கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌கள், இளநிலை உதவியாளர்‌கள் மற்றும்‌ நூலகர்‌கள் ஆகியோருக்கு பணிநியமன ஆணைகள்‌ - முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்‌...

 செய்தி வெளியீடு எண்‌:448, நாள்‌:15.07.2021

செய்தி வெளியீடு

பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌, இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ நூலகர்‌ ஆகிய பணியிடங்களுக்குப்‌ பணிநியமன ஆணைகள்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வழங்கினார்‌.


தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ மூலம்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்‌ பணியிடத்திற்குத்‌ தெரிவு செய்யப்பட்ட 20 நபர்களுக்குப்‌ பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக 4 நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ திரு.மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ இன்று (15.7.2021) தலைமைச்‌ செயலகத்தில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கினார்‌.


மேலும்‌, பள்ளிக்கல்வித்‌ துறையில்‌ பணியாற்றும்போது உயிர்நீத்த பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்குக்‌ கருணை அடிப்படையில்‌ பணிநியமன ஆணைகளை வழங்கிடும்‌ விதமாக, 250 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்குப்‌ பள்ளிக்கல்வித்‌ துறை அலுவலகங்கள்‌ மற்றும்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ பணியாற்றிட இளநிலை உதவியாளர்‌ பணியிடத்திற்கான பணிநியமன ஆணைகளையும்‌, பொது நூலகத்‌ துறையில்‌ பணியாற்றிட 10 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு நூலகர்‌ பணியிடத்திற்கும்‌, ஒரு பணியாளரின்‌ வாரிசுதாரருக்கு இளநிலை உதவியாளர்‌ பணியிடத்திற்கும்‌, என மொத்தம்‌ 261 பணியாளர்களின்‌ வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில்‌ பணிநியன ஆணைகளை வழங்கிடும்‌ அடையாளமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ 6 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர்‌ மற்றும்‌ நூலகர்‌ பணியிடங்களுக்கான பணிநியன ஆணைகளை வழங்கினார்‌.


இந்த நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு பள்ளிக்கல்வித்‌ துறை அமைச்சர்‌ திரு.அன்பில்‌ மகேஷ்‌ பொய்யாமொழி, தலைமைச்‌ செயலாளர்‌ முனைவர்‌ வெ.இறையன்பு, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்‌ துறை முதன்மைச்‌ செயலாளர்‌ திருமதி.காகர்லா உஷா, இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்‌ துறை ஆணையர்‌ திரு.க.நந்தகுமார்‌, இ.ஆ.ப., மற்றும்‌ அரசு உயர்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.


வெளியீடு: இயக்குநர்‌, செய்தி மக்கள்‌ தொடர்புத்துறை, சென்னை-9






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns