பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Supplementary Examinations June/July 2026 – Procedure for downloading exam results and applying for a copy of the answer script.
மேல்நிலை துணைத்தேர்வு ஜூன் / ஜூலை 2026 - தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக பதிவிறக்கம் செய்து கொள்ளுதல் மற்றும் விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்ந்த செய்திக்குறிப்பு
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Order issued to submit details of those who have passed the TET as of 01-03-2026 for promotion
உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு 01-03-2026இன் படி TET தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் அனுப்ப ஆதிதிராவிடர் நலஇயக்குனர் உத்தரவு
28.7 2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கர்நாடக மாநிலத்தில் இளையோரிடத்தில் அதிகரித்து வரும் ஹெச் ஐ வி தொற்று
கர்நாடகா வழி பாடம் கற்போம்
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
2023 - 2024 ஆம் வருடம்
44,500 எச்.ஐ.வி தொற்றாளர்கள் என்றிருந்த நிலையில் தற்போது 2025-2026 இல்
66,600 என்று எண்ணிக்கை கூடியுள்ளது.
இந்தத் தொற்றாளர்கள் அனைவரும் 18-35 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் தற்போது
2.60 லட்சம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருக்கிறார்கள்
அதில் 2.05 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள்.
54000 பேர் எந்த சிகிச்சை வளையத்துக்குள்ளும் இல்லாமல் தங்களுக்கு தொற்று இருந்தும் அது குறித்த விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள்.
இவர்கள் மூலம் தான் தொற்று பிறருக்கு
- பாதுகாப்பற்ற உடலுறவு
- பாதுகாப்பற்ற ஊசி ஏற்றிக் கொள்ளுதல்
போன்ற வழிகளில் பரவி வருகிறது என்கின்றது ஆய்வு.
ஹெச். ஐ.வி. 90களில் பரவத் துவங்கிய போது அது 30+ வயதினரிடையே அதிகம் கண்டறியப்பட்டு வந்தது.
இப்போது 18+ முதல் 35 வயதுக்குள் அதிகமாகக் கண்டறியப்பட்டு வருவதன் காரணங்கள் இதோ..
1. ஆன்லைன் டேட்டிங் ஆப்களின் வருகை
ஆன்லைன் டேட்டிங் ஆப்கள் பல உள்ளன. அவற்றின் வழியாக ஊர் பேர் தெரியாத ஆள் யாரென்றே தெரியாதவர்கள் கூட
பிணைப்பு ஏற்படுகிறது.
இந்தப் பிணைப்பு பிறகு "ஹூக் அப்" எனும் பிரச்சனைக்குரிய கலாச்சார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. ஹூக் அப் என்றால்
கொஞ்ச நாள் டேட்டிங் ஆப்களில் பழகியவருடன் உடலுறவு கொள்ளுதல்.
இதை "டிஜிட்டல் ஹூக் அப்" என்கிறார்கள்
இதனுடன்
2. கெம் செக்ஸ் கலாச்சாரம்
ஆன்லைன் ஆப்கள் மூலம் இணைந்த இது போன்ற ஜோடிகள் உடலுறவில் ஈடுபடும் போதும் அதற்கு முன்பு மெத்தாம்பிடமின், கொகயன் போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டு அதன் மூலம் எந்த ஒரு தடை உணர்வோ அச்ச உணர்வோ இல்லாமல் தங்குதடையின்றி உடலுறவு கொள்ளுதல் நிலை தான் கெம் செக்ஸ் ( CHEM - மருந்து SEX - உடலுறவு)
தன்னிலை மறந்த நிலையில் காண்டம் ( ஆணுறை) பெண்ணுறை போன்றவற்றை உபயோகிப்பதில்லை, உபயோகித்தாலும் அது கிழியுறுவதைக் கண்டுகொள்வதில்லை ஆகிய அலட்சியங்களால்
ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவுகின்றன.
3. ஒருவருக்கு பலருடன் ஒரே நேரத்தில் தொடர்பு
ஒருவர் ஒருவருடன் உறவில் இருக்கும் போதே பலருடனும் அதே சமயத்தில் உறவில் ஈடுபடும் போது பால்வினை தொற்றுகள் எளிதில் பரவும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றன
4. ஆண்களுக்குள் உறவில் ஈடுபடுபவர்களிடம் சதவிகித அளவில் சற்று அதிகமாக ஹெச் ஐ வி தொற்று பரவி வருவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. சுத்தமற்ற ஊசிகள் / ஒருவர் பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தி போதை மருந்துகளை ஏற்றும் பழக்கம் இருப்பவர்கள் (PEOPLE WHO INJECT DRUGS)
6. இளையோரிடத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு குறித்தும், பால்வினை நோய்களின் பரவல் குறித்தும் போதுமான விழிப்புணர்வின்மை
என்று பல காரணங்கள் இதற்குப் பின்பு உள்ளன.
இளையோரிடத்தில் பால்வினை நோய்ப்பரவல் அதிகரித்திருப்பது ஏன்?
முன்பெல்லாம் குறிப்பிட்ட சில இரவு விடுதிகள், சில நைட் கிளப்கள், சிவப்பு விளக்குப் பகுதிகள் ஆகிய இடங்களில்
இருந்து மட்டுமே ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்கள் பரவும் என்பது பொதுவான நம்பிக்கையாகவும், பொது சுகாதார ரீதியாக அந்த இடங்களைக் குறிவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதுமானதாக இருந்தது.
விபச்சாரத்தில் ஈடுபடுவோரிடையே
ஹெச் ஐ வி , பால்வினை நோய் பரிசோதனைகள், கட்டாய ஆணுறை உபயோகிப்பு , சுய உதவிக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு அதிகரித்தது.
ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஹூக் அப் கலாச்சாரம் - உடலுறவில் ஈடுபட மேற்கூறிய இடங்கள் தேவையில்லை
மாறாக ஆன்லைன் மூலம் ஜோடிகள் கிடைத்து, எளிதில் எந்த இடத்திலும் உடலுறவு கொள்ளும் நிலைக்கு பரவலாக்கம் ஆகியுள்ளது. பொது சுகாதார ரீதியாக நோய் தொற்று அடைந்தவர் யார்?
அவரிடம் இருந்து யார் யாருக்கெல்லாம் பரவியது என்று சரியான மேற்பார்வை செய்ய இயலாமல் போகிறது.
இவற்றைத் தடுக்க தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
- செக்ஸ் குறித்த கல்வி வளர் இளம் பருவத்தில் இருந்து கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- பாதுகாப்பற்ற உடலுறவு கர்ப்பத்திலும் பால்வினை நோய்களிலும் எய்ட்ஸிலும் கொண்டுய்க்கும் எனும் செய்தி பரவலாக்கப்பட வேண்டும்
- போதை வஸ்து நுகர்வு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவாக பள்ளிகள் கல்லூரிகள் தோறும் பரப்புரை ஆற்றப்பட வேண்டும்.
- குறிப்பாக ரத்த நாளம் வழி ஊசி மூலம் போதை பொருள் ஏற்றிக் கொள்வதும். ஊசிகளை பகிர்ந்து கொள்வதும் மிகவும் ஆபத்தானது. ஹெச் ஐ வி , ஹெப்பாடைட்டிஸ் பி போன்ற நோய்கள் பரவும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வேண்டும்
- ஆன்லைன் ஆப்கள் மூலம் ஜோடிகள் சேருவது அதிலும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவது என்பது ஆபத்தானது. இது குறித்தும் விழிப்புணர்வு அவசியம்.
தொடர்ந்து தொற்றுக்குள்ளாகி அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் 54000 பேரைக் கண்டறியும் பொருட்டு
மாநிலம் முழுவதும் உள்ள நிறுவனங்கள், கல்வி மையங்களில் தன்னார்வமாக ஹெச் ஐ வி பரிசோதனை செய்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் கடமை
விழித்துக் கொள்வது அவரவர் பொறுப்பு
ஆதாரங்கள்
1. NACO SANKALAK sixth edition 2024 report
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
New update in WhatsApp Web
WhatsApp Web-ல் புதிய அப்டேட்
கணினியில் செயலியைப் பதிவிறக்காமல், வாட்ஸ்அப் வெப் பிரவுசர் மூலமாகவே நேரடியாக ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளைப் பேசும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அழைப்பைத் துண்டிக்காமல் மொபைலிலிருந்து கணினிக்கும், கணினியிலிருந்து மொபைலுக்கும் மாற்றிக் கொள்ளும் CALL TRANSFER அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது
குழு அழைப்புகளைக் கட்டுப்படுத்த WAITING ROOM வசதியும், தெளிவான வீடியோ அனுபவத்திற்கு QUICKHD அம்சமும் வழங்கப்பட்டுள்ளன.
பின்னணிச் சத்தங்களை நீக்கி தெளிவான குரலை வழங்கும் NOISE SUPPRESSION தொழில்நுட்பமும் இதில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் வெப் வழியே பேசப்படும் அனைத்து அழைப்புகளும் முற்றிலும் இலவசம் என்பதோடு END TO END ENCRYPTED பாதுகாப்பு கொண்டவையாகும்.
Census 2026 | Step-by-step instructions to log in to the HLB app
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2026
💢💢💢💢💢💢💢
HLB செயலியில் உள்நுழைவதற்கான படிப்படியான வழிமுறைகள்
படி 1: உங்கள் மொபைலில் HLB செயலியை திறக்கவும்.
படி 2: உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password-ஐ பயன்படுத்தி உள்நுழையவும்.
படி 3: உள்நுழைந்த பிறகு, உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள HLB Map சரியாக தெரிகிறதா என்பதை உறுதிசெய்யவும்.
*கடவுச்சொல் (Password) வராதவர்கள் அல்லது மறந்தவர்கள்:*
படி 4: உங்கள் மொபைல் அல்லது கணினியில் *https://census.gov.in/* என்ற இணையதளத்தைத் திறக்கவும்.
படி 5: உங்கள் User ID-ஐ உள்ளிடவும்.
படி 6: "Forgot Password" என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 7: திரையில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றி புதிய Password-ஐ அமைத்துக்கொள்ளவும்.
படி 8: புதிய Password-ஐ பயன்படுத்தி மீண்டும் HLB செயலியில் உள்நுழையவும்.
படி 9: உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள HLB Map சரியாக தெரிகிறதா என்பதை உறுதிசெய்யவும்.
ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், உடனடியாக உரிய அலுவலரைத் தொடர்புகொள்ளவும்.
துறைத் தேர்வுகள் - மே 2026 | தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியீடு
DEPARTMENTAL EXAMINATIONS, MAY-2026 – PUBLISHING OF TENTATIVE ANSWER KEY FOR OBJECTIVE TYPE EXAMINATION (TEST CODE-006) IN THE COMMISSION’S WEBSITE – REGARDING (Press Release)
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
SMC ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்தல் தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தற்காப்புக்கலை பயிற்சி 2026-2027 குறிப்புகள்:
📍ஒவ்வொரு session புகைப்படமும் Time stamp மட்டுமே EMIS இல் ஏற்றப்பட வேண்டும்.timestamp போட்டோ இல்லாத வகுப்புகள் நடைபெற்றதாக எடுத்துக்கொள்ளப்படாது. Brc login இல் reject செய்யப்படும்.
📍ஏற்கனவே அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பயிற்றுநர்களாக நியமிக்க கூடாது.( அவர்கள் ஏற்கனவே ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் ஊதியம் பெறுவதால்).
📍பயிற்றுநர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.( 10 th pass certificate only to be upload in EMIS).(10 th fail then ITI not eligible).
📍police verification certificate school login இல் upload செய்து brc login approval கொடுத்த பின்பே பயிற்சி ஆரம்பிக்கப்பட வேண்டும்.(ஆகஸ்ட் முதல் வாரம் வகுப்பு ஆரம்பிக்கப்பட வேண்டும்).
📍பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகளுக்கு பெற்றோர் ஒப்புதல் கடிதம் பெற்று பள்ளியில் பராமரிக்க வேண்டும்.100 க்கும் மேற்பட்ட மாணவிகள் 6-10 வகுப்புகளில் இருந்தால் தலைமையாசிரியர் 100 மாணவிகளை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம்.
📍ஒரு பயிற்றுநர் அதிக பட்சமாக 4 பள்ளிகளில் பயிற்றுநராக பணிபுரிய அனுமதிக்கலாம்.இதை BRC login இல் approval கொடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டும்.
நன்றி.
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
Negotiations held by the Hon'ble Minister for School Education with teacher associations and ministerial staff unions affiliated with the School Education Department.
தொடக்கக்கல்வித்துறை, பள்ளிக் கல்வித் துறை சார்ந்த ஆசிரியர் இயக்கங்கள், அமைச்சுப் பணியாளர் சங்கங்களுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நாளை 28.07.2026 காலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திட அழைப்பு விடுத்துள்ளார்
சங்கத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் வீதம் பங்கேற்க தெரிவிக்கப்பட்டுள்ளது
பள்ளிக் கல்வித் துறை - கலந்தாலோசனைக் கூட்ட அறிவிப்பு.
தேதி: 28.07.2026 (செவ்வாய்க்கிழமை)
நேரம்: காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
இடம்: அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம், சென்னை.
தலைமை: மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள்
கூட்டத்தின் முக்கிய விவரங்கள்:
பொருள்: ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் மேம்பாடு குறித்தான கலந்தாலோசனை.
பங்கேற்பாளர்கள்: அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் சங்கங்களின் மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள்.
குறிப்பு: கூட்டத்தில் பங்கேற்கும் சங்க நிர்வாகிகள் குறித்த நேரத்தில் வருகை தந்து தங்களது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
G.O. Ms. No. 113, Dated : 14-05-2025 - தமிழ்நாடு அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கை "ஊதியக்" கணக்காக மாற்றுதல் - அரசாணை வெளியீடு
அரசாணை எண்.113 நிதி (கருவூலம் மற்றும் கணக்குகள் - III), நாள்:14.05.2025
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் பெறும் வங்கிக் சேமிப்பு கணக்கில் இருந்து சம்பள கணக்காக மாற்றுதல் சார்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அறிவித்தார்.
தற்போது தமிழ்நாடு அரசின் ஊழியர்களின் சம்பளம் பெறும் வங்கி சேமிப்பு கணக்கை சம்பள கணக்காக மாற்றுதல் சார்ந்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
G.O. Ms. No. 113, Dated 14.05.2025
Package Details
🟢அரசு ஊழியர்கள் வாங்கும் தனிநபர் கடன் வீட்டுக் கடன் ஆகியவற்றில் வட்டி சலுகை.
2025-26 FY முதல்
வங்கிகள் பட்டியல்
1. SBI
2. Indian Bank
3. IOB
4. Axis Bank
5. Union Bank of India
6. Canara Bank
7. Bank of Baroda
G.O. No. 113 - Finance - Changing Tamilnadu Government Employees Savings Bank Account to Salary Bank Account - pdf
Tamil Nadu Engineering Admission
Medical Fitness Certificate and
Anti Ragging form
From Anna University website
TNEA BE Counselling
Provisional Allotment order DOWNLOAD செய்து
கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கும்
*7.5 கோட்டாவில் No College Fees No Hostel Fees Free Seat பெற்றுள்ள அரசுப்பள்ளி குழந்தைகள் & பெற்றோர் கனிவான கவனத்திற்கு* 👇
முதல் சுற்றில் தமிழகத்தின் தலை சிறந்த கல்லூரிகளில் BE seat பிடித்துள்ளீர்கள் வாழ்த்துகள்.💐💐💐
30.07.2026 வியாழன் காலை 10 மணிக்குள் கிடைத்த கல்லூரிக்கு சென்று விடுங்கள்
*ஒரு நாள் முன்பே 29.07.2026 புதன் அன்றே சென்று விடுவது சிறப்பு*
கீழ்காண் original + மூன்று set Xerox சான்றிதழ்களை எடுத்து செல்லுங்கள்👇
1. Provisional order
2. SSLC Mark Sheet *original*
3. +1 & +2 Combined Mark Sheet with HM Signature
4. +2 *original TC* or College *original* TC
5. *Medical Fitness Certificate*
Digitally signed *e-certificates* for👇
6. BC MBC DNC BCM SC SCA ST COMMUNITY CERTIFICATE
7. *NATIVITY CERTIFICATE*
8. *First Graduate Certificate*
9. *Srilankan Tamil Refugee Certificate*
10. *Income certificate* for AICTE TUITION FEES WAIVER SCHEME and SC SCA ST POST MATRIC SCHOLARSHIP SCHEME
11. Passport size Photo -4 copies
(7.5 QUOTA வில் BE Free seat பெற்றுள்ள அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் Nativity First Graduate Sri Lankan Refugee and Income certificate ஆகிய 4 சான்றிதழ்கள் தவிர மீதமுள்ள 7 ஆவணங்களை மட்டும் சமர்ப்பித்தால் போதும்🛑 மேற்காண் 4 ஆவணங்கள் கைவசம் இருந்தால் சமர்ப்பிக்கலாம் தவறில்லை. கட்டாயமில்லை🛑)
சிறந்த பொறியாளர்களாக படித்து மிளிர்ந்து
உங்கள் தலைமுறைகளை சிறக்க செய்திருங்கள்👌👍👏 வாழ்த்துகள்💐💐💐
உங்கள் சேர்க்கையில் ஏதும் சிரமம் ஏற்பட்டால் .... உடனே அருகில் உள்ள TFC மையத்தின் உதவியை நாடவும்.
அல்லது ....
1800 425 0110 என்ற DOTE Help line எண்ணை அழைக்கவும்.
அல்லது
tneacare@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியில் புகார் செய்யவும்.👌👍👏💐
7.5 கோட்டா Bonafide certificate தேவையில்லை. கேட்க மாட்டார்கள். EMIS மூலம் அரசு Online verification முடித்து விட்டது. ஆகவே Bonafide certificate அவசியமில்லை.
இருப்பினும் தேவை என நீங்கள் கருதினால் உங்கள் பள்ளி தலைமை ஆசியரிடம் கேளுங்கள். ஒரே நிமிடத்தில் தந்து விடுவார். 6-12 வகுப்புகளை 3 - 4 பள்ளிகளில் படித்திருந்தால் .... அந்தந்த பள்ளிக்கு சென்றால் .... ஒரு நிமிடத்தில் கிடைத்து விடும். இருப்பினும் இது தேவையற்ற வீண் அலைச்சல். தவிர்ப்பது நல்லது👌👍👏💐 பதிவு நாள் : 26.07.2026 ஞாயிறு மாலை 4 மணி
Medical Fitness Certificate Format link👇
https://www.auegov.ac.in/Admissions/assets/PDF/DownloadDoc.pdf
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
பதவி விலகினார் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடந்து வரும் நிலையில் ராஜினாமா
'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் இந்தியாவையே உலுக்கி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தர் பகுதியில் கடந்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த 20ஆம் தேதி நடத்திய பேரணியின் பொழுது காவல்துறையினர் தாக்குதலில் மாணவர்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காயம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் இன்று 36-வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்துக்கு பல தலைவர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். கனிமொழி தலைமையிலான தி.மு.க. எம்.பி.க்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆதரவு தெரிவித்தனர்.
வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்டவர்களுக்கு விரைவான மற்றும் கடுமையான தண்டனையை உறுதி செய்வதற்காக விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்து இருக்கிறார்.
இதற்கிடையே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் மத்திய அரசுக்கும் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. டெல்லியில் உள்ள அரசியலமைப்பு மன்றத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
இதில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் சார்பில் செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் ஜேபி நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் பங்கேற்றனர்.
மந்திரி அமைச்சர் ராஜினாமா
இந்த நிலையில், இன்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "கனத்த மனதுடன் இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த 10 நாட்களாக நாட்டில் நிலவி வரும் சூழல் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி அரசின் வரலாற்றில் போராட்டங்களுக்கு பணிந்து, மத்திய அமைச்சர் பதவி விலகுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Free 2-year nursing training at a government nursing training school.
ரூ.200 மட்டும் இருந்தால் போதும்.
அரசு நர்சிங் பயிற்சி பள்ளியில் Free ஆக 2 வருட நர்சிங் பயிற்சி பெற அருமையான வாய்ப்பு.👌
*Just Last 5 days only Last Date 31.07.2026*
உடனே உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்று *ரூ.200 DD எடுத்து Application Print எடுத்து நிரப்பி உங்கள் ஊரில் உள்ள Post office சென்று Speed Post* அனுப்பி விடுங்கள்.👌👍👏💐
*No College Fees No Hostel Fees Only Mess Fees*
*Free Nurse Training*
*only for +2 Girls*
+2 முடித்த பெண் குழந்தைகளுக்கு அரசு துணை செவிலியர் பயிற்சி பள்ளிகளில் 2 வருட ANM சான்றிதழ் Nursing படிப்பு படிக்க அரிய கடைசி வாய்ப்பு.
1. சென்னை எழும்பூர்
2. சென்னை பூந்தமல்லி
3. சென்னை திருவல்லிக்கேணி
4. *நாமக்கல் மாணிக்கம் பாளையம்*
5. *திண்டுக்கல் காந்திகிராம்*
6. மதுரை சமயநல்லூர்
7. தேனி வீரபாண்டி
8. *புதுக்கோட்டை திருவரங்குளம்*
9. சிவகங்கை திருபுவனம்
10. தருமபுரி பாலக்கோடு
11. திருநெல்வேலி
ஆகிய 11 ஊர்களில் உள்ள தமிழ்நாடு அரசு ANM பயிற்சி பள்ளிகளில் உள்ள மொத்த ANM Nursing இடங்கள் ஒரு பள்ளிக்கு 60 வீதம் மொத்தம் 600 இடங்கள்
இதுவரை நிரம்பியவை 259
இன்னும் நிரம்பாமல் காலியாக உள்ள இடங்கள் 341
Application link👇
https://live.tndphpm.com/admin/tndphpmfiles/1784436154_application_for_selection_of_anm_candidates_through_open_quota_in_11_government_anm_training_schools.pdf
மேலே உள்ள 29 பக்க விண்ணப்ப விளக்க படிவத்தில்
பக்கம் 27 28 29 ஆகிய 3 பக்கங்களை மட்டும் 2 copies Print எடுத்து
*அழகாக பிழையின்றி மாணவிகள் தங்கள் சொந்த கையெழுத்தில் விண்ணப்பத்தை நிரப்பி*
ரூ. 200 Bank Demand Draft எடுத்து
DD in favour of
*DPH&PM-ANM Training Course*
*29.07.2026 க்குள் கீழ்காண் சென்னை முகவரிக்கு speed post ல் அனுப்பி வைக்கவும்.* 👌👍👏💐
Speed Post அனுப்ப வேண்டிய முகவரி👇
To
இணை இயக்குநர் (பயிற்சி)
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை
359, அண்ணா சாலை
DMS வளாகம் தேனாம்பேட்டை
சென்னை 600 006
மேலும் விபரங்களுக்கு
044 -29510136
044- 29510167
044- 29510183
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
மாணவர்களின் ஆதார் மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு விவரங்களை EMIS இல் பதிவேற்றம் செய்ய மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் வெளியீடு
Proceedings of the District Educational Officer (Elementary Education) regarding the uploading of students' Aadhaar and Post Office Savings Bank account details to EMIS.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள்
ந.க.எண்.2198/ஆ5/2026 , நாள். 22.07.2026
பொருள்: தொடக்கக் கல்வி - கல்வி உதவித் தொகை - காஞ்சிபுரம் மாவட்டம் -மாணாக்கர்கள் கல்வி உதவித்தொகை வழங்கப்பெறும் பொருட்டு ஆதார் புதுப்பித்தல் மற்றும் அஞ்சலக சேமிப்பு வங்கிக் கணக்கு துவங்குதல் EMIS இல் இவ்விவரங்களை சரியாக பதிவேற்றம் செய்யக் கோருதல்-சார்ந்து.
பார்வை: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கடிதம் நே.மு.க.ந.க.எண்.1758/அ4/2025, நாள். .07.2026.
பார்வையில் காணும் கடிதத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தொடக்கக் கல்வியின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து விதமான கல்வி உதவித் தொகைகளும் EMIS வலைதளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கு எண்ணிற்கு அந்தந்த நலத்தறை வாயிலாக நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்துவதற்கு கீழ்க்காணுமாறு EMIS வளைதளத்தில் பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் இப்பணிக்கென ஒரு Nodal Officer-ஐ உடனடியாக நியமித்து, மாணாக்கர்களின் ஆதார் எண், வங்கிகணக்கு எண், சாதி மற்றும் ஆண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்களை சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் சரிபார்த்து EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். மேலும், பதிவேற்றம் செய்பவருடன் ஒரு பொறுப்பாசிரியரை நியமித்து இப்பணியை கண்காணிக்க அறிவுறுத்த வேண்டும். மாணாக்கர்களின் செயல்பாடற்ற வங்கி கணக்கினை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர தக்க நடவடிக்கை மேற்கொள்ள பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்துமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் EMIS தளத்தில் மாணாக்கர்களது விவரங்கள் அனைத்தும் எவ்வித காலதாமதமும் இன்றி 100% முழுமையாக பதிவேற்றம் செய்யப்பட்டு முடிக்கப்பட்டமைக்கான அறிக்கையினை (Compliance Report) 27.07.2026 முற்பகல் 11.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டக் கல்வி அலுவலர், (தொடக்கக் கல்வி) காஞ்சிபுரம்.
பெறுநர்-
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்
காஞ்சிபுரம் / வாலாஜாபாத் / உத்திரமேரூர்/ ஸ்ரீபெரும்புதூர் / குன்றத்தூர்.
