கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.08.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: புகழ்


குறள் :232


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்.



விளக்கம்:


புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.



பழமொழி :

As is the king, so are subjects


அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி.


இரண்டொழுக்க பண்புகள் :


1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.



2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்


பொன்மொழி :


பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் பணத்தால் வருபவை அல்ல. விவேகானந்தர்


பொது அறிவு :


1. இந்தியாவின் மிக உயர்ந்த விருது எது?


விடை: பாரத ரத்னா.


2. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?


விடை: ஞானபீட விருது.



English words & meanings :


 inaugurate -initiate துவக்கி வைத்தல்; 

saplings - young plant நாற்றுகள்


ஆரோக்ய வாழ்வு : 


வெந்தயம்: இது நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.


ஆகஸ்ட்07


இரவீந்தரநாத் தாகூர் அவர்களின் நினைவுநாள்


இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) வங்காள மொழி: রবীন্দ্রনাথ ঠাকুর, மே 7, 1861- ஆகஸ்ட் 7, 1941) புகழ் பெற்ற வங்காள பல்துறையறிஞர் ஆவார்.[1][2] 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். இவர் கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசினைப் பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரேயாவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.


கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நினைவுநாள்


கலைஞர் மு. கருணாநிதி

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018)[2] இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும் 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969,1971,1989,1996,2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர்.

கை ரிக்ஷா ஒழிப்புத்திட்டம், பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், எல்லா மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகள், கலை அறிவியல் கல்லூரிகள் பல பல்கலைக்கழகங்கள் எனப் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியவர்.


இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.


நீர்ப்பாசனம், மின்சாரம், வேளாண்மை, தொழிலாளர் நலன், நிலச் சீர்த்திருத்தம் ஆகிய துறைகளில் மேம்பாட்டுத் திட்டங்களை வளர்த்ததால் தமிழ்நாடு உணவு தானிய உற்பத்தியில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. சாலை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாலும், தொழில் துறை முதலீடுகளை ஈர்ப்பதற்கு கலைஞரின் ஆட்சிக்காலங்களில் செயல் திட்டங்களை அறிமுகப்படுத்தியதாலும் தமிழகம் தொழில் துறையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் ஒரு சீரான வளர்ச்சியை பெற்றிருக்கிறது.




நீதிக்கதை


ஒரு காட்டில் முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. 


அவர்களுக்கு அங்கு சுலபமாக சாப்பிட உணவு தினமும் கிடைத்துக் கொண்டிருந்தது. திடீரென்று கோடைகாலம் வந்தது, கோடை கால வெப்பம் அதிகமாக இருந்ததால் அங்கே பச்சை பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன. 


இந்த முயல்களுக்கு சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு கொண்டு இருந்தன. அங்கே வேட்டை நாய்கள் இந்த முயல்களை அங்கேயும் இங்கேயும் பதுங்கி வேட்டையாட காத்திருந்தன.அந்த வேட்டை நாய்களைக் கண்டு இந்த முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வரவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தன. உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன. 


“எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லா முயல்களும் கூடி பேசிக்கொண்டு இருந்தன. 


அப்போது ஒரு முயல் சொன்னது, “கடவுள் நம்மை பலவீனமாக படைத்து விட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை வந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு பலம் உடையதாக இருக்கின்றன. ஆனால், நாம் என்ன ஒரு பிரச்சனை வந்தாலும் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாமல்  பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன் நம்மை இப்படி படைத்து விட்டார்?” என்று குறை கூறிக்கொண்டே இருந்தது. 


அப்போது மற்றொரு முயல் சொன்னது, “என்னால் இதற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியானாலும் இந்த வேட்டை நாய்களை பார்த்து பயந்து ஒதுங்கிறோம். “நாம் அனைவரும் எது செய்தாலும் ஒன்றாக செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையா எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்து விடுவோம்” என்று நதியை நோக்கி புறப்பட்டு சென்றனர்.



அந்த முயல்கள் எல்லாம் ஒரு நதி கரையை சென்று அடைந்தனர். அங்கே சில தவளைகள் நதிக்கரையில் இருந்தது. இந்த தவளைகள் எல்லாம் முயல்களை பார்த்து பயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நதியில் குதித்தன.நம்மை பார்த்துமா இவை பயப்படுகின்றன? இனி நாம் இந்த நதியில் விழுந்து சாகாமல்  நாமும் இவ்வுலகில் தைரியமாய் வாழ வேண்டும் என முடிவு செய்தன.


இன்றைய செய்திகள்


07.08. 2023


*மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டாம்: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு.


*ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜோபைடன் செப்டம்பர் 7ஆம் தேதி இந்தியா வருகை.


*கின்னஸ் உலக சாதனை படைத்த கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மராத்தான்.


*ஜனாதிபதி நாளை வருகை- புதுச்சேரியில் இரண்டு நாள் ட்ரோன்கள் பறக்க தடை.


*உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தங்கம் வென்று சாதித்த 17 வயது இந்திய வீராங்கனை அதிதி.


*ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: சீனா - தென்கொரியா ஆட்டம் சமன் ஆனது.


Today's Headlines


*Students don't get stressed : President Draupadi Murmu at Madras University Convocation.


*Joe Biden will visit India on September 7 to participate in the G-20 conference.


* Kalainjar 's hundredth International Marathon made Guinness World Record.


*President's visit tomorrow- Drones will be banned in Puducherry for two days.


*17-year-old Indian archery champion Aditi has won gold at the World Archery Championships.


*Asian Champions Cup Hockey: China vs South Korea draw.


எண்ணும் எழுத்தும் - கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் (TLMs) - தமிழ் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், English Alphabets & Colours Name - படங்களுடன் (Ennum Ezhuthum - Teaching Learning Materials - Tamil Vowels, Consonants, English Alphabets & Colors Name - with Pictures)...



>>> எண்ணும் எழுத்தும் - கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் - தமிழ் உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், English Alphabets & Colours Name - படங்களுடன் (Ennum Ezhuthum - Teaching Learning Materials - Tamil Vowels, Consonants, English Alphabets & Colors Name - with Pictures)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை - விண்ணப்ப படிவம் (Scholarship of Rs.1,00,000/- per annum for full-time PhD students – Application Form)...

 

>>> முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகை - விண்ணப்ப படிவம் (Scholarship of Rs.1,00,000/- per annum for full-time PhD students – Application Form)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அனைத்து உதவித் திட்ட அலுவலர்களுக்கும் (APO-DPO, APO-DEE) அனைத்து திட்ட உட்கூறுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் சார்ந்த 2 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 01-08-2023 (2 days refresher training for all Assistant Project Officers (APO-DPO, APO-DEE) on all program components and its functions – Proceedings of State Project Director, Dated: 01-08-2023)...



>>> அனைத்து உதவித் திட்ட அலுவலர்களுக்கும் (APO-DPO, APO-DEE) அனைத்து திட்ட உட்கூறுகள் மற்றும் அதன் செயல்பாடுகள் சார்ந்த 2 நாட்கள் புத்தாக்கப் பயிற்சி - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 01-08-2023 (2 days refresher training for all Assistant Project Officers (APO-DPO, APO-DEE) on all program components and its functions – Proceedings of State Project Director, Dated: 01-08-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தேன்சிட்டு - 01-15 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 01-15 August 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...



>>> தேன்சிட்டு - 01-15 ஆகஸ்ட் 2023 மாதமிருமுறை இதழ் - உலக அறிவுக்குத் தமிழ்ச் சாளரம் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Then Chittu - 01-15 August 2023 Fortnightly Magazine - Magazine for Classes 6 to 9 - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



>>> தேன்சிட்டு - ஜனவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - பிப்ரவரி 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - மார்ச் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - ஏப்ரல் 2023 மாத இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 01-15 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 16-30 ஜூன் 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 01-15 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...



>>> தேன்சிட்டு - 16-31 ஜூலை 2023 மாதமிருமுறை இதழ் - 6 முதல் 9ஆம் வகுப்புகளுக்கான இதழ்...


1, 2 & 3 வகுப்பு - 05-08-2023 குறுவளமைய (CRC Training) பயிற்சி ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (Facilitator) விரிவான வழிகாட்டி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் & ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - 3 ( 1, 2 & 3rd Standard - Comprehensive Guide for Facilitators of CRC Training - State Educational Research and Training Institute & Department of Integrated School Education - Teacher Professional Development Training - 3)...

 

>>>  1, 2 & 3 வகுப்பு - 05-08-2023 குறுவளமைய (CRC Training) பயிற்சி ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (Facilitator) விரிவான வழிகாட்டி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் & ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - 3 (  1, 2 & 3rd Standard - Comprehensive Guide for Facilitators of CRC Training - State Educational Research and Training Institute & Department of Integrated School Education - Teacher Professional Development Training - 3)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

4 & 5 வகுப்பு - 05-08-2023 குறுவளமைய (CRC Training) பயிற்சி ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (Facilitator) விரிவான வழிகாட்டி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் & ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - 3 (4 & 5th Standard - Comprehensive Guide for Facilitators of CRC Training - State Educational Research and Training Institute & Department of Integrated School Education - Teacher Professional Development Training - 3)...

 

>>> 4 & 5 வகுப்பு - 05-08-2023 குறுவளமைய (CRC Training) பயிற்சி ஆசிரியர் ஏதுவாளர்களுக்கான (Facilitator) விரிவான வழிகாட்டி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் & ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை - ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி - 3 (4 & 5th Standard - Comprehensive Guide for Facilitators of CRC Training - State Educational Research and Training Institute & Department of Integrated School Education - Teacher Professional Development Training - 3)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conducting Practical Exams for Half Yearly Examination - DSE Proceedings

அரையாண்டுத் தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடத்த பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Proceedings of the Director of School Education fo...