது.
  • 3 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு, வாரத்திற்கு 2 மணி நேரம் மட்டும் வீட்டுப்பாடம் தரவேண்டும்.
  • 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் வீட்டுப்பாடம் தரவேண்டும்.
  • 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, தினந்தோறும் 2 மணி நேரம் வீட்டுப்பாடம் தரப்பட வேண்டும்.
  • பள்ளிகளில் மாணவர்கள் விளையாடவும், இதர நூல்களை வாசிக்கவும் போதுமான நேரம் வழங்க வேண்டும்.
  • இந்தப் பரிந்துரைகள், மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவற்றை அமல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டக் கல்வி அலுவலர்களின் ஈப்பு வாகனத்தை (Jeep) உரிய அலுவலர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்....

 


அரையாண்டு தேர்வு ரத்து - பள்ளி கல்வித்துறை முடிவு...

 பள்ளிகளை இன்னும் திறக்க முடியாததால், காலாண்டு தேர்வு மட்டுமின்றி, தற்போது, அரையாண்டு தேர்வையும் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக, நாடு முழுவதும் மார்ச்சில் பள்ளிகள், கல்லுாரிகள் மூடப்பட்டன. ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை தமிழகத்தில், 

ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் அடிப்படையில், தேர்ச்சி அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது.

பிளஸ் 1க்கு ஒரு தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிளஸ் 2வுக்கு மட்டும், அனைத்து தேர்வுகளும் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று தொடர்ந்து பரவி வந்ததால், பள்ளிகளை திறந்து வகுப்புகளை நேரடியாக நடத்த, தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, தனியார் பள்ளிகளில், ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளிகளுக்கு கல்வி, 'டிவி' வழியே வீடியோ பாடங்கள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான காலாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை முடித்துள்ளன. இதையடுத்து, இந்த மாதம் நடக்க உள்ள அரையாண்டு தேர்வுகளையும் ரத்து செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

வழக்கமாக, டிசம்பர் 14ம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். பள்ளிகள் திறக்கப்படாததால், தேர்வுகளை நடத்த வேண்டாம் என, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தனியார் பள்ளிகள் மட்டும், விருப்பம் உள்ள மாணவர்களுக்கு, இதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும், மாதிரி தேர்வாக நடத்தி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசுப் பணி - இணையான கல்வித் தகுதிகள் - அவற்றிற்கான அரசாணைகள்...

 >>> அரசுப் பணி - இணையான கல்வித் தகுதிகள் - அவற்றிற்கான அரசாணைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

175 Schools Name List, Number of Students & Number of Computers where Upgraded Hi-Tech Labs will be set up as per G.O.(Ms) No: 271, Dated : 20-12-2024

    நவீன கணினி அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ள 175 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல், மாணவர் எண்ணிக்கை & கணினிகளின் எண்ணிக்க...