கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொறுப்பேற்றார் மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதி



பொறுப்பேற்றார் மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதி


முப்படைகளின் தளபதியாக ராஜா சுப்ரமணி பதவியேற்றார்.


நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழ்நாட்டை சேர்ந்த ராஜா சுப்ரமணி.


 அணில் சவுகான் ஓய்வு பெற்றதையடுத்து புதிதாக முப்படைகளின் தலைமை தளபதியாக பொறுப்பேற்ற ராஜா சுப்ரமணி, முப்படைகளின் ராணுவ மரியாதையை ஏற்றார்.


 ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, பி.வி.எஸ்.எம், ஏ.வி.எஸ்.எம், எஸ்.எம், வி.எஸ்.எம், இன்று மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதியாகவும் (சி.டி.எஸ்) மற்றும் இராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் பொறுப்பேற்றார். 




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 



அவர் தனது முன்னோடிகளின் முன்மாதிரியான தலைமைத்துவத்தையும் பங்களிப்பையும் பாராட்டினார், மேலும் அவர்களின் சாதனைகளை மேலும் மேம்படுத்துவதாக உறுதியளித்தார். பாதுகாப்புப் படைகளின் மீது நாடு வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி தெரிவித்த ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி, தேசியப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான 'முழு தேச அணுகுமுறை'யின் ஒரு பகுதியாக, அனைத்துத் தரப்பினருடனும் இணைந்து செயல்படுவோம் என்று வலியுறுத்தினார். பாதுகாப்புப் படைகளில் ஒருங்கிணைப்பு, ஒன்றிணைப்பு மற்றும் ஒத்திசைவை மேம்படுத்துவதற்கும், தற்சார்பை அடைவதற்காக உள்நாட்டு ஆயுதங்களின் விரைவான வளர்ச்சி, அறிமுகம் மற்றும் ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவதற்கும் பாடுபடுவேன் என்று அவர் வலியுறுத்தினார். திறன் மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுத்துச் செல்ல, சிந்தனை மற்றும் செயலில் புதுமைகளைப் புகுத்தவும், அனைத்துத் தரப்பினரிடையேயும் அதிக ஒத்துழைப்பு தேவை என்றும் முப்படைத் தலைமைத் தளபதி அழைப்பு விடுத்தார். பாதுகாப்புப் படை உறுப்பினர்களின் தொழில்முறை மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையைப் பாராட்டிய அவர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வீர நாரிகளின் நலனை உறுதி செய்வதோடு, அவர்களின் பயிற்சிக்குத் தனது அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தினார். அனைத்துத் தரப்பினரும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவும், இராணுவ நெறிகளைக் கடைப்பிடிக்கவும், அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்க அயராது பாடுபடவும் அவர் வலியுறுத்தினார்: பாதுகாப்பு அமைச்சகம்



General NS Raja Subramani, PVSM, AVSM, SM, VSM, assumed charge as the third Chief of Defence Staff (CDS) and Secretary, Department of Military Affairs today. 


He acknowledged the exemplary leadership and contribution of his predecessors and pledged to build upon their achievements. Expressing gratitude to the country for the trust reposed in the Defence Forces, General NS Raja Subramani asserted that they would work in unison with all stakeholders as part of the Whole-of-Nation approach to further strengthen national security. He emphasised that he would work towards enhancing jointness, integration and synergy in the Defence Forces and focus on accelerated development, induction and integration of indigenous weapons to achieve Aatmanirbharta. The CDS called for innovation in thought & action and greater collaboration among all stakeholders to drive capability development and modernisation. He complimented the members of the Defence Forces on their professionalism & operational readiness and reiterated his commitment to their training, while ensuring welfare of veterans and Veer Naris. He urged all ranks to embrace change, uphold the military ethos and relentlessly strive towards achieving excellence in all spheres: Ministry of Defence


Special TET - Model Question Bank - Child Development and Pedagogy - Paper II

 


சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு 

மாதிரி வினா வங்கி 

Special Teacher Eligibility Test 

Model Question Bank

கல்வி உளவியல்

Educational Psychology 

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் கலை தாள் 2 (Child Development and Pedagogy - Paper II) 

தயாரிப்பு : DIET நாமக்கல் 

சமர்ப்பிப்பு : SCERT சென்னை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு - தாள் - IIக்கான (Child Development & Pedagogy) மாதிரி வினா வங்கி வெளியீடு - தயாரிப்பு நாமக்கல் DIET


180 உடற்கல்வி ஆசிரியர்கள் SMC மூலம் நியமனம்



சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 180 உடற்கல்வி ஆசிரியர்கள் (PET) நியமிக்க பள்ளிக்கல்வித்துறை பரிந்துரை


க.து.ந.க.எண்.D1/ சிறப்பு/2025


பெருநகர சென்னை மாநகராட்சி,

கல்வித்துறை.

நாள். 14.05.2026


சுற்றறிக்கை


பொருள்:


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறை சென்னை தொடக்க, நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்காலிக SMC உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்தல் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பரிந்துரை கோருதல் -தொடர்பாக.


பார்வை:


மாண்புமிகு மேயர் அவர்களின் 2026-2027ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை அறிவிப்பு எண். 2


பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் இயங்கும் சென்னை தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு (SMC) மூலம் தற்காலிக அடிப்படையில் (ஜூன் முதல் மார்ச் வரை 10 மாதங்களுக்கு மட்டும்) உடற்கல்வி ஆசிரியர்களை நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.


வ.எண்     பள்ளிகள்     பணியிடங்கள்  கல்வித்தகுதி   சம்பளம்


1   சென்னை தொடக்கப்பள்ளிகள்     101   C.P.Ed/B.P.Ed    ரூ. 18,000


2     சென்னை நடுநிலைப்பள்ளிகள்      29     B.P.Ed/M.P.Ed    ரூ. 20,000


3 சென்னை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள்    50    B.P.Ed/M.P.Ed   ரூ. 25,000


மொத்தம்    180


எனவே, இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து அவர்களின் விவரங்களுடன் கூடிய பரிந்துரையை உரிய ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட உதவி கல்வி அலுவலரிடம் உடனடியாக சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கல்வி அலுவலர்


பெறுநர்:


1 இணை ஆணையர்(கல்வி) அவர்களுக்கு பணிந்து சமர்பிக்கப்படுகிறது.


