தொலைந்த பள்ளி, கல்லூரி சான்றுகளை மீண்டும் பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் (How to get lost School and College Certificates? Simple instructions)...





உங்கள் பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் தொலைந்து விட்டால் அரசிடம் இருந்து தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் எளிய வழிமுறை இப்பதிவில் வழங்கப்பட்டு உள்ளது.


சான்று பெறும் முறைகள்:

மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் படித்ததற்கான சான்றுகள் வழங்கப்படும். அவை மிகவும் முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தில் பணிக்கு செல்வதற்கு இந்த சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. அரசின் சில நலத்திட்டங்களை பெறுவதற்கும் சான்றிதழ்கள் அவசியமாகும். இந்த முக்கிய சான்றிதழ்களை நாம் பணிகளுக்காக வெளியில் எடுத்து செல்லும்பொழுதோ அல்லது வேறு சில காரணங்களுக்கு பிற இடங்களில் சமர்ப்பிக்கும் பொழுதோ அவை தொலைந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு.


மேலும் சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்து விட்டாலோ அல்லது எதிர்பாராத விதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ நாம் புதிய சான்று பெற முடியும். முதலில் காவல் நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும். பின்னர் காவல்நிலையத்தில் சான்றிதழை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கொடுக்கப்படும் சான்றிதழை பெற வேண்டும். அதன் பிறகு புதிய சான்றிதழ் பெற உரிய அலுவலர்களை அணுகி பெற முடியும். தற்போது தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


தொலைந்ததற்கான சான்றை ஆன்லைன் மூலம் பெறும் வழிமுறைகள் :

  • இதற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் புகைப்படமும், இருப்பிட சான்றும் தேவை.


  • அதில் சிட்டிசன் லாகின் மூலம் உள் நுழைய வேண்டும். பிறகு Revenue Department என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

  • பிறகு புதிய முகப்பு திரை உருவாகும். அதில் Certificate for loss education records due to disasters என்பதை கிளிக் செய்யவும்.

  • படிவத்தில் உங்கள் தகவல்களை நிரப்பி Proceed கொடுக்கவும்.

  • உங்கள் CAN எண்ணை கொடுக்க வேண்டும். இல்லாதவர்கள் புதிதாக உருவாக்க வேண்டும்.

  • பிறகு உங்களது புகைப்படம் மற்றும் இருப்பிட சான்றை ஸ்கேன் செய்து Upload செய்ய வேண்டும்.

  • இணைய வங்கி மூலம் சான்றிதழுக்கான கட்டணம் செலுத்த வேண்டும்.

  • அதிகாரிகள் உங்கள் விவரங்களை சரிபார்த்த பிறகு உங்கள் மொபைல் எண்ணிற்கு குறுந்தகவல் வந்து சேரும். அதன் பிறகு தொலைந்ததற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...