Dear All,
We are pleased to announce the Shriram Finance Student Scholarship Program 2026–2027.
Kindly share this scholarship information in your WhatsApp groups and circulate it among eligible students, parents, schools and your contacts so that deserving students can benefit from this opportunity.
Thank you for your support.
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்
Creation of an electronic monitoring system within the TNSED Parents app to oversee the appointment and functioning of temporary teachers recruited through the SMC - DEE Proceedings
SMC மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் பணி நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணிக்க TNSED Parents செயலியில் மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்கம்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி - பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parents App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன் மொழிவு பெறப்பட்டது - சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனுப்புதல் - தொடர்பாக தொடக்கக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் தமிழ்நாடு மாதிரி பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடிதம்
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் (நிர்வாகம்) செயல்முறைகள், சென்னை-06
ந.க. எண்:007242/டி1/2026, நாள்: .07.2026
பொருள்:
தமிழ்நாடு தொடக்கக் கல்வி - பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parent App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன் மொழிவு பெறப்பட்டது சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனுப்புதல் - தொடர்பாக
பார்வை:
1. அரசாணை(நிலை) எண்.07, பள்ளிக்கல்வித் (5(2)) துறை. நாள்.01.01.2023
2. சென்னை-06, தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடித ந.க.எண்.1338/எஸ்1/எஸ்.எம்.சி/எம்2/2026, நாள் : 19.06.2026
பார்வை (1)-பள்ளி காணும் அரசாணை வழிமுறைகளின்படி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தும் நோக்கில் TNSED பெற்றோர் செயலியில் (Parent App) முன்மொழியப்பட்டுள்ள மின்னணு கண்காணிப்பு அமைப்பு பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படும் ஆசிரியர்களின் விவரங்களை எளிமையாகக் கண்காணிக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், பயனுள்ள கண்காணிப்பை மேற்கொள்ளவும் உதவும், சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதி செய்திட மாவட்ட, வட்டார ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுறுத்திட பார்வை (2)-இல் காணும் தமிழ்நாடு மாதிரிப்பள்ளிகள் சங்க உறுப்பினர் செயலரின் கடித நகல் உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொருட்டு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்படுகிறது.
இணை இயக்குநர்(நிர்வாகம்).
இணைப்பு: கடித நகல்
பெறுநர்.
அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள்(தொடக்கக்
நகல்.
அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள். (உரிய வழியாக)
அனுப்புநர்:
உறுப்பினர் செயலர்,
தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகள் சங்கம்,
பள்ளிக் கல்வித்துறை.
டி.பி.ஐ. வளாகம், கல்லூரி சாலை,
சென்னை - 600 006.
பெறுநர்:
1 இயக்குநர்.
பள்ளிக் கல்வி இயக்ககம்,
2 இயக்குநர்.
தொடக்கக் கல்வி இயக்ககம்,
சென்னை-600 006.
RC No: 1338/S1/SMC/MS/2026, Date: 19-06-2026
பொருள்: பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (SMCs) மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் பணி நியமனம் மற்றும் செயல்பாடுகளை கண்காணித்து பதிவேற்றம் செய்ய TNSED பெற்றோர் செயலியில் (Parent App) மின்னணு கண்காணிப்பு அமைப்பு உருவாக்குதல் முன்மொழிவு-தொடர்பாக.
பார்வை: அரசாணை (நிலை) எண். 07, பள்ளிக் கல்வி 5(2) துறை, நாள் 01.01.2023.
அரசாணை (நிலை) எண். 07, பள்ளிக் கல்வித் துறை, நாள் 07.01.2023இல் காண் வழிமுறைகளின்படி, நீண்டகால விடுப்பு, மாற்றுப் பணி, காலிப்பணியிட மாற்றம், மருத்துவ விடுப்பு. மகப்பேறு விடுப்பு அல்லது பிற நிர்வாகக் காரணங்களால் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஏற்படும் பள்ளிகளில் கற்பித்தல் செயல்பாடுகள் தடையின்றி நடைபெறுவதற்காக, பள்ளி மேலாண்மைக் குழு (SMCs) மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட நியமனங்களில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் விவரங்களை முறையாகப் பதிவுசெய்து கண்காணிப்பதற்காக TNSED பெற்றோர் செயலியில் தனித்துவமான மின்னணு தொகுதியை (Digital Module) உருவாக்க இதன்வழியாக முன்மொழியப்படுகிறது.
முன்மொழியப்படும் தொகுதியில் பின்வரும் கூறுகள் இடம்பெறலாம்:
1. பள்ளி வாரியாக தேவைகளை உள்ளீடு செய்தல்
o தற்காலிக ஆசிரியர் நியமனம் தேவைப்படும் காலிப்பணியிட விவரங்களை தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம்.
0 காலிப்பணியிடத்திற்கான காரணம், காலஅளவு, பாடம் மற்றும் கற்பிக்க வேண்டிய வகுப்பு விவரங்கள் பதிவு செய்யப்படலாம்.
2. பள்ளி மேலாண்மைக் குழு தீர்மான பதிவேற்றம்
௦ தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்த பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானத்தை மின்னணு வடிவில் பதிவேற்றம் செய்தல்.
0 பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்ற நாள் மற்றும் தீர்மான எண் பதிவு செய்தல்.
3. ஆசிரியர் விவரப் பதிவு
0 தற்காலிக ஆசிரியரின் பெயர், கல்வித் தகுதி, கைபேசி எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட அடையாள விவரம், பாட நிபுணத்துவம் மற்றும் பணிக்காலம் ஆகியவற்றை பதிவு செய்தல்.
O பணியில் சேர்ந்த நாள் மற்றும் பணிவிடுவிக்கப்பட்ட நாள் ஆகியவற்றை மின்னணு முறையில் பதிவு செய்தல்.
4. வருகைப் பதிவு மற்றும் ஊதிய கண்காணிப்பு
o மாதத்தில் விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை பதிவு செய்தல்
0 அரசின், நடைமுறைகளின்படி வழங்கப்படும் மதிப்பூதியம் / ஊதியம் பெற்று வழங்கப்பட்ட விவரங்களை கண்காணித்தல்
5. மாவட்ட மற்றும் மாநில தகவல் கண்காணிப்பு முகப்புப் பலகை (Dashboard)
பணியில் உள்ள தற்காலிக ஆசிரியர்களின் எண்ணிக்கை, பணிக்காலம், காலிப்பணியிட வகை மற்றும் பள்ளி வாரியான நிலை ஆகியவற்றை நிகழ்நேரத்தில் (Real-time) மாநில மற்றும் மாவட்ட அளவில் (CEO, DEO Ele & Sec, BEO) கண்காணித்தல்.
நீண்டகாலமாக நீடிக்கும் காலிப்பணியிடங்கள் மற்றும் அப்பணியிடத்தில் தற்காலிக
ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக முன் அறிவிப்புகள் மாவட்ட அளவில் (CEO/DEO(E) - Login) வழங்குதல்.
6. கொள்கைத் திட்டமிடலுக்கான தரவுக் களஞ்சியம்
0 தற்காலிக ஆசிரியர் பணிநியமனம் மற்றும் காலிப்பணியிட மேலாண்மை தொடர்பான நிர்வாக முடிவெடுப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஒருங்கிணைந்த தரவுத்தளத்தை மாநில அளவில் (State Login) உருவாக்குதல்.
முன்மொழியப்படும் இவ்வமைப்பு மூலம்:
அரசாணைகளைத் தரப்படுத்தப்பட்ட முறையில் செயல்படுத்துதல்.
பள்ளி மேலாண்மைக் குழு அடிப்படையிலான நியமனங்களில் வெளிப்படைத்தன்மை மேம்படும்.
நீண்டகாலமாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை கண்டறிய வழி ஏற்படும்.
அங்கீகரிக்கப்படாத நியமனங்கள் தடுக்கப்படும்.
மாவட்ட மற்றும் மாநில அளவிலான அலுவலர்களால் நிகழ்நேர (Real-time)
கண்காணிப்பு மேற்கொள்ள இயலும்.
பள்ளிகளில் கற்பித்தல்-கற்றல் செயல்பாடுகளின் தொடர்ச்சி சிறப்பாக உறுதி செய்யப்படும்.
மேற்கண்ட விவரங்கள் தங்களது கனிவான தகவலுக்காகவும், இயக்கக அளவில்
தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவும் சமர்ப்பிக்கப்படுகின்றன.
விவரங்களை TNSED பெற்றோர் செயலியில் முன்மொழியப்பட்டுள்ள மின்னணு கண்காணிப்பு அமைப்பு, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியர்களின் மாவட்டங்கள் முழுவதும் எளிமையாகக் கண்காணிக்கவும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும். பயனுள்ள கண்காணிப்பை மேற்கொள்ளவும் உதவும். மேலும், இத்தொகுதியின் சரியான பயன்பாடு மற்றும் மேம்படுத்துதலையும் உறுதிசெய்திட மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உறுப்பினர் செயலர்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2026 ; School Morning Prayer Activities
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் 40,000 லஞ்சம் பெற்ற மதுரை வட்டாரக்கல்வி அலுவலர், லண்டனில் இருந்து ஆசிரியரது மகன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் புகார் - நாளிதழ் செய்தி
மதுரையில் ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் ரூ.40 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர்பாக, லண்டனில் உள்ள ஆசிரியை மகன் முதல்வர் விஜய்க்கு புகார் அனுப்பி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் சீனித்தாய். இவர் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருந்து கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். ஓய்வூதிய பலன், மாதம் ஓய்வூதியம் பெற கள்ளிக்குடி வட்டார கல்வி அலுவலர் (பி.இ.ஓ.,) முத்துக்குமார் ரூ.40 ஆயிரம் லஞ்சமாக பெற்றார் என புகார் அளித்தார். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.
இந்நிலையில் லண்டனில் பொறியாளராக பணியாற்றும் அந்த ஆசிரியையின் மகன் சதீஷ், அங்கிருந்து முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்த 'லஞ்சம் கேட்டால் புகார் தெரிவிக்கும்' தமிழ்நாடு அரசின் வாட்ஸ் அப் எண் மற்றும் முதலமைச்சர் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்பியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:
என் தாய் சீனித்தாய் ஓய்வு பெற்ற பின் ஓய்வூதிய ஒப்புதல் நடவடிக்கைகளுக்கு தடையில்லா மற்றும் நிலுவையில்லா சான்று (No Objection, No Due Certificate) பெற BEOக்கு ரூ.40 ஆயிரம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஓய்வூதிய பலன்கள் கிடைத்த நிலையில், மாத ஓய்வூதியம் கிடைக்கவிடாமல் இழுத்தடிக்கின்றனர். ஓய்வூதியம் கிடைக்கவும், ரூ.40 ஆயிரத்தை திரும்ப பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சீனித்தாய் கூறுகையில், ஓய்வு பெறுவதற்கு முன்பிருந்தே பி.இ.ஓ.,வுக்காக என்னிடம் தலைமையாசிரியர் வாசுதேவன் பேசி இத்தொகையை பெற்றார். துபாயில் உள்ள என் மற்றொரு மகன் ரோஹித் தான் ரூ.30 ஆயிரத்தை வாசுதேவனுக்கு அனுப்பினார். நான் ரூ.5 ஆயிரம் பி.இ.ஓ.,விடம் நேரில் கொடுத்தேன். என் புகார் மீது சரிவர விசாரிக்கவில்லை என்றார்.
சம்பந்தப்பட்ட முத்துக்குமார் கூறுகையில், இதுகுறித்த புகார் மீது திருமங்கலம் தொடக்கக் கல்வி DEO., விசாரணை நடத்தி புகாரில் உண்மை இல்லை என அறிக்கை அளித்து விட்டார். நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, வாங்கவில்லை என்றார்.
வெளிப்படையான விசாரணை வேண்டும்
இப்பிரச்னை குறித்து அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாவட்ட செயலாளர் ஜெயசந்திரனும் புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: ஓய்வு பெறும் ஆசிரியர்களிடம் ஓய்வூதிய கருத்துரு தயாரித்துக்கொடுக்கிறோம் என்ற பெயரில் பலரிடம் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கின்றன. டி.இ.ஓ., விசாரணையில் சம்பந்தப்பட்ட பி.இ.ஓ., அளித்த வாக்குமூலம் அடிப்படையில் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளது. புகார் அளித்தவரின் கருத்து கேட்கப்படவில்லை.
IFHRMS., நடைமுறைக்கு வந்த பின் பி.இ.ஓ., அலுவலக எழுத்தரே பி.இ.ஓ.,வின் 'யூசர் நேம்', 'பாஸ்வேர்டு' மூலம் ஓய்வூதிய கருத்துருவை தயாரிக்க முடியும். இதற்கு லஞ்சம் கொடுக்காவிட்டால் 'ஒரு வாரத்திற்குள் நீங்களே கருத்துருவை வெளியே தயாரித்து கொண்டு வாருங்கள்' என கூறுவதால், வேறு வழியின்றி பணம் கொடுக்கும் சூழல் ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் கொடுக்கக் கூடாது என முதல்வர் விஜய் கூறியுள்ளார். ஓய்வு ஆசிரியையின் இப்புகார் மீது கல்வி அதிகாரிகள் வெளிப்படையாக விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
National Science Seminar (for Students from Classes VIII to X) - 2026 - Reg
National Science Centre, Delhi Ministry of Culture, Govt. of India Pragati Maidan, New Delhi-110001
(A Unit of National Council of Science Museums)
NATIONAL SCIENCE SEMINAR - 2026 (For students from Classes VIII to X)
Basic informations for organising Science Seminar up to State/UT Level
Topic of the Seminar:
Indian Energy Basket 2047: Prospects and Challenges भारतीय ऊर्जा परिदृश्य 2047: संभावनाएँ एवं चुनौतियाँ
Organised by:
National Council of Science Museums (NCSM) Ministry of Culture, Govt. of India Sector-V, Block-GN, Bidhan Nagar Kolkata 700 091
Venue of National Science Seminar: National Science Centre, Delhi
(A Unit of NCSM) Near Gate No. 4, Pragati Maidan, Bhairon Marg, New Delhi-110001
Phone No.: +91-7428693715-16
E-mail: educationnscdelhi@gmail.com
Website: www.nscd.gov.in
Date of National Science Seminar: 30th October 2026
RULES AND REGULATIONS
Introduction: The objective of the Science Seminar is to inculcate a spirit of scientific enquiry
and analytical thinking in the minds of young students. The Science Seminar will be held on a competitive basis in each State and Union Territory. The Seminar is organized generally at School, Block/Taluk, District and State level before culminating at the National Level. Winners from each School participate at Block/Taluk level seminars and winners of Block/Taluk level seminars participate at the District level seminars. A maximum of 2 (Two) winners from each District participate in each State/UT level Seminar and only one winner from each State/Union Territory is eligible for National level Science Seminar, which will be held at National Science Centre, Delhi on 30th October 2026.
Participants: High School Students from class VIII to Class X only
Language: English, Hindi or any recognized Indian language
Duration: Each participant shall make the presentation on the given topic for a maximum duration of 6 minutes. This will be followed by a 2 minute Question-Answer Session with the Judges on the same topic. Each participant will be asked 3 questions in the Question-Answer
session after his/her presentation by the judges and the participant will be required to answer any 2 of the questions within two minutes.
Supporting Visuals: The maximum number of supporting visuals/slides/charts etc. permitted per presentation is restricted to 5 nos. altogether. The details of these are as given below:
a) Charts/Posters-maximum size permitted is 850 mm (width) x 600 mm (height). All charts/posters are to be mounted one on top of other-as done in a calendar. One side of the chart/poster is considered as one unit. There should be no pop-ups.
b) Computer based Static slides (MS Office 2007 or higher in ppsx, .pptx, .ppt, .pps format) without additional features like pop-up, animation, rollovers, etc. No interaction within one slide is permitted.
Grading: For evaluating and grading the presentations of the participants, Following criteria will be judged:
1) Scientific Content in presentation - 40 marks
2) Novelty in use of visuals - 15 marks
3) Fluency in speech - 25 marks
4) Ability to answer questions
(a) Written Aptitude Test - 10 marks
(b) Answers to oral questions - 10 marks
Total: 100 marks.
Note: 3D models, animation, pop-ups, rollovers, videos and films in any form are not allowed.
Prizes: As decided by the host organisers of State/Union Territory Level Science Seminars.
Date: As announced by the State/UT organizing authority (like State/UT Education Dept./SCERT/DSE/DGE/SISE/SIE/S&T etc.). However, all contests in States/UTs must be completed on or before 30th September 2026.
(This is mandatory in order to enable the participants to prepare for National Level Seminar).
Special Note: At the time of deliberation, no Teacher or Escort shall be allowed to assist the participant on the dais except for physically challenged students.
INFORMATION TO THE HOST (STATE/UT) ORGANISER:
The details of the Seminar held at each District level and State/UT level may be sent to National Science Centre, Delhi along with photographs of the event. During the State/UT Level Competition, a banner showing the details of the sponsor (to be communicated by us later) may be displayed and a photograph of the banner with the participants may be sent to educationnscdelhi@gmail.com.
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
அரசாணை (நிலை) எண். 20 , நாள் : 15.07.2026 - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு "பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்" என பெயரிடப்படுதல் - அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவுப்படுத்துதல் - அரசாணை வெளியீடு
G.O. (Ms) No. 20 , Dated : 15-07-2026 - Naming the Chief Minister's Breakfast Scheme as the "Perunthalaivar Kamarajar Breakfast Scheme" - Extension of the Perunthalaivar Kamarajar Breakfast Scheme to students studying in Classes 6 to 8 in all government and government-aided schools - Government Order issued
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை - முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயரிடப்படுதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தினை விரிவுப்படுத்துதல் ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (ச.ந.4-1) துறை
அரசாணை (நிலை) எண். 20 , நாள் : 15.07.2026
திருவள்ளுவர் ஆண்டு 2057 ஸ்ரீ பராபவ, ஆனி 31
படிக்கப்பட்டவை
1. அரசாணை (நிலை) எண்.43, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 27.07.2022.
2. அரசாணை (நிலை) எண்.01. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 13.01.2023.
3. அரசாணை (நிலை) எண்.33, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 07.06.2023.
4. அரசாணை (நிலை) எண்.60. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந-4-1) துறை, நாள் 11.09.2023.
5. அரசாணை (நிலை) எண்.17, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 11.03.2024
6. அரசாணை (நிலை) எண்.71. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 27.06.2025.
7. அரசாணை (நிலை) எண்.96, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் (சந.4-1) துறை, நாள் 08.10.2025.
8. தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு எண்.229, நாள் 15.06.2026.
9. சமூக நல இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண். 3060546/சஉதி-2 (1)/2026, நாள் 03.07.2026.
ஆணை:-
மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) பயிலும் 1,14,095 தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை உணவு வழங்குவதற்காக முதற்கட்டமாக முதலமைச்சரின் உணவுத் திட்டத்தினை செயல்படுத்த ஆணையிடப்பட்டது. காலை
2. பின்னர், மேலே இரண்டு முதல் ஆறு வரை படிக்கப்பட்ட அரசாணைகளின்படி, தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் (மாநகராட்சி/நகராட்சி/பேரூராட்சி) மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகள், ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு, தற்போது 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 19,34,230 மாணவ மாணவியருக்கு பயனளிக்கக் கூடிய வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
3. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில், 15.06.2026 அன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் LOITGOOT GU மாணவியருக்கு. தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று முதல் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
4. இதனைத் தொடர்ந்து, மேலே ஒன்பதாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், சமூக நல இயக்குநர். இத்திட்டம் தொடர்பாக ஏற்கனவே வகுக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி, தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 15.14,274 மாணவ/மாணவியர்கள் பயனடையும் வகையில் இத்திட்டத்தினை விரிவாக்கம் செய்வதற்கான அனுமதியையும், இதற்கான தொடரும் செலவினத்திற்காக ரூ.240.01 கோடியும் தொடரா செலவினத்திற்காக ரூ.28.71 கோடியும் ஆக மொத்தம் ரூ.268.72 கோடிக்கான நிதி அனுமதியையும் கோரியுள்ளார்.
5. மேலே பத்தி 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள சமூக நல இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து கீழ்க்கண்டவாறு ஆணையிடுகிறது:-
i. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' என பெயரிடப்படுகிறது.
ii . தமிழ்நாட்டில் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் 15,454 பள்ளிகளில் (இணைப்பு-1-ல் உள்ளவாறு) 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது.
iii. இத்திட்டம் இணைப்பு-II-இல் உள்ள ஏற்கனவே பின்பற்றப்படும் நடைமுறைகளின் அடிப்படையில் விரிவுப்படுத்தப்படுகிறது.
iv. மாணவ/மாணவியரின் வருகை மற்றும் உணவு உட்கொள்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 12,87,133 மாணவ/மாணவியருக்கு. ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.12.71 செலவினம் என்ற அளவில். ஆண்டுக்கு 210 வேலை நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்பதைக் கருத்தில்கொண்டு, இத்திட்டத்திற்கு ஆண்டுதோறும் மொத்த உத்தேச செலவினமாக ரூ.343,55,00.000/- (ரூபாய் முந்நூற்று நாற்பத்து மூன்று கோடியே ஐம்பத்து ஐந்து இலட்சம் மட்டும்) செலவிட நிதி அனுமதி வழங்கப்படுகிறது.
v. 2026-2027 ஆம் நிதியாண்டுக்கு, இத்திட்டத்துக்கென கீழ்க்கண்டவாறு கணக்கிடப்பட்ட தொடரும் செலவினம் ரூ.204,05,84,395/- மற்றும் தொடரா செலவினம் ரூ.13.57.25.000/- ஆக மொத்தம் உத்தேச செலவினம் ரூ.217,63,09,395/க்கான (ரூபாய் இருநூற்று பதினேழு கோடியே அறுபத்து மூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து முந்நூற்று தொண்ணூற்று ஐந்து மட்டும்) நிதி ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது.
முழுமையான அரசாணை
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கருவூலம் மற்றும் கணக்குத் துறை - தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் இடைக்காலத் தொகை (Interim Payout) வழங்குதல் - IFHRMS-ல் செயல்பாட்டு வழிமுறை (Flow Chart) அனுப்புதல் தொடர்பாக
01.01.2026ன் படி அனைத்து பணி நிறைவு பெற்ற அரசு ஊழியர்களுக்கு TAPS திட்டத்தின் படி பணம் வழங்குதல்
பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்குதல் தொடர்பாக கருவூல கணக்குக் துறை கூடுதல் வழி காட்டு நெறிமுறைகள் வெளியீடு , நாள் : 22.07.2026
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
கருவூலக் கணக்கு துறை
அனுப்புநர்:
இயக்குநர்,
கருவூலக் கணக்கு இயக்குநரகம்,
(ப.ஓ.திபிரிவு), 571, 5-வதுதளம். பேராசிரியர் க.அன்பழகன் மாளிகை, நந்தனம், சென்னை -35.
பெறுநர்:
அனைத்து மண்டல இணை இயக்குநர்கள் /சம்பளக் கணக்கு அலுவலர்கள் /கருவூல அலுவலர்கள்.
ந.க.எண்.11711/ப. ஓ.தி./2026, நாள்:22.07.2026
ஐயா/அம்மையீர்,
பொருள்:
கருவூலம் மற்றும் கணக்குத் துறை இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் - IFHRMS-ல் செயல்பாட்டு வழிமுறை (Flow chart) அனுப்புதல்-தொடர்பாக.
பார்வை:
1. அரசாணை எண்.7 நிதி (HTC) துறை, நாள்: 09.01.2026.
2. அரசாணை எண் 111, நிதி (TAPS) துறை, நாள்: 16.06.2026.
3. அரசுக் கடித எண் 1419011/ நிதித் துறை (TAPS) /2026-3, நாள்: 02.07.2026.
4 இவ்வலுவலக கடித எண்:11711/ ப.ஓ.தி. /2026, நாள்:10.07.2026
01-01-2026 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பணியில் இருந்து ஓய்வு பெற்ற /பணியிடை மரணமடைந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பாக IFHRMS-ல் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு அறிவுறுத்திட ஏற்கனவே பார்வை 4-ல் காணும் கடிதத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இடைக்கால தொகை (Interim Payout) வழங்குதல் தொடர்பான செயல்பாட்டு வழிமுறை (Flow chart) இக்கடிதத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
எனவே. தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு மேற்குறிப்பிட்ட செயல்பாட்டு வழிமுறையினை (Flow Chart) தெரிவித்து, அவற்றை முறையாக பின்பற்றி இடைக்கால தொகை (Interim payout) வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு அனைத்து சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர்கள் மற்றும் கருவூல அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அவ்வாறு இடைக்கால தொகை (Interim payout) வழங்கப்பட்ட விவரம் குறித்த அணைத்து தகவல்களையும் இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் உள்ளவாறு தனிப்பதிவேடு கொண்டு உரிய முறையில் எவ்வித விடுபாடும் இன்றி பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் மண்டல இணை இயக்குநர்கள் இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்தும் பொருட்டு தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கருவூல அலுவலகங்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கவும் நேரடியாக செயல்பாட்டினை திறனாய்வு செய்திடவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இணைப்பு : மேற்கூறியவாறு
ஓம்/-இயக்குநர்,
// ஆணைப்படி அனுப்பப்படுகிறது//
கருவூலக் கணக்கு இயக்குநரகம்.
முதன்மை கணக்கு அலுவலர்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன் கட்டாயம் முதலில் பாடப்படவேண்டும் என்ற அரசினர...