2 அனைத்து உதவி கல்வி அலுவலர்கள்


3. அனைத்து சென்னை தொடக்க நடுநிலை உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்



அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு



 தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு 


தமிழ்நாடு அரசின் 181 கலை அறிவியல் கல்லூரிகளில்


BA BSC BCom & BBA படிக்க 


Online மூலம் விண்ணப்பிக்க

 29.05.2026 உடன் கால அவகாசம் முடிந்தது.


ஆனால்


விண்ணப்பிக்க தவறிய மாணவ மாணவிகளுக்கு


மீண்டும் ஒரு வாய்ப்பு👌👌👌


மீண்டும் ஜூன் 1 முதல்...  Online விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.


தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026 - 2027ம் கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புக்கான விண்ணப்பங்கள் மீண்டும் ஜூன் 1ஆம் தேதி முதல் பெறப்படும்.


விண்ணப்ப பதிவு செய்ய தவறிய மாணாக்கர்கள் https://www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்


- உயர்கல்வித்துறை அமைச்சர் திரு விஸ்வநாதன் அறிவிப்பு


தமிழ்நாட்டின் புதிய DGPஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்



தமிழ்நாட்டின் புதிய டிஜிபி நியமனம்


தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரதோருக்கு பதிலாக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்நாட்டின் புதிய சட்டம்-ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநராக (DGP & HoPF) மூத்த  இந்திய காவல் பணி அலுவலர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.


அவரைப் பற்றிய முக்கிய விவரங்கள்:


அவரது பின்னணி மற்றும் பணிகள்

    இவர் 1994-ஆம் ஆண்டு பேட்ச் (Batch) சேர்ந்த தமிழ்நாடு Cadre IPS Officer ஆவார். பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், சட்டம் பயின்றவர்.


மத்திய அரசுப் பணி: 

தற்போதைய நியமனத்திற்கு முன்பு வரை, டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) சிறப்பு இயக்குநர் ஜெனரலாகப் (Special DG) பணியாற்றி வந்தார்.


தமிழ்நாட்டில் முக்கியப் பொறுப்புகள்: 

இதற்கு முன்னதாக தமிழ்நாட்டில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் (Commissioner of Police), மதுரை மற்றும் திருநெல்வேலி மாநகர ஆணையர், மற்றும் சிபிசிஐடி (CB-CID) ஐஜியாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 


நியமனம் குறித்த விவரங்கள்


பதவி மாற்றம்: தற்காலிகமாகப் பொறுப்பில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் அவர்களுக்குப் பதிலாக மகேஷ்குமார் அகர்வால் தற்பொழுது நியமிக்கப்பட்டுள்ளார்.


பணிக்காலம்: உச்ச நீதிமன்றத்தின் 'பிரகாஷ் சிங்' வழிகாட்டுதலின்படி, இவர் பொறுப்பேற்ற நாளில் இருந்து குறைந்தது 2 ஆண்டுகள் இப்பதவியில் நீடிப்பார்.


மத்தியப் பணியில் இருந்த இவரை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. விரைவில் இவர் தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாகப் பொறுப்பேற்கவுள்ளார்.


5 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 10 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம்



G.O. (Rt) No. 1889, Dated : 30-05-2026 , 10 I.A.S. Officers including District Collectors transferred - Tamil Nadu Government Order issued


மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 10 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு  அரசு அரசாணை வெளியீடு 


G.O. (Rt) No. 1889, Dated : 30-05-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


 

 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்


ஆளுநரின் முதன்மை செயலர் கிர்லோஷ் குமார் வீட்டுவசதி துறையின் முதன்மை செயலராக மாற்றம்


சென்னை மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் நியமனம்


அரியலூர் மாவட்ட ஆட்சியராக மிருனாளினி நியமனம்


ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் நியமனம்


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக சரண்யா அரி நியமனம்


திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக கவிதா நியமனம்


ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள் - பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அவர்கள்

 


ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! தயவுசெய்து வீரவசனம் வேண்டாம் - பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் 


​பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் “ஆசிரியர் தகுதித் தேர்வு”(TET) கட்டாயம் என 01.09.2025 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

“​ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதற்கும், பணியில் தொடர்வதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்” எனவும், “இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுதல் அவசியம்” என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

​தமிழ்நாட்டில் உள்ள லட்சக்கணக்கான மூத்த ஆசிரியர்களைப் பாதுகாக்கும் வகையில், திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் நம் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி தீர்ப்பு வந்த மறுநாளே, எனது தலைமையில் உடனடியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களை அழைத்து இரண்டு முறை விரிவான கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினோம். ஒரு ஆசிரியர் கூட உச்சநீதிமன்ற தீர்ப்பினால் பாதிக்கப்படாத வகையில் தமிழ்நாடு அரசு ஆசிரியர்களுக்குத் துணை நிற்கும் என்ற உத்தரவாதத்தை வழங்கியதால், ஆசிரியர்கள் மனச்சுமையின்றி பணியாற்றும் சூழலைத் திராவிட மாடல் அரசு உருவாக்கியது.


​மேலும், அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களோடு நானும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் உடனடியாக ஆலோசனை நடத்தினோம். தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்வது என்றும், மூத்த ஆசிரியர்கள் ஒருவர் கூட பாதிக்கப்படாமல் தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாதுகாக்கும் என்றும், ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கத் திராவிட மாடல் அரசு துணை நிற்கும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விரிவான அறிக்கையின் மூலம் தெரிவித்தார்கள்.

​உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களைக் கொண்டு சீராய்வு மனுவினைத் தாக்கல் செய்வதற்கு, ‘வில்சன் அல்ல வின்சன்’ என்று முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் பாராட்டப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. வில்சன் உள்ளிட்ட வழக்கறிஞர்களோடு தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தி, உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.


​திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் இதுகுறித்து ஆலோசனை வழங்கினார். “இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களைப் பாதுகாக்கப் பாராளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டுவர வலியுறுத்த வேண்டும்” என்கிற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரத்தில் சட்டத்திருத்தம் குறித்து வலியுறுத்தினார்கள். இத்தகைய தொடர் நடவடிக்கைகள் மூலமாக ஆசிரியர் சமூகத்தைக் காத்து வந்தது தி.மு.க அரசுதான் என்பது ஆசிரியர்கள் அனைவரும் நன்கு அறிவர்.


​இத்தகைய நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில், ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க திட்டவட்டமாக மறுத்துள்ளதோடு, மேலும் ஓராண்டு காலநீட்டிப்பும் வழங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​பதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு கட்டாயம் என்பதில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளால், ஆரம்பப் பள்ளித் தலைமை ஆசிரியர் முதல் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவி உயர்வுகள் வழங்கப்படாததால் நிர்வாகப் பணியிடங்களில் சுணக்கம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது பல ஆண்டுகால அனுபவமுள்ள மூத்த ஆசிரியர்களுக்குப் பெரும் சுமையாகவே அமையும்.


​திராவிட மாடல் அரசின் சிறப்பு முயற்சியால் “ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பு தகுதித் தேர்வு நடத்தப்படும்” என்று அரசாணை: 231, நாள் 25.10.2025 அன்று வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆசிரியர்களின் நலன் கருதி, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணில் 5 சதவீதத் தளர்வும் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமான ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளார்கள்.


​மேலும், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களுக்கும் உதவிடும் வகையில், அதற்கான பயிற்சிக் கட்டகங்கள் (Training Modules) தயாரிக்கும் பணி மற்றும் இணையவழிப் பயிற்சி வழங்கும் பணியானது, ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திடம் (SCERT) ஒப்படைக்கப்பட்டது.

​ஆனால், ஜூலை மாதம் முதல் வாரம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், இதுவரை ஆசிரியர்களுக்கான பயிற்சிக் கட்டகங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இணையவழிப் பயிற்சி குறித்தும் எவ்வித அறிவிப்பும் இல்லை.


​ஆகவே, ‘ரீல்ஸ்’ அரசாகத் திகழும் இன்றைய தமிழ்நாடு அரசு வீரவசனம் பேசி அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதுபோல, இவ்விரண்டையும் எளிதாகக் கடந்து சென்றுவிடாமல் உடனடியாக நம்முடைய ஆசிரியர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

​ஒன்றிய அரசை வலியுறுத்தி, பாராளுமன்றத்தில் சிறப்புச் சட்டத்திருத்தம் கொண்டு வரச்செய்து, தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுமைக்குமாகப் பணியில் உள்ள மூத்த ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிற்சிக் கட்டகங்கள் மற்றும் இணையவழிப் பயிற்சி குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்.


​எங்கள் குடும்ப உறுப்பினர்களான ஆசிரியர்களுக்கு எப்போதும் நாங்கள் துணை நிற்போம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


- பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் 



ரூ.5,64,000ஐ ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு குவியும் பாராட்டுகள்



ரூ.5,64,000ஐ ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரின் நேர்மைக்கு குவியும் பாராட்டுகள் 


 சாலையோரத்தில் கிடந்த ரூ.5,64,000 பணம் அடங்கிய பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் மதனுக்கு பாராட்டு


தானாராம் என்பவர் தனது பணப்பை காணவில்லை என புகார் அளித்திருந்ததை அடுத்து விசாரணைக்கு பின் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது


திருப்பூரில் சாலையில்  கட்டு கட்டாக கிடந்த ரூ. 5,64,000 பணத்தை  கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாநகர காவல் துணை ஆணையர் நேரில் அழைத்து பாராட்டினார்.


மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் - அமைச்சர் தகவல்



மாணவர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் - அமைச்சர் தகவல்


ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் கட்டணமின்றி அரசு பேருந்துகளில் பயணிக்கலாம்.


அரசு பள்ளி மாணவ, மாணவியர் சீருடையுடன் அரசு பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.


புதிய பேருந்து அட்டை வழங்க அவகாசம் தேவைப்படும் நிலையில் மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்க ஏற்பாடு.


அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவன அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்.


பள்ளிகள் தொடங்கும் / முடியும் நேரம் வரை அரசு பேருந்துகள் சரியாக இயங்குவதை கண்காணிக்க குழுக்கள் நியமனம்.


உரிய நிறுத்தங்களில் நிறுத்தி மாணவ, மாணவியரை ஏற்றி, இறக்க ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு அறிவுரை - அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் தகவல்


மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு



G.O. (Rt) No. 1883, Dated : 29-05-2026 , 30 I.A.S. Officers including District Collectors transferred - Tamil Nadu Government Order issued


மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 30 இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு  அரசு அரசாணை வெளியீடு 


G.O. (Rt) No. 1883, Dated : 29-05-2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



பொதுத்துறையின் சிறப்பு செயலாளராக சுந்தரவள்ளி நியமனம்.


சுகாதாரத்துறை துணைச் செயலாளராக அழகுமீனா நியமனம்.


இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக டி.ஜி.வினய் நியமனம்.


நீதித்துறை (செலவினம்) செயலாளராக லலிதா நியமனம்.


தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநராக உமா நியமனம்.


தமிழ்நாடு நகர்ப்புற கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநராக ரஞ்சித் சிங் நியமனம்.


தமிழ்நாடு கிராமபுற வளர்ச்சித் திட்ட தலைமை செயல் அலுவலராக வி.ஆர்.சுப்புலட்சுமி நியமனம்.


ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக அமுதவல்லி நியமனம்.


வேலூர் ஆட்சியராக லீலா அலெக்ஸ் நியமனம்.


செங்கல்பட்டு ஆட்சியராக வீரப்பன் நியமனம்.


கன்னியாகுமரி ஆட்சியராக பிரதாப் நியமனம்.


திருவண்ணாமலை ஆட்சியராக வந்தனா கர்க் நியமனம்.


தருமபுரி ஆட்சியராக சரவணன் நியமனம்.


தேனி ஆட்சியராக வைத்தியநாதன் நியமனம்.


மதுரை ஆட்சியராக ஆகாஷ் நியமனம்.


நாகை ஆட்சியராக பிரவீன்குமார் நியமனம்.


நாமக்கல் ஆட்சியராக மதுபாலன் நியமனம்


ராணிப்பேட்டை ஆட்சியராக பிரியா நியமனம்.


கள்ளக்குறிச்சி ஆட்சியராக பத்மஜா நியமனம்.


TET Review Petitions மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - முழுமையான விவரம்

 


ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு மனுக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு


TET Review Petitions Supreme court Judgment 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு மனு மீது தீர்ப்பு


TET Review Petitions Supreme Court Judgment



ஏற்கனவே வழங்கிய தீர்ப்பில் மாற்றம் இல்லை


ஆசிரியர்கள் (55வயதிற்குட்பட்டவர்கள்) கட்டாயம் TET தேர்வில்  தேர்ச்சி பெற வேண்டும்


ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைய 3 ஆண்டுகளாக காலக்கெடு நீட்டிப்பு


ஆசிரியர் தகுதி தேர்வு மறுசீராய்வு மனுக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு - முழுமையான விவரம்


1) ஏற்கனவே கொடுத்த தீர்ப்பே தொடரும். முந்தைய தீர்ப்பில் எவ்வித மாற்றமும் இல்லை.


2) TET தேர்வெழுதி தேர்ச்சி பெறுவதற்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட இரண்டாண்டு கால அவகாசம் தற்போது மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்யப்பட்டு மூன்றாண்டு காலமாக உயர்த்தப்படுகிறது. அதாவது அனைவரும் 31-08-2028ஆம் தேதிக்குள் ஆசிரியர் தகுதி தேர்வு TET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


யாரெல்லாம் TET தேர்வு எழுத வேண்டியதில்லை? 

தீர்ப்பு வெளியான 31-08-2025 ஆம் தேதியில் இருந்து ஐந்தாண்டுக்குள் பணிக்காலம் உள்ளவர்கள் தேர்வு எழுத வேண்டியதில்லை. 


அதாவது 31-08-2030ஆம் தேதிக்குள் பணி ஓய்வு பெறக்கூடிய அனைவரும் தேர்வு எழுத வேண்டியதில்லை. TET தேர்ச்சி இல்லாமலே தங்கள் பணியில் தொடர்ந்து இருந்து கொள்ளலாம்.


யாரெல்லாம் TET தேர்ச்சி பெற வேண்டும்? 

1) ஐந்தாண்டுகளைக் காட்டிலும் கூடுதலான பணிக்காலம் உள்ள அனைவரும் பணியில் தொடர்ந்து இருப்பதற்கே TET தேர்ச்சி அவசியம். 

அதாவது 31-08-2030க்குப் பிறகு பணிஓய்வு பெறுபவர் அனைவரும் தற்போது உள்ள பதவியில் தொடர்ந்து பணிபுரியவே TET தேர்ச்சி அவசியம். 

2) ஐந்தாண்டுகளுக்கு உள்ளே பணிக்காலம் இருப்பவர்கள் அடுத்த பதவி உயர்வு வேண்டுமென்று விரும்பினால் அவர்களும் கண்டிப்பாக TET தேர்ச்சி பெற்றாக வேண்டும். 


Judgment- Appreciating that the TET examination must be conducted by the relevant authorities expeditiously as well as the time and resources required for the same are limited, we alter and extend the timeline granted in paragraph 217 of Anjuman (supra) for in-service teachers to acquire the TET qualification from 2 (two) to 3 (three) years, i.e., the qualification has to be obtained by 31st August, 2028 instead of 31st August, 2027, as originally directed.


34. Needless to observe, it shall also be the endeavour of the respective States and the competent authorities to conduct the TET periodically, and preferably twice every year, interspersed with an approximate period of six months between the successive examinations, so as to afford eligible teachers a reasonable opportunity to comply with the statutory requirement.


35. We make it abundantly clear that no further prayer for extension of time shall be entertained.


CONCLUSION


36. With the aforesaid modification of the order under review, all the petitions stand dismissed.



 இதன் சுருக்கம் தமிழில் 



​உச்ச நீதிமன்றத்தின் இந்த முக்கியத் தீர்ப்பின் (State of U.P. v. Anjuman Ishaat-E-Taleem Trust & Ors.) சுருக்கம் கீழே தமிழில் வழங்கப்பட்டுள்ளது:

​1. கட்டாயத் தகுதி (Core Requirement)

​TET தேர்வு கட்டாயம்: கல்வி உரிமைச் சட்டத்தின்படி (RTE Act, 2009) தொடக்கப்பள்ளி ஆசிரியர்களாக (வகுப்புகள் 1 முதல் 8 வரை) பணியில் இருக்கும் அனைவரும்—அவர்கள் இந்தச் சட்டம் வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்திருந்தாலும்—ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது கட்டாயமான தகுதி என்றும், இது அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-A இன் கீழ் தரமான கல்வி வழங்குவதற்கான "அரசியலமைப்புத் தேவை" என்றும் நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.  

​பதவி உயர்வுக்குக் கட்டாயம்: ஒரு ஆசிரியர் எத்தனை ஆண்டுகள் பணியாற்றியிருந்தாலும், அவர் பதவி உயர்வு பெற விரும்பினால் கண்டிப்பாக TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

​2. தேர்வு எழுதக் கால அவகாசம் நீட்டிப்பு (Extension of Deadline)

​2 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக உயர்வு: தகுதி பெறாத ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டால், அது மாணவர்களின் கல்வியைப் பாதிக்கும் மற்றும் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, உச்ச நீதிமன்றம் தனது சிறப்புப் பிரிவு 142 அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த அவகாசத்தை நீட்டித்துள்ளது.  

​புதிய காலக்கெடு: பணியில் இருக்கும் ஆசிரியர்கள் TET தேர்ச்சி பெற, முன்பு வழங்கப்பட்ட ஆகஸ்ட் 31, 2027-க்கு பதிலாக, இப்போது ஆகஸ்ட் 31, 2028 வரை (3 ஆண்டுகள்) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தேதிக்குள் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்கள் பணியில் தொடர தகுதியற்றவர்கள் ஆவார்கள்.  

​இறுதி எச்சரிக்கை: இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட மாட்டாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.  

​3. "பழைய ஆசிரியர்களுக்குப் பாதிப்பு" என்ற வாதம் நிராகரிப்பு

​ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசம்: இந்தச் சட்டம் தங்களுக்குப் பின்னோக்கிப் பொருந்தாது (Retrospective) என்ற ஆசிரியர்களின் வாதத்தை நீதிமன்றம் நிராகரித்தது. 2009-ஆம் ஆண்டின் அசல் சட்டமும், 2017-ஆம் ஆண்டின் திருத்தச் சட்டமும் ஏற்கனவே தகுதியை வளர்த்துக் கொள்ளப் பல ஆண்டுகள் அவகாசம் வழங்கியிருந்ததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து ஆசிரியர்களுக்குக் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் போதுமான நேரம் கிடைத்துள்ளது.  

​குழந்தைகளை மையமாகக் கொண்ட சட்டம்: கல்வி உரிமைச் சட்டம் என்பது குழந்தைகளை மையமாகக் கொண்ட ஒரு சட்டம். தகுதியற்ற ஆசிரியர்களின் வேலைப் பாதுகாப்பிற்காகக் குழந்தைகளின் எதிர்காலக் கல்வியைப் பலியிட முடியாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.  

​4. மாநில அரசுகளுக்கான உத்தரவுகள்

​தேர்வுகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும்: ஆசிரியர்கள் தகுதி பெறுவதற்குப் போதிய வாய்ப்புகளை வழங்கும் வகையில், அந்தந்த மாநில அரசுகளும் தகுதிவாய்ந்த அதிகாரிகளும் TET தேர்வை ஆண்டிற்கு இருமுறை (6 மாத இடைவெளியில்) நடத்த முயற்சி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

​இறுதித் தீர்ப்பு

​தேர்வு எழுதுவதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகளிலிருந்து 3 ஆண்டுகளாக மாற்றியதைத் தவிர, நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பில் எந்தத் தவறும் இல்லை எனக் கூறி, தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மறுஆய்வு மனுக்களையும் (Review Petitions) தள்ளுபடி செய்தது.


TET - ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம்


பதவி உயர்வுக்கு டெட் கட்டாயம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பிலும் உறுதி செய்ததுள்ளது உச்சநீதிமன்றம்...


தேர்ச்சி அவகாசம் நீட்டித்து சீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு.


ஒரே ஒரு விலக்காக இரண்டு வருடத்திற்குள் தேர்வு பெற வேண்டும் என்பதை மூன்று வருடங்களாக உயர்த்தியுள்ளது...


ஆசிரியர் தகுதித் தேர்வு சீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றம் இன்று 


தீர்ப்பு பட்டியல் வழக்குகள்


2 ஆண்டுகளுக்கு பதிலாக 3 ஆண்டுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என தீர்ப்பு


ஆகஸ்ட் 31, 2028க்குள் தேர்ச்சி பெற வேண்டும் என மறு சீராய்வு மனுவில் தீர்ப்பு


Timeline for acquiring TET has been extended from 2 years to 3 years i.e. instead of 31.08.2027 the same has been extended till 31.08.2028. With these modification the Review Petition stands dismissed.




01.06.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு முக அடையாள (பயோ மெட்ரிக்) வருகைப் பதிவேடு



01.06.2026 முதல் அரசு ஊழியர்களுக்கு முக அடையாள (பயோ மெட்ரிக்) வருகைப் பதிவேடு கட்டாயமாகிறது


01.06.2026 முதல் மனித வள மேலாண்மைத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் முறையிலான வருகைப்பதிவு அறிமுகம்

https://kalvianjal.blogspot.com/2026/05/01062026.html

மனித வள மேலாண்மை துறையின் துணைச் சயலாளர் கடிதத்தில், அரசு முதன்மைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படி, மனித வள மேலாண்மைத் துறையில் 01.06.2026 முதல் பயோமெட்ரிக் / முக அடையாள வருகைப் பதிவு முறை அமலுக்கு வரும் எனவும், எனவே, இந்தத் துறையின் அனைத்து அலுவலர்கள்/பணியாளர்கள் காலை 10.00 மணிக்கு முன் அலுவலகத்திற்கு வருமாறும், மறு அறிவிப்பு வரும் வரை பயோமெட்ரிக் / ஃபேஸ் ஐடி (முக அடையாள) வருகைப் பதிவு மற்றும் நேரடியாக அலுவலகத்தில் உங்கள் இருப்பை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து அலுவலர்களும் பணியாளர்களும் பணியில் இருக்கும்போது அடையாள அட்டைகளை அணியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 




Human Resources Management (OPI-3) Department,


Secretariat, Chennai 600 009.


பராபவ, வைகாசி 15, திருவள்ளுவர் ஆண்டு -2057.


U.O.Note. No.9236/OP 1-2/2026, dated: 29.05.2026

https://kalvianjal.blogspot.com/2026/05/01062026.html

Sub: Establishment - Human Resources Management Department - Attendance through Bio Metric from 01.06.2026 - Instructions Issued.

https://kalvianjal.blogspot.com/2026/05/01062026.html

As Instructed by the Principal Secretary to Government, the use of Bio metric / Face Id attendance system will come into effect in this Department from 01.06.2026 onwards. Hence, All Officers/Staff of this Department are requested to attend the Office before 10.00 am and also to ensure your presence in the office through Bio metric system/Face ID attendance as well as Manually until further orders. Further all Officers and staff are instructed to wear ID cards while on duty.

https://kalvianjal.blogspot.com/2026/05/01062026.html

S. THANKAPAPPA

DEPUTY SECRETARY TO GOVERNMENT (OP)


To


All Officers/Staff,


Human Resources Management Department, Secretariat, Chennai - 600 009.


//Forwarded by order//


SECTION OFFICER



பொது பணியிட மாறுதல் வெளிப்படையாக நடத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்

 


பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வின் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும் என்றும் காலி பணியிடங்களின் விபரம் கலந்தாய்விற்கு முன்னதாகவே துறை இணைய தளத்தில் முழுமையாக வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். கோ.க. அருண்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


இது குறித்த கடிதம்


>>>  தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



டாக்டர். கோ.க. அருண்ராஜ் 

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்


தலைமைச் செயலகம், சென்னை -600 009.


அலுவலக கடித எண்.05/2026, நாள் - 27.05.2026


சுற்றறிக்கை


பெரருள்


மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - பணியிட மாறுதல் வேண்டி மாண்புமிகு அமைச்சர் அலுவலகத்தை நாடும் பணியாளர்கள் - உயர் அலுவலர்களின் அனுமதியின்றி அணுகுவது குறித்து - சில அறிவுரைகள் வழங்குதல் – குறித்து.


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வின் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் காலி பணியிடங்களின் விபரம் கலந்தாய்விற்கு முன்னதாகவே துறை இணைய தளத்தில் முழுமையாக வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்


நகல் - 1) அரசு செயலர்,

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. தலைமைச் செயலகம், சென்னை -600 009.


2) இயக்குநர், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், கீழ்பாக்கம், சென்னை.


3) இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை-6.


4) இயக்குநர், பொது சுகாதாரம் மற்றம் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, சென்னை-6.


Happy Bakrid

 

பக்ரீத் வாழ்த்துகள் 


Happy Bakrid


ஈகைத் திருநாள் வாழ்த்துகள்




பக்ரீத் 

உலக அளவில் இஸ்லாமியர்களால் மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் இரண்டு முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்றாகும். அரபு மொழியில் இது 'ஈத் அல்-அதா' (Eid al-Adha) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு "தியாகத் திருநாள்" என்று பொருள்.


இப்பண்டிகை குறித்த முக்கிய வரலாற்றுப் பின்னணி மற்றும் சிறப்பம்சங்கள் :

1. வரலாற்றுப் பின்னணி (ஏன் கொண்டாடப்படுகிறது?)


இஸ்லாமிய இறைத்தூதர்களில் ஒருவரான நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் அசாத்தியமான இறைநம்பிக்கையையும் தியாகத்தையும் நினைவு கூரும் விதமாகவே இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இறைவன், இப்ராஹிம் நபியின் பக்தியைச் சோதிப்பதற்காக, அவருக்கு மிகவும் வயதான காலத்தில் பிறந்த ஒரே மகன் இஸ்மாயீலை பலியிடுமாறு கனவின் மூலம் கட்டளையிட்டார். இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, இப்ராஹிம் நபி தனது மகனைப் பலியிடத் துணிந்தார். தந்தையின் முடிவுக்கு மகனும் மனப்பூர்வமாகச் சம்மதித்தார்.

அவர்களின் இந்த உன்னதமான தியாக மனப்பான்மையைக் கண்டு மெச்சிய இறைவன், மகனைப் பலியிடுவதைத் தடுத்து, அதற்குப் பதிலாக ஒரு ஆட்டைப் பலியிடுமாறு வானவர் (ஜிப்யீல்) மூலமாகக் கட்டளையிட்டார். இந்த நிகழ்வின் அடிப்படையிலேயே பக்ரீத் பண்டிகை உருவானது.


2. ஹஜ் புனிதப் பயணம்


இஸ்லாமிய நாட்காட்டியின் (ஹிஜிரி) கடைசி மாதமான துல்ஹஜ் மாதத்தின் 10-ஆவது நாளில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகளில் இறுதியான கடமையான 'ஹஜ்' புனிதப் பயணம் இந்த மாதத்தில்தான் மேற்கொள்ளப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்குச் சென்று இந்தத் தியாக வரலாற்றின் நினைவிடங்களைத் தரிசித்து தங்களின் கடமையை நிறைவேற்றுவர்.


3. பண்டிகை நாளின் முக்கிய நடைமுறைகள்


சிறப்புத் தொழுகை: பக்ரீத் அன்று அதிகாலையிலேயே இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, வாசனை திரவியங்கள் பூசி, திறந்தவெளிகளிலோ அல்லது மசூதிகளிலோ (ஈத்கா) ஒன்று கூடி கூட்டுச் சிறப்புத் தொழுகை நடத்துவார்கள். தொழுகை முடிந்ததும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி "ஈத் முபாரக்" என வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்வர்.


குர்பானி (பலியிடுதல்): வசதியுள்ள இஸ்லாமியர்கள் ஆடு, மாடு அல்லது ஒட்டகத்தைத் இறைவனுக்காகப் பலியிடுவார்கள். இதனை 'குர்பானி' என்பர்.


பகிர்ந்தளித்தல் (ஈகை): குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை மூன்று சம பங்குகளாகப் பிரிப்பது கட்டாயமாகும்:

ஒரு பங்கு — ஏழை எளிய மக்களுக்கு (தானம்)

ஒரு பங்கு — உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு

ஒரு பங்கு — சொந்தக் குடும்பத் தேவைக்கு


முக்கிய நோக்கம்: பக்ரீத் பண்டிகை என்பது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; தன்னிடம் உள்ள சிறந்த பொருளைப் பிறருக்காகவும், இறைவனுக்காகவும் தியாகம் செய்யும் எண்ணத்தையும், ஏழை எளியவர்களின் பசியைப் போக்கும் ஈகை குணத்தையும் மனிதர்களிடையே வளர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.


அரசு ஊழியர்களுக்கான May 2026 மாத ஊதியம் குறித்த முக்கிய அறிவிப்பு



Important announcement regarding May 2026 salary for Tamil Nadu government employees


தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மே மாத ஊதியம் குறித்த முக்கிய அறிவிப்பு - வாட்ஸ்அப் பகிர்வு


May 2026 Salary


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் வரும் 29 மே, 2026 வெள்ளிக்கிழமை அன்று அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.


இந்த மாத ஊதியமானது பின்வரும் கூடுதல் பலன்களுடன் வழங்கப்படும்.

1. அரசு அறிவித்தவாறு உயர்த்தப்பட்ட 2% கூடுதல் அகவிலைப்படியுடன் (DA) இந்த மாத சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது.

2. மேலும், கடந்த நான்கு மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் (DA Arrears) இதனுடன் இணைத்து வழங்கப்படும்.


ஒன்றிய நிதியமைச்சருடன் தமிழ்நாடு முதலமைச்சர் சந்திப்பு – வழங்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன?



நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சந்திப்பு – வழங்கப்பட்ட கோரிக்கைகள் என்னென்ன?


மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களை இன்று (27.05.2026) புதுதில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.


இச்சந்திப்பின் பொழுது, விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்றும், இத்தகைய வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது என்பதால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.


தமிழ்நாட்டின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை (Institutes of National Importance) தமிழ்நாட்டில் நிறுவிடவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ இரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.


AI அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் – போப் 14ஆம் லியோ கருத்து



செயற்கை நுண்ணறிவு (AI) அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும் – போப் 14ஆம் லியோ கருத்து


மனித குலத்தை அடிமைப்படுத்தும் செய்யறிவின் ஆதிக்கத்தைத் தடுக்க அதனை நிராயுதபாணியாக்க வேண்டும்.


ஒரு சில நிறுவனங்கள், நாடுகள் தங்களின் ஆதிக்கத்துக்காகவும் லாபத்துக்காகவும் மிக சக்திவாய்ந்த கணக்கீட்டு விதிகளை உருவாக்குவதை நிறுத்த வேண்டும். 


லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மூலம் மனித உழைப்பை ஒட்டுமொத்தமாக மாற்றுவது எதிர்காலத்தில் மிகப்பெரிய சமுதாயப் பேரழிவை ஏற்படுத்தும்.


