கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பிடித்தம் செய்த பங்களிப்பு ஓய்வூதியப் பணம்(Contributory Pension Scheme Fund) ரூ.அறுபது ஆயிரம் கோடி(60 Thousand Crores) எங்கே?

 ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக அரசு பிடித்தம் செய்த ரூ.60 ஆயிரம் கோடி தொகை எங்கே போனது’ என சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கேள்வி எழுப்பியுள்ளனர்.


அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2003 ஏப்ரல்1 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில் அரசுஊழியர், ஆசிரியர்கள் 8 லட்சம் பேர் உள்ளனர். இவர்களிடம் இருந்து அடிப்படை ஊதியம் , அகவிலைப்படியில் அரசு 10 சதவீதம் பிடித்தம் செய்கிறது. அரசு சார்பிலும் 10 சதவீதம் பங்களிப்பு தொகை செலுத்தப்படுகிறது. இத்தொகை நடப்பு ஆண்டு வரை ரூ.60 ஆயிரம் கோடி அளவில் உள்ளது.


புதிய ஓய்வூதிய திட்டத்தில் (சி.பி.எஸ்.,) இறந்த ஊழியர்களுக்கு குடும்ப ஓய்வூதியம், ஓய்வுக்கு பின்பு வழங்க வேண்டிய பணிக்கொடை வழங்காமல் பாதிக்கப்படுகின்றனர். இத்திட்டத்தில் தமிழக அரசால் பிடித்தம் செய்த தொகை ரூ.60ஆயிரம் கோடி எங்கே உள்ளது என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை. இந்த நிதி குறித்து அரசு வெள்ளை அறிக்கையை வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், என்றார்.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns