கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சித்தாள் தயாரித்தல் பணிமனை குறித்த தகவல்...

 


1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சித்தாள் தயாரித்தல் பணிமனை குறித்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1702/ஆ7/2021, நாள் : 24-03-2021...

>>> கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 1702/ஆ7/2021, நாள் : 24-03-2021...


தேர்தல் - வாக்குப் பதிவுக்கு முந்தைய நாள் முதல் மண்டல அலுவலரிடம் தேர்தல் பொருட்களை ஒப்படைத்தல் வரையிலான பணிகளின் தொகுப்பு...

 Election - A collection of tasks from the day before the polling to the handing over of election materials to the Zonal Officer ...



>>> Click here to Download - Election Duties Consolidation (PDF)...


இன்றைய செய்திகள் தொகுப்பு... 28.03.2021 (ஞாயிறு)...

 


🌹இன்பம் எப்படி இருக்கும் என்பதை உணரும் முன்பே 

வலி எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை.!

🌹🌹நினைப்பது நடப்பதில்லை.

நடப்பது நமக்கு பிடிப்பதில்லை.

ஆனாலும் நாம் வாழ்கிறோம் ஏனெனில் நம்மை நேசிக்க சில உறவுகள் இருப்பதாலே.!!

🌹🌹🌹இவங்க சொல்றாங்க,

அவங்க சொல்றாங்கன்னு மத்தவங்க முன்னாடி பொய்யா வாழ்றத விட 

நான் இப்படித்தான்னு 

நமக்கு புடிச்ச மாதிரி உண்மையா வாழ்ந்துட்டு  போயிடலாம் தப்பே கிடையாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறை - அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு.                      

📕📘அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

📕📘சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் தேவை என்றால் விண்ணப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் வழங்கப்படும் என சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்துள்ளது.

📕📘ஏப்ரல் 6 -க்கு பிறகு ஊரடங்கு என்ற தகவல் வதந்தி- சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு

📕📘தொலைதூர கல்வியில் MBA,MCA,MSc,படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

📕📘வாக்குப்பதிவு முடிந்ததும் கண்டுகொள்ளப்படாத பெண் அலுவலர்கள் -  இந்தத் தேர்தலிலாவது மாறுமா ? உட்கடை கிராமப் பகுதி  மற்றும் மலைப்பகுதியில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் வீடு திரும்ப மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இம்முறையாவது அவர்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது                                                                                                                         

📕📘பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடி உட்பட 40 தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பு.

காணொளி காட்சி மூலமாக வருகிற ஏப்ரல் 22 & 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

📕📘கோவை பொள்ளாச்சியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி, வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத்,குமாரவேல்  ஆகியோர் பணியிடை நீக்கம்,கோவை  மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அதிரடி நடவடிக்கை.

📕📘ஏப்ரல் 22,23-ல் நடைபெறும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு.

📕📘தஞ்சையில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத 16 பள்ளிகள் மற்றும் 4  கல்லூரிகளுக்கு தலா ரூ.5000 அபராதம்.

📕📘வால்பாறை தொகுதி : தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய அதிகாரி உட்பட 3 பேர் சஸ்பெண்ட்.

📕📘பொதுத்துறை வங்கிகள் இணைப்பைத் தொடர்ந்து 8 வங்கிகளின் காசோலை செல்லாது. 

ஏப்ரல் 1-ஆம் தேதி  முதல் புதிய காசோலையைப் பெற்றுக்கொள்ளளாம். 

- மத்திய அரசு அறிவிப்பு

📕📘தமிழகத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் பைக் பேரணிக்கு தடை 

- தேர்தல் ஆணையம்

📕📘பிப்ரவரி 1, 2020, வரை முடிவடையும் 

வாகனங்களுக்கான 

Fitness certificate

Permit 

Driving license Renewal

போன்றவை 

ஜுன் 30 , 2021 வரை செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

📕📘அனைத்து ஊடகங்களும் மார்ச் 27 அன்று காலை 7:00 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 7.30 மணி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை  வெளியிடக்கூடாது - தேர்தல் ஆணையம்

📕📘கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது.

அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-மு.க.ஸ்டாலின்

📕📘வெற்றி உறுதியாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

-மு.க.ஸ்டாலின்

📕📘அரசு ஊழியர்களின் சொத்து, திறமை, நேர்மையை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும், ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

📕📘தேனி மாவட்டத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை பன்னீர்செல்வம்                -எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்

📕📘தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பு குறையாததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📕📘சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார்

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார்

📕📘பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும் 

மு.க. ஸ்டாலின் அறிவுரை.

📕📘பரப்புரையின் போது முதல்வர் பிறப்பை தவறாக பேசிய சர்சைக்குரிய விமர்சனம்:

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா விளக்கம்

👉முதல்வரை கலங்கபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அப்படி பேசவில்லை

👉முதல்வர் குறுக்குவழியில் முதல்வர் பதவிக்கு வந்தவர் என்பதை கூறும்போது அப்படி கூற நேரிட்டது

👉சில வார்த்தைகளை நான் பேசியதாக அந்த வீடியோவில் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது.

📕📘அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் வந்து விட்டது

கனிமொழி எம்பி

📕📘திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட 250 பெண்கள் புகார் கொடுக்க முடியாமல் மிரட்டப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.                                            

📕📘வெற்றிக்கனியை பறிக்க அயராது பாடுபடவேண்டும் 

தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

📕📘லட்சிய திமுக இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரவில்லை என்று  டி.ஆர்.ராஜேந்தர் கூறியுள்ளார்.

நாடும், மக்களும் நல்லா இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

📕📘எட்டு வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 முதல் செல்லாது

👉தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடாவுடனும், கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டன.

👉ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.

👉இந்நிலையில், வரும், 1ம் தேதி முதல், எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

👉எனவே, மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப் பெறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

👉மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை ஏற்கனவே பெற்றிருந்தால், அதை மாற்றி பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது                                                           

📕📘தமிழகம் மின்மிகை மாநிலம் என அதிமுக அரசு கூறுவது உண்மையல்ல 

மின்சார தேவையில் 50% மட்டுமே தமிழகத்தில் உற்பத்தியாகிறது, 50% வெளிமாநிலங்களில் வாங்குகிறோம்

தமிழகம் மின்மிகை மாநிலம் என எப்படிச் சொல்லமுடியும்? 

ப.சிதம்பரம்

📕📘வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று  வாக்குச் சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய செயலி குறித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கடிதம் மற்றும் PowerPoint Presentations வெளியீடு .

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

தொலைதூர கல்வியில் MBA,MCA,MSc,படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு...

 


தேர்தல் நாளில் விடுமுறை தராத நிறுவனங்கள் மீது நடவடிக்கை - உயர் நீதிமன்றம்...

 


தேர்தல் பணியில் உயிரிழந்த இரண்டு காவலர்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு...

 சிவகங்கையில் தேர்தல் பணியில் இருந்த இரண்டு காவலர்கள் மீது பேருந்து மோதியது. 

தேர்தல் பணியில் உயிரிழந்த இந்த இரண்டு காவலர்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிதியுதவி - தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவிப்பு...




ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை...

 தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்வை ஏப். 30-க்குள் முடிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.



தமிழகத்தில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், பதவி உயர்வு கலந்தாய்வு நடத்துவதற்கு எதிராக தலைமை ஆசிரியர்கள் பலர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.


இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வுக்கு தடை விதித்தார்.


இறுதி விசாரணையில், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வை ஏப். 30-க்குள் நடத்த வேண்டும். அதன் பிறகு தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.


இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தடை விதிக்க கோரியும் அரசு சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், ஏப்ரல் 30-க்குள் தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2024-2025 Kalai Thiruvizha Banner

 கலைத் திருவிழா 2024-2025 Kalai Thiruvizha Banner HD >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...