– போப் 14ஆம் லியோ கருத்து


Climate Education Websiteல் பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யும் முறை



 Climate Education Websiteல் பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யும் முறை 


அனைவருக்கும் வணக்கம் 

அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தனியார் பள்ளிகளின் முதல்வர்களின் கவனத்திற்கு ECO CLUB MISSION LIFE PORTAL / CLIMATE CHANGE PORTAL இல் பள்ளிகளின் விவரங்களை பதிவு செய்தல் சார்ந்து தேவையான விபரங்கள் மற்றும் வீடியோக்கள் இத்துடன் அனுப்பி வைக்கப்படுகிறது விரைந்து இப்பணியை முடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் 



Website Address 

https://climateeducation.in/



தேவையான விவரங்கள்

School information

1. UDISE Code

2. Institution name

3. School type

4. Address

5. District

6. Pincode

7. Latitude, Longitude (Take from GPS camera)

8. Head Name

9. Mobile no.

10. Email ID (will be the user name)

11. Password 


Incharge details 

1. Teacher’s name

2. Teacher’s mobile no.

3. Mail ID

4. Date of birth

5. Subject handled

6. Gender






>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும் 


பள்ளிகள் திறப்பு - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்



பள்ளிகள் திறப்பு - மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள்


இன்று (26.05.2026) நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு சம்பந்தப்பட்ட கூட்டத்தில் கூறிய அறிவுரைகள்


அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

 கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4ஆம் தேதி அன்று பள்ளி திறக்கப்பட இருப்பதால் தங்கள் பள்ளியில் மேல்நிலைநீர்த்தொட்டிகள் அல்லது நிலத்தடி நீர்த்தொட்டிகள் இருப்பின் அவற்றை தூய்மைப்படுத்திட வேண்டும்.

 கடைசியாக தூய்மைப்படுத்த நாள் குறிப்பிடப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டு இருக்க வேண்டும்.

 கழிவறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு மாணவ,மாணவியரின் பயன்பாட்டிற்கு ஏதுவாக தண்ணீர் வசதி செய்யப்பட்டு இருக்க வேண்டும்.  

இத்துடன் சமையலறைகள் தூய்மைப்படுத்தப்பட்டு பாத்திரங்கள் மற்றும் மாணவர்கள் சாப்பிடும் தட்டுகள், டம்ளர்கள் தூய்மையாக வைத்திருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த விவரங்களில் மிகுந்த கவனம் செலுத்திட அறிவுறுத்திட கேட்டுக்கொள்ளபடுவதாக கூறினார்கள்.

ஆய்வு அலுவலர்கள் பார்வையிட உள்ளதால் வருகின்ற வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு கவனம் செலுத்திட அனைத்து தலைமை ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுகிறது..


- முதன்மைக் கல்வி அலுவலர், கரூர்


6வது முறையாக Petrol, Diesel விலை இன்றும் உயர்வு



6வது முறையாக Petrol, Diesel விலை இன்றும் உயர்வு


 பெட்ரோல் மற்றும் டீசல் விலை 6ஆவது முறையாக உயர்த்தப்பட்டு விற்பனை




பெட்ரோல் விலை 33 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூபாய் 108.20க்கு விற்பனை ஆகிறது 


டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூபாய் 99.98க்கு விற்பனை செய்யப்படுகிறது



1 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

 


1 - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 04-06-2026 அன்று பள்ளிகள் திறப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு 


Schools to open on June 4 for students of classes 1 - 12 - Tamil Nadu Government Press Release



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



திருத்தப்பட்ட

செய்திக் குறிப்பு எண் : 096 , நாள்: 26.05.2026

பள்ளிக் கல்வித் துறை

தமிழ்நாடு அரசு

செய்தி வெளியீடு


2026-2027 கல்வியாண்டில், 4 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 01.06.2026 அன்றும், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 04.06.2026 அன்றும் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை முன்னதாக அறிவித்திருந்தது.


அதனைத் தொடர்ந்து, நிர்வாக வசதியை உறுதி செய்வதற்கும், வெவ்வேறு வகுப்புகளில் படிக்கும் பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைத் தவிர்ப்பதற்கும், அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியான மீண்டும் திறக்கும் தேதியைக் கோரி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகளும் முறையீடுகளும் பெறப்பட்டன.


மேலும், ஜூன் முதல் வாரத்திற்கான தற்போதைய வானிலை நிலவரங்களும் முன்னறிவிப்புகளும், மாநிலத்தின் பல பகுதிகளில் பருவமழைக்கு முந்தைய செயல்பாடுகள் தொடர்வது, விட்டுவிட்டுப் பெய்யும் மழை, ஈரப்பதம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வெப்ப நிலைகள் நிலவக்கூடும் என்பதைக் காட்டுகின்றன. பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர், சுகாதாரம், குடிநீர் வசதிகள், போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த வளாகத் தயார்நிலை தொடர்பான பள்ளிகளின் ஆயத்தத் தேவைகளையும் அரசாங்கம் ஆய்வு செய்துள்ளது.


தொடர்புடைய அனைத்து காரணிகளையும் கவனமாகப் பரிசீலித்த பின்னர், தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தல்களின்படி,  தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிகுலேஷன் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளும், ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, வியாழக்கிழமை, 04.06.2026 அன்று ஒரே சீராக மீண்டும் திறக்கப்படும் என்று மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.


பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னர் தேவையான ஆயத்தப் பணிகள் முடிக்கப்படுவதையும், மாணவர்களின் நலன், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கான போதுமான ஏற்பாடுகள் செய்யப்படுவதையும் உறுதி செய்யுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரப்படுகிறது.


வெளியிட்டவர்:- டிஐபிஆர், செயலகம், சென்னை - 9



Revised

Press Release No : 096 , Date: 26.05.2026

SCHOOL EDUCATION DEPARTMENT

GOVERNMENT OF TAMIL NADU

PRESS RELEASE

The School Education Department had earlier announced that schools for the academic year 2026-2027 would reopen on 01.06.2026 for Classes IV to XII and on 04.06.2026 for Classes I to III.

Subsequently, requests and representations were received from parents, teachers,and various stakeholders seeking a uniform reopening date for all classes in order to ensure administrative convenience and to avoid difficulties faced by families having children studying in different classes.

Further, the prevailing weather conditions and forecasts for the first week of June indicate the likelihood of continued pre-monsoon activity, intermittent rainfall, humidity,and associated heat conditions in several parts of the State. The Government has also reviewed the preparedness requirements of schools relating to sanitation, drinking water facilities, transportation arrangements, and overall campus readiness prior to reopening.

After careful consideration of all relevant factors, and as per the instructions of The Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru. Raj Mohan, the Hon'ble Minister for School Education, Tamil Development and Information has informed that all schools in Tamil Nadu, including Government, Government-aided, Matriculation, and Private Schools, shall uniformly reopen for Classes I to XII on Thursday, 04.06.2026.

All Chief Educational Officers and District Educational Officers have been instructed to ensure that necessary preparatory measures are completed before reopening and that adequate arrangements are made for the welfare, safety, and well-being of students.

The cooperation of parents, teachers, school managements, and the general public is solicited.

Issued By:- DIPR, Secretariat, Chennai - 9




விரைவில் அறிமுகம் ஆகும் Ethanol Stoves



விரைவில் அறிமுகம் ஆகும் எத்தனால் அடுப்புகள் (Ethanol Stoves)


எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய அடுப்பு சந்தைக்கு வரவுள்ளதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தகவல். 


எல்பிஜி-யை விடக் குறைந்த செலவில் எத்தனால் மூலம் இயங்கக்கூடிய ஒரு புதிய அடுப்பு சந்தைக்கு வரவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.



எத்தனால் அடுப்பு எல்பிஜி போன்றே எரியும்; இது மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் சிலிண்டர்களை விடப் பாதுகாப்பானது-நிதின் கட்கரி.


Hr. Sec. School HM Vacancies தொடர்பான முக்கிய தகவல்



மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் (Higher Secondary School Headmaster Vacant Places) தொடர்பான முக்கிய தகவல் 


பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் மூலம் பெறப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி, 25.05.2026 நிலவரப்படி மாநிலம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களில் மொத்தம் 435 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்காக 230 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 205 மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் முதுகலை ஆசிரியர்களுக்காக நிரப்பப்பட உள்ளன.


மேலும், கலந்தாய்வு நடத்துவதற்கான அட்டவணை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


CUET UG தேர்வு ஒத்திவைப்பு



மே 28ஆம் தேதி நடக்க இருந்த கியூட் யூஜி தேர்வு ஒத்திவைப்பு


பக்ரீத் பண்டிகை விடுமுறை தேதியில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து மே 28ஆம் தேதி நடக்க இருந்த CUET UG தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


2026ம் ஆண்டிற்கான பொது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு Common University Entrance Test (CUET) தேர்வுகளை தேசிய தேர்வு முகமை ஒத்திவைத்துள்ளது.


புதிய தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்; தேர்வர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணைய தளங்களை பார்வையிட்டு புதிய தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும்.


ஏதேனும் விளக்கம் தேவைப்பட்டால் என்டிஏ உதவி மையத்தை தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் - தேசிய தேர்வு முகமை.


JACTTO GEO சார்பாக முதலமைச்சரிடம் இன்று (26-05-2026) வழங்கப்பட்ட கோரிக்கைகள் மனு

 





ஜாக்டோ ஜியோ JACTTO GEO சார்பாக முதலமைச்சர் அவர்களிடம் இன்று (26-05-2026) வழங்கப்பட்ட கோரிக்கைகள் மனு 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு



 அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் - முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் 


ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு 


அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக மனு அளித்ததும், கோரிக்கைகளை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உறுதி 


Petrol, Diesel, CNG விலை இன்றும் உயர்வு



சி.என்.ஜி. எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிலோ ரூ.91.50க்கு விற்பனை


சென்னையில் பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.108.01க்கு விற்பனை


டீசல் விலை 23 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.99.78க்கு விற்பனை



விவசாயக் கடன் தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு

 


விவசாயக் கடன் தள்ளுபடி -  முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் 83 நாள் 25.5.2026



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



 தமிழ்நாட்டில் குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரையிலான கடன்கள் முழுமையாக ரத்து.


 தமிழ்நாட்டில் சிறு விவசாயிகளுக்கு 50% வரை கடன் தள்ளுபடி செய்யப்படும்.


கூட்டுறவு வங்கிகளில் 2025 மே 1 முதல் 2026 பிப்ரவரி 28க்குள் பெறப்பட்ட பயிர்க்கடன்களுக்கு இந்த தள்ளுபடி


* பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு


📌கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி


📌 ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு கடன் தொகையில் 50% தள்ளுபடி


📌 ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.40,000 தள்ளுபடி


📌 ரூ.50,000-இல் இருந்து ரூ.60,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி


📌 ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.30,000 தள்ளுபடி


📌 ரூ.60,000-இல் இருந்து ரூ.70,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.15,000 தள்ளுபடி


📌 ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.20,000 தள்ளுபடி 


📌 ரூ.70,000-இல் இருந்து ரூ.80,000 வரை பயிர்க்கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி 


📌ரூ.80,000-இல் இருந்து ரூ.90,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி 


80,001 - 90 ஆயிரம் வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.


ரூ 1 லட்சம் மேல் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கும் சிறு விவசாயிகளுக்கும் ரூ 5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.


மேலும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ 5000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.


இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 1.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ 2,044.46 கோடி கூடுதல் செலவாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2025-2026ஆம் நிதியாண்டிற்கான TPF / GPF Account slip வெளியீடு

 


2025-2026 TPF Account slip published


2025-2026ஆம் நிதியாண்டிற்கான ஆசிரியர் சேமநல நிதி / வருங்கால வைப்பு நிதி கணக்கீட்டுத் தாள் TPF / GPF Account slip வெளியீடு

வலைதள முகவரி:







தற்போது வெளியாகி உள்ள 2025-2026ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை 


How to Download Teacher Provident Fund Account Slip (TPF Account Slip) / General Provident Fund Account Slip (GPF Account Slip) for the financial year 2025-2026


TPF / GPF Account Slip

2025-2026ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.


ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை:


* கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய https://www.agae.tn.nic.in/onlinegpf/ (என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்...



* தங்களது GPF/ TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்யவும்.



* ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும்.



* அதனை உள்ளீடு செய்தால் தோன்றும் திரையில் Download Account Slip என்பதை Click செய்யவும்.



* Year என்பதில் 2025-2026 தேர்ந்தெடுப்பதன் மூலம் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

12-06-2026 TN SCERT Special TET 1 EVS & TET 2 Science - Paper 2 Social Science SESSION 2 - Youtube Links

  Good afternoon, all. Kindly note today's session and its timings Click here for SPECIAL TET PAPER 1 EVS SESSION 1 https://www.youtube....