கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பயனடையப் போகும் 19 கோடி PF பயனாளர்கள் - இரு தவணையாக வழங்க இருந்த வட்டியை ஒரே தவணையில் வரவு வைக்கும் EPFO...

8.50 சதவிகித வட்டி விகிதத்தை இ.பி.எஃப்.ஓ மொத்தமாக சுமார் 19 கோடி பி.எஃப் கணக்குகளில் வரவு வைக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில்தான் ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) நடப்பு நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை 8.65 சதவிகிதத்திலிருந்து 8.50 குறைத்தது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக, இந்த 8.50 சதவிகித வட்டி விகிதத்தையும் 8.15 சதவிகிதம் மற்றும் 0.35 சதவிகிதம் என இரண்டு தவணைகளாக வழங்குவதாகவும் இ.பி.எஃப்.ஓ அறிவித்திருந்தது.

பொதுவாக, நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களால் வருங்கால வைப்பு நிதியில் செலுத்தும் தொகை பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்டுகள் என பல்வேறு இடங்களில் அரசு முதலீடு செய்யும். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து குறிப்பிட்ட சதவிகிதத்தை பயனாளர்களுக்கு வழங்கும்.

அந்த வகையில் நீண்டகால அடிப்படையில் மேற்கொண்ட இந்த முதலீடுகள், கொரோனா பரவல் காரணமாக பங்குச்சந்தை இறக்கத்தைச் சந்தித்தபோது, எதிர்பார்த்த வருமானத்தை வழங்காததால் இரு தவணைகளில் வட்டி விகிதம் வழங்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது. இந்நிலையில், அந்த முடிவை இ.பி.எஃப்.ஓ அமைப்பு மாற்றிக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் தற்போதைய சந்தை நிலவரங்கள் எதிர்பார்த்த வருமானத்தை விட அதிகமாக கிடைக்கக்கூடிய வாய்ப்பைச் சுட்டிக்காட்டுகின்றன. அதனால் 8.50 சதவிகித வட்டி விகிதத்தை இ.பி.எஃப்.ஓ மொத்தமாக சுமார் 19 கோடி பி.எஃப் கணக்குகளில் வரவு வைக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பி.எஃப் நிதியில் 15 சதவிகிதம் வரை ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகின்றன. கொரோனா தொற்றுக்குப் பிறகான காலகட்டத்தில் இந்த ஃபண்டுகள் மைனஸ் 8.3 சதவிகிதம் வருமானத்தைக் கொடுத்தன. இது கடந்த 2019-20-ம் நிதி ஆண்டில் 14.7 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மாதங்களில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவதால், ஈக்விட்டி ஃபண்டுகளும் நல்ல லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துள்ளன. 09.12.2020-ம் தேதி இந்திய பங்குச்சந்தைகளான சென்செக்ஸ் 46,000 புள்ளிகளையும் நிஃப்டி 13,500 புள்ளிகளையும் கடந்து புதிய உச்சத்தில் வர்த்தகமாகின.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns