கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வாக்காளர் சேர்க்கை முகாம் 12.12.2020, 13.12.2020 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது...

 தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் சென்ற மாதம் நவம்பர்16அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல்  பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை இந்த மாதம்  

 டிசம்பர்  12.12.2020, சனிக்கிழமை 13.12.2020  ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளர் சிறப்பு முகாம் காலை 9:30 முதல் மாலை 5:00 வரை நடைபெற உள்ளது.

இதுவே இறுதி வாய்ப்பு

இதில் 18 வயது பூர்த்தியடைந்த ஆண்,பெண் (31.12.2002 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்). புதிய வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்திசெய்து தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள முடியும். 

பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம்,

 வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8 ம், 

முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் ,

குறிப்பு

 ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள இன்றைய தினம் நடைபெறும் 12.12.2020 சனிக்கிழமை

13.12.2020 ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNPSC Group 4 Exam Final Answer Key Release

    TNPSC குரூப் 4 தேர்வின் இறுதி விடை குறிப்பு வெளியீடு TNPSC Group 4 Exam Final Answer Key Released 2024 குரூப் 4 தேர்வின், வினாக்களுக்கான...