கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நியாயவிலை கடைகள் செயல்படும் நேரம் மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு (Ration shops working hours change - Government of Tamil Nadu order)...



தமிழகம் முழுதும் நியாயவிலை கடைகள் செயல்படும் நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக 2.30 மணி நேரம் நியாய விலை கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தழிகம் முழுதும் நியாய விலை கடைகள் நேரத்தை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிறத்துள்ளது. அதன்படி அரசு பிறப்பித்த உத்தரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் 7 மணி வரையிலும், இதர பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதற்கு முன்பு சென்னை மற்றும் புறநகரில் காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை செயல்பட்டு வந்த நியாய விலை இனி மேற்கண்ட நேரங்களில் செயல்படும் என அறிவித்துள்ள தமிழக அரசு, பெரும்பாலான நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு கடை செயல்படும் நேரம் குறித்த விவரங்கள் முழுமையாக தெரியவில்லை என்றும், கடை ஊழியர்கள் கடை திறக்கும் நேரம், கடைகளை திறந்து செயல்படுத்த வேண்டிய நெறிமுறைகளை குறித்த பயிற்சி அளிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியாய விலைக்கடைகள் வேலை நேரம் குறித்த தகவல்களை குடும்ப அட்டைதாரர்கள் பார்க்கும் வண்ணம் நியாய விலைக் கடை முன்பு காட்சி படுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...