கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படாது...



கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கேற்ப பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி அடைய செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டும் 9 முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்சியடையச் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும்  தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ள நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் 11-ம் வகுப்பில் சேருவதற்கு தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள் அவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப முக்கிய பாடங்களுக்கு  மட்டும் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கவும்  பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...