கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய ஆசிரியர்கள் நியமனம் எப்போது? - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி...

 தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில், புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடுவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.

ஆசிரியர் தேர்வு:

கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் அதிகளவில் சேர்த்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளை விட இருமடங்கு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் சேர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ஆசிரியர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்து அனுப்ப பள்ளிக்கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், அரசுப்பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இதனால் போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நியமனம் செய்யப்படுவர். இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என தெரிவித்து உள்ளார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns