கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 2022 - நகராட்சிகளுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அறிவித்து அரசாணை (G.O.(Ms) No. 11, Dated: 17.01.2022) வெளியீடு(Ordinary Elections — Ordinary Elections to Urban Local Bodies. 2022 — Offices of Chairman of Municipalities — Reservations for Scheduled Castes, Scheduled Tribes (including Scheduled Castes and Scheduled Tribes women) and Women (General) —Notified. Municipal Administration and Water Supply (Election) Department G.O.(Ms) No. 11, Dated: 17.01.2022)...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - 2022 - பேரூராட்சிகளுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அறிவித்து அரசாணை (G.O. (Ms) No.12, Dated: 17.01.2022 ) வெளியீடு (Ordinary Elections — Ordinary Elections to Urban Local Bodies, 2022 — Offices of Chairman of Town Panchayets — Reservations for Scheduled Castes, Scheduled Tribes (including Scheduled Castes and Scheduled Tribes Women) and Women (General) —Notified - MunicipalAdministration and Water Supply (Election) Department G.O. (Ms) No.12 Dated: 17.01.2022 )
இந்திய ராணுவப் பொதுப்பள்ளிகளில் 8700 இளநிலை, முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - ஜனவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் (8700 Postgraduate and Graduate Teacher Posts in Indian Army Public Schools - Applications can be submitted by January 28)...
இந்திய ராணுவப் பொதுப்பள்ளிகளில் 8700 இளநிலை, முதுநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் - ஜனவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் (8700 Postgraduate and Graduate Teacher Posts in Indian Army Public Schools - Applications can be submitted by January 28)...
>>> GENERAL INSTRUCTIONS FOR CANDIDATES - ONLINE SCREENING TEST: 2022...
ராணுவ நல கல்வி சங்கம் மூலம் நாடு முழுவதும் 137 ராணுவ பப்ளிக் பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் பல்வேறு பாடப்பிரிவுகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், வணிகவியல் என பல பிரிவுகளில் மொத்தம் 8700 காலியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.ஜி.டி., (முதுநிலை பட்டம், பி.எட்., படிப்பில் 50 சதவீதம், டி.ஜி.டி., (இளநிலை பட்டம், பி.எட்., படிப்பில் 50 சதவீதம்) பி.ஆர்.டி,. (இளநிலை பட்டம், பி.எட்., அல்லது ஆசிரியர் பயிற்சி படிப்பில் 50 சதவீதம்) என மூன்று பிரிவுகள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்.
வயது: 1.4.2021 அடிப்படையில் ஐந்தாண்டு களுக்கு கீழ் ஆசிரியர் பணி அனுபவம் உள்ளவர்கள் 40, ஐந்தாண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்கள் 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் ஸ்கிரீனிங் தேர்வு, நேர்முகத்தேர்வு, கற்பித்தல் திறன் மற்றும் கம்ப்யூட்டர் அறிவு.
எழுத்துத்தேர்வு தேதி: 2022 பிப்ரவரி 19, 20
தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, கோவை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ.385.
கடைசிநாள் : 28.1.2022
விவரங்களுக்கு: https://register.cbtexams.in/AWES/Registration
இன்றைய (17-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜனவரி 17, 2022
உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சிறு மற்றும் குறுந்தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அஸ்வினி : அனுசரித்து செல்லவும்.
பரணி : தாமதங்கள் குறையும்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜனவரி 17, 2022
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். வர்த்தக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : லாபம் மேம்படும்.
ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மிதுனம்
ஜனவரி 17, 2022
நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துகொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மிருகசீரிஷம் : இழுபறிகள் குறையும்.
திருவாதிரை : பொறுப்புகள் மேம்படும்.
புனர்பூசம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
ஜனவரி 17, 2022
வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் தோன்றும் பலவிதமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் மேம்படும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : அலைச்சல்கள் ஏற்படும்.
பூசம் : அனுசரித்து செல்லவும்.
ஆயில்யம் : அனுபவம் மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
ஜனவரி 17, 2022
மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான தருணங்கள் காணப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : ஆசைகள் பிறக்கும்.
பூரம் : நெருக்கம் அதிகரிக்கும்.
உத்திரம் : மாற்றமான நாள்.
---------------------------------------
கன்னி
ஜனவரி 17, 2022
உறவினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : சுபமான நாள்.
அஸ்தம் : திருப்தி ஏற்படும்.
சித்திரை : ஆதரவு அதிகரிக்கும்.
---------------------------------------
துலாம்
ஜனவரி 17, 2022
நிர்வாகம் சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நட்புகள் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
சுவாதி : அனுபவம் ஏற்படும்
விசாகம் : கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
---------------------------------------
விருச்சிகம்
ஜனவரி 17, 2022
பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பயணங்களில் மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படும். சிந்தனைகளில் குழப்பமும், செயல்பாடுகளில் விருப்பமின்மையும் வெளிப்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : குழப்பமான நாள்.
கேட்டை : விரயங்கள் உண்டாகும்.
---------------------------------------
தனுசு
ஜனவரி 17, 2022
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். எண்ணிய பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
மூலம் : எண்ணங்கள் கைகூடும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : புரிதல் உண்டாகும்.
---------------------------------------
மகரம்
ஜனவரி 17, 2022
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்
உத்திராடம் : நெருக்கடிகள் மறையும்.
திருவோணம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அவிட்டம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
கும்பம்
ஜனவரி 17, 2022
தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கலைஞர்களுக்கு கற்பனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சேமிப்புகள் மேம்படும்.
சதயம் : கற்பனைகள் அதிகரிக்கும்.
பூரட்டாதி : ஈடுபாடு ஏற்படும்.
---------------------------------------
மீனம்
ஜனவரி 17, 2022
தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
உத்திரட்டாதி : பொறுப்புகள் குறையும்.
ரேவதி : கவனம் வேண்டும்.
---------------------------------------
கோவிட்19 பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நாட்கள் அட்டவணை (Dates Schedule for COVID19 Booster Dose (3rd Dose) Vaccine)...
கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்திக் கொண்டவர்கள் மூன்றாம் தவணையான பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய நாளை தெரிந்து கொள்ள உதவும் உடனடி அட்டவணை...
நாம் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட நாள் தெரிந்தால் போதும் அதிலிருந்து 9 மாதங்கள் அல்லது 273 நாட்கள் முடிந்த நாளை இந்த அட்டவணை எளிதாக காட்டிவிடும்.
ஆசிரியர்கள் வரும் 19ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் - ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடரும் - அலுவல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும் - பள்ளி கல்வித்துறை...
10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடரும்.
தனியார் பள்ளிகளை பொறுத்தவரை ஆன்லைனிலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெறும்- பள்ளி கல்வித்துறை.
ஆசிரியர்கள் வரும் 19ஆம் தேதி முதல் வழக்கம் போல் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும்.
ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடரும், அலுவல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டும்- பள்ளி கல்வித்துறை விளக்கம்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings
+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...