கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் இணையவழி போட்டிகள் - தலைப்பு : "எனது வாக்கு எனது எதிர்காலம் - ஒரு வாக்கின் வலிமை"- முதல் பரிசாக ரூபாய் 2 லட்சம் வெல்ல வாய்ப்பு - கடைசி நாள்: 15-03-2022 (Online competitions conducted by the Election Commission of India - Title: "My Vote is My Future - The Strength of a Vote" - Chance to win Rs 2 lakh as first prize - Last day: 15-03-2022)...
இன்றைய (05-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
மார்ச் 05, 2022
மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் இழுபறியான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். உத்தியோகம் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
அஸ்வினி : தீர்வு கிடைக்கும்.
பரணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 05, 2022
சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
கிருத்திகை : லாபகரமான நாள்.
ரோகிணி : தடைகள் விலகும்.
மிருகசீரிஷம் : புத்துணர்ச்சியான நாள்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 05, 2022
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அறிமுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : எண்ணங்கள் கைகூடும்.
---------------------------------------
கடகம்
மார்ச் 05, 2022
பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் மூலம் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
பூசம் : சிந்தனைகள் மேம்படும்.
ஆயில்யம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 05, 2022
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மகம் : சேமிப்புகள் குறையும்.
பூரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
உத்திரம் : கவனம் வேண்டும்.
---------------------------------------
கன்னி
மார்ச் 05, 2022
பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். சுபமுயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். புத்திக்கூர்மை வெளிப்படும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : நம்பிக்கை மேம்படும்.
சித்திரை : திறமைகள் வெளிப்படும்.
---------------------------------------
துலாம்
மார்ச் 05, 2022
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரங்களில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வெளியூர் தொடர்பான பயண முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : வாய்ப்புகள் உண்டாகும்.
விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
---------------------------------------
விருச்சிகம்
மார்ச் 05, 2022
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இனம் புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். செல்வாக்கு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
கேட்டை : மந்தத்தன்மை குறையும்.
---------------------------------------
தனுசு
மார்ச் 05, 2022
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய தெளிவினை ஏற்படுத்தும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : ஒத்துழைப்பு மேம்படும்.
பூராடம் : முன்னேற்றமான நாள்.
உத்திராடம் : தெளிவு பிறக்கும்.
---------------------------------------
மகரம்
மார்ச் 05, 2022
மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாக்குவன்மையின் மூலம் மேன்மையான வாய்ப்புகளை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் மறையும். புதிய முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : ஆர்வம் அதிகரிக்கும்.
திருவோணம் : மேன்மையான நாள்.
அவிட்டம் : அங்கீகாரம் கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
மார்ச் 05, 2022
குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் லாபம் மேம்படும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
சதயம் : மாற்றமான நாள்.
பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
---------------------------------------
மீனம்
மார்ச் 05, 2022
மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.
ரேவதி : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
உள்ளடக்கிய வகுப்பறைகளை உருவாக்குவது குறித்த கடந்த சனிக்கிழமை (26.02.2022) அன்று நடந்த நமது பயிற்சியைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் கற்றுக்கொண்ட உத்திகளை உங்களது வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்த சில குறிப்புகள் (Building Inclusive Classrooms techniques learned by teachers in your classrooms)...
மதிப்பிற்குரிய ஆசிரியர்கள் அனைவருக்கும் *Sol’s ARCன்* வணக்கங்கள்!
உள்ளடக்கிய வகுப்பறைகளை உருவாக்குவது குறித்த கடந்த சனிக்கிழமை (26.02.2022) அன்று நடந்த நமது பயிற்சியைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் கற்றுக்கொண்ட உத்திகளை உங்களது வகுப்பறைகளில் நடைமுறைப்படுத்த சில குறிப்புகளை வழங்க விரும்புகிறோம்.
கரும்பலகை உத்திகள் விளக்கப்பட்டுள்ள காணொளியை காண இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
நமது ஆசிரியர்கள் சிலரால் செய்யப்பட்ட வகுப்பறை கரும்பலகையின் சில மாதிரிகளும் உங்களின் புரிதலுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வகுப்பறையில் இதே போன்ற கரும்பலகை அமைப்பை பயிற்சி செய்யுங்கள். அதை படம் எடுத்து அதே இணைப்பில் படத்தை நாளை மதியம் 01.00 மணிக்குள் பதிவேற்றவும்.
உங்கள் தொடர் ஒத்துழைப்புக்கு நன்றி!!
உள்ளடக்கிய வகுப்பறைகளை உருவாக்குவதற்கான உங்கள் முயற்சிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.
மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் (Revision Exam Syllabus for Higher Secondary First Year Students)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET
TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...