கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று முதல் பஸ்கள் ஓடும் - மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்துகள் இயங்கும் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு...


 தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 9333 பேருந்துகள் நாளை மறுநாள் முதல் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். மாவட்டங்களுக்கு உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டமும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை 5ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்கனவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.


இந்த சூழலில் வரும் 28ம் தேதி முதல் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், நெல்லை,. கன்னியாகுமரி, ராமநாதபுரம், கடலூர் உள்பட மேலும் 23 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்தது.


எந்தெந்த மாவட்டங்கள் - 50 சதவீத பயணிகள்

இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று வெளியிட்டுள்ள அறவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள், கோவிட்-19 தொற்றின் காரணமாக அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கனை 28.6.2021 முதல் 05.07,2021 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்கள். அந்த உத்தரவில் வகை 2ல் குறிப்பிட்டுள்ளவாறு அரியலூர், கடலூர், திண்டுக்கல், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கிடையேயும் பொதுப் பேருந்து போக்குவரத்தினை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்துள்ளார்கள்.


27 மாவட்டங்களில் பேருந்துகள் - 28ம் தேதி முதல் பேருந்துகள்

ஏற்கனவே தமிழக முதல்வர் அவர்கள், வகை 3ல் குறிப்பிட்டுள்ளவாறு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கிடையே பொதுப்போகுவரத்தினை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளித்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஏற்கனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்கள் என ஆக மொத்தம் 27 மாவட்டங்களில் வரும் 28.06.2021 காலை 6 மணி முதல் 50 சதவீத இருக்கைகளுடன், மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயும் இயக்கப்படுகின்றன.



எத்தனை பேருந்துகள்  - எங்கு எவ்வளவு..

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மொத்தம் 19290 பேருந்துகளில், மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2200 பேருந்துகளும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 385 பேருந்துகளும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 2210 பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 50 பேருந்துகளும், கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1592 பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1300 பேருந்துகளும் மற்றும் திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 1153 பேருந்துகள் என மொத்தம் 9323 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



ராஜகண்ணப்பன்  - போக்குவரத்துஅமைச்சர்

இயக்கப்படுகின்ற பேருந்துகளை உரிய முறையில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து அரசு விதித்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கிடுமாறு உத்தரவிட்ப்பட்டுள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள வழிகாட்டு முறைகளான கட்டாய முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி பயணித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' இவ்வாறு போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...