கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் புதுப்பிக்க வாய்ப்பு? (Chance to Renew Employment Office Registration ) - அமைச்சர் அறிவிப்பு...



 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் கணேஷ் கோரிக்கை விடுத்திருந்தார்.


இதற்கு பதிலளித்த தமிழக அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் தெரிவித்ததாவது: தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2017, 2018, 2019ஆம் ஆண்டு ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு ஏற்கனவே புதுப்பிக்க தவறியவர்களுக்கு மாபெரும் ஒரு வாய்ப்பை உருவாக்கியும் தந்தார் எனவும், அந்த பதிவை புதுப்பித்துக் கொள்ள மூன்று மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டுளளது எனவும் தெதெரிவித்தார்‌.


மேலும் 2014, 2015 ,2016 ஆம் ஆண்டு களுக்கும் வேலைவாய்ப்பு பதிவுகளை புதுப்பிக்க ஏராளமான இளைஞர்கள் தவறியுள்ளார்கள் என்றும் உறுப்பினரின் சேர்க்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று ஆலோசித்து நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns