1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி - புதுச்சேரி அரசு (All students are Pass from 1st to 9th Standard - Puducherry Government)...
கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - அரசாணை (நிலை) எண்: 6, நாள்: 31-07-2021 வெளியீடு...
+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - அரசாணை (நிலை) எண்: 6, நாள்: 31-07-2021 வெளியீடு...
>>> அரசாணை (நிலை) எண்: 6, நாள்: 31-07-2021...
+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு - செய்தி வெளியீடு எண்: 538, நாள்: 31-07-2021...
+2 துணைத் தேர்வுகளை தனித்தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த 313 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்ச்சி - தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு...
செய்தி வெளியீடு எண்: 538, நாள்: 31-07-2021...
DEE PROCEEDINGS : 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் சார்ந்து- தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்...
DEE PROCEEDINGS : 2020-21 ஆம் கல்வி ஆண்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் சார்ந்து- தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 004010/ ஜெ1/ 2020, நாள்: 31-05-2021...
>>> தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 004010/ ஜெ1/ 2020, நாள்: 31-05-2021...
9,10,11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - 10ஆம் வகுப்புக்கு தேர்வு நடத்திக்கொள்ள அனுமதி...
9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கலந்தாலோசிக்காமல் எடுத்த முடிவு என நந்தகுமார் என்பவர் தாக்கல் செய்த வழக்கு முடித்து வைப்பு.
அதே போல் ஆல் பாஸ் உத்தரவு தொடர்பாக அரசு எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது ,11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்கள் தங்களுக்கான குரூப்பை தேர்வு செய்வதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டுதல் நெறிமுறையினை வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 11ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களின் சேர்க்கைக்கு தகுதியை கண்டறிய 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகள் தேர்வு நடத்திக் கொள்ளலாம் எனவும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிளஸ் 2 வில் 'ஆல் பாஸ்?' கல்வி அதிகாரிகள் விளக்கம்...
தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆண்டு முழுதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும், ஜன., முதல் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிளஸ் 2 தவிர, மற்ற அனைத்து வகுப்புகளுக்கும், ஆல் பாஸ் வழங்குவதாக, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. முழு ஆண்டு தேர்வு, பொது தேர்வு உட்பட எந்த தேர்வும் நடத்தப்படாது என, அறிவிக்கப்பட்டது.
பிளஸ் 2க்கு மட்டும் மே, 3 முதல் பொது தேர்வு துவங்க உள்ளது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்., 'பிளஸ் 2க்கும் ஆல் பாஸ் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்' என, அறிவித்தார். இதனால், பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆல் பாஸ் கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்கள் பள்ளிக் கல்வியில் இருந்து, உயர்கல்விக்கு செல்ல, பிளஸ் 2 பொது தேர்வு மிக முக்கியம். அந்த தேர்வில் ஆல் பாஸ் வழங்குவது சாத்தியமில்லை. பிளஸ் 2வில் பொது தேர்வு நடத்தாவிட்டால், உயர்கல்வி நிறுவனங்கள், தமிழக மாணவர்களை, இன்ஜினியரிங், மருத்துவம், கட்டடவியல், சட்டம் என, எந்த படிப்பிலும் சேர்த்து கொள்ளாது. எனவே, பிளஸ் 2 மாணவர்களின் உயர்கல்விக்கான, எதிர்கால தேவை அடிப்படையில், அவர்களுக்கு பொது தேர்வு நடத்தி, மதிப்பெண் வழங்குவது கட்டாயம்.
பிளஸ் 1 வரை மாணவர்கள், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டது போல, பிளஸ் 2க்கு ஆல் பாஸ் சாத்தியமில்லை' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11-ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு தனித்தேர்வு நடத்தலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு...
தமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய மறுத்த சென்னை ஐகோர்ட்டு, 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பள்ளிகள் தனித்தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
அனைவரும் தேர்ச்சி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 9-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித் துறை கடந்த பிப்ரவரி 25-ந் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி தனியார் பள்ளி சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
‘பொதுத்தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் 11-ம் வகுப்பில் சேரும்போது மாணவர்களுக்கு விரும்பும் பாடத்திட்டத்தில் சேர்க்கை வழங்க முடியும். தேர்வுகளை ரத்து செய்வதற்கு முன்பு எந்த ஒரு ஆலோசனையையும் அரசு மேற்கொள்ளவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தனித்தேர்வு
அந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், ‘பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பார்கள். எனவே, எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற மனுதாரர் வாதத்தை ஏற்க முடியாது. மாணவர்கள் தேர்ச்சி தொடர்பான அரசாணையையும் ரத்து செய்ய முடியாது.
அதேசமயம், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்புக்குச் செல்லும் மாணவர்கள், விருப்பப் பாடத்தை தேர்வுசெய்யும் வகையில், அவர்களின் தகுதியைக் கண்டறிய பள்ளிகள் தனித்தேர்வு நடத்திக்கொள்ளலாம். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிகளை உருவாக்கி அறிவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்துவைத்தனர்.
1 முதல் 8ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு...
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தனியார் பள்ளிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டாலும் பள்ளிகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப்பட்டு உள்ளதால், அதற்கான பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு, ஆண்டு இறுதித்தேர்வு குறித்து பள்ளிக்கல்வித்துறை இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. தற்போது 9 முதல் 11ம் வகுப்பு வரை தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்பட்டு உள்ளதால், அதே முறை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பின்பற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 1 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி பெறும் வகையில் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ எனும் சிறப்பு கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும், இது தேர்வு எழுதாத காரணத்தால் ஏற்படும் குறைபாட்டை சரிசெய்யும் என கூறப்படுகிறது.
இந்த முறையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை கொண்டு 30 நாட்கள் சுழற்சி முறை பயிற்சி மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டு இறுதியிலோ அல்லது அடுத்த கல்வியாண்டில் தொடக்கத்திலோ வழங்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படாது...
கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கேற்ப பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி அடைய செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டும் 9 முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்சியடையச் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ள நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் 11-ம் வகுப்பில் சேருவதற்கு தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள் அவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை வெளியீடு...
மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை எண்: 48, நாள்: 25-02-2021 வெளியீடு...
>>> அரசாணை எண்: 48, நாள்: 25-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி - முதல்வர் அறிவிப்பு....
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-ன் கீழ் உரையாற்றிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
கடந்த ஆண்டும் மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில்தான் திறக்கப்பட்டன. குறிப்பாக பொதுத் தேர்வெழுதும் 12 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்திலும், 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில், தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை மாணவர்களும் பள்ளிகளும் அதிகம் எதிர்பார்த்திருந்தன.
இது குறித்த இறுதி முடிவை தமிழக முதல்வர்தான் எடுப்பார் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனும் கடந்த வாரம் கூறியிருந்தார்.
இது தொடர்பான ஆலோசனைகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில், தமிழகத்தில் 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Live Webinar Link for Head Masters and English Teachers
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...