கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு...

 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தனியார் பள்ளிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசாணையும் வெளியிடப்பட்டது.



ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப்பட்டு உள்ளதால், அதற்கான பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு, ஆண்டு இறுதித்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. தற்போது 9 முதல் 11ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டு உள்ளதால், அதே முறை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பின்பற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெறும் வகையில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ எனும் சிறப்பு கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இது தேர்வு எழுதாத காரணத்தால் ஏற்படும் குறைபாட்டை சரிசெய்யும் என கூறப்படுகிறது.


இந்த முறையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை கொண்டு 30 நாட்கள் சுழற்சி முறை பயிற்சி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த கல்வியாண்டில் தொடக்கத்திலோ வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...