கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா பாதித்த பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு சிகிச்சை தேவை - ஆய்வு முடிவு...

 கொரோனா பாதித்த பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு தீவிர சிகிச்சை (Men infected with Covid-19 are three times more likely to require Intensive Care than Women) தேவைப்படுவதோடு வைரஸால் இறக்கும் அபாயமும் அதிகம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பு மருந்தை தயாரிப்பதற்கான ஓட்டத்தில் முன்னிலையில் இருக்கும் ஃபைசர் மற்றும் மாடர்னா (Pfizer and Moderna) மருந்து நிறுவனத்தின் MRNA தடுப்பூசிகளில் 95% பாசிட்டிவ் முடிவுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும், 1.30 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த கொரோனா எனும் நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் இந்த செய்தி புது  நம்பிக்கையை விதைத்தது. இது ஒருபுறம் இருந்தாலும், இப்பொழுது இந்த Covid-19 வைரசால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களை விட ஆண்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 1, 2020 என்ற இடைப்பட்ட காலத்தில் 46 நாடுகளிலிருந்தும் அமெரிக்காவின் 44 மாநிலங்களிலிருந்தும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இருக்கும் பாதிப்புகளை ஆய்வு செய்தனர்.

சார்ஸ்-கோவ் -2 நோய்த்தொற்றின் (Sars-Cov-2 infection) ஆபத்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கு ஒரே மாதிரியாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர், ஏனெனில் உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளில் "சரியாக பாதி" ("exactly half") ஆண் நோயாளிகள் இருந்தனர். ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது பெண்களை விட, ஆண்கள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம், மேலும் அவர்கள் வைரஸால் இறப்பதற்கு 39 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் இணை ஆசிரியர் கேட் வெப் (co-author Kate Webb), "நோயாளிகளை நிர்வகிக்கும்போது பாலினம் என்பது, கடுமையான நோய்க்கான ஆபத்து காரணி என்பதை மருத்துவர்கள் அடையாளம் காண இந்த தகவல்கள் உதவக்கூடும்" என்று AFP இடம் கூறினார். பல ஆய்வுகளில் பெண்கள் குறைவான பாதிப்பை கொண்டுள்ளனர் என்று அறிக்கை செய்யப்பட்டுள்ளது, இது ஆராய்ச்சியில் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான காரணி என்பதற்கான நினைவூட்டல்" என்று கேப் டவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் (Cape Town University researcher) கூறினார்.

இந்தப் போக்கு உலகளாவியது, ஒரு சில விதிவிலக்குகளை குறிப்பாக உயிரியல் வேறுபாடுகளுக்கு உட்படுத்தப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். ஆய்வின் ஆசிரியர்கள் "உள்ளார்ந்த மற்றும் தகவமைப்பு நோயெதிர்ப்பு அமைப்பு இரண்டிலும் பாலின வேறுபாடுகள் முன்னர் தெரிவிக்கப்பட்டன, மேலும் கோவிட் -19ல் பெண்களின் நன்மைக்கு இது காரணமாக இருக்கலாம் " என்று தெரிவித்தனர். பெண்கள் இயற்கையாகவே அதிக வகை I இன்டர்ஃபெரான் புரதங்களை (Type I interferon proteins) உற்பத்தி செய்கிறார்கள். இது சைட்டோகைன் புயல் (Cytokine Storm) எனப்படும் அசாதாரண நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

இது கோவிட் -19 இன் கடுமையான விளைவுகளைத் தூண்டுவதில் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. ஒரு "பெண்களின்" ஓஸ்ட்ராடியோல் ஹார்மோன் ("Female" oestradiol hormone) வைரஸின் மோசமான தாக்கத்தை தடுக்க பெண்களுக்கு உதவக்கூடும். ஏனெனில் இது டி உயிரணுக்களின் (T cells) பதிலை அதிகரிக்கிறது. இது பாதிக்கப்பட்ட உயிரணுக்களைக் கொல்லும் - மற்றும் ஆன்டிபாடிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. "இதற்கு மாறாக, ஆண் பாலின ஹார்மோன் டெஸ்டோஸ்டிரோன் நோய் எதிர்ப்பு சக்தியை அடக்குகிறது (Male sex hormone testosterone suppresses the immune system)" என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டனர்.

கடுமையான கோவிட் -19 உடன் தொடர்புடைய நோய்களில் பாலின அடிப்படையிலான வேறுபாடுகள் ஆண்களை அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று  நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் (Nature Communications) வெளியிட்ட ஆய்வில் எழுதினர். கூடுதலாக, உலகளவில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயுள்ள பெண்கள் மற்றும் ஆண்களின் விகிதாச்சாரத்தில் உள்ள ஒற்றுமையை ஆசிரியர்கள், "மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகளில் மிகவும் பொதுவானதாகக் கொமொர்பிடிட்டிகள் (comorbidities in hospitalised Covid-19 patients) காணப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவர்கள் கிட்டத்தட்ட 105 நாட்கள் எந்த அறிகுறிகளும் இல்லாமல் இருந்தனர், என்பதை ஆய்வில் கண்டுபிடித்தனர். இத்தகைய கண்டுபிடிப்புகள் எதிர்கால தடுப்பூசிகளுக்கு தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். பிற நோய்த்தொற்றுகளுக்கான முந்தைய தடுப்பூசிகள் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையிலான பதிலில் வேறுபாடுகளை காட்டியுள்ளன என்று வெப் குறிப்பிட்டார்.

"சார்ஸ்-கோவி -2 தடுப்பூசிகளுக்கும் (Sars-CoV-2 vaccines) இது பொருந்துமா என்பது இன்னும் தீர்மானிக்கப்படாமல் உள்ளது" என்று மேலும் அவர் கூறினார். ஆனால், தடுப்பூசி ஆராய்ச்சியைக் கருத்தில் கொள்ளும்போது பாலினத்தை ஒரு மாறியாக (sex as a variable) சேர்க்க வேண்டியதன் அவசியத்தை எங்கள் ஆய்வறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும் தொற்றுநோயில் இருந்து நம்மை காத்துக் கொள்ள அரசு அளித்து வரும் முறைகளை பின்பற்றுவதும் வெளியில் செல்லும்போது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தேவையானவற்றை செய்வதுமே நம்மை இந்த நோய் தொற்றிலிருந்து சில காலங்களுக்கு தள்ளி வைக்கும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...