கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொன்முடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொன்முடி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் புதிய மாதிரி பாடத்திட்டத்தை 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் - உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிக்கை - செய்தி வெளியீடு எண்: 1479, நாள்: 25-07-2023 (Implementation of New Model Syllabus in Colleges / Universities from Academic Year 2023-24 - Report of Minister of Higher Education - Press Release No: 1479, Dated: 25-07-2023)...

 

>>> கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் புதிய மாதிரி பாடத்திட்டத்தை 2023-24 கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்துதல் - உயர் கல்வித் துறை அமைச்சரின் அறிக்கை - செய்தி வெளியீடு எண்: 1479, நாள்: 25-07-2023 (Implementation of New Model Syllabus in Colleges / Universities from Academic Year 2023-24 - Report of Minister of Higher Education - Press Release No: 1479, Dated: 25-07-2023)...


உதவிப் பேராசிரியர்களை நிரப்புவதற்கான டிஆர்பி தேர்வு அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - நாளிதழ் செய்தி (TRB exam notification for filling Assistant Professors will be released in 10 days - Minister Ponmudi Announced)...

 உதவிப் பேராசிரியர்களை நிரப்புவதற்கான டிஆர்பி தேர்வு அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - நாளிதழ் செய்தி (TRB exam notification for filling Assistant Professors will be released in 10 days - Minister Ponmudi Announced)...





தற்போதைய கல்வி முறையை மாற்றக்கூடாது. தேசிய கல்விக் கொள்கை நீட் தேர்வை விடக் கொடுமையானது - உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் அறிக்கை (The current Education system should not be changed. National Education Policy is worse than NEET - Higher Education Minister Mr. K. Ponmudi's statement)...



>>> தற்போதைய கல்வி முறையை மாற்றக்கூடாது. தேசிய கல்விக் கொள்கை நீட் தேர்வை விடக் கொடுமையானது -  உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் அறிக்கை (The current Education system should not be changed. National Education Policy is worse than NEET - Higher Education Minister Mr. K. Ponmudi's statement)...

சென்னை IITயில் இனி வரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடப்படுவதை உறுதி செய்யுமாறு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம்(Letter from the Minister of Higher Education Thiru.Ponmudy to ensure that "Tamilthai Vazhthu" is sung at all events including the Graduation Ceremony at IIT Chennai from now on)...

 சென்னை IITயில் இனி வரும் காலங்களில் பட்டமளிப்பு விழா உட்பட அனைத்து நிகழ்ச்சிகளிலும் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடப்படுவதை உறுதி செய்யுமாறு ஐஐடி இயக்குனர் பேராசிரியர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் அனுப்பியுள்ளார்.



உயர்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 (PDF File) : மானியக் கோரிக்கை எண்:20, நாள்: 26-08-2021 - முனைவர் க.பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர்[Higher Education - Policy note 2021-2022 (PDF File): Grant Request No: 20, Date: 26-08-2021 - Dr. K. Ponmudi, Minister of Higher Education ]...



>>> உயர்கல்வித்துறை - கொள்கை விளக்கக் குறிப்பு 2021-2022 (PDF File) : மானியக் கோரிக்கை எண்:20, நாள்: 26-08-2021 - முனைவர் க.பொன்முடி, உயர்கல்வித்துறை அமைச்சர்...



2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்(2021-2022 - Higher Education - Grants Request - 25 New Announcements - Full Details)...

 2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்...



💥 பொறியியல் முதுநிலைப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.6000 உதவித் தொகை...


💥 IRTT கல்லூரி அரசு பொறியியல் கல்லூரியாக மாற்றம்...


💥 10 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்...


>>> 2021-2022 - உயர்கல்வித்துறை - மானியக் கோரிக்கை - 25 புதிய அறிவிப்புகள் - முழு விவரம்...


கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு...



 தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் தற்பொழுது துவங்கியிருக்கும் புதிய கல்வியாண்டில் பயிலும் 2 மற்றும் 3வது ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


ஆன்லைன் வகுப்புகள்

கொரோனா 2ஆம் பேரலை காரணமாக மூடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் பல மாநிலங்களில் மீண்டுமாக திறக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.


இதனிடையே கல்லூரி மாணவர்களுக்கான 2021-22 புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவுகளும் துவங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் துவங்குமா என்று எதிர்பார்ப்புகள் எழுந்து வந்தது.


இந்நிலையில் கல்லூரிகளில் 2ஆவது மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான அடுத்த கல்வியாண்டு வகுப்புகள் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொரோனா 2ஆம் பரவல் குறைவதை பொறுத்து தான் உயர் கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


உயர்கல்வியில் சேர்வதற்கு வரும் 26ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி...

 


பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் ஜூலை 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


 கலை, அறிவியல் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்களும் ஜூலை 26 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி...


12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கீடு அடிப்படையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை - அமைச்சர் பொன்முடி...

 உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பு...


* 12ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை

 

* ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கும்






அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...



 அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...


சென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் எம்.பில் படிப்பு தொடர்ந்து நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை செயலாளர், உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார். அத்துடன் இந்த ஆலோசனையில் 13 பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் முறை மற்றும் மாணவர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.



இந்நிலையில் மாணவர் சேர்க்கை, நேரடி வகுப்புகள் குறித்த ஆலோசனை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி, “துணைவேந்தர் மற்றும் பல்கலைக் கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வெளிப்படையான தன்மையை பின்பற்றி பணி நியமனம் செய்யப்படும். அதேபோல் பல்கலைக்கழகங்களில் உள்ள முறைகேடுகளை விசாரிக்க குழு அமைக்கப்படும். ஒற்றை சாளர முறையில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலமாக பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆகஸ்ட் 1- முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும். ஆகஸ்ட் 1க்கு பிறகு வெளிப்படைத் தன்மையுடன் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். அனைத்து பல்கலைக்கழகங்களும் எம்.ஃபில். படிப்பை தொடர வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.



M.Phil., படிப்பு கூடாது என்ற தேசிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கத்துக்கு எதிராக, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மீண்டும் M.Phil., படிப்பு பயிற்றுவிக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.



*ஏற்கனவே 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு உள்ளிட்ட உள்ளடக்கங்கள் கொண்ட புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்று அரசு கூறிவரும் நிலையில், அடுத்த அறிவிப்பு வெளியீடு...


பொறியியல், கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்போது? அமைச்சர் பொன்முடி விளக்கம்...



அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் மொழி இணைக்கப்படும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


தொழில்நுட்ப இயக்கக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை நடக்கும். 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பம் பெறப்பட்டு மாணவர்கள் சேர்க்கை தொடங்கவுள்ளது. பாலிடெக்னிக் அரியர் தேர்வுக்கு ஒரு பேப்பருக்கு 65ரூ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சேலம் பெரியார், காமராஜர் , அண்ணா பல்கலைகழக முறைகேடு புகார் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி நியமித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.


12 வகுப்பு தேர்வு ரத்து ஆகியுள்ளதால், மதிப்பெண் வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் குறித்த முடிவுகள் எடுத்த பின்னரே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கப்படும். முதலமைச்சருடன் ஆலோசித்த பின்னர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை குறித்து முடிவெடுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக விருப்ப பாடங்களில் 9வது பாடமாக தமிழ் இணைக்கப்படும்" எனக் கூறினார்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மருத்துவ சேர்க்கை- மத்திய அரசின் கூட்டத்தில் தமிழக அரசு உறுதி...

 


புதிய கல்விக் கொள்கை ஏற்கமுடியாது - தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை...

 புதிய கல்விக் கொள்கை ஏற்கமுடியாது - தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை...



மத்திய அரசின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் - அமைச்சர் பொன்முடி...

 


+2 தேர்வு நடத்தப்படும், நீட் தேர்வு நடத்த மாட்டோம் - மத்திய கல்வித்துறை அமைச்சர் கூட்டத்தில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் தகவல்...



 தமிழகத்தில் +2 தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று ஆலோசனை நடத்தினார். அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலி வாயிலாக இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். 


இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை வகித்தார். தமிழகத்தின் சார்பில் மாநில உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



இக்கூட்டத்தில் நீட் மற்றும் ஜேஇஇ போன்ற தொழில்முறைக் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கட்டாய அடிப்படை என்பதால் அந்த தேர்வை நடத்தியே ஆக வேண்டும் என்பதால், அதைப் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது. 



மேலும், சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் 12ம் வகுப்புக்கு தேர்வு நடத்துவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரியுள்ளனர். இன்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மாலையில் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.



இந்நிலையில் +2 தேர்வு தொடர்பாக மத்திய அரசு நடத்திய ஆலோசனையில் பங்கேற்ற பின் அமைச்சர்கள், அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய அவர்கள்; தமிழகத்தில் +2 தேர்வு கட்டாயம் நடைபெறும். கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் டூ தேர்வு நடத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு தொடர்பாகவே முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. 



தமிழகத்தின் நிலைப்பாடு பற்றி செவ்வாய்கிழமைக்குள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். ஜேஇஇ, இசிஆர் நுழைவுத் தேர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வு கூடாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது எனவும் கூறினார்.


அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சீனியாரிட்டி அடிப்படையில் முறையாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்- உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...

 



அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் யுஜிசி தகுதி மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் முறையாகப் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார் .


இதுகுறித்துச் சென்னையில்  செய்தியாளர்களிடம் பொன்முடி அளித்த பேட்டி:


'💢'புதிய கல்விக் கொள்கை குறித்து ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் அது மாநில உரிமைகளில் தலையிடுவது. அதை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்த்து வருகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதே புதிய கல்விக் கொள்கை குறித்து ஒரு குழுவை நியமித்தார். நானும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசும் சேர்ந்து கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி அதில் உள்ள குறைகளை வெளியிட்டு இருக்கிறோம்.


