கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசிக் கொள்கை - மாண்புமிகு பிரதமர் அவர்களது உரையின் முக்கிய அம்சங்கள்...
ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசிக் கொள்கை - மாண்புமிகு பிரதமர் அவர்களது உரையின் முக்கிய அம்சங்கள்...
1️⃣ *ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசே இலவசமாக தடுப்பூசிகளை வழங்கும்!*
2️⃣ *இலவச தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தனியார் மருத்துவமனையில் பணம் கொடுத்து போட்டுக்கொள்ளலாம்!*
3️⃣ *இந்தியாவில் 23கோடிக்கும் மேலான வர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது!*
4️⃣ *தீபாவளி வரை உணவுப்பொருட்கள் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது!*
5️⃣ *மூக்கு வழியாக செலுத்தப் படக்கூடிய கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது!*
6️⃣ *குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை வெற்றி பெற்றால் இந்தியாவிற்கே மிகப்பெரிய சாதனை ஆக அமையும்!*
7️⃣ *2வது அலைக்கு முன்பாக முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கா விட்டால் நிலைமை என்னவாகி இருக்கும்!*
8️⃣ *💉💉 3 தடுப்பூசிகள் இறுதி கட்ட பரிசோதனைகளில் உள்ளது!*
9️⃣ *ஒவ்வொரு மாநிலத்திலும் மத்திய அரசின் மூலம் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன!தடுப்பூசி களை மாநில அரசே வாங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது!*
🔟 *உள்நாட்டில் உற்பத்தியாகும் தடுப்பூசியில் மத்திய அரசு 75% தனியார் மருத்துவமனைகள் 25% கொள்முதல் செய்ய திட்டம்!*
*"முக கவசம், சமூக இடைவெளி போன்றவற்றை நாட்டு மக்கள் எக்காரணம் கொண்டும் கைவிடக்கூடாது!*
>>> மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உரை (07-06-2021)...
கோவிட் 19: தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்களா ஆசிரியர்கள்? - உண்மை என்ன? - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் விளக்கம்...
கோவிட் 19: தடுப்பூசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறார்களா ஆசிரியர்கள்? - உண்மை என்ன? - பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அவர்களின் விளக்கம்... (நன்றி: விகடன்)
பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாளும் எத்தனை ஆசிரியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என்ற விவரங்கள்தான் சேகரிக்கப்படுகிறதே ஒழிய, யார் தடுப்பூசி போடவில்லை என்ற விவரங்களையெல்லாம் சேகரிக்கவில்லை." என்கிறார் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார்.
கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் பிரதானமானது தடுப்பூசி. பொது மக்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்திருக்கும் தமிழக அரசு, செய்தித்தாள் மற்றும் பால் விநியோகம் செய்பவர்கள், மருந்தகப் பணியாளர்கள், ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள் உள்ளாட்சித்துறை பணியாளர்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்துள்ளது.
கொரோனாவின் வேகம் அதிகரித்ததையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிக்காக வரிசையில் காத்திருக்கின்றனர் மக்கள். மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் சூழலில், `பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் வலியுறுத்துவதாகவும் அது சரியான நடைமுறை இல்லை என்றும் சில ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் துரிதமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரத்தை அதற்குரிய ஆவணங்களுடன் கல்வி மேலாண்மை தகவல் முகமை தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆசிரியர்கள், போடாதவர்களின் எண்ணிக்கையை மாவட்ட வாரியாக அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகள் தொகுத்து பள்ளிக்கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும்.
முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி விவரங்களையும் தனியாகக் குறிப்பிட வேண்டும்’ என்று பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து அது சர்ச்சையாகியிருக்கிறது.
``தடுப்பூசி கட்டாயம் என்று அரசு நிர்பந்திக்க முடியுமா? விருப்பமுள்ளவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்பதுதானே சிறந்த முடிவாக இருக்க முடியும்?” என்று ஆசிரியர்கள் சிலர் சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.
இதுதொடர்பாக நம்மிடம் பேசிய தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சங்கர், ``அதிதீவிரமாகப் பரவி வரும் கொரோனாவை ஒழிப்பதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் ஒரே வழி என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அனைவரும் தங்களது சுய விருப்பத்தின் பேரில் தடுப்பூசி போட்டுக்கொண்டால்தான் அது தேவையில்லாத சிக்கல்களை உருவாக்காது.
ஆனால், அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், போடாதவர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும் என்பதுதான் பதற்றத்தை உருவாக்குகிறது. ஏனெனில், சாதாரண காய்ச்சலுக்காகப் போட்டுக்கொள்ளும் ஊசிக்கே ஒவ்வாமை பிரச்னை உள்ள ஆசிரியர்கள் பலர் இருக்கின்றனர். அப்படியானவர்கள், `கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் தங்களுக்கு ஏதாவது ஒவ்வாமை ஏற்படுமோ?' என அச்சமடைகின்றனர். பயம்தான் பெரிய நோய் என்பார்கள்.
அந்த பயத்துடன் ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு வேறு ஏதாவதொரு காரணத்தால் பின்விளைவுகள் ஏற்பட்டால்கூட, `தடுப்பூசியினால்தான் பின்விளைவு ஏற்பட்டது’ என்று சொல்வதற்குக் கூட வாய்ப்புள்ளது. ஆகையால், கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட வைக்காமல் அவர்களின் முழு விருப்பத்துடன் போடச் செய்வதே சிறப்பானதாக இருக்கும்.
இதய நோய் உள்ளவர்கள், வலிப்பு நோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள், நீண்ட நாள்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயுர்வேத மருந்து எடுத்துக்கொள்பவர்களெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குப் பெரிதும் அஞ்சுகின்றனர்.
எனவே, `எந்தெந்த நோயாளிகள் அந்த ஊசியைப் போடக் கூடாது. யார் யாரெல்லாம் போடலாம்’ என்று தெளிவுபடுத்துவதுடன், `தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசியால் எந்தப் பிரச்னையும் வராது’ என்று அரசு உறுதியளித்தால் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயங்கும் சிலரும் நம்பிக்கையுடன் தடுப்பூசி எடுத்துக்கொள்வார்கள்.
ஆசிரியர்களாகிய நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்’ என்று எங்கள் சங்கத்தின் சார்பாகச் சொல்லும்போது கூட, `நான் தொடர்ச்சியாக ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்கிறேன். நான் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? எனக்கு ஒவ்வாமை இருக்கிறது நான் எப்படி தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும்? என்று சிலர் கேட்கின்றனர். இன்னும் சிலரோ, சென்ற முறை முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்போது, `இந்த தடுப்பூசியை நான் மனமுவந்து சொந்த விருப்பத்தின் பேரில் போட்டுக்கொள்கிறேன்' என்று கையெழுத்து வாங்கிக்கொண்டனர்.
தடுப்பூசியால் ஏதேனும் பின்விளைவுகள் நேர்ந்தால், உங்களது சொந்த விருப்பத்தின் பேரில்தானே தடுப்பூசி எடுத்துக்கொண்டீர்கள்… எங்களுக்குத் தெரியாது என்று அரசு ஒதுங்கிக்கொள்ளுமோ என்று அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே இந்தக் குழப்பத்தையும் அச்சத்தையும் போக்கி அனைவரையும் அவரவர் முழு விருப்பத்தின் பேரில் கட்டாயப்படுத்தாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்வதுதான் சிறப்பானதாக இருக்கும்” என்றார்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமாரிடம் கேட்டோம், ``எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் எந்த சுற்றிக்கையும் அனுப்பவில்லை. அதேசமயம் ஆசிரியர்கள் மட்டுமல்ல அனைத்துவிதமான அரசு ஊழியர்களும் பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் அரசு தெரிவிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தளவில் ஒவ்வொரு நாளும் எத்தனை ஆசிரியர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர் என்ற விவரங்கள்தான் சேகரிக்கப்படுகிறதே ஒழிய, யார் தடுப்பூசி போடவில்லை என்ற விவரங்களையெல்லாம் சேகரிக்கவில்லை. தடுப்பூசி விவகாரத்தில் எந்தக் குழப்பமும் வேண்டாம். யார் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். யார் யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதனை ஆசிரியர்கள் பின்பற்றினால் போதுமானது. நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.” என்றார்.
