கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 28.03.2021 (ஞாயிறு)...

 


🌹இன்பம் எப்படி இருக்கும் என்பதை உணரும் முன்பே 

வலி எப்படி இருக்கும் என்பதை உணர்த்தி விடுகிறது இந்த வாழ்க்கை.!

🌹🌹நினைப்பது நடப்பதில்லை.

நடப்பது நமக்கு பிடிப்பதில்லை.

ஆனாலும் நாம் வாழ்கிறோம் ஏனெனில் நம்மை நேசிக்க சில உறவுகள் இருப்பதாலே.!!

🌹🌹🌹இவங்க சொல்றாங்க,

அவங்க சொல்றாங்கன்னு மத்தவங்க முன்னாடி பொய்யா வாழ்றத விட 

நான் இப்படித்தான்னு 

நமக்கு புடிச்ச மாதிரி உண்மையா வாழ்ந்துட்டு  போயிடலாம் தப்பே கிடையாது.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

📕📘பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு வழிமுறை - அண்ணா பல்கலைக்கழகம் வெளியீடு.                      

📕📘அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

📕📘சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் தேவை என்றால் விண்ணப்பத்தின் அடிப்படையில் அவர்களுக்கு இடமாறுதல் சான்றிதழ் வழங்கப்படும் என சிபிஎஸ்இ இயக்குநரகம் அறிவித்துள்ளது.

📕📘ஏப்ரல் 6 -க்கு பிறகு ஊரடங்கு என்ற தகவல் வதந்தி- சுகாதாரத்துறை செயலர் அறிவிப்பு

📕📘தொலைதூர கல்வியில் MBA,MCA,MSc,படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

📕📘வாக்குப்பதிவு முடிந்ததும் கண்டுகொள்ளப்படாத பெண் அலுவலர்கள் -  இந்தத் தேர்தலிலாவது மாறுமா ? உட்கடை கிராமப் பகுதி  மற்றும் மலைப்பகுதியில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் வீடு திரும்ப மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இம்முறையாவது அவர்களுக்கு உரிய போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது                                                                                                                         

📕📘பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்குமாறு இந்திய பிரதமர் மோடி உட்பட 40 தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் பைடன் அழைப்பு.

காணொளி காட்சி மூலமாக வருகிற ஏப்ரல் 22 & 23 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

📕📘கோவை பொள்ளாச்சியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரி, வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத்,குமாரவேல்  ஆகியோர் பணியிடை நீக்கம்,கோவை  மாவட்ட ஆட்சியர் நாகராஜன் அதிரடி நடவடிக்கை.

📕📘ஏப்ரல் 22,23-ல் நடைபெறும் உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு.

📕📘தஞ்சையில் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத 16 பள்ளிகள் மற்றும் 4  கல்லூரிகளுக்கு தலா ரூ.5000 அபராதம்.

📕📘வால்பாறை தொகுதி : தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய அதிகாரி உட்பட 3 பேர் சஸ்பெண்ட்.

📕📘பொதுத்துறை வங்கிகள் இணைப்பைத் தொடர்ந்து 8 வங்கிகளின் காசோலை செல்லாது. 

ஏப்ரல் 1-ஆம் தேதி  முதல் புதிய காசோலையைப் பெற்றுக்கொள்ளளாம். 

- மத்திய அரசு அறிவிப்பு

📕📘தமிழகத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் பைக் பேரணிக்கு தடை 

- தேர்தல் ஆணையம்

📕📘பிப்ரவரி 1, 2020, வரை முடிவடையும் 

வாகனங்களுக்கான 

Fitness certificate

Permit 

Driving license Renewal

போன்றவை 

ஜுன் 30 , 2021 வரை செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவு

📕📘அனைத்து ஊடகங்களும் மார்ச் 27 அன்று காலை 7:00 மணி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 7.30 மணி வரை கருத்துக்கணிப்பு முடிவுகளை  வெளியிடக்கூடாது - தேர்தல் ஆணையம்

📕📘கழகத்தினர் உணர்ச்சிவசப்பட்டு, கண்ணியக் குறைவான சொற்களை வெளிப்படுத்திடக் கூடாது.

அத்தகைய பேச்சுகளைக் கழகத் தலைமை ஒருபோதும் ஏற்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-மு.க.ஸ்டாலின்

📕📘வெற்றி உறுதியாகவும் மக்களால் தீர்மானிக்கப்பட்டுவிட்ட நிலையில், கழகத்தினரின் பேச்சுகளைத் திரித்து, வெட்டி - ஒட்டி, தவறான பொருள்படும்படி செய்து வெற்றியைத் தடுக்க நினைத்து மூக்குடைபட்டவர்கள், இப்போதும் தோல்வி பயத்தால் மீண்டும் அதே பாணியை மேற்கொண்டிருக்கிறார்கள்.

-மு.க.ஸ்டாலின்

📕📘அரசு ஊழியர்களின் சொத்து, திறமை, நேர்மையை ஆய்வு செய்ய அனைத்து துறைகளிலும், ஊழல் தடுப்பு பிரிவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

📕📘தேனி மாவட்டத்திற்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை பன்னீர்செல்வம்                -எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்

📕📘தேமுதிக துணை செயலாளர் சுதிஷ் கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா தொற்று பாதிப்பு குறையாததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📕📘சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வாக்கு சேகரித்தார்

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 3-வது முறையாக மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார்

📕📘பேரறிஞர் அண்ணா வலியுறுத்திய கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றில், பேச்சாளர்களின் முதன்மை அம்சமாக இருக்கவேண்டியது கண்ணியமாகும் 

மு.க. ஸ்டாலின் அறிவுரை.

📕📘பரப்புரையின் போது முதல்வர் பிறப்பை தவறாக பேசிய சர்சைக்குரிய விமர்சனம்:

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா விளக்கம்

👉முதல்வரை கலங்கபடுத்த வேண்டும் என்ற நோக்கில் அப்படி பேசவில்லை

👉முதல்வர் குறுக்குவழியில் முதல்வர் பதவிக்கு வந்தவர் என்பதை கூறும்போது அப்படி கூற நேரிட்டது

👉சில வார்த்தைகளை நான் பேசியதாக அந்த வீடியோவில் வெட்டி ஒட்டப்பட்டுள்ளது.

📕📘அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாள் வந்து விட்டது

கனிமொழி எம்பி

📕📘திமுக ஆட்சிக்கு வந்ததும் பொள்ளாச்சி பாலியல் வழக்கின் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட 250 பெண்கள் புகார் கொடுக்க முடியாமல் மிரட்டப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.                                            

📕📘வெற்றிக்கனியை பறிக்க அயராது பாடுபடவேண்டும் 

தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

📕📘லட்சிய திமுக இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு தரவில்லை என்று  டி.ஆர்.ராஜேந்தர் கூறியுள்ளார்.

நாடும், மக்களும் நல்லா இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

📕📘எட்டு வங்கிகளின் காசோலைகள் ஏப்ரல் 1 முதல் செல்லாது

👉தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவை, பேங்க் ஆப் பரோடாவுடனும், கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடனும் இணைக்கப்பட்டன.

👉ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்பட்டன.

👉இந்நிலையில், வரும், 1ம் தேதி முதல், எட்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது என, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

👉எனவே, மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், புதிய வங்கியின் காசோலை புத்தகங்களை கேட்டுப் பெறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

👉மேற்குறிப்பிட்ட வங்கிகளின் காசோலைகளை ஏற்கனவே பெற்றிருந்தால், அதை மாற்றி பெறும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது                                                           

📕📘தமிழகம் மின்மிகை மாநிலம் என அதிமுக அரசு கூறுவது உண்மையல்ல 

மின்சார தேவையில் 50% மட்டுமே தமிழகத்தில் உற்பத்தியாகிறது, 50% வெளிமாநிலங்களில் வாங்குகிறோம்

தமிழகம் மின்மிகை மாநிலம் என எப்படிச் சொல்லமுடியும்? 

ப.சிதம்பரம்

📕📘வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று  வாக்குச் சாவடி தலைமை அலுவலர் (Presiding Officer) பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டிய செயலி குறித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கடிதம் மற்றும் PowerPoint Presentations வெளியீடு .

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...