15 புதுமுகங்கள், 19 அனுபவஸ்தர்கள் அடங்கிய திமுகவின் புதிய அமைச்சரவை...

 தமிழகத்தில் பொறுப்பேற்கும் அமைச்சர்களில் 15 பேர் புதிய அமைச்சர்கள் உள்ளனர். 19 பேர் அனுபவம் உள்ள அமைச்சர்கள்.


திமுக அமைச்சரவையில் முதல்வர் ஸ்டாலினுடன் சேர்த்து 34 அமைச்சர்கள் பொறுப்பேற்க உள்ளனர். இவர்களில் மிகுந்த அனுபவம் உள்ள அமைச்சர்களும், அதிமுக, திமுக இரண்டு ஆட்சியிலும் அமைச்சர்களாக இருந்தவர்களும், சட்டப்பேரவைக்கு வரும்போதே அமைச்சர் ஆன புதுமுகங்கள் என்கிற கலவையாக அமைச்சரவை அமைந்துள்ளது.



ஸ்டாலின் - முதல்வர். இவர் ஏற்கெனவே துணை முதல்வராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தார்.


துரைமுருகன் - நீர்வளத்துறை அமைச்சர். இவர் நீண்டகால அமைச்சர் அனுபவம் உள்ளவர். பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளின் அமைச்சராக இருந்தார்.


கே.என்.நேரு - உள்ளாட்சி நிர்வாகம். இவர் ஏற்கெனவே போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.


ஐ.பெரியசாமி - கூட்டுறவுத்துறை அமைச்சர். இவர் ஏற்கெனவே வருவாய் மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.


பொன்முடி - உயர்கல்வித்துறை அமைச்சர். இதற்கு முன்னரும் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.


எ.வ.வேலு - பொதுப்பணித்துறை அமைச்சர். இவர் ஏற்கெனவே உணவுத்துறை அமைச்சராக இருந்தார்.


எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் - வேளாண்மைத்துறை அமைச்சர். இதற்கு முன் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார்.


கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் - வருவாய்த்துறை அமைச்சர். இதற்கு முன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.


தங்கம் தென்னரசு - தொழில் துறை, தமிழ் ஆட்சி மொழி, தொல்லியல் துறை அமைச்சர். இதற்கு முன்னர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.


எஸ்.ரகுபதி - சட்டத்துறை அமைச்சர். இதற்கு முன் ஜெயலலிதா அமைச்சரவையில் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.


முத்துசாமி - வீட்டுவசதித் துறை அமைச்சர். இதற்கு முன்னர் எம்ஜிஆர் ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தார்.


பெரியகருப்பன் - ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர். இதற்கு முன் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தவர்.


தா.மோ.அன்பரசன் - ஊரக தொழிற்துறை அமைச்சர். இதற்கு முன் தொழில்துறை அமைச்சராக இருந்துள்ளார்.


மு.பெ.சாமிநாதன் - செய்தித்துறை அமைச்சர். இதற்கு முன்னர் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்தார்.


கீதா ஜீவன் - சமூக நலத்துறை அமைச்சர். இதற்கு முன்னரும் சமூக நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.


அனிதா ராதாகிருஷ்ணன் - மீன்வளத்துறை அமைச்சர். முன்னர் வீட்டுவசதித்துறை அமைச்சராக ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்தவர்.


ராஜகண்ணப்பன் - போக்குவரத்துத் துறை அமைச்சர். முன்னர் பொதுப்பணித்துறை அமைச்சராக ஜெயலலிதா அமைச்சரவையில் பதவி வகித்தவர்.


கா.ராமசந்திரன் - வனத்துறை அமைச்சர். இதற்கு முன்னர் கதர் வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார்.


சக்கரபாணி - உணவுத்துறை அமைச்சர். இவர் தமிழக சட்டப்பேரவையின் புதிய அமைச்சர் ஆவார். திமுக கொறடாவாக முன்னர் பதவி வகித்துள்ளார்


செந்தில்பாலாஜி - மின்சாரம் மதுவிலக்கு- ஆயத்தீர்வை அமைச்சர். இதற்கு முன்னர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர்.


ஆர்.காந்தி - கைத்தறித் துறை அமைச்சர். முதல் முறையாக அமைச்சர் ஆகிறார்.


மா.சுப்பிரமணியம் - சுகாதாரத்துறை அமைச்சர். புதிய அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். இதற்கு முன் சென்னை மாநகராட்சி மேயராகப் பதவி வகித்தவர்.


பி.மூர்த்தி - வணிகவரித்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


எஸ்.எஸ்.சிவசங்கர் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


சேகர்பாபு - அறநிலையத்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


பழனிவேல் தியாகராஜன் - நிதித்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


ஆவடி நாசர் -பால்வளத்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


மஸ்தான் - சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


அன்பில் மகேஷ் பொய்யாமொழி - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


மெய்யநாதன் - சுற்றுச்சூழல் துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


சி.வி.கணேசன் - தொழிலாளர் நலத்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


மனோ தங்கராஜ் - தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


மதிவேந்தன் - சுற்றுலாத்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


கயல்விழி செல்வராஜ் - ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர். புதிதாக அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.


இதில் பாஜக வேட்பாளர்களை குறிப்பாக பாஜக தலைவர் முருகனை தாராபுரத்தில் தோற்கடித்த கயல்விழி செல்வராஜையும், தடா பெரியசாமியை திட்டக்குடியில் தோற்கடித்த சி.வி.கணேசனையும் அமைச்சராக்கியுள்ளனர்.


சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இருவரும், பெண்கள் இருவரும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.


நன்றி: இந்து தமிழ் திசை

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...