கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
அனைத்து பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு (Awareness to Girls) ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்ய உத்தரவு...
Awareness to Girls
அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்து கீழ் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட copy ஐ முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
குறிப்புகள்:
1. ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் incharge ஆக நியமனம் செய்ய வேண்டும்.
2. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்யும் போது மாணவிகள் பயிலும் வகுப்பு incharge ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு எனவும் மேல் நிலை வகுப்பு , உயர் நிலை வகுப்பு, நடுநிலை வகுப்பு, தொடக்க நிலை வகுப்பு எனவும் பேதம் பிரித்து பார்க்க வேண்டியதில்லை.
3. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்ய வேண்டி இருப்பினும் மாணவிகளின் எண்ணிக்கை ஆசிரியைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிட்டு சமமாக பிரித்தல் வேண்டும்.
4.ஒரே படிவத்தில் அனைத்து மாணவிகளின் பெயர்களையும் வகுப்பு வாரியாக type செய்து incharge ஆசிரியைகளின் பெயருடன் அனுப்பவும்.
5. சந்தேகங்களுக்கு 7373003103 என்ற எண்ணில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரைத் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின் முதல் பக்கத்தின் மேலும் கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.
மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்களை incharge ஆக நியமனம் செய்யக் கூடாது.
பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின் முதல் பக்கத்தின் மேலும் கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
படிவம்👇👇
https://drive.google.com/file/d/1LrNsp0cUAbG7fxfYno1tkBBXdFFi9GDj/view?usp=drivesdk
ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ அறிவித்துள்ள உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது....
ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு சிபிஎஸ்இ அறிவித்துள்ள உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அண்மையில் அறிவித்தது. பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாகவும் திறமையான மாணவர்களை ஊக்கமளிக்கும் விதமாகவும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
10-ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ள மாணவிகள் மற்றும் 11, 12-ம் வகுப்புகளை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள். எனினும் அப்பள்ளிகளில் மாதந்தோறும் கல்விக் கட்டணம் ரூ.1,500-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தியக் குடிமகன்கள் மட்டுமே இந்த உதவித் தொகைக்குத் தகுதியானவர்கள். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகையை சிபிஎஸ்இ வழங்கும்.
இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 10 தேதி கடைசித் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமர்ப்பிக்க வேண்டிய தேதி டிசம்பர் 28 ஆகவும் இருந்தது.
கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிபிஎஸ்இ இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாமல் போனதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில் பெற்றோர்கள் மற்றும் மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று, உதவித்தொகையைப் பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல விண்ணப்பப் படிவத்தைப் புதுப்பிக்கச் சமர்ப்பிக்க வேண்டிய தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: cbse.nic.in
ஆதிதிராவிடர் பெண் குழந்தைகளுக்கான கல்வி மேம்பாடு ஊக்குவிப்புத் தொகை விண்ணப்பப் படிவங்கள் (PDF Format)
>>> Click here to Download SC Girls Scholarship - Individual Student Application Format
>>> Click Here to Download MBC / SC Girls Scholarship Consolidation Format 1...
>>> Click here to Download SC Girls Scholarship - Consolidation Format 2
>>> Click Here to Download SC Girls Scholarship UC Format...
>>> Click here to Download SC Girls Scholarship - Acquittance
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...