💢அந்த அடிப்படையில் நிச்சயமாகப் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது. முதல்வர் ஆலோசனையின்படி உயர் கல்வித்துறை அமைச்சராக நானும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் துறை ரீதியாக நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.


💢அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று தவறுதலான முறையில் கடந்த ஆட்சிக் காலங்களில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. அவை எதையும் நம்பி சம்பந்தப்பட்டவர்கள் ஏமாற வேண்டாம். முதல்வருடன் கலந்து பேசி, உயர் கல்வித் துறைச் செயலருடன் ஆலோசித்து, முறையாகப் பணி நிரந்தரம் செய்ய உள்ளோம்.


💢யுஜிசி தகுதி மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். இதில் தரகர்களின் குறுக்கீட்டை யாரும் நம்ப வேண்டாம். இந்த விவகாரத்தில் தனிப்பட்ட வகையில் பணம் பெறுபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்''.


இவ்வாறு அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க நடவடிக்கை - அமைச்சர் பொன்முடி...

 புதிய கல்வி கொள்கை என்பது மாநில உரிமைகளில் தலையிடுவது ஆகவே புதிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் நுழைய விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி...




புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது: அமைச்சர் பொன்முடி உறுதி...

 புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டில் நுழையவே முடியாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி  உறுதிபடத் தெரிவித்துள்ளார்.



ஆன்லைன் பொறியியல் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்துள்ளதாகக் கூறியிருந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இதுதொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். சென்னை, சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


இதையடுத்து நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ''அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட மதிப்பெண் குறைந்துள்ளதாகப் புகார் அளித்துள்ளனர். அவர்கள் உள்ளிட்ட 4 லட்சம் மாணவர்களும் விருப்பப்பட்டால் தேர்வை எழுதலாம். முன்பு ஆன்லைன் தேர்வு ஒரு மணி நேரமாக இருந்தது. தற்போது மூன்று மணி நேரம் தேர்வு நடத்தப்பட உள்ளது. மற்ற பல்கலைக்கழகங்களில் தேர்வு நடத்தப்படுவது போல அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும். எனினும் இத்தேர்வை எழுதுவதற்கு தேர்வு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை



தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்டு, மாணவர்கள் மேற்படிப்புக்கு அல்லது வேலைக்குச் செல்லலாம். இந்த மறு தேர்வுகள் நடந்து முடிந்த பிறகு, வழக்கமான தேர்வுகளும் விரைவில் நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீதிமன்றம் அறிவித்தது போல நாங்கள் தேர்வை முறையாக நடத்துகிறோம். தேர்வைப் புறக்கணிக்கவில்லை.



எனினும் ஏற்கெனவே தேர்வு கட்டணம் செலுத்தாதவர்கள் இந்த முறை தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டு தேர்வை எழுத வேண்டும். மீண்டும் தேர்வு எழுதினாலும் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதுவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.



உயர் கல்வித்துறைச் செயலாளர் புதிய கல்விக் கொள்கை, அதில் உள்ள குறைகள் பற்றியும் புதிய கல்விக் கொள்கையை எப்படிச் செயல்படுத்த முடியும் என்பது குறித்தும் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார் அவை அனைத்தையும் நாங்கள் ஆலோசித்து, நிச்சயமாக மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் செயல்படுவோம். புதிய கல்விக்கொள்கை நிச்சயம் தமிழ்நாட்டில் நுழையவே முடியாது  என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது'' என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

ஆன்லைன் தேர்வு முடிவுகள் முறைகேடு குறித்து முதல்வர் இன்று மாலை அறிவிப்பு - அமைச்சர் பொன்முடி...

 


கல்லூரி மாணவர்களின் ஆன்லைன் தேர்வு, அரியர் தேர்வு உள்ளிட்ட தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடு நடைபெற்றுள்ளதாக மாணவர்கள் தொடர்ந்து 100க்கு மேற்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் இன்று மாலை முதலமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முக்கிய முடிவு எட்டப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


 

கொரோனா காலமாக கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் முதல் கடந்த 2 வருடங்களாக கல்லூரி மாணவர்களுக்கான பருவ தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் தேர்தலுக்கு முன் நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வு முடிவுகளில் ஏராளமான குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு புகார் வந்துள்ளது.



இந்நிலையில் புதிதாக உயர் கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பொன்முடி இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் நடைபெற்று முடிந்த கல்லூரி தேர்வுகள் பிரச்சினை தொடர்பாக இன்று ஆலோசனை மேற்கொண்டார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நடைபெற்று முடிந்த கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளில் பலவித பிரச்சனைகள், பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தொடர்ந்து மாணவர்கள் தரப்பில் புகார் வந்துள்ளதாகவும், இதுகுறித்து துணைவேந்தர்கள் மற்றும் தேர்வு அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தியதாக தெரிவித்தார்.



தொடர்ந்து மாணவர்கள் தரப்பிடம் அவர்களது கருத்துக்களை கேட்டறியப் பெற்று இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...