அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் மொழி இணைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப இயக்கக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடக்கும். 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பம் பெறப்பட்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கவுள்ளது. பாலிடெக்னிக் அரியர் தேர்வுக்கு ஒரு பேப்பருக்கு 65ரூ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலம் பெரியார், காமராஜர் , அண்ணா பல்கலைகழக முறைகேடு புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி நியமித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.
12 வகுப்பு தேர்வு ரத்து ஆகியுள்ளதால், மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் குறித்த முடிவுகள் எடுத்த பின்னரே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படும். முதலமைச்சருடன் ஆலோசித்த பின்னர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்து முடிவெடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும்" எனக் கூறினார்.