கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்போருக்கு கடும் தண்டனை தர புதிய சட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு...



 பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்போருக்கு கடும் தண்டனை தர புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பேரவையில் கேள்வி நேரத்தில் பென்னாகரம் பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி கேள்விக்கு முதலமைச்சர் பதில் அளித்தார். தமிழகத்தில் குட்கா பொருள் விற்பனை முற்றிலும் தடுக்கப்படும் எனவும் கூறினார். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்போர், கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குட்கா விஷயத்தில் காவல்துறையினரை ஊக்குவிக்க தமிழக அரசு நிச்சயம் தயங்காது என தெரிவித்தார். தமிழகத்தில் இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டு 11,247 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். குட்கா வழக்கில் 15 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என கூறினார்.


போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் 89  பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசினார். தமிழக சட்டப்பேரவையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி நேரத்தில் முதலமைச்சர் பதிலளித்துள்ளார். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முதல்வர் சார்ந்த துறைகள் கேள்வி நேரத்தில் இடம் பெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேள்வி நேரத்தில் முதல்வர் சார்ந்த துறைகளுக்கு பதில் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்கப்பட்டது. கேள்வி நெரத்தில் போதைப்பொருள் தடுப்பு குறித்து பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் பதில் அளித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

PGTRB Exam Notification 2025 - Total Vacancies : 1996

  PGTRB Exam Notification 2025 Released - Total Vacancies : 1996 Total Vacancy - 1996 Online Application: 10.07.2025 முதல் 12.08.2025 வரை வி...