கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு(Transfer Counselling to BRTEs) நடத்த கல்வித்துறை உத்தரவு...

 


பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள் 500 பேருக்கு நிகழ் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது : 


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநில , மாவட்ட திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் குறுவள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் வழங்க அரசு உத்தரவிடுகிறது. நிகழ் கல்வியாண்டில் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் செய்திட வேண்டும். மேலும் , தற்போது தேர்வு செய்யப்படும் பணியில் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்கள் பணி மாறுதலுக்கு விருப்பமின்மை தெரிவித்து, பணியில் தொடர விரும்பினாலும் அதனை அனுமதிக்கத் தேவையில்லை. 2014ஆம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களில் சேர்ந்த 500 பட்டதாரி ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் செய்யப்படும் போதும் , பணி இடங்களுக்கு பாடவாரியாக திறமையும் அனுபவமும் சேவை மனப்பான்மையும் உள்ள ஆசிரியர்களை பணியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான கலந்தாய்வு , ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். கலந்தாய்வு அனைத்தும் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மட்டுமே நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


>>> 500 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு(BRTE) பட்டதாரி ஆசிரியர்களாக(B.T.) பணிமாறுதல் (Conversion) வழங்குதல் மற்றும் பணியிட மாறுதல் (Transfer) வழங்கிட நெறிமுறைகள் வகுத்து அரசாணை (1டி) எண்: 134, நாள்: 18-08-2021 வெளியீடு...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Teachers are important for the development of the country - nuclear scientist pride

 ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் - அணு விஞ்ஞானி பெருமிதம் Teachers are important for the development of the country -...