கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 12.12.2020 (சனி)...

 


🌹அனுபவங்கள் கற்று தந்தது வாழ வழியை மட்டுமல்ல,

வாழ்வில் வந்து போகும் மாற்றங்களையும் மாறிச்செல்லும் மனித குணங்களையும் தான்.!

🌹🌹பிறருக்கு தேவைப்படும் போது நல்லவனாக தெரியும் நாம்

அவர்கள் தேவைகள் முடிந்தவுடன் கெட்டவனாகி விடுகின்றோம்.!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

⛑⛑இன்று 12/12/2020 (சனிக்கிழமை) மற்றும் நாளை 13/12/2020 (ஞாயிற்றுக்கிழமை) 

ஆகிய இரு தினங்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் நீக்கம் ஆகியவை செய்ய சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் வாக்குச்சாவடி உள்ள பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் கடைசி சிறப்பு முகாம் இதுவாகும்.எனவே இந்த அறிய வாய்ப்பை  பயன்படுத்தி கொள்ளவும்.

⛑⛑ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை இனி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் - பல்கலைக்கழக மானியக்குழுச் செயலர் தகவல்

⛑⛑G.O 184 உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - 27 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் - அரசாணை வெளியீடு 

⛑⛑சென்னை எஸ்ஐஇடி மகளிர் கல்லூரிக்கு மத்திய அரசின் நட்சத்திரக் கல்லூரி தகுதி: ரூ.1.59 கோடி ஒதுக்கீடு

⛑⛑ஆன்லைனில் தவறாக ‘கிளிக்’ செய்ததால் ஐஐடி.யில் சீட் இழந்த மாணவனுக்கு மீண்டும் இடம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

⛑⛑NMMS தோ்வில் தோ்ச்சி: மாணவா்களின் விவரங்களை தாமதமின்றி பதிவேற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

⛑⛑பொது பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வு நிறைவு: பிடிஎஸ் படிப்புக்கு ஆர்வமில்லை; காத்திருப்போர் 296

⛑⛑2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பு சார்ந்து - பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணிக்காக நிதி விடுவிக்கப்பட்டது - செலவினங்கள் மேற்கொள்ளுதல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல் - சார்பு அறிவிப்பு வெளியீடு

⛑⛑10 ஆண்டுகளாக நிரந்தர தீர்வுக்கான அரசாணையை எதிர்பார்த்துக் காத்துள்ள TET நிபந்தனை ஆசிரியர்கள்- தமிழக அரசின் கருணைக்கண் படுமா..? என எதிர்பார்ப்பு

⛑⛑மாணவர்கள் அதிகம் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித் துறை முடிவு

⛑⛑NEET, JEE தேர்வுகளுக்கான பாடத்திட்டம் 20% வரை குறைக்க வாய்ப்பு: மத்திய அமைச்சர்

⛑⛑மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 17ஆம் நாளாக விவசாயிகள் போராட்டம்

⛑⛑ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என இந்தியாவை மாற்ற முயற்சிப்பது போல் மருத்துவத்தையும் மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது - இந்திய மருத்துவ சங்கம்.

⛑⛑டெல்லி மற்றும் மும்பையில் முதல்சுற்றில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய 3 லட்சத்து 25 ஆயிரம், சுகாதாரப் பணியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

⛑⛑திட்டமிட்டப்படி வருகிற 27-ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் தொடங்கும், என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி தெரிவித்துள்ளார்.

⛑⛑2021 சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள, வரும் 30 மற்றும் 31 ஆம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா.

⛑⛑இந்தியா-நேபாளம் இடையேயான விமான சேவையை தொடங்க இருதரப்பும் ஒப்புதல் என தகவல்.

⛑⛑ஆசிய பிரபலங்களின் பட்டியலில் பாலிவுட் நடிகர் சோனு சூட் முதலிடம்- லண்டனைச் சேர்ந்த நாளிதழில் தகவல்.

⛑⛑பிரிட்டனின் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதையடுத்து, ஒவ்வாமை நோய் உடையவா்கள் அந்தத் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

⛑⛑இஸ்ரேலில் வரும் 27 ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்துள்ளார்.

⛑⛑கொரோனா தடுப்பு: பில் கேட்ஸ் ரூ.1,842 கோடி நன்கொடை.

⛑⛑இந்திய வம்சாவளியை சேர்ந்த ராஜா சாரி உட்பட நிலவுக்கு செல்லும் 18 வீரர்கள் பெயர்களை அறிவித்தது நாசா

⛑⛑இந்தியா - இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது.

நான்கு டெஸ்ட், 5 ட்வெண்டி ட்வெண்டி மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரு அணிகளும் பங்கேற்கின்றன.

இதில் சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.

⛑⛑மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்கும் பணி குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

⛑⛑அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு மற்றும் ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்திய நிகழ்ச்சியின் போது முககவசம்,தனி மனிதவிலகலை பின்பற்றாத அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு - தமிழக அரசு,சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம்

⛑⛑Engineering மாணவர்களுக்கு 2021 ஏப்ரல் வரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும்.

👉Engineering Final Semester-ல் உள்ள மாணவர்களுக்கு மட்டும் 2021 ஏப்ரல் வரை நேரடி வகுப்புகள்.

- அண்ணா பல்கலைக்கழகம் 

⛑⛑தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறுகிறது.

⛑⛑திருப்பதி ஏழுமலையான் கோயிலில்  வயதானவர்கள், 10 வயதுக்கு உட்பட்டவர்களும் தரிசனம் செய்யலாம் 

- கோயில் நிர்வாகம்

⛑⛑அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் 2020 ஆம் ஆண்டுக்கான, டைம் பத்திரிகையின் சிறந்த நபராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

⛑⛑மேற்கு வங்கத்தில் பாஜக தனது நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கியுள்ளது

பாதுகாப்பு படை வீரர்களை தாண்டி ஜே.பி.நட்டா மீது எப்படி தாக்குதல் நடத்தியிருக்க முடியும்?

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி

⛑⛑புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, சோழர் கால தேர்தல் நடைமுறைகளைப் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். மேலும், "புதிய நாடாளுமன்ற கட்டடம், தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான உதாரணமாகத் திகழ்கிறது" என்றார்.

⛑⛑மலிவு விலையில் உணவகம், மருந்தகம், மருத்துவனை நடத்திய வந்த கோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் மறைவுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

👉குறைந்த விலையில் உணவகம் நடத்தி பலரது பசியை தீர்த்த கோவை சாந்தி கேண்டீன் மற்றும் சாந்தி சோசியல் சர்வீஸ் சேர்மன் சுப்ரமணியம் உடல்நலக்குறைவால் காலமானார். 10 ரூபாய்க்கு சாப்பாடும், 5 ரூபாய்க்கு டிபனும் கொடுத்து பல ஆண்டுகள் சேவை செய்தவர் சுப்ரமணியம். இவர் லாப நோக்கம் இன்றி உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை சேவையாக செய்தார். தினமும் இவரது கேண்டீனில் 15 ஆயிரம் பேர் பசியாறி வருகிறார்கள். மலிவு விலை மருந்தகம், மருத்துவமனையில் பலன் அடைந்தவர்கள் எண்ணில் அடங்காதவை

சாந்தி சமூக அறக்கட்டளை நிறுவனர் சுப்ரமணியம் மறைவுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தொழில்முனைவோராக உச்சம் தொட்ட பின் மலிவு விலை உணவகம் - மருத்துவமனை - கல்வி உதவிகள் - ஸ்டாக் விலைக்கே பெட்ரோல்- டீசல் விற்பனை என சமூகத்துக்கும் திருப்பி தந்த கோவை பெரியவர் சாந்தி கியர்ஸ் திரு.சுப்பிரமணியம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.'

⛑⛑தமிழக அரசின் துறைகளில் பணிநியமனம் பெறுவதற்கு தட்டச்சு மற்றும் கணிணி கல்வியில் சான்றிதழ் பெறவேண்டும் - GOVT LETTER

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

212 Vacancies in CBSE Board for 12th Class, Degree Graduates

  12ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்களுக்கு சி.பி.எஸ்.இ வாரியத்தில் 212 வேலைவாய்ப்புகள் 212 Vacancies in CBSE Board for 12th Standard, Degree G...