கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதாருடன் பதிவு செய்யப்பட்டுள்ள MOBILE எண் கண்டறிய வழிமுறைகள்...


நம்மில் சிலர் ஆதார் அட்டை வழங்கப்பட்ட காலத்தில் ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க தவறியிருப்போம். ஆனால் இன்று நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் ஆதார் எண்ணிலுள்ள மொபைல் எண் தேவைப்படுகிறது. 



ஆதார் அட்டை வழங்கப்பட்ட போது இருந்த ஆதார் எண் தற்போது பலருக்கு மறந்திருக்கலாம். அவ்வாறு இருந்தால் மிக எளிய முறையில் ஆதார் அட்டையில் உள்ள உங்கள் பழைய எண்ணை தெரிந்து கொள்ளலாம்.


ஆதாரில் மொபைல் எண்ணை கண்டுபிடிக்க,

UIDAI யின் https://uidai.gov.in/ வலைதள பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

அதில் கொடுக்கப்பட்டுள்ள பல பிரிவுகளில் My ஆதார் வகையை தேர்வு செய்ய வேண்டும்.

அதில் ஆதார் Service என்பதை தெரிவு செய்யவும்.

பிறகு மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் குறித்த புதிய பக்கம் திறக்கப்படும்.

அதில் உங்கள் ஆதார் எண் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.

பிறகு கொடுக்கப்பட்டுள்ள கேப்சாக் (Captcha) குறியீட்டை சரியாக பதிவிடவும்.

நீங்களாக ஒரு ஓடிபி எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அந்த ஓடிபி எண்ணை பதிவு செய்த பிறகு உங்கள் மொபைல் எண் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் The Mobile you have entered already verified with our records என்று செய்தி அனுப்பப்படும்.

ஆதாரில் மொபைல் எண் பதிவு செய்யப்படவில்லை என்றால் The Mobile number you had entered does not match with our records என்ற செய்தி அனுப்பப்படும்.

இதே வழிமுறையை பயன்படுத்தி உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு ஆதரில் உள்ள தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns