கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2022 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.07.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
குறள் எண் – 989
பால் – பொருட்பால்
இயல் – குடியியல்
அதிகாரம் – சான்றாண்மை
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
விளக்கம்:
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப்படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.
பழமொழி :
He that blows in the dust falls on his own eyes
சேற்றிலே கல்லெறிந்தால் நம்மேல் தான் தெறிக்கும்
இரண்டொழுக்க பண்புகள் :
1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய்
2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்
பொன்மொழி :
உன்னிடம் பணம் இருந்தால் நீ ஒரு நாயை வாங்கி விட முடியும் ஆனால் அதன் வாலை நீ அசைக்க வைக்க வேண்டுமென்றால் நீ அதனிடம் அன்பை செலுத்தினால்தான் முடியும்.....ரமண மகரிஷி
பொது அறிவு :
1.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும்?
200 லிட்டர் .
2.பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய பூச்சி எது?
தும்பி.
English words & meanings :
Calculus - a method of calculation. Noun. நுண் கணிதம். பெயர்ச் சொல்
ஆரோக்ய வாழ்வு :
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு சோயா துண்டுகள் நன்மை பயக்கும்.
சோயா துண்டுகளில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.
NMMS Q 30:
டாஸ்மேனியா ________ தீவு என்று அழைக்கப்படுகிறது?
விடை: ஆப்பிள்
ஜூலை 22
பை நாள்
பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன {\π \pi \,} என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண், அதாவது 3.14 என்பது அண்ணளவாக {\π \pi \,} ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது. (π = 3.1415926).
பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல் ({\π \pi \,} யின் பரவலாக அறிந்த அண்ணளவு {\π {\frac {22/7 }}}) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.
{\π \pi \,} நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது[1]. லாறி ஷோ (Larry Shaw) என்பவர் இந்நாளை அறிமுகப்படுத்தினார்.[2]
பை நாள் கொண்டாடப்படும் நாட்கள்
பெப்ரவரி 27 - ஆண்டு தொடக்க நாளில் இருந்து பூமி தனது ஒழுக்கை 1 ரேடியன் அளவு சுற்றிவரும் நாள்.
மார்ச் 14 - 3.14
ஜூலை 22: 22/7
நவம்பர் 10: ஆண்டின் 314வது நாள் (நெட்டாண்டுகளில் நவம்பர் 9)
டிசம்பர் 21, பிப 1:13: ஆண்டின் 355வது நாள், 1:13 மணிக்கு (இது சீன அண்ணளவாகும் (355/113)
நீதிக்கதை
சிங்கமும் கழுதைப்புலியின் பங்கும்
அன்று ஒரு நாள் சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. அடுத்தநாள் சிங்கம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம் அனுப்பி தன் பங்கை வாங்கிவரச் சொன்னது. கழுதைப்புலியின் பங்காக பசுவின் குடலை மட்டும் கொடுத்து அனுப்பியது சிங்கம்.
கழுதைப் புலியோ, நீ ஏன் குடலை மட்டும் கொண்டு வந்தாய்? அரைவாசிப் பங்கு கேட்கவில்லையா என்று கேட்டது. பெரியவர்கள் கொடுப்பதைத்தான் கொண்டு வர முடியும். நான் எப்படி சிங்கத்தோடு விவாதிக்க முடியும் என்றது குட்டி கழுதைப்புலி.
அதைக்கேட்டு கோபமான கழுதைப்புலி அந்தக் குடலோடு சிங்கத்தைப் பார்க்கப் போனது. சிங்கம் உணவை உண்டு குகைக்குள் ஒய்வெடுத்துக் கொண்டிருந்தது. கழுதைப்புலி வந்ததைக் கண்டு ஏன் இங்கே வந்தாய்? என்று கர்ஜித்தபடி சிங்கம் கேட்டது.
பசுவில் பாதி கேட்க வந்த கழுதைப்புலி பயந்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டு ராஜ சிங்கமே! நீங்கள் குடல் அனுப்பியதற்கு மிக்க நன்றி, ஆனால் அதனை உங்களிடமே சேர்க்க முடிவு செய்து விட்டோம்.
குடலை சிங்கத்திடம் கொடுத்துவிட்டுதிரும்பிய கழுதைப்புலியிடம் பசுவில் பாதி கேட்கப்போன நீங்கள் குடலையும் கொடுத்துவிட்டு வருகிறீர்களே? என்று கேட்டது குட்டி கழுதைப்புலி.
மகனே! சிங்கம் மிகக் கொடூரமாக இருந்தது. அதைக்கண்டு நடுங்கிவிட்டேன். எனவே எனது பங்கையும் கொடுத்துவிட்டுப் பாராட்டிவிட்டு வந்தேன். எல்லாம் நன்மைக்காக என்றது தாய் கழுதைப்புலி.
நீதி :
நம்மைவிட வலிமையானவர்களைக் கோபப்படுத்துவதை விட அவர்களை சாந்தப்படுத்துவதே பாதுகாப்பானது.
இன்றைய செய்திகள்
22.07.22
🌸44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி:சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு இலவச பேருந்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இயக்க உள்ளது
🌸 கோவையில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக தங்கள் சொந்த பயணத்தில் விமானத்தில் பயணம் செய்த 41 மலைவாழ் பழங்குடியினர்
🌸 சென்னை: தமிழகத்தில் 2 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
🌸 ஊட்டியில் கனமழை மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
🌸 குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று நாட்டின் 15 ஆவது குடியரசு தலைவரானார் திரெளபதி மர்மு.
🌸 சென்னை: சென்னையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 'காவல் உதவி' செயலியின் பயன்பாடு குறித்து ஒரு நாள் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
🌸ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் கோலிக்கு 4வது இடம்.
🌸ஆசியக் கோப்பை 2022 கிரிக்கெட் போட்டியை நடத்தக்கூடிய சூழ்நிலை என இலங்கை அரசு அறிவிப்பு.
Today's Headlines
🌸44th Chess Olympiad: Tamil Nadu Tourism Development Corporation to run free bus from Chennai to Mamallapuram
🌸 41 hill tribes who flew from Coimbatore to Chennai for the first time on their own journey
🌸Chennai: The Chennai Meteorological Center has said that there is a possibility of widespread rain and heavy rain at a few places in Tamil Nadu for 2 days.
🌸 Heavy rains in Ooty affect the normal life of people.
🌸 Tirelapathi Marmu became the 15th President of the country by getting the most votes in the presidential election.
🌸 CHENNAI: A day-long special awareness program was held in Chennai on the use of the 'Police Help' app in schools, colleges and public gathering places.
🌸I.C.C. Kohli is ranked 4th in the ranking list.
🌸Sri Lankan government has announced that they couldn't host the Asia Cup 2022 cricket tournament due to situation.
Today's (21-07-2022) Wordle Answer...
Today's (21-07-2022) Wordle Answer: APHID
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2022 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.07.2022 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
குறள் எண் – 988
பால் – பொருட்பால்
இயல் – குடியியல்.
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.
விளக்கம்:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.
பழமொழி :
It is hard to please all parties.
ஒருவருக்கு சாதகம் என்றால் மற்றொருவருக்கு பாதகம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அறிய முடியாததை செய்ய முயல்வதை விட அறிந்ததை மிகச் சிறப்பாக செய்
2. நாளை செய்ய வேண்டிய காரியம் கூட இன்றே செய்வது வெற்றியின் ஆரம்பம்
பொன்மொழி :
பலவீனமானவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர்; பலமானவர்கள் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்....
ஒரிசன் ஸ்வெட் மார்டென்
பொது அறிவு :
1.நம் உடலில் உள்ள எந்த உறுப்பை மூளை அதிகமாக வேலை வாங்குகிறது?
நம் இரண்டு கைகளிலும் உள்ள கட்டை விரல்களை.
2. வயிறும் ஜீரண உறுப்பும் இல்லாத உயிரி எது?
ஈசல்.
English words & meanings :
Beholden - owing gratitude to another, indebted, Adjective:கடமைபடுதல். பெயரளபடை
ஆரோக்ய வாழ்வு :
சோயா சங்க் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. சோயா துண்டுகள் நார்ச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளன, இது உடலில் சரியான செரிமானத்திற்கு அவசியம்.
சோயா துண்டுகளை சாப்பிடுவதன் மூலம் செரிமானத்திற்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
NMMS Q 29:
வியாபாரத்திற்காக இந்தியாவிற்கு வருகைபுரிந்த கடைசி ஐரோப்பிய நாடு எது?
விடை: பிரான்சு
நீதிக்கதை
மனித மனத்தின் ஆசை
இந்த உலகத்தையே ஆளுகின்ற அதிகாரம் என் ஒருவனுக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்டான் ஒரு மன்னன். தன் குருவிடம் சென்று அதற்கு வழியும் கூறுமாறு கேட்டான். குருஜி, மன்னனுக்கு புத்தி புகட்ட விரும்பினார். அவர் அரசனிடம், சொல்கிறேன். அதற்கு முன்பு எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றார். அரசன் ஆவலுடன், சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என்றான். ஒன்றுமில்லை, இந்த செப்புக்குடுவையை உன்னால் முடிந்ததைக் கொண்டு நிரப்பித் தருவாயாக! என்றார்.
அட! இதென்ன பெரிய விஷயம் என்று எண்ணியபடியே, பணியாளரை அழைத்தான். அவரிடம், பொற்காசுகள் நிறைந்த பட்டுத்துணி மூட்டை ஒன்றைத் தந்து அந்தக் குடுவையை நிரப்பச் சொன்னான். அவரும் பொற்காசுகளை அந்தக் குடுவையில் கொட்டினர். குடுவை நிறையவேயில்லை! அது மிகவும் சிறியதுதான். போடப்போட பாதிக்குமேல் காலியாகவே இருந்தது. இன்னும் நிறையக் காசுகள் கொட்டப்பட்டன. அதுவோ நிறையாமலே இருந்தது.
குருஜி, என்ன அரசரே, இந்த சின்னக் குடுவையை நிறைக்க முடியவில்லையா? என்று கேலியாகக் கேட்டார். மன்னனுக்கு அவமானமாகிவிட்டது. கஜானாவிலிருக்கும் பொற்காசுகள், மற்றும் விலையுயர்ந்த மணிகள் எல்லாவற்றையும் கொண்டுவரச் சொன்னான். அனைத்தையும் போட்டாகிவிட்டது. அப்போதும் அந்த மாயப்பாத்திரம் நிறையவே இல்லை. கஜானாவும் காலியாகிவிட்டது. மன்னன் மனம் கலங்கினான். உடலும் உள்ளமும் ஓய்ந்து போனது.
ஐயா, இது என்ன மாயம்? என்ன பாத்திரம் இது? என் மொத்த கருவூலமும் காலியாகி விட்டதே! பாத்திரம் மட்டும் நிறையவே இல்லையே? என்று கலங்கிப்போய்க் கேட்டான். அரசே, இது மனித மனத்தின் ஆசை என்ற பொருளினால் செய்யப்பட்ட குடுவை! இதை நிரப்பவே முடியாது! ஆசைக்கு ஏது அளவு? என்றார். மன்னனுக்குப் புரிந்தது. அவன் குருவை வணங்கினான். மனம் தெளிவு பெற்றது.
இன்றைய செய்திகள்
21.07.22
📍நீட் தேர்வு விலக்கு மசோதா தொடர்பாக மத்திய அரசு 7 கேள்விகளை எழுப்பி உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
📍22 கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து நிர்வாகங்களுக்கு சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த நோட்டீஸ்.