நன்றி: விகடன்
தமிழக அரசின் இ-பதிவில் புதிய வசதி அறிமுகம் – இன்று (7.6.2021) முதல் அமல்...
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ-பதிவு இணையதளத்தில் புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்துள்ளது.
இ-பதிவு புதிய வசதி:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே வர கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 7 வரை அமல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில் சில தளர்வுகளை அறிவித்து ஜூன் 14 வரை அனைத்து கட்டுப்பாடுகளும் நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக வாடகை டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் இ-பதிவு செய்து பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. அதற்காக இ-பதிவு இணையதளத்தில் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அதில் உடனடியாக சென்று பதிவு செய்வதன் மூலமாக அவசர தேவைகளுக்கு பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனி நபர், குழு என மாவட்டங்களுக்கு இடையே செல்லுவோர் பதிவு செய்வதன் மூலமாக செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணைப்பு இன்றிலிந்து இ-பதிவு இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
2019-2020-ம் கல்வியாண்டுக்கான பள்ளிக்கல்வி செயல்திறன் தர அட்டவணையில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய 5 மாநிலங்கள் தரவரிசைப்பட்டியலில் முதலிடம்...
2019-20 ஆம் ஆண்டுக்கான பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீட்டை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார். இந்த பட்டியலில், கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக தரவரிசை பெற்று முதலிடம் பிடித்துள்ளன.
மத்திய அரசு இது தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளது. எந்த அடிப்படையில் பள்ளி கல்வியில் சில மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. எந்த மாநிலங்கள் முன்னேற வேண்டியுள்ளது. எந்த மாநிலங்கள் பரவாயில்லை என்ற அடிப்படையில் புள்ளி விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
மத்திய அரசு வெளியிட்ட அந்த அறிக்கையில் இந்திய பள்ளி கல்வி முறை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளையும், கிட்டத்தட்ட 97 லட்சம் ஆசிரியர்களையும், 25 கோடிக்கும் அதிகமான மாணவர்களையும் கொண்ட பல்வேறு சமூக பொருளாதார பின்னணிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஒன்று. நாட்டின் மாறுபட்ட கலாச்சாரம் வளரவும் மற்றும் பாரம்பரியம்வளரவும் போதுமான வாய்ப்பைக் கொடுக்கும் அதே வேளையில், நாடு முழுவதும் கல்வின் தரங்களையும் சீரான தன்மையையும் பராமரிக்க மத்திய பள்ளி கல்வித்துறை அமைப்பு பாடுபடுகிறது.
பிஜிஐ
இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைக்கான குழந்தைகள் உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதோடு, அப்போதைய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையும் மேம்படுத்த ((DoSEL) தொடங்கிய திட்டங்கள், கல்வி மக்களுக்கான கிடைப்பதற்கான அணுகலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இப்போது கல்வியின் தரத்தை அணுகுவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.. பள்ளிக் கல்வித் துறையில் மாற்றத்தக்க மாற்றத்தை ஊக்குவிப்பதற்காக செயல்திறன் தர குறியீட்டை (பிஜிஐ) டோசெல் ((DoSEL) வடிவமைத்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு (பிஜிஐ) முதன்முதலில் 2017-18 குறிப்பு ஆண்டிற்கானது 2019 இல் வெளியிடப்பட்டது. 2018-19க்கான பிஜிஐ 2020 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
மொத்தம் ஐந்து மாநிலங்கள்
தற்போது 2019-20 ஆம் ஆண்டுக்கான பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்கள் அதிக தரவரிசை பெற்று முதலிடம் பிடித்துள்ளன. சென்ற முறை கேரளா மட்டுமே முதலிடத்தை பிடித்திருந்தது. மத்திய அரசு கிரேடு ஒன்று , கிரேடு இரண்டு கிரேடு மூன்று என மொத்தம் 10 கிரேடுகளாக மாநிலங்களை பிரித்துள்ளது. முதல் கிரேடில் எந்த மாநிலமும் இல்லை. அதாவது 950ககு மேல் எந்த மாநிலமும் இல்லை. ஆனால் இரண்டாவது கிரேடில் தமிழ்நாடு , கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் 900 முதல் 950 மதிப்பெண்கள் பெற்றுள்ளன. இரண்டாவது கிரேடு, மூன்று கிரேடுகள் அடுத்தடுத்து 50 மதிப்பெண்கள் குறைவாக பெற்றுள்ளன.
.
ஆந்திரா
இந்த பட்டியலில் மூன்றாவது கிரேடில் தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, டெல்லி என்சிஆர், புதுச்சேரி, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் உள்ளன. 4வது கிரேடில் ஆந்திரா, டையு டாமன், இமாச்சல பிரதேசம், கர்நாடகா, ஒடிசா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகியவை உள்ளன. 10வது கிரேடில் அதாவது கடைசி கிரேடில் லடாக் மாநிலம் உள்ளது.
என்ன காரணம்
மத்திய பள்ளி கல்வித்துறைஅமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், பள்ளி கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு 2019-20 இல் மாநில வாரியான செயல்திறன்களை முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது, 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்கள் தரவரிசை குறியீட்டு மதிப்பெண்களை 2019-20 ஆம் ஆண்டில் மேம்படுத்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. கல்வி செயல்திறன் தரவரிசை குறியீடு வெளியிடுவதன் முக்கிய நோக்கம் உண்மையில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் கல்வி செயல்திறனை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு கோரிக்கை மனு அளிப்பது எப்படி?
"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது".
http://cmcell.tn.gov.in/register.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம்.
தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
http://cmcell.tn.gov.in/login.php என்ற முகவரியில் சென்று தங்களின் புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிந்து கொள்ளலாம்.
தபால் மூலம் புகார்கள் அனுப்பும் முகவரி....
Chief Minister's Special Cell ,
Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764
Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? விவரங்களை நாளைக்குள் அனுப்ப உத்தரவு...
அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விவரங்களை சேகரித்து நாளைக்குள் அனுப்பி வைக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக பள்ளிக்கல்வி என்பது மாணவர்களுக்கு கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. மேலும் 1ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கடந்த 2 ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை. மேலும் கடந்த 2 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவர்கள், விருப்ப ஓய்வு மற்றும் இறந்தவர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஏற்கனவே 3 ஆயிரம் பணியிடங்கள் காலியாகி இருந்த நிலையில், தற்போது மேலும் காலிப்பணியிடங்கள் அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்தால் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.
அதற்குள் காலிப்பணியிடங்களை நிரப்ப புதிதாக பொறுப்பு ஏற்றுள்ள தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. அதன்படி காலிப்பணியிடங்கள் விவரங்களை நாளைக்குள் அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்து பாடங்கள் மற்றும் உடற்கல்வி நிலை-2 காலிப்பணியிட விவரங்கள் கோரப்பட்டுள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து காலிப்பணியிட விவரங்களை முதன்மைக்கல்வி அலுவலர்கள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியாக கொடுக்கப்பட்டுள்ள படிவங்களை பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் நாளைக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தனிநபர் மூலம் ஒப்படைக்க வேண்டும். அதன் விவரங்களை இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும்’’ என்றனர்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
No Work No Pay - One Day All India Strike
இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...
