கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: பள்ளிக்கல்வி ஆணையர்...

 


தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், கடந்த ஆண்டு முதல் கல்வி டிவி மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து, மாணவர்கள் வீட்டில் இருந்து கல்வி பயில அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.


இதேபோன்று, தனியார் பள்ளிகளிலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகள் கடந்த ஏப்ரல் 14ம் தேதி திறக்கப்பட்டு, தலைமை ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் வருகை புரிந்து, மாணவர் சேர்க்கை, மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகிறது. ஏனெனில், கொரோனா தொற்று காரணமாக கடந்த 15 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், கூலி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவாய் இல்லாமல் தவித்து வருகின்றனர்.


இந்த சூழ்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதால், 70 சதவீத கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. ஆனால், பல தனியார் பள்ளிகளில் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என கூறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆகஸ்ட் 31-க்கு முன் 40% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். 35% கட்டணத்தை பள்ளிகள் திறந்த 2 மாதத்திற்குள் வசூல் செய்து கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...