கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் பணியிட விவரங்களை EMIS இணையத்தில் DSE Staff fixation-ல் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:040678/சி3/இ1/2021, நாள்:02-09-2021......


தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின்(பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண்:040678/சி3/இ1/2021, நாள்:02-09-2021...


 2021-22ம் கல்வியாண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சார்பாக கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்களின் சேர்க்கை விவரம் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பெற்று வருகின்றன.


 தற்போது கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் ( EMIS ) அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் ( Sanctioned Posts ) சார்பான விவரங்களைப் பதிவேற்றம் செய்திட ஏதுவாக உள்ளீடு செய்ய DSE Staff fixation என்ற தலைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.


எனவே , சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை ( Sanctioned Posts )  ( Scale Register ) ஒப்பிட்டு சரிபார்த்து மேற்படி இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


 அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு ( Surplus post without person ) இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...