கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (04-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 04, 2021



சுயதொழில் புரிபவர்களுக்கு முதலீடுகள் மேம்படும். புதிய செயல்திட்டங்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் அனைவரிடத்திலும் பிரபலம் அடைவீர்கள். மனதில் பழைய சிந்தனைகளால் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான ஒருவிதமான பதற்றங்கள் நேரிடும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அஸ்வினி : முதலீடுகள் மேம்படும்.


பரணி : பிரபலம் அடைவீர்கள்.


கிருத்திகை : பதற்றங்கள் நேரிடும்.

---------------------------------------




ரிஷபம்

மே 04, 2021



நண்பர்களின் மூலம் தொழில் சார்ந்த நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தம்பதியர்களுக்கிடையே நெருக்கமும், ஈர்ப்பும் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத்துணைவரின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



கிருத்திகை : அறிமுகம் கிடைக்கும்.


ரோகிணி : நெருக்கம் அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : மாற்றமான நாள்.

---------------------------------------




மிதுனம்

மே 04, 2021



சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வாரிசுகளிடம் கோபத்தை தவிர்த்து கனிவுடன் பழக வேண்டும். பழக்கவழக்கங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.


திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.


புனர்பூசம் : நன்மையான நாள்.

---------------------------------------




கடகம்

மே 04, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். புதுவிதமான சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். பொருள் ஈட்டுவதற்கான பல்வேறு வழிமுறைகளை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



புனர்பூசம் : கலகலப்பான நாள்.


பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : நுட்பங்களை அறிவீர்கள்.

---------------------------------------




சிம்மம்

மே 04, 2021



இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். சேமிப்புகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சபை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்புகள் காலதாமதமாக கிடைக்கும். மனைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மகம் : மேன்மை உண்டாகும்.


பூரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


உத்திரம் : லாபம் மேம்படும். 

---------------------------------------




கன்னி

மே 04, 2021



புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான செயல்பாடுகளை மேற்கொள்வீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கொள்வீர்கள். குடும்ப உறவினர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மை அதிகரிக்கும். நெருங்கிய நண்பர்களின் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திரம் : மாற்றங்கள் ஏற்படும்.


அஸ்தம் : நன்மை அதிகரிக்கும்.


சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------




துலாம்

மே 04, 2021



நண்பர்களின் மூலம் பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : அறிமுகம் கிடைக்கும்.


சுவாதி : அனுகூலமான நாள்.


விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------




விருச்சகம்

மே 04, 2021



உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் தோன்றும் தேவையற்ற எண்ணங்களின் மூலம் அமைதியின்மைக்கான சூழ்நிலைகள் ஏற்படும். பொறுமையான செயல்பாடுகளின் மூலம் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வீர தீரமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



விசாகம் : மகிழ்ச்சியான நாள்.


அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.


கேட்டை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




தனுசு

மே 04, 2021



மனதில் இருக்கும் கவலைகள் குறையும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தொழில் தொடர்பான வெளிவட்டார நட்பு ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



மூலம் : கவலைகள் குறையும்.


பூராடம் : நட்பு ஏற்படும்.


உத்திராடம் : உயர்வான நாள்.

---------------------------------------




மகரம்

மே 04, 2021



நறுமணப்பொருட்களின் மூலம் லாபம் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். காரியங்களை செயல்படுத்தும் விதத்தில் புத்திசாலித்தனம் வெளிப்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



உத்திராடம் : லாபம் மேம்படும்.


திருவோணம் : நம்பிக்கை அதிகரிக்கும்.


அவிட்டம் : புத்திசாலித்தனம் வெளிப்படும்.

---------------------------------------




கும்பம்

மே 04, 2021



கூர்மையான பொருட்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிலும் அலட்சியம் இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். மாணவர்களுக்கு புதிய சிந்தனைகள் உண்டாகும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



அவிட்டம் : கவனம் வேண்டும்.


சதயம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.


பூரட்டாதி : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

மே 04, 2021



குடும்பத்தில் புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். பயணங்கள் தொடர்பான செயல்பாடுகளில் மாற்றங்கள் நேரிடும். தொலைபேசி வாயிலாக சுபச்செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : மகிழ்ச்சி அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : மாற்றங்கள் நேரிடும்.


ரேவதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------


ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம் : எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் ட்வீட்...

 மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


மிகச் சிறந்த தமிழகத்தை உருவாக்க தங்களது ஆலோசனையும் ஒத்துழைப்பும் தேவை.


ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்ததே ஜனநாயகம்; அத்தகைய ஜனநாயகம் காப்போம் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.



தி.மு.க. பொதுச்செயலாளரை வெற்றிபெறச் செய்த தபால் ஓட்டுகள்...

 தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் அவர்களை வெற்றி பெறச் செய்த தபால் ஓட்டுகள்...

தபால் ஓட்டுகளின் வலிமையை காட்பாடி என்றென்றும் சொல்லும்...



இன்றைய (03-05-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

மே 03, 2021



உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மனதிற்கு தெளிவை ஏற்படுத்தும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.


பரணி : மாற்றங்கள் உண்டாகும்.


கிருத்திகை : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




ரிஷபம்

மே 03, 2021



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள்  கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.


ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.


மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




மிதுனம்

மே 03, 2021



பழைய நிகழ்வுகள் பற்றி சிந்திப்பதை குறைத்துக்கொள்ளவும். உத்தியோகம் தொடர்பான கோப்புகளில் கவனம் வேண்டும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் குறைகளை சுட்டிக்காட்டுவதை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். விளையாட்டுத்தனமான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை



மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.


திருவாதிரை : செலவுகள் உண்டாகும்.


புனர்பூசம் : பேச்சுக்களை தவிர்க்கவும்.

---------------------------------------




கடகம்

மே 03, 2021



உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அவ்வப்போது தோன்றி மறையும்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



புனர்பூசம் : அனுகூலம் உண்டாகும்.


பூசம் : தீர்வு கிடைக்கும்.


ஆயில்யம் : நட்பு விரிவடையும்.

---------------------------------------




சிம்மம்

மே 03, 2021



உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆடம்பர செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மகம் : நெருக்கடியான நாள்.


பூரம் : உதவிகள் கிடைக்கும்.


உத்திரம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------




கன்னி

மே 03, 2021



எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்ல வேண்டும். உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்துழைப்புகள் காலதாமதமாக கிடைக்கும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும்.


அஸ்தம் : காலதாமதம் ஏற்படும்.


சித்திரை : அனுகூலமான நாள்.

---------------------------------------




துலாம்

மே 03, 2021



குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பாக்கிகள் வசூலாகும். முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். மனை மற்றும் வாகனம் தொடர்பான ஆசைகள் நிறைவேறும். விவசாயம் தொடர்பான பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கால்நடைகள் வியாபாரத்தில் லாபம் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.


விசாகம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




விருச்சகம்

மே 03, 2021



வாக்குவன்மையினால் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். சகோதரர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் அமையும். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். சுபகாரியங்களை செய்வதற்கான வாய்ப்புகள் சிலருக்கு கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.


அனுஷம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.


கேட்டை : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




தனுசு

மே 03, 2021



கணவன், மனைவிக்கிடையே ஆரோக்கியமான விவாதங்கள் ஏற்பட்டு மறையும். வியாபாரம் தொடர்பான பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் கனிவுடன் பழகவும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : விவாதங்கள் மறையும்.


பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.


உத்திராடம் : கனிவு வேண்டும்.

---------------------------------------




மகரம்

மே 03, 2021



குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் மேம்படும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் : எண்ணங்கள் மேம்படும்.

---------------------------------------




கும்பம்

மே 03, 2021



உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு தெளிவை அளிக்கும். தொழில் தொடர்பான பொருளாதார நிலை மேம்படும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.


சதயம் : பொருளாதாரம் மேம்படும்.


பூரட்டாதி : ஒற்றுமை அதிகரிக்கும்.

---------------------------------------




மீனம்

மே 03, 2021



உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குழந்தைகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். உழைப்பிற்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : அறிவு வெளிப்படும்.


உத்திரட்டாதி : செல்வாக்கு அதிகரிக்கும்.


ரேவதி : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------


கடவுளின் தேசத்தைக் காக்க மீண்டும் சட்டமன்றம் நுழைகிறார் 'சைலஜா' டீச்சர்...



கே.கே.ஷைலஜா டீச்சர்

மட்டண்ணூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சைலஜா டீச்சரை அத்தொகுதி மக்கள் 58,872 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற செய்திருக்கின்றனர்.


கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது இன்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கையின் முதல் சுற்றுலிருந்தே இடதுசாரி கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. தற்போதைய நிலவரப்படி கேரளாவில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில் மெஜாரிட்டிக்கு தேவையான 71 இடங்களைத் தாண்டி இடதுசாரி கூட்டணி 95 இடங்களுக்கும் மேலாக முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பலான தொகுதிகளில் இன்னும் சில சுற்றுகளே மீதமுள்ள நிலையில் தனிப்பெரும்பான்மையுடன் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வரலாற்று சாதனை நிகழ்த்தியிருக்கிறது.


இடது முன்னணி கூட்டணி 97 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கடந்த ஐந்தாண்டுகளில் செய்த மக்கள் நல செயல்களே அக்கட்சிக்கு தேர்தலில் வாக்குக்களாக கூடுதல் பலம் சேர்ந்திருக்கின்றன. குறிப்பாக, கொரோனா நோய்த்தொற்றை மாநில அரசு எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.


நிலச்சரிவு, நிஃபா வைரஸ், கேரள பெருவெள்ளம் என முன்னதாக பல பேரிடர்களையும், அசாதாரண சூழல்களையும் திறம்பட எதிர்கொண்ட கேரளா கொரோனா வைரஸை எதிர்கொள்ள தயாராகவே இருந்தது. அதற்கு காரணம், சூழலை கணித்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்ட மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா.


64 வயதான சைலஜா டீச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசின் அமைச்சரவையில் இரண்டு முக்கிய பதவிகளை கவனித்து வந்தார். 2016 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த சைலஜா டீச்சர், கேரள அரசின் சுகாதாரத்துறை மற்றும் சமூகநலத்துறை என இரண்டு மிகமுக்கியமான இலாக்காக்களை கவனித்து வந்தார். சூழல் எவ்வளவு இக்கட்டானதாக இருந்தாலும் துணிந்து போராடும் மனதிடம் கொண்ட சைலஜா கேரளாவின் பல பேரிடர் நேரங்களில் திறம்பட செயல்பட்டிருக்கிறார்.



கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கேரளாவில் அதிகமாக இருந்த போதிலும், மாநிலத்தில் உயிரிழப்புகள் மிகவும் குறைவாகவே பதிவாகி இருக்கிறது. கொரோனா முதலாம் அலையில் சூழலை கச்சிதமாக கையாண்டு கேரளாவில் கொரோனா பரவலையும், தாக்கத்தையும் சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா குறைத்தார். அதன் காரணமாக சைலஜா டீச்சர் மக்கள் மனங்களை வென்றார். சைலஜா கொரோனா நோய்த்தொற்று பாதிப்பை எதிர்கொண்ட விதம் இந்தியளவில் பெரிதாக பேசப்பட்டது, தற்போது வரையிலும் பேசப்பட்டு வருகிறது.


கேரள சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட சைலஜாவிற்கு மக்கள் தங்கள் நன்றிக்கடனை இந்த தேர்தலில் வாக்குகளாக செலுத்தியிருக்கின்றனர். மட்டண்ணூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சைலஜா டீச்சரை அத்தொகுதி மக்கள் 58,872 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற செய்திருக்கின்றனர். கடவுளின் தேசத்தை காக்க மீண்டும் சட்டசபைக்குள் நுழையவிருக்கும் கம்யூனிச காம்ரேட் ஷைலஜா டீச்சருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நன்றி: விகடன்

கே.கே.ஷைலஜா அவர்கள் 1980 ஆம் ஆண்டில் மட்டனூரில் உள்ள பழசி ராஜா என்.எஸ்.எஸ். கல்லூரியில் இளநிலை இயற்பியல் பட்டம் மற்றும் விஸ்வேஸ்வரய்ய கல்லூரியில் இளங்கலை கல்வியியல் பட்டம் ஆகியவற்றைப் பெற்றார். பின்னர் அவர் சிவபுரம் உயர்நிலைப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏழு ஆண்டு சேவைக்குப் பிறகு, முழுநேர அரசியல் நடவடிக்கைக்காக 2004 இல் ஓய்வு பெற்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2021 - 03.05.2021 07.35மணி முன்னிலை நிலவரம் (தேர்தல் ஆணையம்)...

 


Tamil Nadu
Result Status
Status Known For 234 out of 234 Constituencies
PartyWonLeadingTotal
All India Anna Dravida Munnetra Kazhagam61667
Bharatiya Janata Party314
Communist Party of India202
Communist Party of India (Marxist)202
Dravida Munnetra Kazhagam11418132
Indian National Congress15318
Pattali Makkal Katchi415
Viduthalai Chiruthaigal Katchi404
Total20529234



தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2021 - இரவு 10.00மணி முன்னிலை நிலவரம் (தேர்தல் ஆணையம்)...

 


Tamil Nadu
Result Status
Status Known For 234 out of 234 Constituencies
PartyWonLeadingTotal
All India Anna Dravida Munnetra Kazhagam115869
Bharatiya Janata Party044
Communist Party of India022
Communist Party of India (Marxist)022
Dravida Munnetra Kazhagam23109132
Indian National Congress21416
Indian Union Muslim League011
Pattali Makkal Katchi044
Viduthalai Chiruthaigal Katchi134
Total37197234





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

23-12-2024 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-12-2024 - School Morning Prayer Activities திருக்குறள்: பால் : பொருட்பால் அதிகாரம் : மருந்து க...