📍டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ஆம் தேதியே தொடங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
📍இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் குடிபெயர்ந்தவர்களில் கடந்த 2021-ம் ஆண்டில் 1.63 லட்சம் பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதில் 78 ஆயிரம் பேர் அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ளனர்.
📍வீட்டிலிருந்து வேலை செய்வோருக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
📍உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் ஜப்பான் பாஸ்போர்ட் முதலிடத்தில் உள்ளது. இந்திய பாஸ்போர்ட் 87-வது இடத்தில் உள்ளது.
📍கொரோனா பரவலால் தள்ளிவைக்கப்பட்ட ஆசிய விளையாட்டு போட்டி நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
📍இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
Today's Headlines
📍Minister M. Subramanian has said that the central government has raised 7 questions regarding the NEET exemption bill.
📍CITU union gives strike notice to transport managements pressing 22 demands.
📍The central government has approved to start procuring short grain paddy in the delta districts from September 1. The farmers of Delta district have thanked the Tamil Nadu government and the central government for this.
📍Among those who migrated abroad from India, 1.63 lakh people renounced Indian citizenship in 2021. Of these, 78,000 have acquired US citizenship.
📍The Ministry of Commerce has issued new guidelines for working from home.
📍The list of the world's most powerful passports has been released. Among these, the Japanese passport is at the top. The Indian passport is ranked 87th.
📍The date of the Asian Games, postponed due to the spread of Coronavirus, has been announced.
📍South Africa won the first ODI against England by 62 runs.
இன்றைய (21-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
ஜூலை 21, 2022
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மனதில் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : புத்துணர்ச்சியான நாள்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஈடுபாடு உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 21, 2022
உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
கிருத்திகை : விவாதங்களை தவிர்க்கவும்.
ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 21, 2022
குழந்தைகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். எதிர்பார்த்த சில உதவி சாதகமாக அமையும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
திருவாதிரை : முயற்சிகள் ஈடேறும்.
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 21, 2022
வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளால் ஆதாயம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் ஆலோசனைகளால் மேன்மை ஏற்படும். திருப்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
ஆயில்யம் : மேன்மையான நாள்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 21, 2022
வாழ்க்கை துணைவர்வழி உறவினர்களின் மூலம் நன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். முயற்சிகள் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மகம் : நன்மை உண்டாகும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : துரிதம் உண்டாகும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 21, 2022
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். புதிய முயற்சிகளில் நிதானம் வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திரம் : விவாதங்களை தவிர்க்கவும்.
அஸ்தம் : நெருக்கடிகள் நீங்கும்.
சித்திரை : கவனம் வேண்டும்.
---------------------------------------
துலாம்
ஜூலை 21, 2022
வர்த்தக வியாபாரத்தில் தனவரவு மேம்படும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறைந்து திருப்திகரமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
சித்திரை : வரவு மேம்படும்.
சுவாதி : குழப்பம் நீங்கும்.
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 21, 2022
உலகியல் வாழ்க்கையை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
விசாகம் : புதுமையான நாள்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 21, 2022
நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் லாபம் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் கலை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ஆடம்பர எண்ணங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். செல்வாக்கு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : லாபம் உண்டாகும்.
பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திராடம் : ஆதரவான நாள்.
---------------------------------------
மகரம்
ஜூலை 21, 2022
எதிர்பார்த்த சில உதவி சாதகமாக அமையும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பம் அகலும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : உதவி சாதகமாகும்.
திருவோணம் : மகிழ்ச்சியான நாள்.
அவிட்டம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 21, 2022
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
அவிட்டம் : வெற்றி கிடைக்கும்.
சதயம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : கவனத்துடன் செயல்படவும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 21, 2022
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். காப்பீடு தொடர்பான தனவரவு கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
ரேவதி : தனவரவு கிடைக்கும்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...